உங்களுடைய விற்பனைகள் பற்றி முன்வைக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.www.v4all.org
ஒரு நபராக நீங்கள் விற்பனை விளக்கக்காட்சியை முன்வைக்கும் போது, உங்களுடைய வளங்களை வாடிக்கையாளர்களிடம் பல நிலைகளில் ஒரே நேரத்தில் கூறுவதற்கு அபூர்வ வாய்ப்பு கிடைக்கிறது. உங்களுடைய புறத்தோற்றம், சொற்களை கையாளுதல், உங்களின் பொதுவான நடத்தை, ஆர்வ நிலை ஆகிய அனைத்தும் நீங்கள் திறனும் ஆளுமையும் உடையவரா அல்லது பலவீனமான செயல்திறமற்றவரா என்பதை நிர்ணயிக்க மிகவும் உதவும். எந்நேரமும் இரு விற்பனை விளக்கக்காட்சிகளும் ஒன்று போலவே இருப்பதில்லை (அல்லது இருக்க வேண்டும்). ஆனால், அனைத்து வெற்றிகரமான விளக்கக்காட்சிகளிலும் பொதுவான விடயங்கள் சில உள்ளன. உங்களுடைய அடுத்த விளக்கக்காட்சியை மிகவும் சிறந்ததாக ஆக்க இவற்றை பின்பற்றவும்:
சுறுசுறுப்பாக இருங்கள்
உங்களை நீங்களே கவர முடியாவிட்டால், வேறு யாரையும் உங்களால் கவர முடியாது. நீங்கள் வழங்குவதை நம்புங்கள் மற்றும் அந்த நம்பிக்கையை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்காக வேகமாக அல்லது சத்தமாக பேச வேண்டிய அவசியமில்லை. உயிரோட்டம் மிக்கதாகவும் துல்லியமாகவும் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் மற்றும் கேள்விகளைக் கேளுங்கள்.
எளிமையாக பேசுங்கள்
தெளிவற்ற அல்லது கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தி உங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பிரகாசிக்க முயற்சிக்காதீர்கள். உடனடியாக புரியாத மொழியை பெரும்பாலும் மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலும் அவர்கள் குழப்பமடைகிறார்கள், வெறுப்படைகிறார்கள், அல்லது சலிப்படைகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முடிந்த அளவுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லுங்கள். நீங்கள் நீங்களாகவே இருந்து வழக்கமாகப் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்தி கதையுங்கள்.
தொடர்ந்து கவனித்துக் கொண்டிருங்கள்
திறன் மிக்க மற்றும் வெற்றிகரமான விளக்க காட்சி கேள்விகளும் கருத்துப்பரிமாற்றம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து வழங்கி வரும்போதே உங்கள் தொடர்பு முறைகளை தொடர்ந்தும் கண்காணித்து வாருங்கள், "அது இதுவரை தெளிவாக இருக்கிறதா?" "பின்வருபவை மிகவும் முக்கியமானவை, இவை சரியாக உள்ளதா?"
முகத்தைப் பார்த்து பேசுங்கள்
யாரேனும் ஒருவரின் முகத்தைப் பார்த்து பேசும்போது அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் எளிதாக இருக்கும். விளக்கக்காட்சி என்பது உரையாடலைப் போன்றதே என்பதை மறக்காதீர்கள். முக்கிய நபர்கள் என்று நீங்கள் கருதும் ஓரிரு நபர்களை மட்டும் நோக்கி பேசாமல் அறையில் உள்ள அனைவரின் முகங்களையும் பார்த்து பேசுங்கள். யார் முடிவெடுப்பதில் அதிக அதிகாரம் உடையவர், அல்லது மற்றவர்கள் அதற்கு எந்த அளவுக்கு பங்களிக்க முடியும் என்பதையெல்லாம் நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்பது சந்தேகம். உங்கள் பார்வையாளர்களில் சிலரை மட்டும் பிரித்து நோக்குவது எந்த அளவுக்கும் நன்மைளிக்காது.
கேட்பவர்களாக சிந்தியுங்கள்
உங்கள் விளக்கக்காட்சியானது இனிமையானதாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும், நீங்கள் பேசும் நேரத்திலும் கவனமாக இருங்கள். ஒரு பார்வையாளராக உங்களைக் கருதி, "நான் இப்போது எதனை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?" உங்கள் வாடிக்கயாளருக்கு உங்களைப் பற்றி எதுவும் சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை அல்லது நீங்கள் விற்பனை செய்வது சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அவர் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளக் கூடிய பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டு அவருக்காக அக்கறை கொள்வதை வெளிப்படுத்துங்கள்: "அதனால் என்ன?" "இதனால் எனக்கு என்ன பயன்?" மற்றும் "நான் எப்படி நன்மையடைவேன்?" போன்ற கேள்விகளைக் கேட்டு.
சிறந்த முறையில் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள்
உடனடியாக வெற்றிகரமான விளக்கக்காட்சியை வழங்க முடியும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விளக்கக்காட்சிகளை கவனமாக திட்டமிடுங்கள், உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவும் முன்னரே பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை கவனியுங்கள். ஸ்லைடுகளையும் சார்ட்களையும் பயன்படுத்தினால், அவை சரியான வரிசையில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்க வாய்ப்புடைய சிக்கல்கள் அல்லது கேள்விகளை நீங்களாகவே எழுப்ப முயற்சியுங்கள். அவற்றுக்கு முன்கூட்டியே பதில்களை தயாரித்து கொள்ளுங்கள்.
நேர்த்தியாக உடையணியுங்கள்
இன்று, அலுவலகங்களுக்கே உடை கட்டுபாடுகள் இல்லாத நிலையில் சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். குறைந்தது நீங்கள் சந்திக்கவிருக்கும் மக்கள் அணிந்திருக்கும் அளவுக்கு நேர்த்தியான உடையையாவது நீங்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியம். அளவுக்கதிக நேர்த்தியுடன் உடையணிந்திருப்பதைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது. குழப்பமாக இருந்தால், பாரம்பரிய வியாபாரச் சூழலில் அணியும் வழக்கமான ஆடையை அணிந்து செல்லுங்கள்.
இனிமையாக முடித்துவையுங்கள்
வெற்றிகரமாக முடித்தாக நினைத்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மேலும் தொடர்புகளுக்கான பிரவேசங்களைத் திறந்து விடுங்கள். உங்கள் பார்வையாளர்கள் கழித்த நேரத்துக்கு நன்றி செலுத்தியே எப்போதும் விளக்கக்காட்சியை முடியுங்கள்.
No comments:
Post a Comment