நம்பிக்கை நாணயமற்ற ஒரு பெரிய சாத்தியமான வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுவது
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
ஒரு நல்ல வாடிக்கையாளரின் நிலை அறிக்கையை நீங்கள் பார்க்கும்போது ஏராளமான எச்சரிக்கைளை காண்பீர்கள் – தாமத கட்டண செலுத்தல்கள், நிலுவையிலுள்ள சட்டப்பிரிவுகள், மிகுதியான கடன் சுமை போன்றவை. இந்த வாடிக்கையாளர் கடன் ஆபத்தாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்காக அவருடன் உள்ள வியாபார உறவை முறித்து கொள்ள வேண்டுமா? அவ்வாறு இல்லை. சந்தேகத்துக்குரிய கடன் ஆபத்து உள்ள நிறுவனங்களுடன் தொழிற்படும்போது, ஆபத்தைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகளை எடுங்கள்.
ஆழமாக விசாரிக்கவும்
ஒவ்வொரு சிறந்த வாடிக்கையாளர்களின் கடன்களும் பல்வேறு சூழல்களால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும், எனவே மோசமான கடன் நிலைகளை ஆராய்வது பயனளிக்கும். உதாரணமாக, ஒருவர் விடுமுறை கால பொருட்களை விற்பவராக இருந்தால், அந்த வியாபாரம் குளிர்காலத்தை விட கோடைகாலத்தில் அதன் காசுப்பாய்ச்சல் சிக்கலானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. வியாபாரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தால், இந்த கருத்துகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் வகையில் கடன் விதிமுறைகளை உருவாக்குங்கள். பருவமல்லாத காலங்களில் C.O.D. கட்டணங்களையும் விற்பனை அதிகமான காலங்களில் ஆரம்பக் கட்டணங்களும் உங்களுக்கு கிடைக்கலாம்.
சிபாரிசுகளை செவ்வைபாருங்கள்
ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய மோசமான கடன் நிலைகளை வலிமையாக நியாயப்படுத்தினால், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு பிற கடன் பரிந்துரையாளர்களிடம் பேசுங்கள். எஞ்சியிருக்கும் கடனானது இந்த நபரைத் தவறாக கடன் ஆபத்து உடையவர் என்று குறிப்பிடுகிறது என்றும் கூட நீங்கள் கண்டறியக் கூடும். பெரிய வாடிக்கையாளர் அளித்த சிபாரிகளுடன் தொடர்பு கொள்வதைவிடவும், முழுமையான விநியோகத்தர்களின் பட்டியலை நீங்கள் பெற முயற்சிக்கலாம். இதிலிருந்து எந்த விநியோகத்தரை அழைப்பது என்று நீங்கள் முடிவு செய்யலாம்.
செலுத்துதல் நியதிகளை வரையறுங்கள்
உங்கள் கட்டணம் செலுத்தல் நியதிகள் புரியவில்லை என்று கூறும் வாய்ப்பை ஆபத்தான வாடிக்கையாளர்களுக்கு வழங்காதிருங்கள். செலுத்துதல் பாலிசிகளை வாசிக்கச் செய்து அவற்றை ஏற்று கொள்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையில் கையெழுத்து பெற்று உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். நியதிகளை உங்களுடைய அனைத்து கொள்முதல் ஆணை மற்றும் ரசீதுகள் போன்றவற்றில் குறிப்பிட்டு கண்காணித்து வாருங்கள். செலுத்துதல் முறைகள், அதிக காலங்கள், விரைவில் செலுத்துவதற்கான தள்ளுபடிகள், தாமதமான செலுத்தல்களுக்கான அபராதங்கள், மற்றும் தாமதமான பில்கள் நீங்கள் கையாளும் முறைகள் போன்ற விவரங்களைக் குறிப்பிடுங்கள்.
முற் பணம் செலுத்தும்படி கோருங்கள்
ஒரு நிறுவனம் அதிக கடன் ஆபத்து நிறைந்ததாக இருப்பின், முழு அல்லது பகுதி முற்பணத்தைக் கோர அஞ்சாதீர்கள். மோசமான கடன் நிலைகளில் உள்ள பல நிறுவனங்கள் இதனை அறிந்துள்ளன, மேலும் நீங்கள் அவற்றுடன் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வீர்கள் என்பதை எதிர்பார்க்கும். மோசமான கடன் நிலைகளில் உள்ள நிறுவனங்கள் பொதுவாக அவற்றின் மதிப்பை அதிகரிக்க விரும்பும், முற்பணம் செலுத்தல் நியதிகளை கூறி இந்த உறவுமுறை நீடித்தால் அவற்றுக்கு ஒரு கடன் பரிந்துரையாளராக எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
தனிப்பட்ட கடன் வரலாறுகளை கருத்தில் கொள்ளுங்கள்
கடன் வரலாறு எதுவும் இருக்க முடியாத ஒரு புதிய நிறுவனத்தை எதிர் கொள்ள நேர்ந்தால், அதன் உரிமையாளரின் கடன் அறிக்கையைப் பார்த்து அவர் எவ்வாறு பில்களைக் கையாளுகிறார் என்று காணுங்கள். சிறந்த நிதி மேலாண்மை திறன்களைக் கொண்ட ஒரு நபர் வியாபாரத்திற்கு சிறந்த நிதி மேலாண்மை நடவடிக்கைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வரவிருக்கும் நிதிகளைப் பற்றி கேளுங்கள்
கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அல்லது வரவிருக்கும் சொத்துக்கான ஆதாரங்களை சில நிறுவனங்கள் தரக்கூடும். இந்த ஆவணங்கள் நிச்சயமாக உங்களுக்கு கட்டணம் வரும் என்பதை உறுதிப்படுத்தாவிட்டாலும், ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய கட்டளைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த நிதி ஆதாரங்களை கொண்டிருக்கிறார் என்பதை உங்களுக்கு அறியச் செய்யும். நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து ஒப்பந்தங்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
உறவை மெதுவாக தொடங்குங்கள்
ஒரு புதிய வாடிக்கையாளரைப் பற்றி நீங்கள் அதிகம் அறியாதவராக இருந்தால், அவர்களுடன் சரியான உறவை ஏற்படுத்தி கொள்ளும் வரை குறைவான தொகைக்கான வியாபாரத்தையே ஏற்று கொள்ளுங்கள். இன்னொரு முறையாவது ஆரம்பத்திலேயே முற் பணம் சிறிது வாங்கிக் கொண்டு, மெதுவாக கடன் வரம்புகளை அதிகப்படுத்துங்கள்.
வேண்டாம் எனச் சொல்லிவிடுங்கள்
பெரும்பாலான நிறுவனங்கள் அதிக கடன் ஆபத்து நிறைந்தவையாக இல்லாவிட்டாலும், ஒரு சில நிறுவனங்களை உங்கள் வாடிக்கையாளர்களாக சேர்ப்பதற்கு முன்பு பல முறை சிந்திக்க வேண்டும். இவ்வளவு முன் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பின்னும், அந்த வாடிக்கையாளரிடம் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், அமைதியாக அவர்களுடான வியாபாரத்தைத் துண்டித்து விடுங்கள். முதலிலேயே 'வேண்டாம்' என்று மறுத்துவிடுவதன் மூலம் சேகரிப்பதிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்கிறீர்கள் மற்றும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறீர்கள்.
No comments:
Post a Comment