Friday, August 14, 2015

மறு பிறவி உண்டா?

மறு பிறவி உண்டா?
என்ன தான் நாம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில விஷயங்கள் நமக்கு இன்னும் புதிராகவே உள்ளன. அவற்றில் ஒன்று தான் இறப்புக்குப் பின் என்ன என்பது. இன்றைய விஞ்ஞானிகள் இறப்புக்குப் பின் ஒன்றும் இல்லை என்பார்கள்.
நமது பண்டைய முனிவர்கள் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூற்றுப் படி இறப்பு என்பது மனித உடலுக்குத்தானேயொழிய 
உயிருக்கு அன்று. உயிர் அழிவற்றது. உயிரை ஆன்மா என்றும் சொல்லலாம்.
ஆன்மா ஒரு உடல் கெட்டுப் போய் விட்டால் அதை விட்டு பிரிகிறது. மீண்டும் சரியான நேரத்தில் இன்னொரு உடலுக்குள் அது பிரவேசிக்கும்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் அடையாத, நிறைவேறாத விஷயங்கள் பொறுத்து உங்கள் அடுத்த ஜென்மம் அமையும். உதாரணமாக இந்த ஜென்மத்தில் அற்ப ஆயுளில் ஒருவரது உயிர் பிரியும் நிலையில் இருந்தால் அவரது ஆன்மா நீண்ட ஆயுளுக்கு ஏங்குகிறது. அந்த ஏக்கம் அடுத்த ஜென்மத்தில் நீண்ட ஆயுள் உடையவராக பிறக்க வைக்கிறது.
இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய முடியாத ஒரு காதலனை அல்லது காதலியை நீங்கள் அடுத்த ஜென்மத்தில் அடையக்கூடும்.
இந்த பிறவிக்கு முடிவு தான் என்ன? உங்கள் ஆன்மா வளர்ச்சியடைத்து கொண்டே செல்லும் பல பிறவிகளில். தன்னை அறிந்து, பரமாத்மாவை உணர்ந்துமுக்தி அடையும் நிலை வரும் வரை இந்த பிறவித் தொடர் கதை தொடரும்.
தியானம் செய்தால் உங்கள் ஆன்மா வளர்ச்சியுறும் என்பதில் ஐயம் வேண்டாம். நீங்கள் முக்தி அடையும் ஜென்மம் விரைவில் வரும்.
இதைப் படிக்கும் சிலருக்கு இது அபத்தமாக தெரியக்கூடும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது சில வருடங்களுக்கு முன்.


வாசியை அறிந்தவன்'s photo.

No comments:

Post a Comment