Saturday, August 29, 2015

நம்பிக்கை நாணயமற்ற ஒரு பெரிய சாத்தியமான வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுவது

நம்பிக்கை நாணயமற்ற ஒரு பெரிய சாத்தியமான வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு நல்ல வாடிக்கையாளரின் நிலை அறிக்கையை நீங்கள் பார்க்கும்போது ஏராளமான எச்சரிக்கைளை காண்பீர்கள் – தாமத கட்டண செலுத்தல்கள், நிலுவையிலுள்ள சட்டப்பிரிவுகள், மிகுதியான கடன் சுமை போன்றவை. இந்த வாடிக்கையாளர் கடன் ஆபத்தாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்காக அவருடன் உள்ள வியாபார உறவை முறித்து கொள்ள வேண்டுமா? அவ்வாறு இல்லை. சந்தேகத்துக்குரிய கடன் ஆபத்து உள்ள நிறுவனங்களுடன் தொழிற்படும்போது, ஆபத்தைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகளை எடுங்கள்.
ஆழமாக விசாரிக்கவும்
ஒவ்வொரு சிறந்த வாடிக்கையாளர்களின் கடன்களும் பல்வேறு சூழல்களால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும், எனவே மோசமான கடன் நிலைகளை ஆராய்வது பயனளிக்கும். உதாரணமாக, ஒருவர் விடுமுறை கால பொருட்களை விற்பவராக இருந்தால், அந்த வியாபாரம் குளிர்காலத்தை விட கோடைகாலத்தில் அதன் காசுப்பாய்ச்சல் சிக்கலானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. வியாபாரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தால், இந்த கருத்துகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் வகையில் கடன் விதிமுறைகளை உருவாக்குங்கள். பருவமல்லாத காலங்களில் C.O.D. கட்டணங்களையும் விற்பனை அதிகமான காலங்களில் ஆரம்பக் கட்டணங்களும் உங்களுக்கு கிடைக்கலாம்.
சிபாரிசுகளை செவ்வைபாருங்கள்
ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய மோசமான கடன் நிலைகளை வலிமையாக நியாயப்படுத்தினால், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு பிற கடன் பரிந்துரையாளர்களிடம் பேசுங்கள். எஞ்சியிருக்கும் கடனானது இந்த நபரைத் தவறாக கடன் ஆபத்து உடையவர் என்று குறிப்பிடுகிறது என்றும் கூட நீங்கள் கண்டறியக் கூடும். பெரிய வாடிக்கையாளர் அளித்த சிபாரிகளுடன் தொடர்பு கொள்வதைவிடவும், முழுமையான விநியோகத்தர்களின் பட்டியலை நீங்கள் பெற முயற்சிக்கலாம். இதிலிருந்து எந்த விநியோகத்தரை அழைப்பது என்று நீங்கள் முடிவு செய்யலாம்.
செலுத்துதல் நியதிகளை வரையறுங்கள்
உங்கள் கட்டணம் செலுத்தல் நியதிகள் புரியவில்லை என்று கூறும் வாய்ப்பை ஆபத்தான வாடிக்கையாளர்களுக்கு வழங்காதிருங்கள். செலுத்துதல் பாலிசிகளை வாசிக்கச் செய்து அவற்றை ஏற்று கொள்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையில் கையெழுத்து பெற்று உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். நியதிகளை உங்களுடைய அனைத்து கொள்முதல் ஆணை மற்றும் ரசீதுகள் போன்றவற்றில் குறிப்பிட்டு கண்காணித்து வாருங்கள். செலுத்துதல் முறைகள், அதிக காலங்கள், விரைவில் செலுத்துவதற்கான தள்ளுபடிகள், தாமதமான செலுத்தல்களுக்கான அபராதங்கள், மற்றும் தாமதமான பில்கள் நீங்கள் கையாளும் முறைகள் போன்ற விவரங்களைக் குறிப்பிடுங்கள்.
முற் பணம் செலுத்தும்படி கோருங்கள்
ஒரு நிறுவனம் அதிக கடன் ஆபத்து நிறைந்ததாக இருப்பின், முழு அல்லது பகுதி முற்பணத்தைக் கோர அஞ்சாதீர்கள். மோசமான கடன் நிலைகளில் உள்ள பல நிறுவனங்கள் இதனை அறிந்துள்ளன, மேலும் நீங்கள் அவற்றுடன் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வீர்கள் என்பதை எதிர்பார்க்கும். மோசமான கடன் நிலைகளில் உள்ள நிறுவனங்கள் பொதுவாக அவற்றின் மதிப்பை அதிகரிக்க விரும்பும், முற்பணம் செலுத்தல் நியதிகளை கூறி இந்த உறவுமுறை நீடித்தால் அவற்றுக்கு ஒரு கடன் பரிந்துரையாளராக எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
தனிப்பட்ட கடன் வரலாறுகளை கருத்தில் கொள்ளுங்கள்
கடன் வரலாறு எதுவும் இருக்க முடியாத ஒரு புதிய நிறுவனத்தை எதிர் கொள்ள நேர்ந்தால், அதன் உரிமையாளரின் கடன் அறிக்கையைப் பார்த்து அவர் எவ்வாறு பில்களைக் கையாளுகிறார் என்று காணுங்கள். சிறந்த நிதி மேலாண்மை திறன்களைக் கொண்ட ஒரு நபர் வியாபாரத்திற்கு சிறந்த நிதி மேலாண்மை நடவடிக்கைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வரவிருக்கும் நிதிகளைப் பற்றி கேளுங்கள்
கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அல்லது வரவிருக்கும் சொத்துக்கான ஆதாரங்களை சில நிறுவனங்கள் தரக்கூடும். இந்த ஆவணங்கள் நிச்சயமாக உங்களுக்கு கட்டணம் வரும் என்பதை உறுதிப்படுத்தாவிட்டாலும், ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய கட்டளைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த நிதி ஆதாரங்களை கொண்டிருக்கிறார் என்பதை உங்களுக்கு அறியச் செய்யும். நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து ஒப்பந்தங்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
உறவை மெதுவாக தொடங்குங்கள்
ஒரு புதிய வாடிக்கையாளரைப் பற்றி நீங்கள் அதிகம் அறியாதவராக இருந்தால், அவர்களுடன் சரியான உறவை ஏற்படுத்தி கொள்ளும் வரை குறைவான தொகைக்கான வியாபாரத்தையே ஏற்று கொள்ளுங்கள். இன்னொரு முறையாவது ஆரம்பத்திலேயே முற் பணம் சிறிது வாங்கிக் கொண்டு, மெதுவாக கடன் வரம்புகளை அதிகப்படுத்துங்கள்.
வேண்டாம் எனச் சொல்லிவிடுங்கள்
பெரும்பாலான நிறுவனங்கள் அதிக கடன் ஆபத்து நிறைந்தவையாக இல்லாவிட்டாலும், ஒரு சில நிறுவனங்களை உங்கள் வாடிக்கையாளர்களாக சேர்ப்பதற்கு முன்பு பல முறை சிந்திக்க வேண்டும். இவ்வளவு முன் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பின்னும், அந்த வாடிக்கையாளரிடம் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், அமைதியாக அவர்களுடான வியாபாரத்தைத் துண்டித்து விடுங்கள். முதலிலேயே 'வேண்டாம்' என்று மறுத்துவிடுவதன் மூலம் சேகரிப்பதிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்கிறீர்கள் மற்றும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறீர்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

வெற்றிகரமான விற்பனைக் கடிதங்கள்

வெற்றிகரமான விற்பனைக் கடிதங்கள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
நம்பகமான வாடிக்கையாளர்களை அடைவதற்கான சிறந்தவழி தொலைபேசியே, பல நேரங்களில் விற்பனை பற்றிய கடிதங்களை நீங்கள் எழுதவேண்டியதிருக்கும். அப்படி சிறப்பானதாக எழுதப்படும் அந்த கடிதமே வாடிக்கையாளர்கள் மத்தியில் உங்கள் நிறுவனத்தை கவரக்கூடும். அந்தக் கடிதத்தில் தவறோ அல்லது பிழையோ இருந்தால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவை மீது இருக்கும் விருப்பம் குறைந்துவிட அதுவே காரணமாக இருக்கும்.
விற்பனை கடிதங்களில் மூன்று வகைகள் உண்டு -- அறிமுக கடிதங்கள்; பின்-தொடர் கடிதங்கள்; தொகுப்புகள் பற்றிய உறை கடிதங்கள் போன்றவை இதில் அடங்கும். அறிமுக கடிதத்தில் உங்களைப் பற்றியும், நீங்கள் எந்த நாள் மற்றும் நேரத்தில் அவர்களை சந்திக்க இருக்கிறீர்கள் என்பதையும் அதில் தெளிவாக குறிப்பிடவேண்டும். பின் தொடர் கடிதங்களானது நீங்கள் முன்பு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியாகும்; இது ஒரு தொலைபேசி உரையாடலாக இருக்கலாம் அல்லது நேரடிச் சந்திப்பாகவோ இருக்கலாம். உறை கடிதங்கள் பெரும்பாலும் மொத்தமாக பொருட்கள் அனுப்பும்போது அதோடு இணைத்து, பெறுநருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
ஒரு சிறப்பான விற்பனைக் கடிதத்தை உருவாக்குவதற்கான சிறு குறிப்புகள்:


உங்களைப் பற்றியல்லாமல் வாடிக்கையாளரைப் பற்றி பேசுங்கள்
விற்பனைக் கடிதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது,"நான்"என்ற சொல்லாகும், ஆனால், அதிகம் பயன்படுத்தவேண்டியது, "நீங்கள்" என்ற சொல்லாகும். "நான்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஒரு விற்பனைக் கடிதத்தை தொடங்குவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் வாசிப்பவர் தொடர்ந்து வாசிக்காமல் போய்விடலாம். இவையாவும் விற்பனையின் நன்மைகளே -- உங்கள் தயாரிப்புகளின் சேவை தொடர்பான அம்சங்களைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் இல்லாதபோதிலும், உங்கள் தயாரிப்புகளின் சேவைகள் எந்த வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் விளக்கலாம். "உங்களின் சேவை பிரதிநிதிகளுக்கு அண்மைகால தொழில்நுட்பங்கள் குறித்து நான் பயிற்சி தருகிறேன்"என்பதற்குப் பதில், "வாடிக்கையாளர் திருப்தியுடன் சம்மந்தப்பட்ட அண்மைகால தொழில்நுட்பங்ளின் உங்கள் சேவை பிரதிநிதிகளுக்கு கற்றுத்தருவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் கூறும் குறைகளின் அளவு குறையும்".கூறுவது சிறப்பு.
உங்கள் கடிதத்தில் சுருக்கமாக நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுடன் தொடங்க வேண்டும். அறிமுக கடிதத்தில் இது மிகவும் அவசியமானது, அந்த குறிப்பிட்ட நபர் ஏற்கனவே உங்களுக்குப் பழக்கமானவராக இருந்தால் அதையும் நினைவுகூரவும். உதாரணமாக: "கடந்த வியாழக்கிழமை உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. Acme Partners என்பது ஒரு விளம்பர நிறுவனம், இந்நிறுவனம் உங்கள் வலைத்தளத்தை சிறப்பாக மாற்றிடக்கூடிய வசதிகளை செய்யும்"" என்று கூறலாம்.
உங்கள் கடிதத்தின் அங்கத்தில் மூன்று அல்லது அதற்குமேற்பட்ட முக்கிய குறிப்புகள் இருக்கவேண்டும். பொட்டுக்குறிகள் இருப்பதை மக்கள் அதிகம் விரும்புவார்கள், காரணம் கடிதத்தை எளிமையாக வாசிக்க இது உதவும். எழுதுபவர்/விற்பனையாளராக இருக்கும்போது, முக்கிய தகவல்களை நீங்கள் குறித்துகாட்டுவதும் சிறப்பானது.
உங்கள் கடிதத்திலிருந்து எந்த விளைவை பெறவிரும்புகிறீர்கள்? நேரடி சந்திப்பை விரும்புகிறீர்களா? முந்திய சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகிறீர்களா? வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா? கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை பெற விருப்பமா? குறிப்பிட்டச் செயல்வடிவ வேண்டுகோளை இட்டு உங்கள் கடிதத்தை முடியுங்கள். உதாரணமாக: "சந்திப்பு குறித்து பேசுவவதற்கு வருகிற நவம்பர் 18, வியாழக்கிழமை காலை 10. a.m மணிக்கு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" அல்லது "வருகிற டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் இதில் இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திருப்பி அனுப்பவும் அல்லது உங்களுக்கு வேறெதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் என்னைத் தொடர்புக்கொள்ளவும்".
பெரும்பாலும் அனைவரும் கடிதத்தின் முதல் பக்கத்தை தான் வாசிப்பார்கள், ஆகவே உங்கள் கடிதம் ஒரே பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கடிதம் யாரிடமிருந்து வந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள பெரும்பாலானவர்கள் கையொப்பம் இருக்கிறதா என்று கடிதத்தின் கீழ் பகுதியைதான் முதலில் பார்ப்பார்கள். சுருக்கமானதே செயல்திறன் மிக்கது, அதனால் சுருக்கமான கடிதத்தை தயாரித்து வாடிக்கையளர்களுக்கு அனுப்புங்கள்.
உங்கள் வாடிக்கையாளரின் நிறுவனத்தைப் பற்றி முழுமையாக நீங்கள் அறிந்துக்கொள்வதன் மூலம் சிறப்பாக அவர்களின் கவனத்தை நீங்கள் கவர முடியும். நிறுவனத்தை சேர்ந்த பல வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இது ஒரு சிறப்பான வழியாகும். அவர்களின் தரம், மதிப்பு, மற்றும் தேவைகளைப் பற்றி விரிவாகப் பேசுங்கள். உதாரணமாக: "Acme நிறுவனம், சிறந்ததொரு சேவையை வழங்கி வாடிக்கையாளர்களின் தேவைகளை முதலில் நிறைவேற்றும்" அல்லது "அஜாக்ஸ் விட்ஜெட்டைப் பயன்படுத்துவதற்கான பல மதிப்பு மிக்க சான்றுகள் உள்ளன".
தேவைப்படும் விவரங்களைப் புள்ளிவிவரங்களாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி கூறும்போது அந்த சிக்கலை நீங்கள் தீர்க்கமுடியும் என்பதையும் விளக்கும்போது, நீங்கள் அவர்களின் வியாபாரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டீர்கள் எனக் காட்டும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை ஆதரிப்பதற்கான வழியை ஏற்படுத்தவும் இது உதவும். உதாரணமாக, மென்பொருள் குறித்து பயிற்சியளிக்கும் நிறுவனமாக இருந்தால் இப்படிக் கூறலாம், "Acme Research Associates நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான கணனிப் பயனாளர்கள் 100 மணிநேரத்தை எப்படி ஒரு சில வேலைகள் முடிந்தது என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே செலவிடுகின்றனர்".
உங்கள் விற்பனைக் குறித்த கடிதத்தில், நம்பகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவேண்டும். கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, உங்கள் அலுவல் சார்ந்த எந்தப் பணியையும் உங்களிடமிருந்து பெறமுடியாமல் போகக்கூடிய சூழலும் உண்டு என நீங்கள் கருதலாம். ஆனால் அது தவறு. கடிதத்தில் உங்களின் சிறந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்வதால், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உணர்வார்கள். முக்கியமாக, உங்கள் திறமையை அதில் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.
எந்தவொரு கடிதத்தையும் நீங்கள் அனுப்புவதற்கு முன்னர், அதை வேறொருவர் நன்கு வாசிப்து சிறந்தது. உங்கள் கடிதம் தெளிவாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளமுடியும். மேலும், எழுத்துப்பிழைகள் மற்றும் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் அவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
வலையமைப்பு என்பது தொடர்புகளை உருவாக்கு பயன்படும் கலையாகும். ஒரு மக்கள் தொகுப்பு மற்றும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் மதிப்பை நேரடியாக உயர்த்தும் தகவலை உருவாக்குவது, வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைப்பது, மற்றும் மிக முக்கியமாக, உங்கள் போட்டியாளர்கள், அவர்கள் ஒரு போதும் அடைய முடியாது என நினைத்த ஒன்றை நீங்கள் அடைந்தது எப்படி என்று ஆச்சரியப் படவைப்பது ஆகியவையே, வலையமைப்பு என்பதன் நோக்கங்கள் ஆகும்.
பல சிறு வியாபார உரிமையாளர்கள் வலையமைப்பு செய்வதை விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அது, உங்கள் வர்த்தக அட்டையை எவரிடமாவது கொடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விளக்குவது பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், வலையமைப்பு என்பது உண்மையில், நீங்கள் உதவக்கூடிய மற்றும் உங்களுக்கு உதவக்கூடியவர்களை அறிந்து கொள்வதைப் பற்றியதே ஆகும்.
வலையமைப்பு நிபுணரான, ஸ்டீவன் M. க்ராஷர், நெட்வொர்க் அஸ்ஸோஸியேட்ஸ் தலைவர், ஹிக்ஸ்வில்லி, நியூயார்க்,பல வியாபாரிகள், வலையமைப்பு என்பதை ஒரு செயல்திறன் மிக்க ஒரு வர்த்தகக் கருவியாக எவ்வாறு மாற்றுவது என்பதை அறியவில்லை என வலியுறுத்துகிறார். "உங்கள் மேசை ட்ராயரில், வர்த்தக அட்டைகள் குவிந்து கிடப்பதே, உங்கள் வலையமைப்பின் முடிவுகள் மற்றும் வியாபாரத்தில் மேலதிக நல்ல விளைவுகள் எதுவும் இல்லையெனில், நீங்கள் உங்கள் முறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் அது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்".
க்ராஷர், சிறு வியாபார உரிமையாளர்கள், தாங்கள் சந்திக்கப் போகும் மக்களை இரண்டு குறிக்கோள்களுடன் அணுக வேண்டும் என்கிறார்: கூடுமான வரை அதிகமான மக்களைத் தெரிந்து கொள்வது, மற்றும் அவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவைப்பது. மேலும் அவர், உங்கள் வலையமைப்பு, சிறந்த விளைவை உண்டாக்க, பின்வரும் நான்கு படிகளை சிபாரிசு செய்கிறார்:
தகவல் கொடுத்து தகவல் பெறுங்கள்

வலையமைப்பு என்பது இரு வழிப் பாதையாகும். நீங்கள் எவரையாவது சந்திக்கும் போது, நீங்கள் அவர்களின் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மற்றும் அவர்களிடம் உங்கள் வியாபாரத்தைப் பற்றியும் கூற வேண்டும். அடிப்படைகளில் தொடங்குங்கள் – பெயர், கம்பனி, சேர்ப்பு, நிலை, வியாபாரத்தின் தன்மை போன்றவை. நீங்கள் அடுத்ததாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் ஒருவருக்கொருவர் உதவ முடியுமா என்பது ஆகும். இந்த தலைப்புகளை முயற்சி செய்யுங்கள்:
  • உங்கள் கம்பனி என்ன செய்கிறது?
  • எந்த விதமான வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் சேவையை வழங்குகிறீர்கள்?
  • உங்கள் நிறுவனத்தில், ஒவ்வொரு சேவை அல்லது தயாரிப்புகளை வாங்குவது குறித்து முடிவு செய்வது யார்?
  • போட்டிச் சூழலில் உங்கள் தனித்துவம் என்ன?
தொடர்பின் மதிப்பை மதிப்பீடு செய்யவும்

நீங்கள் அனைவரிடமும் முழுமையாக வலையமைப்பு செய்ய முடியாது. நீங்கள், முதன்மையான தகவல்களைப் பெற்றவுடன், இந்த நபரை மறு முறை தொடர்பு கொள்வதும் உறவைத் தொடர்வதும் பயனுள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா மற்றும் அவர்கள் உங்களுக்கு உதவ முடியுமா? இரண்டிற்கும் பதில் "ஆம்" என்று இருக்க வேண்டும்.
மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் மற்றவர்களுக்கு உதவுவதில் உண்மையான ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிவது, எந்த வேண்டுகோளும் இல்லாமல். இன்னும் கூறப்போனால், உங்களை நீங்களே ஒரு வலையமைப்பாளராகவும் சிக்கல் தீர்ப்பவராகவும் நினைத்துக் கொள்ளாதீர்கள், மற்றும் உங்கள் தனிப்பட்ட வலையமைப்பில் சேர்க்க விரும்பும் எவரிடமும் அதே குணாதிசியங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒரு திறமுறையான கூட்டை உருவாக்குங்கள்

ஒரு வலையமைப்பு என்பது, வர்த்தக அட்டைகளைச் சேகரிப்பது அல்ல, மக்களைச் சேகரிப்பதாகும். உங்கள் வலையமைப்பில் உள்ளவர்களுடைய வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய நேரம் நுகரும். நீங்கள் அங்கத்தவர்களை புத்திசாலித்தனமாகத் தெரிவு செய்தால், அது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அவர்களுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் யாருக்காக செய்கிறீர்கள் என்பது பற்றி எல்லாம், விளக்கமாகக் கூறுகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் புதுப்பித்தல்களையும், ஊக்கத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், விற்பனை நபர்களாகிறீர்கள்.
வலையமைப்பு செய்வதன் நோக்கம், உங்கள் தொடர்பின் வியாபாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்த அனைவரின் வியாபாரத்தையும் பெறுவதற்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்களை உங்கள் மேலாண்மை சிந்தனைகள், அறிவுரை, லீட்கள், மேலும் விற்பனையாளர் சிபாரிசுகள் ஆகியவற்றுக்கான வலையமைப்பில், அவர்களையும் சேர்க்க முடியும். நீங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் நிறைய அறிகிறீர்கள், இருவரும் இலாபம் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டிலும், ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்காகப் பங்களிக்கிறீர்கள்.
பராமரிப்பு

உங்கள் தொடர்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உங்கள் தகவல் வளையத்தில் (loop) உள்ளவர்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். செயல்திறன் மிக்க நேர நிர்வாகத் திறமைகளைப் பயன்படுத்துங்கள், உங்கள் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். உங்களுக்கு அதிக பயனுள்ளவர்களிடம் அவ்வப்போது தொடர்பு வைத்துக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். அவர்கள், உங்கள் உள் வட்டம் ஆகிவிடுவார்கள்.
எப்போதும் உறவுக்கு பங்கம் ஏற்படாதவாறு கவனமாக இருங்கள், நீங்கள் ஒருவரிடமிருந்து எப்போது உதவி பெற வேண்டியிருக்கும், உங்கள் உதவி எப்போது ஒருவருக்கு தேவைப்படும் என தெரியாது. தற்போது ஒருவர் உங்களுக்குப் பயனற்றவராக இருந்தாலும் ,நீங்கள் அவரை மீண்டும் மீண்டும் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் உதவலாம். வேறு முறையில் கூறினால், அனைவரிடமும் இனிமையாக இருங்கள் ஏனெனில், எப்போது அவர்களின் உதவி தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

தன் மீதான முழு நம்பிக்கை

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.


1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும்.உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:

தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம்,ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம்.இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள்.

' இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுகிறார்கள்' என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.

-jesu raj-chennai

Friday, August 28, 2015

நற்பவி நற்பவி நற்பவி - தாந்த்ரீக பரிகார மையம்



குருவே சரணம்
நற்பவி நற்பவி நற்பவி
வணக்கம்
நம் அன்றாட தேவைகளையும் வருங்கால தேவைகளையும் நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்ற எளிய தாந்த்ரீக பரிகாரம்
இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தொடங்கி தினமும் செய்துவர பலன் தெரிய துவங்கும்
ஞாயிற்றுகிழமை காலை 6முதல் 7மணிக்குள் குளித்து முடித்து சூரியனை பார்த்து நின்று கிழ்கண்ட சூரிய மந்திரத்தை 9முறை கூறி பின்பு இருகைகளிலும் சுத்தமான பன்னிரை ஊற்றி உங்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் நினைத்துக்கொண்டு 3முறை பன்னிரை சூரியனுக்கு வார்க்க வேண்டும்
இதை தொடங்கியவுடன் ஞாயிறு தோறும் யாராவது ஒருவர் அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வர உங்களின் தேவைகள் நிறைவேற தொடங்கும்
வீட்டில் ஒருவர் இதை செய்தாலே போதுமானது
அன்னதானம் வழங்குவது உங்கள் வசதியை பொருத்தது
பன்னிர் 1லிட்டர் பாட்டில்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
அனைவரும் அனைத்தும் பெற வாழ்துக்கள்
நற்பவி நற்பவி நற்பவி
நவதுர்கா யந்த்ரம்
தாந்த்ரீக பரிகார மையம்- www.happy4all.org

Thursday, August 27, 2015

விற்பனையை முடித்தல்

விற்பனையை முடித்தல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு விற்பனையை முடித்தல் -- நீங்கள் எதிர்பார்ப்பவர் சரி எனச் சொல்ல வைத்தல் -- சில நேரங்களில் மிகவும் இலகுவாக இருக்கலாம். நீங்கள் எதிர்பார்ப்பவரிடம் அவர்களின் தேவைகளைக் கண்டு பிடித்து, உங்கள் தயாரிப்பு/சேவை எப்படி அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதையெல்லாம் கூறியவுடன், தாராளமாக வாங்கச் சொல்லுமாறு கேட்கலாம். இந்த உதவிக் குறிப்புகள் உங்கள் இந்தச் செயன்முறையை இயல்பாகவும் இலகுவாகவும் ஆக்கும்.
சரியான அடிப்படையை உருவாக்கவும்
உங்கள் செயன்முறையின் போது, அவர்களின் தேவைகள் என்ன என்பதை நீங்கள் கண்டறிந்துவிட்டாலோ, அல்லது அவர்களின் தேவையை எப்படி உங்கள் தயாரிப்புகள் நிறைவு செய்கிறது என்று அவர்கள் உணர்ந்துவிட்டாலோ நீங்கள் விற்பனையை " முடித்தல்" என்பது அவசியமாக இருக்காது. நீங்கள் ஒவ்வொரு முறைமையும் விற்பனையை முடிக்கமுடியாமல் போனால், நீங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன என்பதைக் கண்டறியும் முறைமை, அல்லது எப்படி உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறது என்று, அவர்களை உணரவைக்கும் முறைமை ஆகிய ஏதோ ஒன்றில் பிழையுள்ளதா என ஆய்வு செய்யுங்கள்.
முடிவெடுப்பவரை அணுகுங்கள்
எப்போதும், விற்பனை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களிடம்தான் பேசுகிறோமா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில் ஒரு நபர் உங்கள் தயாரிப்பை வாங்க "சரி" என்று சொல்லமாட்டர், ஏனெனில் அவருக்கு அந்த அதிகாரம் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளில், திட்டத்தில் அக்கறைகொண்டு உங்களிடம் பேசும்படி உங்கள் உறுப்பினர் விதந்துரைக்கும் நபர் எவரேனும் உள்ளார்களா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
கடைசித்திகதி வழங்குங்கள்
உங்களை அலைக்கழிக்கவைக்கும் வாடிக்கையாளர் யாராவது இருந்தால், அவர்களிடமிருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட திகதிவரை மட்டுமே உங்களுடைய சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கலாம். உங்கள் நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் இருந்தும் ஆனால் உடனே அதற்கு ஒப்புதல் அளிக்கமுடியாது என்று கூறினால், அவர்களிடம் குறிபிட்ட திகதியைக் கொடுத்து இதுவே கடைசித்திகதி என்று கூறிவிடலாம் அல்லது குறிப்பிட்ட சில காலத்திற்குப் பிறகு உங்களை தொடர்புகொள்ளமுடியாது என்பதுபோல் கூறிவிடுங்கள். இப்படி கூறுவது சிக்கலானதுதான். காரணம் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நீங்கள் எந்த பணியையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று அர்த்தமாகிவிடும். இருப்பினும் உடனே திட்டமிடும் வாடிக்கையாளர்கள் யார் என்பதையும், திட்டமிடாமல் ஒரு இழுத்துக்கொண்டே செல்பவர்கள் யார் என்பதையும் இந்த அணுகுமுறை தெளிவுப்படுத்திவிடும். ஒரு விதத்தில், முடிவெடுக்கும்படி நிர்பந்திப்பது என்பது, உங்கள் தொழிலுக்கு நல்லது தான். அவர்களுக்கு வாங்க விருப்பமில்லை என்றால் அவர்களிடமிருந்து விடுபட்டு ஏனைய வியாபாரத்தில் கவனம் செலுத்தலாம்.
அவர்களுக்குத் தேவையான நேரத்தில் சேவையாற்றுங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவை எப்போது தேவை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். பின்னர், அந்த நேரத்தில் சென்று அவர்களுக்கு அப்போது அந்த தயாரிப்பு அல்லது சேவை, ஏன் அவசியம் என விளக்கமாகக் கூறுங்கள். உதாரணமாக, நீங்கள் மக்கள் தொடர்பு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தால், உங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது அடுத்த தயாரிப்பை எப்போது வெளியிடப்போகிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அந்த சரியான நேரத்தில், நீங்கள் அவர்களுடைய அச்சகப் பணிகளை நீங்கள் எப்படித் திறம்பட செய்து கொடுக்க முடியும் என விளக்கமாகக் கூறி உங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்வதன் நன்மைகளைப் புரிய வைக்க வேண்டும்.
விலையேற்ற பயத்தைப் பயன்படுத்துங்கள்
நீங்கள் சனவரியில் விலைகளை ஏற்றத் திட்டமிட்டிருந்தால், அக்டோபரிலேயே மக்களிடம், விலையேற்றத்திற்கு முன்பு தயாரிப்புகளை வாங்கி, விலையேற்றத்தின் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளுமாறு கூறுங்கள். இதை நடைமுறைப்படுத்துவது சிரமமானதுதான் - உங்கள் உறுப்பினருக்கு சேவையை வழங்குவதற்காகவே அழைத்தீர்கள், அவர்களை மிரட்டி பொருளை வாங்கவைக்க வேண்டும் என்பதற்கு இல்லை என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். விற்றுமுடிப்பதற்கு மட்டும் இது உதவுவதில்லை மாறாக, விலை ஏறுவதற்கு முன்பே அறிவித்ததற்காக உங்கள் உறுப்பினர்களிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள்.
விற்பனையை முடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்
காப்புறுதி இல்லததால் ஏற்படும் சேதங்கள், சரி செய்யப்படாததால், அல்லது பழைய கார் ரயர்கள் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துக்கள், அல்லது ஒரு முறையான சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி செய்யாமல், விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இலாப ஏனைய தயாரிப்பு போன்றவற்றை அவர்கள் பதிலாகக் கூறுமாறு கேள்விகளைக் கேளுங்கள், இதன் மூலம் அவர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்காவிட்டால், என்ன பாதிப்புகளெல்லாம் நேரலாம் என உணர்வார்கள். விளைவு என்பது, பணமாகவோ, நேரமாகவோ, மதிப்பு போன்ற ஏனைய அம்சங்களாகவோ கூட இருக்கலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

உங்களுடைய விற்பனைகள் பற்றி முன்வைக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

உங்களுடைய விற்பனைகள் பற்றி முன்வைக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு நபராக நீங்கள் விற்பனை விளக்கக்காட்சியை முன்வைக்கும் போது, உங்களுடைய வளங்களை வாடிக்கையாளர்களிடம் பல நிலைகளில் ஒரே நேரத்தில் கூறுவதற்கு அபூர்வ வாய்ப்பு கிடைக்கிறது. உங்களுடைய புறத்தோற்றம், சொற்களை கையாளுதல், உங்களின் பொதுவான நடத்தை, ஆர்வ நிலை ஆகிய அனைத்தும் நீங்கள் திறனும் ஆளுமையும் உடையவரா அல்லது பலவீனமான செயல்திறமற்றவரா என்பதை நிர்ணயிக்க மிகவும் உதவும். எந்நேரமும் இரு விற்பனை விளக்கக்காட்சிகளும் ஒன்று போலவே இருப்பதில்லை (அல்லது இருக்க வேண்டும்). ஆனால், அனைத்து வெற்றிகரமான விளக்கக்காட்சிகளிலும் பொதுவான விடயங்கள் சில உள்ளன. உங்களுடைய அடுத்த விளக்கக்காட்சியை மிகவும் சிறந்ததாக ஆக்க இவற்றை பின்பற்றவும்:
சுறுசுறுப்பாக இருங்கள்
உங்களை நீங்களே கவர முடியாவிட்டால், வேறு யாரையும் உங்களால் கவர முடியாது. நீங்கள் வழங்குவதை நம்புங்கள் மற்றும் அந்த நம்பிக்கையை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்காக வேகமாக அல்லது சத்தமாக பேச வேண்டிய அவசியமில்லை. உயிரோட்டம் மிக்கதாகவும் துல்லியமாகவும் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் மற்றும் கேள்விகளைக் கேளுங்கள்.
எளிமையாக பேசுங்கள்
தெளிவற்ற அல்லது கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தி உங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பிரகாசிக்க முயற்சிக்காதீர்கள். உடனடியாக புரியாத மொழியை பெரும்பாலும் மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலும் அவர்கள் குழப்பமடைகிறார்கள், வெறுப்படைகிறார்கள், அல்லது சலிப்படைகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முடிந்த அளவுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லுங்கள். நீங்கள் நீங்களாகவே இருந்து வழக்கமாகப் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்தி கதையுங்கள்.
தொடர்ந்து கவனித்துக் கொண்டிருங்கள்
திறன் மிக்க மற்றும் வெற்றிகரமான விளக்க காட்சி கேள்விகளும் கருத்துப்பரிமாற்றம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து வழங்கி வரும்போதே உங்கள் தொடர்பு முறைகளை தொடர்ந்தும் கண்காணித்து வாருங்கள், "அது இதுவரை தெளிவாக இருக்கிறதா?" "பின்வருபவை மிகவும் முக்கியமானவை, இவை சரியாக உள்ளதா?"
முகத்தைப் பார்த்து பேசுங்கள்
யாரேனும் ஒருவரின் முகத்தைப் பார்த்து பேசும்போது அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் எளிதாக இருக்கும். விளக்கக்காட்சி என்பது உரையாடலைப் போன்றதே என்பதை மறக்காதீர்கள். முக்கிய நபர்கள் என்று நீங்கள் கருதும் ஓரிரு நபர்களை மட்டும் நோக்கி பேசாமல் அறையில் உள்ள அனைவரின் முகங்களையும் பார்த்து பேசுங்கள். யார் முடிவெடுப்பதில் அதிக அதிகாரம் உடையவர், அல்லது மற்றவர்கள் அதற்கு எந்த அளவுக்கு பங்களிக்க முடியும் என்பதையெல்லாம் நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்பது சந்தேகம். உங்கள் பார்வையாளர்களில் சிலரை மட்டும் பிரித்து நோக்குவது எந்த அளவுக்கும் நன்மைளிக்காது.
கேட்பவர்களாக சிந்தியுங்கள்
உங்கள் விளக்கக்காட்சியானது இனிமையானதாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும், நீங்கள் பேசும் நேரத்திலும் கவனமாக இருங்கள். ஒரு பார்வையாளராக உங்களைக் கருதி, "நான் இப்போது எதனை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?" உங்கள் வாடிக்கயாளருக்கு உங்களைப் பற்றி எதுவும் சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை அல்லது நீங்கள் விற்பனை செய்வது சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அவர் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளக் கூடிய பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டு அவருக்காக அக்கறை கொள்வதை வெளிப்படுத்துங்கள்: "அதனால் என்ன?" "இதனால் எனக்கு என்ன பயன்?" மற்றும் "நான் எப்படி நன்மையடைவேன்?" போன்ற கேள்விகளைக் கேட்டு.
சிறந்த முறையில் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள்
உடனடியாக வெற்றிகரமான விளக்கக்காட்சியை வழங்க முடியும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விளக்கக்காட்சிகளை கவனமாக திட்டமிடுங்கள், உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவும் முன்னரே பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை கவனியுங்கள். ஸ்லைடுகளையும் சார்ட்களையும் பயன்படுத்தினால், அவை சரியான வரிசையில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்க வாய்ப்புடைய சிக்கல்கள் அல்லது கேள்விகளை நீங்களாகவே எழுப்ப முயற்சியுங்கள். அவற்றுக்கு முன்கூட்டியே பதில்களை தயாரித்து கொள்ளுங்கள்.
நேர்த்தியாக உடையணியுங்கள்
இன்று, அலுவலகங்களுக்கே உடை கட்டுபாடுகள் இல்லாத நிலையில் சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். குறைந்தது நீங்கள் சந்திக்கவிருக்கும் மக்கள் அணிந்திருக்கும் அளவுக்கு நேர்த்தியான உடையையாவது நீங்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியம். அளவுக்கதிக நேர்த்தியுடன் உடையணிந்திருப்பதைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது. குழப்பமாக இருந்தால், பாரம்பரிய வியாபாரச் சூழலில் அணியும் வழக்கமான ஆடையை அணிந்து செல்லுங்கள்.
இனிமையாக முடித்துவையுங்கள்
வெற்றிகரமாக முடித்தாக நினைத்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மேலும் தொடர்புகளுக்கான பிரவேசங்களைத் திறந்து விடுங்கள். உங்கள் பார்வையாளர்கள் கழித்த நேரத்துக்கு நன்றி செலுத்தியே எப்போதும் விளக்கக்காட்சியை முடியுங்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.www.v4all.org


வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
Center for Exhibit Industry Research –இன் ஆய்வின் படி, அடுத்த 12 மாதங்களுக்குள் உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் தான் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தருவார்கள். இதுமாதிரியான ஒரு வாய்ப்பை வீணாக்கிவிடாதீர்கள் – உங்கள் பணியாளர்கள் சிறப்பாக விற்பனையை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
மென்மையான விற்பனைகளைத் தவிருங்கள்
வியாபாரக் காட்சிகளுக்கு கடின விற்பனை அணுகுமுறை தேவைப்படுத்துகின்றது. பங்கேற்பாளர்கள் உங்கள் அரங்கிற்கு வருகை தரும் போது அவர்களிடம் உடனடியாகச் சென்று, உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வருமாறு அவர்களை அழைக்க வேண்டும். மக்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. வர்த்தகக் கண்காட்சிகளில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகக் கடினம். 60 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் உதவி கிடைக்காத பட்சத்தில், உங்கள் அரங்கை விட்டு அவர்கள் நகர்ந்து விடுவார்கள்.
தொடர்புபடுத்துங்கள்
உங்கள் அரங்குக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்க சிறந்தவழி உங்களுடைய தொழில் நேர்த்தி மற்றும் உதவும் தன்மை ஆகியவற்றை பிரதிபலித்துக் காட்டுவதாகும். பொருத்தமற்ற வரவேற்புகளான "நான் உங்களுக்கு உதவலாமா", "ஹாய், ஹவ் ஆர் யூ?", அல்லது "கண்காட்சி எப்படி நடக்கிறது?" போன்ற கேள்விகளைத் தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக, நேரடியான கேள்வியைக் கேட்பதன் மூலமாக பார்வையாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் இதனால் அவர்களின் ஆர்வங்களும் தெரியவரும் -- " எங்கள் புதிய கருவியைப் பற்றி நான் என்ன கூற வேண்டுமென விரும்புகிறீர்கள்?" அல்லது "ஹலோ, எங்களுடைய இந்த கருவியைப் பாருங்கள்?" என்று கூறுங்கள்.
உங்கள் நடத்தைகளில் கவனமாக இருங்கள்
நீங்கள் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தால், உங்களுக்கு ஆர்வமில்லை என நினைத்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் நகர்ந்து விடுவர். அமந்திருக்க வேண்டாம். அரங்கில் இருக்கும் போது உணவருந்தவோ, குடிக்கவோ, புகைக்கவோ கூடாது. உங்கள் அரங்கை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் உங்கள் சக பணியாளர்களுடன் நேரத்தை செலவிட வேண்டாம்.
அனுகூலமானதை மிக வேகமாக கணக்கிடவும்
ஒருவரை முதலில் பார்க்கும் போதே, அவர் யார் என்பதையும் (வாங்குபவர், முடிவு எடுப்பவர், விநியோகத்தர், போட்டியாளர், மற்றும் பல ) எங்கு இருக்கிறார் என்பதையும் கண்டிப்பாக நீங்கள் கண்டறிய வேண்டும். இதன் மூலம், உங்கள் உற்பத்திப் பொருளை சேவையை கொள்வனவு செய்ய விருப்பமில்லாதவர்களுடன் அல்லது உங்கள் சேவை கிடைக்காத இடத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கலாம். அவர்களிடம் சில முக்கிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்களது பேட்ஜ் அல்லது பெயர், முகவரிகளைக் கொண்ட விசிடிங் கார்டுகளைப் பார்ப்பதன் மூலம் இத்தகவலை நீங்கள் அறியலாம்.
ஏராளமான கேள்விகளைக் கேளுங்கள்
ஆம்/இல்லை என்பதை காட்டிலும் அதிகமாகப் பதிலளிக்கக்கூடிய வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள். அவர்களது தேவைகள் மற்றும் ஆர்வத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் பதில்களைக் கொண்டே, இந்தத் தேவைகளை உங்கள் உற்பத்தி அல்லது சேவை எந்தளவு நிறைவேற்றுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 80/20 என்ற விதியைக் கடைபிடிக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் -- அதாவது 80% கவனிக்கவும், 20% பேசவும். ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த விற்பனை வாசகங்களைத் தவிர்க்கவும், 50 வது முறை அதே பேச்சை தொடரும் போது உங்கள் குரல் இயந்திரம் போல் மாறிவிடும்.
சிறந்த பதிவுகளை வைத்துக்கொள்ளவும்
அனுகூலமானவை எனத் தெரிபவை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் ஒரு "குறிப்பு அட்டையில்" பதிந்து கொள்ளுங்கள். அதில், நபரின் பெயர், தொழில், முகவரி, தொலைபேசி/தொலைநகல் இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இவை அனைத்தும், ஒரு நபரின் வர்த்தக அட்டையில் கிடைக்கும்), அவரது தேவைகள்/ஆர்வம், பாதீடு மற்றும் நேரம் என்பன இருத்தல் வேண்டும். கண்காட்சி முடிந்து அலுவலகம் சென்றதும், இந்த அட்டையில் உள்ள தகவலைக் கொண்டு வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

அரங்கு இல்லாத வர்த்தகக் கண்காட்சிகள்

அரங்கு இல்லாத வர்த்தகக் கண்காட்சிகள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வர்த்தகக் கண்காட்சியில் சொந்தமாக அரங்கு அமைக்கத் தேவையில்லை. சொந்த அரங்கு அமைத்து நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதைத் தடுக்க பல வழிகள் உள்ளன இதோ நீங்கள் முயற்சித்து பார்ப்பதற்கான சில வழிமுறைகள்:
பேச்சாளராக இருங்கள்
பல பெரிய வியாபாரக் காட்சிகள் சிறப்பான கருத்தரங்கங்கள் என்பன நடாத்தப்படுகின்றன. ஒரு அரங்கில் அல்லது தொழில்நுட்ப அமர்வில் பங்கேற்று கொள்வதன் மூலம் உங்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துங்கள். சிறந்த முறையில் பொருந்தும் வழிகளை கண்டறியுங்கள். உதாரணமாக, ஒரு கணக்காளர் மென்பொருள் உருவாக்குபவர்கள் கருத்தரங்கில் புதிய வரி மாற்றங்கள் எவ்வாறு அவர்கள் தொழிலை பாதிக்கும் என்று பேசலாம். அதே போல ஒரு இயணய வடிவமைப்பாளர், கணக்காளர்களின் கூட்டத்தில் சிறப்பான இணையத்தளங்களை உருவாக்குவதை காண்பிக்கலாம். உங்கள் விளக்கக்காட்சியின் நகல்களை வைத்திருக்க மறக்க வேண்டாம், மேலும் வர்த்தக அட்டைகளையும் வைத்திருந்தால் பார்வையாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வழிகள் ஏற்படும். உரையாற்றிய பின்னர் கேள்விகள் மற்றும் கலந்துரையாடலுக்கு தயாராக இருங்கள்.
தனிப்பட்ட சந்திப்புகளை நடாத்துங்கள்
வியாபாரக் காட்சிகளின் அடிப்படை நன்மை என்னவென்றால், அவை உங்கள் வாடிக்கையாளர்களை ஒரே இடத்தில் ஒருமுகப்படச் செய்கின்றது. ஒரு அரங்கை வாடகைக்கு எடுப்பதற்கு பதிலாக, உங்கள் வாடிக்ககையாளா்கள் மற்றும் வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதை கருதலாம். இந்த சந்திப்புகள், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அல்லது உணவக மண்டபத்தில் நடைபெறலாம், அல்லது உங்கள் சொந்த இடத்தில் கூட நடத்தலாம். இதனால் நீங்கள் குறைவான செலவுகளையே செய்வீர்கள் – உங்கள் ஹோட்டல், உணவு மற்றும் போக்குவரத்து) மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் அலங்காரமான இடத்தைக் கண்டு ஆச்சரியமடைய வேண்டிய அவசியமும் தவிர்க்கப்படும்.
உங்கள் உற்பத்திப் பொருட்கள்/சேவைகளை வேறொருவரின் அரங்கத்தில் விளக்குங்கள்
உங்கள் தயாரிப்புகளை நிறைவு செய்யும் தயாரிப்புகளை வழங்கும் கம்பெனியைத் தேடுங்கள். இவர்கள், உங்கள் சந்தையில் கூட்டாளர்களாகவோ, உங்கள் விநியோகத்தர்களாகவோ, உங்கள் வாடிக்கையாளர்களாகவோ அல்லது வேறு கம்பெனியாகவோ இருக்கலாம். பின்னர், அவர்களுடைய அரங்கத்தில் இடம் இருந்தால், உங்கள் உற்பத்திப் பொருள் அவர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை விளக்குங்கள். உதாரணமாக, ஒரு மென்பொருள் உருவாக்குபவர், ஒரு புதிய தொகுப்பை, கணனிகள் வியாபாரியின் அரங்கத்தில் விளக்கலாம். ஒரு வீட்டுப்பொருள்கள் விநியோகத்தர், ஒரு தளபாடத் தயாரிப்பாளரின் கட்டில் மற்றும் நாற்காலிகளுக்காக, தலையணைகளையும் பிற துணைப் பொருள்களையும் காண்பிக்கலாம்.
ஆராய்ச்சியை நடாத்தவும்
ஆராய்ச்சியை நடாத்துவதற்கு, சில வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் சிறந்தது. அவை, உங்கள் போட்டியாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்கள் எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள் என்பதையும், தங்கள் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வாறு விலையிடுகிறார்கள் மற்றும் சந்தைப்படுத்துகிறார்கள் செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் போட்டியாளரின் செயல்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வாறு பதிலை அளிக்கிறார்கள் என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அல்லது நீங்கள் உங்கள் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்களைப் பார்க்கலாம், மற்றும் அவர்களுடன் இணைந்து உங்கள் வியாபாரத்தில் நன்மையடையும் திறமுறைகளில் அந்த செயலதிகாரிகளைப் பங்கு பெறச் செய்யலாம். இறுதியாக, வியாபாரக் காட்சிகள் உங்கள் விநியோகத்தர்களை கண்டறியவும், விநியோகிப்பாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளை கண்டறியவும் மிகச் சிறந்த இடமாகும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.-www.v4all.org

வெற்றிகரமான செய்திக்குறிப்புகளை எழுதுதல்

வெற்றிகரமான செய்திக்குறிப்புகளை எழுதுதல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஊடகங்களில் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று செய்தி குறிப்புகளாகும். செய்தியறிக்கையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள் ஆகியோர் செய்திகளைப் பெற ஆவலுடன் இருக்கின்றனர். புதிய, வித்தியாசமான உற்பத்திப் பெருட்கள் மற்றும் நிறுவனங்கள், போக்குகள், தகவல் குறிப்புகள். பிற அபிவிருத்திகள் என்பன பற்றி அறிவதற்கு இந்த செய்தி குறிப்புகள் பயன்படுகின்றன. செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், அல்லது வர்த்தகப் பத்திரிகைகள் போன்றவற்றில் நீங்கள் வாசிப்பவற்றில் பெரும்பான்மையானவை, வானொலியில் கேட்பவை அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பவை ஆகிய அனைத்தும் செய்தி வடிவத்தில் இருந்து உருவானவையே ஆகும். துரதிர்ஷ்ட்வசமாக, ஒரு சாதாரண பதிப்பாசிரியர் ஒரு வாரத்துக்கு பல்லாயிரக் கண்ணகான செய்திகளைப் பெறுகிறார், இதில் பெரும்பான்மையானவை "கோப்பாக்க"மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு செய்தி ஊடகவியலாளரைத் தூண்டி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்குவதே நீங்கள் எதிர்நோக்கும் சவாலாகும்.

கவனிக்கத்தக்க செய்திக்குறிப்பை உருவாக்க இந்த 10 தகவல் குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

செய்தியாளரின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல்மிக்க தலைப்பைப் பயன்படுத்தவும்

உங்கள் செய்திகள் தனித்துவம் மிக்கதாக இருக்க தலைப்பே முக்கியமாகும். அதை சுருக்கமாகவும், திறன்மிக்கதாகவும், தெளிவாகவும் தயாரியுங்கள்; வேறு விதமாக சொல்வதானால் "ஜான் டோ விருது பெற்றுள்ளார்"என்பதற்கு பதிலாக "டோ இந்த ஆண்டின் சிறந்த மனிதர்" என்று பயன்படுத்தவும் என்பதாகும்.

மிக முக்கிய தகவல்களைத் தொடக்கத்தில் வையுங்கள்

இது இதழியலின் சோதிக்கப்பட்ட உண்மையான விதியாகும். ஒரு ஊடகவியலாளர் முதலில் இரண்டு பத்திகளிலும் அந்த செய்திக்குறிப்பு என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் அனைத்தையும் வாசிப்பார்கள் என்பது உறுதி கிடையாது. எனவே நல்ல தகவல்களை மறைக்காதீர்கள். மேலும் முக்கியாமான "5 கேள்விகளை" கேட்க மறக்காதீர்கள் – அதாவது உங்கள் செய்திக்குறிப்பானது யார், என்ன, எப்போது, ஏன் மற்றும் எப்படி என்ற ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

விளம்பரம் மற்றும் உறுதியற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கவும்

விற்பனைக்கான விளம்பரத்தை மிகவும் எளிதாக ஒரு எழுத்தாளரால் கண்டறிந்து விட முடியும். அளவுக்கதிகமான தற்பெருமை கூற்றுகளைத் தருவதற்கு பதிலாக, உண்மையான, பயன்மிக்கத் தகவல்களை தரவும். உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் தனிப்படுத்தி காண்பிக்கும் முறையான வழிகளை கண்டறிந்து அவற்றை அழுத்தமாக கூறுங்கள். உங்கள் வியாபாரத்தை மேம்படுத்த, உங்கள் வியாபாரத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமான செய்திக்குறிப்பை எழுதவும். பொதுவாக தகவல்களையும்,ஏன் என்று தெரிவிக்காமல் உங்கள் வியாபாரம் மிகச்சிறந்தது என்பதை மட்டும் தெரிவிக்கும் தகவல்களையும் தவிர்த்து விடுங்கள்.

சிறப்பாக, சொல்ல வேண்டிய விடயங்களை நேரடியாக சொல்லுங்கள்

உங்கள் செய்தியில் நீங்கள் எவ்வாறு ஆர்வமுடையவராக இருப்பீர்களோ அதே ஆர்வத்தை வாசகர்கள் மத்தியிலும் தூண்டும் மொழிநடையைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய செய்திக்குறிப்பானது சலிப்பூட்டுவதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருப்பின் நீங்கள் சரியான நேர்காணும் நபரல்ல என மக்கள் நினைப்பார்கள். .

இரண்டு அல்லது அதைவிட குறைந்த பக்கங்களில் செய்திக்குறிப்பை அமையுங்கள்

முக்கிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டும் மூன்று பக்கங்களைப் பயன்படுத்துங்கள். வேறு நிலைகளில் உங்களால், இரு பக்கங்களில் செய்தியை குறிப்பிட முடியாவிட்டால், உங்களால் செய்தியை தெளிவாக கூற முடியவில்லை என்று பொருள்.

ஒரு தொடர்பைச் சேர்க்கவும்

செய்தியாளர் மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு நபரின் தொடர்பு செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நபருக்கு செய்திக்குறிப்பில் உள்ள அனைத்து செய்திகளும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் செய்திக்குறிப்பை வெளியிடுங்கள் – இது நம்பகமானதாகவும் ஊடகவியலாளர் உங்கள் நிறுவனத்தை அடைவதற்கான மற்றொரு வழியாகவும் இது அமையும்.

தெளிவற்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள்

நீங்கள் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நபர் என்றால், தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள். பல ஊடகவியலாளர்கள் உங்களைப் போல உங்கள் நிறுவனத்துக்கோ அல்லது உங்கள் தொழிற்துறைக்கோ நெருங்கிய அறிமுகம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். தெளிவற்ற சொற்களை விட தெளிவான ஆங்கிலம் அல்லது தமிழில் உங்கள் கட்டுரையை எளிதாக விளக்கும்.

நன்மைகளை அழுத்தமாக கூறுங்கள்

"இப்போது சொல்ல வேண்டாம், காண்பிக்க வேண்டாம்" என்ற வகையின் கீழ் இது வரும் "தனித்துவம் மிக்கது" அல்லது "மிகச்சிறந்தது"என்று குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக எவ்வாறான நன்மைகளைப் பெறுவார்கள் என்பதை காண்பியுங்கள் – அதாவது நேர பண சேமிப்பு , எளிமை போன்றவற்றை காண்பியுங்கள்.

குறிப்பாகவும் விரிவாகவும் விளக்குங்கள்

"Six Steps to Free Publicity" -இன் பதிப்பாசிரியரான மார்சியா யுட்கின் இதனை "ஆம், ஆனால் இது என்ன?" நோய் என்று குறிப்பிடுகிறார். வாசகர் புதிய உற்பத்திப் பொருளொன்றை காணக்கூடியவராக இருத்தல் வேண்டும். அல்லது புதிய சேவை எவ்வாறு இயங்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். சந்தேகமிருந்தால், உங்கள் உற்பத்திப் பொருள் அல்லது சேவைகளைப் பற்றி அதிகம் அறிந்திராத நபர் ஒருவரை வைத்து உங்கள் செய்தியை அறியப்படுத்தி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை விவரியுங்கள். மிக சொற்ப விவரங்களைப் பயன்படுத்துவதை விடவும், அதிகமான விவரங்களைப் பயன்படுத்துவது நல்லது. எனவே, யுட்கின் குறிப்பிடுவது போல " ‘ஜக்சனின் புதிய புத்தகத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளருக்கான அறிவுரைகள் உள்ளன’ என்பதற்கு பதிலாக, ‘ஜக்சனின் புத்தகத்தில் சந்த ஆய்வுக்கான ஆறு தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு சாதாரண முதலீட்டாளர்களரும் எளிதாக இலாபமீட்டும் பங்குகளைத் தெரிவு செய்ய முடியும்.’ என்று குறிப்பிடவும். இன்னும் சிறப்பாக வேண்டுமானால், ஏழில் இரண்டு தத்துவங்களை செய்திக்குறிப்பிலேயே விவரியுங்கள்."

பிழைத்திருத்தம்

செய்திக்குறிப்பை உருவாக்கி முடித்த பின்னர், எழுத்துப்பிழைகள் உள்ளதா என்று சரிபார்க்கவும். உங்களால் பிழைத்திருத்தங்களை சிறப்பாக செய்ய முடியாது என்று எண்ணினால், ஒரு நண்பர் அல்லது சகப் பணியாளரிடம் அதனை ஒப்படைத்து பிழைத்திருத்தம் செய்யுமாறு கூறுங்கள். உங்கள் செய்திக்குறிப்பு சலிப்புண்டாக்கக்கூடியதாக அக்கறையின்றி உருவாக்கப்பட்டதாக இருக்குமாயின் நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள்
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.- www.v4all.org

Wednesday, August 26, 2015

பிடிவாதம்



“பிடிவாதம் என்ற ஒன்று இருக்கத்தான் வேண்டும் - ஆனால்
அது நன்மைக்கான பிடிவாதமாக மட்டுமே இருக்க வேண்டும்”- www.v4all.org
-இன்று நான் படித்த ... பிடித்த ஒரு நல்ல பிடிவாதப் பதிவு இது...
ஏற்கனவே நான் கேள்விப்பட்ட சில டி.எம்.எஸ். விஷயங்கள் , இந்தக் கருத்தை உண்மை என்று உணர்த்துகின்றன...
# “எக்கோ” எபெக்ட் வைத்தால்தான் “யாருக்காக” பாடலைப் பாடுவேன் என “வசந்த மாளிகை” யில் டி.எம்.எஸ். பிடித்த பிடிவாதம்... அப்போது தயாரிப்பாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும்..... அந்தப் பாடல் திரையரங்கில் ரசிகர்களிடம் ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு அந்த எக்கோ எபெக்டே காரணம் என உணர்ந்த தயாரிப்பாளரின் ஆனந்தம்...
அது டி.எம்.எஸ்ஸின் அக்கறைப் பிடிவாதம்...
# 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்;
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்'
என்ற வரிகளைப் பாட மறுத்து... “சாக வேண்டும்” என்ற வரிகளை 'வாட வேண்டும்' என்று கண்ணதாசன் மாற்றித் தந்த பின்பே பாடிய பக்திப் பிடிவாதம்...
# அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியாததால்... நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடிய அந்த ஆர்வப் பிடிவாதம்...
# இவ்வளவு பிடிவாதம் பிடித்த டி.எம்.எஸ். இன்னொரு பிடிவாதமும் பிடித்திருக்கலாம்...
டி ராஜேந்தரின் “ஒரு தலை ராக”த்தில் ... “நான் ஒரு ராசி இல்லா ராஜா”.....” பாடலையும் , “என் கதை முடியும் நேரம் இது” ... பாடலையும் பிடிவாதமாக பாடாமலே தவிர்த்திருக்கலாம்...
"“அறம்” விழும் பாடல் இது .. வார்த்தைகளை மாற்றலாமே.." என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இருக்கிறார் டி.எம்.எஸ்....
பின் வாங்க மறுத்து விட்டார் டி .ராஜேந்தர்..
அன்று கண்ணதாசனே டி.எம்.எஸ் சுக்காக வார்த்தைகளை மாற்றி வளைந்து கொடுத்தார்..ஆனால் டி.ராஜேந்தர்...?
பாடினார் டி.எம்.எஸ்...!
"ராசி இல்லா ராஜா "வாகவே ஆகிப் போனார்...
என்ன செய்வது..? விதி வலியது...!

Friday, August 21, 2015

நாடிகள

நாடிகள (Nadis)


chakras
பிங்கலைஇடகலைசுழுமுனை
குண்டலினி எழும்பும் விதம்
நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது.அதன் பெயர் நாடியாகும். சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன. அவற்றில் இடகலை,பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மைகொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது.

மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மைகொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது.

மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை, சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது. 

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு

இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை “மரணத்தின் வர்த்தகன் மரணம்” என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.
“மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்” என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. “நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?” என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.
அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் ‘ப்ளைவுட்’டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.
இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு “மரணத்தின் வர்த்தகன்” என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய “ஆயுதங்களைக் கைவிடுங்கள்” என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.
ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?

வியாபாரத் திட்டம் என்றால் என்ன?

வியாபாரத் திட்டம் என்றால் என்ன?
சான்றுகள்
அன்டொய்நெட் டக்லஸ்
மதர் லவ் பெமிலி டே கெயார்
"நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியது எது எனக் கண்டுபிடிக்கவும். கல்லூரிக்குச் சென்று அத்துறையில் கல்வியைப் பெறுதல்."
ட்ரான்ஸ்கிரிப்ஷன் – எச்.டி.எம்.எல்.
உங்களுடைய வியாபாரத் திட்டத்தின் இன்றியமையாத பெறுமதியாக இருக்கவேண்டியது என்னவெனில், உங்களுடைய வியாபாரத்தின் எதிர்கால நோக்கங்கள், அதன் விபரம் மற்றும் அதன் பகுப்பாய்வு உள்ளடங்களாக உங்களுடைய வியாபாரத்தின் பொருளாதார சாத்திய வளத்தின் சகல துறைகளையும் விஷேடமாக குறிப்பிட்டு ஒரு எழுத்திலான வரைபொன்றைப் பெற்றுக் கொள்வதாகும்.
இந்தப் பாடநெறி 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால் மிக முக்கியமானது என்னவெனில், வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது இதே படிவத்தை உங்களுடைய வியாபாரம் பின்பற்ற முடியுமா என கருத்திற் கொள்ளவும். இந்த அமர்வில் உள்ளடக்கப்பட்டுள்ள பின்வரும் ஒவ்வொரு அமர்வுகளிலும் ஒவ்வொரு விடயத்தையும் உள்ளடக்கும் வகையில் ஒரு மாதிரி வியாபாரத் திட்டமொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் இவை அனைத்தையும ஒன்றாகச் சேர்க்கும் போது, உங்களுடைய முழுத் திட்டத்திற்குமான ஆரம்ப மாதிரி ஒன்று கிடைக்கும்.
ஒரு புத்திசாலியான தொழில் முனைபவர் தனது வியாபாரத்தின் அளவு பற்றி கருத்திற்கொள்ளாது ஒரு வியாபாரத் திட்டத்தை வைத்திருப்பது முக்கியமாகும். ஆனால் இது அடிக்கடி கைவிடப்படுகின்றது. ஆகவே இந்தப் பாடநெறியினூடாக நீங்கள் இதனைக் கற்றுக் கொள்ளும் போது உங்களுடைய வியாபாரத் திட்டத்தை தயாரிப்பதற்கான படிவமொன்றினை நாங்கள் உங்களுக்குத் தருகின்றோம்.
வியாபாரத் திட்டங்கள் பாரிய வித்தியாசங்களைக் கொண்டமைந்ததாக இருக்கலாம். வாசிகசாலைகளிலும், புத்தகக் கடைகளிலும் வியாபாரத் திட்டப் படிவங்களுக்கான நூல்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் தொடங்குவதற்கான இடம் இந்தப் பாடநெறிதான் விஷேடமாக உங்களுடைய தொழில் துறைக்கு தனித்துவம் வாய்ந்த திட்டமொன்றை வடிவமைத்துக் கொள்வதற்கு நீங்கள் இந்தப் பாடநெறியை தொடர்ந்தும் பின்பற்றலாம்.
தற்போது பல ஆரம்ப தொழில் முனைவோர் தங்கள் வியாபாரத்திற்கான திட்டத்தைத் தயாரித்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர் ஆகவே இந்தப் பாடநெறியை நீங்கள் தொடரும் போது நீங்கள் ஒவ்வொரு செக்மன்டையும் முடிக்கவேண்டும் என நாங்கள் உங்களுக்கு சிபாரிசு செய்கிறோம். நாங்கள் உங்களுடைய பொருள் மற்றும் சேவைகள் வியாபாரத்திற்கான மாதிரித் திட்டங்களை வழங்குவதன் மூலம் இதனை இலகுபடுத்துவதுடன் நீங்கள் எம்.எஸ். வேர்டில் கீழிறக்கம் செய்து தனிப்பயனாக்கம் செய்து கொள்வதற்காக நாங்கள் ஒரு கவர்ச்சியான வெற்றுப் படிவத்தையும் வழங்குகின்றோம்.
நாம் ஏன் வியாபாரத் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
சான்றுகள்
இசெக்குவெல் படில்லா
ஜகொஸ் ட்ரொபிகல்ஸ் மெக்ஸிகன் புட்
"உங்களுடைய வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும் போது முடியுமானால் சொத்துக்களை வாங்குவதைக் கருத்திற்கொள்ளுங்கள்."
ட்ரான்ஸ்கிரிப்ஷன் – எச்.டி.எம்.எல்.
உங்களுடைய வியாபாரத் திட்டம் உங்களுக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக அமையப் போகின்றது. இந்த பெறுமதியான கருவியினை தட்டிக் கழிக்கக் கூடாது என்பதற்கான பல தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
  • முதன் முதலில் பொறுத்தமான தகவல்கள் மற்றும் பகுப்பாய்வு பயன்படுத்துவதன் ஊடாக உங்களுடைய நோக்கத்தை அது வரையறுத்து ஒருமுகப்படுத்தும்.
  • உங்களுடைய வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்கள் உள்ளடங்களாக முக்கியமான உறவுகளைக் கையாளுகையில் நீங்கள் இந்தக் கருவியை ஒரு விற்பனைக் கருவியாகப் பயன்படுத்தலாம்.
  • உங்களுக்கு இலவசமாக மிகவும் பெறுமதியான ஆலோசனைகளை வழங்கக் கூடிய நீங்கள் திட்டமிட்டுள்ள வியாபாரத் துறையில் உள்ளவர்கள் உட்பட மக்களிடம் ஆலோசனையையும், கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். அடிக்கடி தொழில் முனைவோர் முன்னேறிச் ("My Way!") செல்வதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். அத்துடன் அவ்வாறு செய்வதனூடாக நிபுனர்கள் வழங்கக்கூடிய பல சேவைகளையும், நன்மைகளையும் அவர்கள் இழக்கின்றார்கள். "என் வழி"என்பது ஒரு சிறந்த பாடலாகும். ஆனால் அது நடைமுறை ரீதியில் பல தேவையற்ற இடையூறு ஏற்படுத்தலாம்.
  • உங்களுடைய வியாபார செயன்முறையில் காணப்படும் நீக்கியவைகள் அல்லது பலவீனங்கள் என்பனவற்றை உங்களுடைய வியாபாரத் திட்டம் கண்டுபிடிக்கும்.
உங்களுடைய வியாபாரத் திட்டத்தில் எதனைத் தவிர்க்க வேண்டும்நீண்டகால எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றி நியாயமான வரையறைகளை இடுங்கள். (நீண்ட காலம் என்பது ஒரு வருடத்திற்கு அதிகமான காலம்.) குறுகியகால நோக்கங்களுடன் செயற்படுவது சிறந்தது. அதேபோல் உங்களுடைய வியாபாரம் செயற்படும்போது உங்களுடைய திட்டத்தை மாற்றியமைக்கவும் முடியும். அடிக்கடி நீண்டகால திட்டங்கள் அர்த்தமற்றதாகி விடுகின்றன. காரணம் உங்களுடைய வியாபாரத்தின் உண்மை நிலை உங்களுடைய ஆரம்ப கருத்தை விட மாறுபட்டதாக இருக்கலாம்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற வாதத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உண்மையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற வாதம் உங்களுடைய மூலதனத் தேவைகள், நேரம், இலாபங்கள், முன்னறிவித்தலின் போது மிகவும் பழமைவாய்ந்ததாக இருக்கலாம். சிறிய அளவிலான வியாபாரங்கள் மட்டுமே அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு நேரம் தேவை என்பதை சரியாகக் கணிக்கின்றன.
உங்களுடைய வியாபார விளம்பரங்களின் போதான உபாயங்களை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
பிரச்சினைகளை விவரிக்கும் போது இலகுவான மொழிநடையில் அதை செய்யவும். அதை விளங்கிக் கொள்வதற்கும், வாசிப்பதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கவும்.
உங்களுடைய வியாபாரத்தின் தனித்தன்மையில் முழுமையாகத் தங்கியிருக்கவோ அல்லது காப்புக் கண்டுபிடிப்பில் முழுமையாகக் கண்டுபிடிக்கவோ வேண்டாம். பொருளாதார விஷேட நிபுனத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வியாபாரமே வெற்றியடைகின்றது. ஆனால் அது பெரிய கண்டுபிடிப்புக்களாக இருக்கவேண்டியதில்லை.
வியாபார திட்டப் படிவம்: சகல விடயங்கள் பற்றிய ஒரு முறையான மதிப்பீடு உங்களுடைய வியாபார நோக்கத்திற்கும் இலக்குகளுக்கும் முக்கியமானதாக அமைகின்றது
சான்றுகள்
மேரி லோஹர்
க்ரெபிக் ஆர்டிஸ்ட்
"நீங்கள் தனியாக வியாபாரத்திலிருப்பது ஒவ்வொருவருக்காகவும் அல்ல."
ட்ரான்ஸ்கிரிப்ஷன் – எச்.டி.எம்.எல்.
நீங்கள் உங்களுடைய திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய உத்தேச உதவிக் குறிப்புகள் சில
  • ஒரு நோக்குக் கூற்று: இது உங்களுடைய வியாபார நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றின் ஒரு சுருக்க விபரமாக இருக்கும்
  • The people: By far the most important ingredient for your success will be yourself. உங்களுடைய புதிய வியாபாரத்திற்கு உங்களது கடந்தகால அனுபவங்கள் எவ்வாறு பயன்படலாம் என்பது பற்றி கவனத்திற் கொள்ளுங்கள். வியாபாரத்தின் ஆரம்பத்தில் உங்களுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட சுயவிபரக் கோவை ஒன்றையும் உங்களது சுயவிபரக் கோவை ஒன்றையும் தயாரித்துக் கொள்ளுங்கள் உண்மையை மட்டும் உள்ளடக்குங்கள். தேவையில்லாத பில்ட் அப்களை தவிர்த்து விடுங்கள். விற்பனையாளர்கள், கடன்வழங்கநனர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளடங்களாக நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் அனைவராலும் உங்களது வியாபாரத்தின் இந்தப் பகுதி மிகக் கவனமாக வாசிக்கப்படும். சுயவிபரக் கேவைகளை தயாரிப்பதற்கான டெம்ப்லேட்டுகள் உங்களது வாசிகசாலை, கிங்கோஸ் புக்ஸ்டோர்ஸ் மற்றும் இன்டனெட்டில் கிடைக்கும்."சுயவிபரக் கேவைகள்."
    ஆனால் நீங்கள் யாராக இல்லையோ உங்களால் அவராக வரமுடியாது. பிரதான கருமங்களை மேற்கொள்வதற்கு உங்களிடம் போதிய இயலுமைகள் இல்லை எனில், அதை இந்த வியாபாரத் திட்டடத்தில் உள்ளடக்கவும். உதாரணமாக வேலையாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு உங்களிடம் போதிய இயலுமை இல்லை எனில் இந்தக் குறைபாட்டினை நீங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வீர்கள் என ஒரு விளக்கத்தையும் அங்கு உள்ளடக்கவும் உங்களிடம் இல்லாத திறன்களை உங்களுக்கு வழங்கக் கூடிய முக்கியமான நபர்களை பணிக்கு அமர்த்துவதற்கான திட்டம் அல்லது (04ஆவது பிரிவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.) நீங்கள் உத்துசித்துள்ள முகாமை பற்றிய ஒரு சுயசரிதையை உள்ளடக்கவும்.
  • வியாபார சுயவிபரத் தகவல்: நீங்கள் உத்தேசித்துள்ள வியாபாரம் பற்றி அதை வரையறுத்து விவரிக்கவும். அத்துடன் நீங்க்ள அதை எவ்வாறு தொடருவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் சரியாக விவரிக்கவும். நீங்கள் உங்களுடைய சேவையை வழங்க உத்தேசித்துள்ள விஷேட சந்தை பற்றி உங்களுடைய கவனத்தை செலுத்திக் கொண்டே இருப்பதற்கு முயற்சிசெய்யுங்கள்.
  • Economic assessment: Provide a complete assessment of the economic environment in which your business will become a part. நீங்கள் கையாள வேண்டிருக்கின்ற மக்கள் பரவல்கள் மற்றும் ஒழுங்கமைப்பு ஏஜென்சிகள் பற்றி உங்களுடைய வியாபாரம் எவ்வாறு பொருத்தமானதாக அமைகின்றது என விளக்கவும். பொருத்தமில்லை எனில் பொதுவாக உள்ளூர் துறைகளில் கிடைக்கும் பார்வையாளர் ஓட்டம் பற்றிய தரவுகள் மற்றும் மக்கள் பரப்பு கற்கைகள் போன்றவற்றை வழங்குங்கள்.
  • காசுப் பாய்ச்சல் மதிப்பீடு: ஒரு ஒரு வருட காசுப் பாய்ச்சலை உள்ளடக்குக. அது உங்களுடைய மூலதன தேவைகளைக் கூட்டிணைக்கும் (#7 பாடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது ). என்னென்ன தவறுகள் ஏற்படலாம், பிரச்சினையைக் கையாளுவதற்கான உங்களுடைய திட்டங்கள் என்ன என்பது தொடர்பான உங்களுடைய மதிப்பீட்டையும் உள்ளடக்கவும்.
  • உங்களது சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் விரிவாக்கல் திட்டங்களை உள்ளடக்கவும்.
  • சிறு வியாபார நிருவாகம் போன்ற உங்களுக்கு துணைபுரியக் கூடிய அரச இணையத்தளங்களையும் பார்க்கவும். பார் "வளங்கள் "இந்த இணையத்தளத்தில் முகப்புப் பக்கத்தில்
சிறந்த வியாபார திட்டம் பற்றிய ஆறு படிகள்
ஆரம்ப தொழில் முனைவோர் தமது வியாபாரத் திட்டங்களை தயாரித்துக் கொள்வதில் கஷ்டப்படுகின்றார்கள். இந்த ஒழுக்கக்கோவை பல வழிகளில் உங்களுக்கு உதவப் போகின்றது.don't skip this planning tool! மேலும் இலகுவாக்குவதற்கு, நீங்கள் பெறுமதியான பெற்றுக்கொள்ளக்கூடிய ஆறு படிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
  1. உங்களுடைய அடிப்படை வியாபாரக் கருத்தை எழுதுங்கள்.
  2. உங்களுடைய வியாபாரக் கருத்தின் தனிச்சிறப்புக்கள் மற்றும் சாத்தியவளங்கள் போன்றன பற்றிய விடயங்கள் தொடர்பில் சகல தரவுகளையும் சேகரியுங்கள்.
  3. நீங்கள் சேகரித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உங்களுடைய கருத்துக்கள் மீது அதனை ஒருமுகப்படுத்தி மெருகூட்டுங்கள்.
  4. உங்களுடைய வியாபாரத்தின் பிரத்தியேக பண்பை பற்றி எடுத்துரைக்குக அது பற்றி "What, where, why, how என்ன, எங்கே, ஏன், எப்படி "எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணுகுமுறை பயனுள்ளதாக அமையலாம்.
  5. உங்களுடைய வியாபாரத் திட்டத்தை செயலாற்றுகைப் படிவம் ஒன்றில் இடுங்கள். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் அது உங்களுக்கு சிறந்த கருத்துக்களையும், விஷேட நோக்கினையும் மட்டுமே தருவதில்லை. ஆனால் அவற்றை வழங்கும் அதே நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமாக அமையும் வியாபார உறவுகளையும் கையாளும் முக்கியமான ஒரு கருவியாகவும் அமையலாம்.
  6. வழங்கிய மாதிரித் திட்டங்களை மீளாய்வு செய்து வெற்றுப் படிவத்தினை எம்.எஸ்.வர்ட் டொகியுமென்ட் இற்கு கீழிறக்கம் செய்யுங்கள். நீங்கள் பாடநெறியை தொடரும்போது இந்தப் படிவத்தை நிரப்பவும்.
ஒரு வெற்றிகரமான வியாபாரத்தை தயார் செய்யக்கூடிய கீழ்காணப்படும் முக்கியமான விடயங்கள் உங்களுடைய திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என செவ்வைபார்த்துக் கொள்ளுங்கள்.
சான்றுகள்
ஆர்.டி. மெக்டொனல்
கட்டிடக்கலைஞன்
"பிரச்சினைகள் பற்றி நீங்கள் ஒரு கடதாசியில் எழுதிக் கொள்ளாதவிடத்து குறித்த பிரச்சினைகளை நீங்கள் கவனியாது விடலாம். ஆகவே அப்பிரச்சினைகளை ஒரு கடதாசியில் எழுதிக் கொண்டு அவற்றை அடையாளம் காணுங்கள்."
ட்ரான்ஸ்கிரிப்ஷன் – எச்.டி.எம்.எல்.
  • ஓரு தெளிவான வியாபாரக் கருத்து..அநேகமான தொழில் முனைவோரால் வெகுவாக விடப்படும் தவறு என்னவெனில் அவர்கள் அரம்பத்தில் சரியான வியாபாரத்தை தேர்ந்தெடுக்காமையே.. ஒரு சிறந்த வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முன் அந்த வியாபாரம் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே அவ்வாறான வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு நபருடன் பணியாற்றி சிறந்த அனுபவத்தைப் பெறுங்கள். ஒரு சிறந்த வியாபாரம் பற்றி உங்களின் கருத்து மற்றும் உண்மைநிலை இவையிரண்டிற்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி இருக்கலாம்.
  • உங்களுடைய சந்தையைப் புரிந்துகொள்ளல் உங்களுடைய புரிந்து கொள்ளலை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாக அமைவது என்னவெனில் நீங்கள் தயாரிப்பதற்கு உத்தேசித்துள்ள தயாரிப்புக்களையும் சேவைகளையும் நீங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே சந்தையில் போட்டுப் பரீட்சித்துப் பார்ப்பதுதான். உலகமெங்கும் இருக்கும் பட்டம் விடும் பிரியர்களின் கவனத்தைக் கவரலாம் என நீங்கள் நினைக்கக்கூடிய சிறந்த பட்டம் ஒன்று இருக்கின்றது? எனின், அந்தப் பட்டத்தை தயார் செய்து சந்தையில் அதை விற்பனை செய்ய முயற்சித்துப் பாருங்கள்.
  • வளமாக வளரும் மற்றும் நிலையான தொழில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், விமானங்கள் மற்றும் கார்கள் போன்ற பாரிய கண்டுபிடிப்புக்கள் அந்தப் பாரிய முன்னேற்கள் பற்றி அதிலிருந்து தவறான பயன் பெற முயன்றவர்களுக்கு பொருளாதார நன்மையை வழங்கவில்லை. உதாரணமாக வில்பரைட் தனது முதலாவது விமானத்தை பறக்கவிட்டது தொடக்கம் சகல விமானங்களின் இணைந்த ஊதியங்கள் பூச்சியத்தையும் விட குறைவாக இருந்தது. (விமானங்கள் குறித்த நட்டங்கள் அதனால் ஏற்படும் லாபங்களை விட பாரியளவில் இருக்கின்றது.) சிறந்த பொருளாதார நிலையில் வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் வெற்றி பெறுகின்றார்களே தவிர அது பாரிய கண்டுபிடிப்புக்களாகவோ அல்லது மனித இனத்தின் பாரிய முன்னேற்ற விடயமாகவோ இருக்கவேண்டியதில்லை
  • இயலுமை முகாமை உங்களை விட பத்திசாலித்தனமான சிறந்த திறன்களைக் கொண்டிருக்கின்ற சிறந்த விழுமியங்களைக் கொண்டிருக்கின்ற நீங்கள் விரும்புகின்ற மக்களைப் பாருங்கள். . உங்களிடம் காணப்படாத திறன்களைக் கொண்டிருக்கும் நபர்களை கூலிக்கமர்த்த திட்டமிடுங்கள். உங்களுடைய தனித்துவமான இயலுமையை வரையறுத்து உங்களுடைய பலவீனங்களை பலமாக மாற்றும் நபர்கள் பற்றி தேடுங்கள்.
  • இயலவைக்கும் நிதியியல் கட்டுப்பாடு பணப்பாய்வு முகாமை, கணனி மென்பொருட்கள் மற்றும் தரமான கணக்காளர் ஆவதன் முக்கியத்துவம் தொடர்பில் நீங்கள் பின்னர் கற்றுக் கொள்வீர்கள். பல தொழில் முனைவோர் கணக்கியல் பின்னணியிலிருந்து வருபவர்கள் அல்ல. அவர்கள் கணக்கியல் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு மீண்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். புள்ளிகளைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்று தெரியாத ஒரு விளையாட்டில் நீங்கள் உங்களுடைய சேமிப்புக்களை இடுவீர்களா? மக்கள் அநேகமாக வியாபாரங்களில் இதையே செய்கிறார்கள்.
  • ஒரு நம்பத்தகுந்த வியாபார நோக்கு குறித்த துறை குறித்த விஷேட நிபுனர்களால் அத்துறை குறித்த விஷேட நிபுனர்கள் அற்றவர்களை விட செய்யக்கூடிய விஷேட சேவைகள் அல்லது தயாரிப்புகள் பற்றி நீங்கள் யோசித்தால் நீங்கள் செய்யக்கூடிய ஏதாவதொன்று பூச்சியமாக இருந்தால் அதனை குறைந்த விலையில் விற்கும் ஒருவருடன் போட்டியிடும் நிலைக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள்.
அமர்வு 1, 2 இற்கான வியாபார திட்டம்: வியாபார சுயவிபரக் கோவை, தொலைநோக்கும் மக்களும்
நாங்கள் உங்களுக்கு வழங்கிய மாதிரி திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு நேரம் இதுதான். நீங்கள் உங்களது சொந்த திட்டத்தை வடிவமைத்துக் கொள்வதற்கு இது உங்களுக்கு உதவும். நிறப்புவதற்கான பொருத்தமான தகவல்கள் குறித்த சில உதவிக் குறிப்புகள் தொடர்பில் மாதிரி வியாபாரத்திட்டத்தைப் பார்க்கவும்.
மாதிரி வியாபாரத் திட்டம் (தயாரிப்பு): விட்ஜஸ்ட் கூட்டு நிறுவனம்
Microsoft Word கோப்புஎம்.எஸ்.வேர்ட்

மாதிரி வியாபாரத்திட்டம் (சேவை): ஸ்மித் மின் வியாபார ஆலோசனை
Microsoft Word கோப்புஎம்.எஸ்.வேர்ட்
நீங்கள் உங்களுடைய வியாபாரத்திட்டத்தை தயாரிக்க தற்பொழுது ஆரம்பிக்கலாம் நீங்கள் இன்னும் ஒரு வியாபாரத்தை தேர்ந்தெடுக்கவில்லை எனில், ஒன்றை செய்து பார்ப்பதற்கு தெரிவுசெய்யலாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மைக்ரோ ஸெப்ட் வேர்ட் டொகுமென்ட் இற்கோ அல்லது அச்சிட முடியுமான வேறு வெப் பேஜர்ஸ்களுக்கோ கீழிறக்கம் செய்யக்கூடிய கவர்ச்சியான தனியாள் வியாபார டெம்ப்லேட்களை நாங்கள் ஒவ்வொரு அமர்விலும் உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். இப்போதே ஆரம்பியுங்கள்)
பிரிவு 1: தொழில் விபரம்
Microsoft Word கோப்புஎம்.எஸ்.வேர்ட்

பிரிவு 2: தொலை நோக்கு மற்றும் மக்கள்
Microsoft Word கோப்புஎம்.எஸ்.வேர்ட்
வியாபாரத் திட்ட டெம்ப்ளேட்டைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்:
  1. ஒவ்வொரு பெட்டியிலும் பேரெழுத்துக்களில், ஒரு நிரந்தர தலைப்பு உள்ளது
  2. "இங்கு ஒரு"வாக்கியத்தை உள் நுழைக்கவும் செருகுவதற்கான தகவலை இது பரிந்துரைக்கும். நீங்கள் தட்டச்சு செய்யும் போது பெட்டி தானாகவே பெரிதாகும், ஆகவே நீங்கள் தட்டச்சு செய்ய தேவையான போதுமான இடத்தைப் பயன்படுத்துங்கள்.
  3. ஒவ்வொரு பெட்டியையும் நிறப்பிய பின்னர்"இங்கே செருகு"எனும் வாக்கியத்தை நீக்கிவிடவும். அவ்வாறு செய்வதன் மூலம் அது பெட்டியின் நிரந்தர தலைப்பையும் நீங்கள் உள்ளடக்கிய தகவலையும் மட்டும் கொண்டிருக்கும்.
வியாபாரத்திட்டத்தின் ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் நிறப்ப வேண்டும் என நாங்கள் யோசனை தெரிவிக்கின்றோம்.
ஒவ்வொரு பாடமாகச் செல்லும்போது.
சகல அமர்வுகளுக்குமான டெம்ப்லேட்களை ஒரு தனி ஆவணமாக உங்களுடைய கணனிக்கு கீழிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிரிவுகள் 1-12: அனைத்தும்
Microsoft Word கோப்புஎம்.எஸ்.வேர்ட்
தேவையான ஆராய்ச்சி முடிவுகளையும், பின்புலப் பொருள்களையும் சேர்த்துக் கொள்ளவும். பின்ணனி தரவு, உங்களுடைய சுயசரிதை, விளக்கப் படங்கள், விளக்க வரைபடங்கள் மற்றும் ஆராய்ச்சி தரவுகளையும் பயன்படுத்தி, அதை ஆர்வமூட்டுவதாய் ஆக்கவும். உங்களுடைய வியாபாரத்திட்டம் பூர்த்தியானவுடன், அதை அச்சிட்டு, 12 பிரிவுகளையும் வரிசைப்படுத்துங்கள்.
மேலும் பல வியாபாரத் திட்ட வடிவமைப்புகள் நூலகங்களில், புத்தக சாலைகளில் மற்றும் மென்பொருளில் கிடைக்கின்றன.
அமர்வு 2 வினாவிடை: வியாபாரத்திட்டம்
  1. உங்களுடைய சொந்த தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை வடிவமைப்பதற்கான அதிக தகவல்களை தேடிக்கொள்வதற்கான மிகவும் நல்ல இடம்:
    1.  உங்களது சட்ட வல்லுனர்
    2.  உங்களது கணக்காளர்
    3.  பொது வாசிகசாலை, தொழில் துறை அல்லது அரசு"வியாபார திட்டம் "இணையத்தளம் அல்லது புக்ஸ்டோர்ஸ்
    4.  வியாபார திட்டமிடல் ஆலோசகர்கள்
  1. நீங்கள் வியாபாரத்தை துவங்க முன் வியாபாரத்திட்டத்தை தயாரித்துக் கொள்வதற்கான முதன்மையான காரணம் என்னவெனில் முதலீட்டாளர்கள் மற்றும் நிதியியல் மூலங்கள் பற்றி கையால்வதற்கான கருவியொன்றை உருவாக்கிக் கொள்வதாகும்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்திட்டத்திற்கான நிதியியல் திட்டத்தை தயாரிக்கும் போது நீண்டகால விற்பனைகள், ஊதியங்கள் போன்றன மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். காரணம் அது குறுகிய கால நோக்கங்கள் பற்றி தயாரிக்கப்படுவதேயாகும்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களது வியாபாரத்திட்டத்தை ஒரு முக்கியமான முதலீட்டாளர் அல்லது கடன் வழங்குநர் பார்வையிடப் போகிறார். அவரின் மனதில் இவ்வாறான கேள்வியொன்று எழலாம். உண்மையில் கஷ்டமான முடிவுகளை எடுக்கக் கூடிய, பேச்சுவார்த்தைகளை திறனாகக் கையாளக்கூடிய, கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய ஒரு உறுதியான நபர் எங்கே இருக்கிறார்: உங்களுடைய வியாபாரத்திட்டம் அதற்கான விடையை வழங்குதல் வேண்டும். உங்களுடைய வியாபாரத்திட்டம் அதற்கான விடையை வழங்குதல் வேண்டும்.
    1.  இந்தப் படத்தில் உங்களைக் காட்டுங்கள் (நீங்கள் அல்ல என நினைத்து)
    2.  உங்களது சட்ட வல்லுனர். கணக்காளர் உள்ளடங்களாக உங்களது ஆலோசனைக் குழு உங்களுடைய வியாபாரத்தை சிறந்த ஒழுக்க வியாபாரப் பிரவேசமாக பேணுவதற்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். எனக்குறிப்பிட்டு ஆரம்பிக்கவும்.
    3.  இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதனை உங்களுடைய வியாபாரத்திட்டத்தில் குறிப்பிடுங்கள். உங்களுடைய வியாபாரத்திற்கு உறுதியான மற்றும் திறன் வாய்ந்த முகாமை தேவைப்படும். உங்களையும், உங்களுடன் வியாபாரம் செய்யும் மற்றவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இதற்குப் பதிலளியுங்கள்.
  1. ஒரு வியாபாரத்திட்டத்தை தயார் செய்வது சில சிறிய வியாபாரங்கள் பற்றி தெரிவுசெய்யக்கூடிய ஒன்றாக அமையலாம்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்திட்டம் உள்ளடக்கக் கூடாதவை:
    1.  இந்த பாடநெறியின் அமர்வில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பாடங்கள்
    2.  முகாமையின் தனிப்பட்ட சுயசரிதைகள்
    3.  நிதியியல் அறிக்கை திட்டங்களும் காசுப்பாய்சச்ல் திட்டங்களும்
    4.  உங்களுடைய மார்கெடிங் மற்றும் விஸ்த்தரிப்புத் திட்டங்கள்
    5.  உங்களுடைய இலாபங்களுடன் புதிய விடுமுறை இல்லமொன்றை கட்டுவதற்கான உங்களுடைய திட்டங்கள்.
  1. உங்களுடைய வியாபாரத்திட்டம் கண்டுபிடிப்புக்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கியிருப்பின் பாரிய திட்டங்கள் பற்றி நீங்கள் தவறிழைக்கக்கூடாது எனும் விபரங்களையும் உள்ளடக்கியிருப்பின் உங்களுடைய வெற்றி உறுதிசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்தை ரீல்ஸ்டேட் வியாபாரத்துடன் தொடர்புற்ற ஒரு வியாபாரமாகக் கொள்வோம். இந்த வியாபாரத்திட்ட அமர்வு நீங்கள் கட்டாயம் கருத்திற்கொள்ளக்கூடிய விடயம் தொடர்பில் உங்களை இட்டுச் செல்லும்::
    1.  வசிப்பிட மற்றும் வியாபார விற்பனைகள்.
    2.  தொழில் துறை மற்றும் வியாபார அபிவிருத்தி.
    3.  அறைகளை சேர்த்தலும், கைத்தொழில் நிர்மாணிப்பும்.
    4.  மேற்குறிப்பிட்ட ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் பெறுங்கள்.
    5.  மேற்குறிப்பிட்டவற்றில் எதுவுமில்லை.
  1. சந்தை பற்றி உங்களுடைய புரிந்துனர்வை பரீட்சித்துப் பார்ப்பதற்காக பின்வரும் முறை மிகவும் பாதுகாப்பான அனுகுமுறையாக அமையலாம்.
    1.  உங்களுடைய தனிப்பட்ட புத்திசாலித்தனத்தில் நம்பிக்கை வையுங்கள்.
    2.  உங்களுடைய நன்பர்களுக்கிடையே ஒரு மதிப்பீட்டை நடாத்துங்கள்.
    3.  உங்களுடைய தயாரிப்பு அல்லது சேவை குறித்த சந்தை பரீட்சயம்.
  1. ஒரு வியாபாரத்திட்டத்தை தயாரித்துக் கொள்ளாத நிலையில் இருப்பதற்கான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு இது உங்களுக்கு உதவும்.
    1.  நீங்கள் தொடர்ந்து செய்யும் போது ஒவ்வொரு அமர்வுக்குமான திட்டத்தை நிறைவு செய்யுங்கள்.
    2.  தொடர்ந்து செல்வதற்கு முன் உங்களுடைய வியாபாரத்திட்டத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
    3.  இந்தப் பாடநெறியை நீங்கள் நிறைவு செய்த பின்னர் உங்களுடைய திட்டத்தை தயார் செய்யுங்கள்.