Showing posts with label employee motivation training. Show all posts
Showing posts with label employee motivation training. Show all posts

Saturday, August 29, 2015

தன் மீதான முழு நம்பிக்கை

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.


1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும்.உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:

தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம்,ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம்.இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள்.

' இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுகிறார்கள்' என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.

-jesu raj-chennai

Friday, July 31, 2015

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

Monday, July 27, 2015

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்- WWW.HAPPY4ALL.ORG 

இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள்
அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
அதனால், மஹாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்
அனைவரிடத்திலும் பகிரவும்(SHARE)

Sunday, July 26, 2015

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.
- www.happy4all.org
* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும்.

* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சிஅணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும்உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவைகிடைக்காமல் போனால், மூளை தனதுசக்தியை இழந்து விடுகின்றது.

* ஆண்களை விட பெண்களுக்குத்தான்புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால்எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள்ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில்
வைத்திருக்க முடியும்.

* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போதுஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது"ரெடாப்சினின்" என்னும் பொருள்உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன.  அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின்வளர்ச்சியே இருக்கிறது.

* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான்வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000மைல்கள் வரை பயணம் செய்கிறது.

* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

 *தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்றுகூறுகின்றனர்.

* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள்வேலை செய்ய வேண்டியிருக்கும்.

* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்துமடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

* மனிதன் எவ்வளவுதான் வேகமாகஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான

Sunday, July 5, 2015

தந்தை... நபிகள்

தந்தை...
நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் உமர் ரலி எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார் அபு பக்கர் சித்தீக் ரலி... வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் உமர் ரலி.... சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...
எதிரில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வருகிறார்கள்... அருமைத்தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்
இவர்கள் மூவரும் வருவதை பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீத்தம் பழங்களை கொடுத்து பரிமாறுகிறார்கள்...
கொஞ்சம் பேரீத்தம்பழங்களை தின்ற நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம் அபூ அய்யூப் அவர்களே நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீத்தம் பழங்களை எடுத்து கொள்ளலாமா என கேட்கிறார்கள்...
அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் ரலி அவர்கள் என்ன யா ரசூல் அல்லாஹ் இப்படி கேட்கிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்... அதை கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்... இல்லை எனக்கு சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை என கூறுகிறார்கள்...
இதை கேட்ட உடனே தனது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள் அபூ அய்யூப் அல் அன்ஸாரி...
உலகம் போற்றும் உன்னத நபிகள் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையாக இருந்தது... அவர்கள் தங்கள் மகள் பாத்திமா ரலி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டு...
# இறைவா எங்கள் வாழ்வில் எங்கள் பிள்ளைகளுக்கு உணவையும் மற்ற மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அளவிற்கு எங்களுக்கு போதுமான செல்வத்தையும் ஆற்றலையும் தந்தருள்புரிவாயாக ரப்பில் ஆலமீனே....

Saturday, June 20, 2015

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம்

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...
.................................................................................................................................
கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை 10 முறை கூறி வழிபாடு செய்து வரவும்..
................................................................................................................................
ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்.
...............................................................................................
தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 1.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3.
ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4.
ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5.
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6.
க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7.
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8.
ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்


Sunday, May 31, 2015

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement:
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.

Wednesday, May 27, 2015

"புலன்களுக்கு அப்பால் பாருங்கள்"

"புலன்களுக்கு அப்பால் பாருங்கள்"
சாதாரணமாக நீங்கள் கண்களால் பார்ப்பதை விட
உங்களது புலன்களுக்கு அப்பால் பாருங்கள்
என்று சொல்லி விடுவது எளிது.ஆனால்
அப்படி பார்க்க முடியூமா? புலன்களுக்கு
அப்பால் பார்ப்பது என்றால் என்ன? இதற்கு
ஏதாவது யோகா தியானம் ஆன்மிகம் போன்ற
வஸ்துக்கள் தேவையா என்ற கேள்வி எழும்பும்.
பொதுவாக முன்பெல்லாம் ஆன்மிகவாதிகள்
ஒன்றைச் சொல்வார்கள்.எதை நீங்கள் கண்களால்
பார்க்கிறீர்களோ.அதெல்லாம் நிஜமில்லை.அவை
அத்தனையூம் மாயா.எது உங்களது
கண்களுக்குத் தெரியவில்லையோ
அதெல்லாம்தான் நிஜம்.மாயா மாயா.சாயா
சாயா!
இப்படி சொல்லிக் கொண்டிருந்தால் வண்டி
ஓடாது என்று அப்புறம் வேறு எதையெல்லாமே
உள்ளே கொண்டு வந்து விட்டார்கள்.நமத
ு சிந்தனை ஆன்கமிகவாதிகள்
பற்றியதல்ல.புலன்களுக்கு அப்பால் அப்படி என்ன
இருக்கிறது.அதை ஏன் பார்க்க வேண்டும்.எப்படிப்
பார்க்க வேண்டும்.
இதை சுலபமாகச் சொல்லிப் புரியவைத்து
விடுகிறேன் பாருங்கள்.
நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருக்கலாம்.சொந்
தத் தொழில் செய்பவராகவோ பெரும் வணிகம்
செய்பவராகவோ இருக்கலாம்.அடுத்த மாதம்
உங்களுக்கு சம்பளமாகவோ அல்லது தொழில்
மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு சராசரியாக
ஒரு பெருந்தொகையோ மாதாமாதம் வருபது
போல வரக்கூடும்.இப்போது நீங்கள் அந்த
தொகையைப் பெறுவதற்கு காலண்டரில்
இருபது தேதிகள் கிழிபடவேண்டுமென்று
வைத்துக் கொள்வோம்.இப்போது அந்த அடுத்த
மாத பணம் உங்களிடம் இல்லை.ஆனால் அந்த
அடுத்த மாதப் பணம் எங்கே இப்போது
இருக்கிறது.
என்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் உங்களது
அந்த 'அடுத்த மாதப் பணம்" உங்களது
நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலோ வங்கியின்
வைப்புக்கணக்கிலோ அல்லது அந்த
நிறுவூனத்திற்கு வரக்கூடிய விற்றுவரவாக
வேறெங்கோ வேறு எந்த நிறுவனத்திடமோ
அல்லது வேறு யார் யாரிடமோ இப்போது
இருக்கலாம்.
கற்பனை செய்து பாருங்கள்.
உங்களது 'அடுத்த மாதப் பணம்' எங்கெங்கோ யார்
யாரிமோ இருக்கிறது.அந்த பணம் அடுத்த மாதம்
வந்து உங்களை அடைய வேண்டும்.அது நீங்கள்
சம்பளம் பெறுபவராக இருந்தால் தானாக எந்த
முயற்சியூம் செய்யாமல் வந்து சேர்ந்து
விடும்.வணிகம் சுயதொழில் செய்பவர்கள்தான்
அந்த பணம் வந்து சேர்வதற்காக மெனக்கெட
வேண்டும்.
சரி எவ்வளவூ தொகையை இந்த மாதம்
வாங்கினீர்களோ அந்த தொகை சென்ற மாதம்
இதே போல எங்கெங்கோ இருந்தது.அதனை
நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள்.அதே போல ஒரு
தொகையைத்தான் அதாவது இந்த மாதம்
பெற்றுக் கொண்ட தொகைக்கு சமமான அதே
தொகையைத்தான் அடுத்த மாதமும் நீங்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கறீர்கள்.நீங்கள்
எதிர்பார்க்காவிட்டாலும் உங்களது உள் மனது
அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
உங்களை அறியாமலேயே ஒரு ப்ரோக்ராம்
செய்யப்பட்ட கம்ப்யூட்டர் போல உங்களை கேட்காமல்
உங்களது மனம் அது பாட்டுக்கு அடுத்த மாத
தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.
அதனால்தான் ஒவ்வொரு மாதமும் ஒரே
மாதிரியான தொகையையே நீங்கள்
பெறுகிறீர்கள்.தொடர்ந்து அதே
தொகையைத்தான் பெறுகிறீர்கள்.வருடத்திற்கு
ஒரு முறை வரும் இன்க்ரிமன்ட் தொகை கூட
சென்ற வருடம் பெற்றது போன்ற ஒரு
தொகையைத்தான் நீங்கள் இந்த வருடமும்
இன்க்ரிமன்ட்டாக எதிர்பார்த்திருக்கிறீர்கள்.அதன
ால்தான் அதே தொகையை பெற்றிருக்கிறீர்கள்.
இப்போது புரிந்திருக்குமென
நினைக்கிறேன்.இனி மெயின் மேட்டருக்கு
வருவோம்.
உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டுமென்று
உங்களது மேலதிகாரியைக் கேட்காதீர்கள்.உ
ங்களது தொழிலில் அதிக வருமானம்
வேண்டுமென்று உங்களது வாடிக்கையாளர்கள
ிடம் கேட்காதீர்கள்.உங்களது வணிகத்தில் அதிக
வருமானம் வேண்டுமென்று உங்களது
மார்க்கெட்டிங் பணியாளர்களை
வறுத்தெடுக்காதீர்கள்.
பின் யாரிடம் கேட்பது இதையெல்லாம்.
உங்களது மனதிடம் கேளுங்கள்.உங்களது மனம்
என்ற சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரிடம்
கேளுங்கள்.அது உடனே பதிவூ செய்து
கொள்ளும்.இப்படி வெறுமே கேட்டு விட்டால்
வேலை நடந்து விடுமா.உடனே அடுத்த மாதம்
அதிகத் தொகை வந்து விடுமா?
வராது.
பின் எதற்காகக் கேட்க வேண்டும்?
கேளுங்களேன்.கேட்டுத்தான் பாருங்களேன்.நீங
்கள் உங்கள் மனதிடம் கேட்டு விட்டால்
போதும்.அதை உங்களது மனம் உங்களது பேச்சில்
ஆளுமையில் உடல்மொழியில் பிரதிபலிக்கும்.
அதனால் உங்களைப் பார்க்கிற உங்களது
நிறுவனத்தின் மேனேஜ்மன்ட் கூட இவருக்கு
குறைவாக சம்பளம் கொடுத்து
வருகிறௌமோ.வேறெங்காவது இவர்
போய்விடுவாரோ.இவரை தக்க வைத்துக்
கொள்ள வேண்டுமே என்று யோசிக்க ஆரம்பித்து
விடுவார்க்ள.அப்படி அவர்கள் யோசிக்க
ஆரம்பித்து விட்டால் அதை அவர்களது 'மனம்'
குறித்து வைத்துக் கொண்டு உங்களை அவர்கள்
பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு
நினைவூபடுத்தும்.
உங்களது பணத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள
முடியாது.வேலை பார்த்தாலும் தொழில்
செய்தாலும் வணிகம் செய்தாலும்
உங்களுக்கான பணத்தை மற்றவர்கள்தான்
கொண்டு வந்து தர வேண்டும்.அதற்கு ஒரு
பிரதியூபகாரமாக நீங்கள் ஒரு சேவையையோ
வேலையையோ செய்து தருகிறீர்கள்.ஆக
உங்களுக்கு பணம் தரக்கூடியவர்கள் நன்றாக
இருந்தால்தான் நீங்கள் நன்றாக இருக்க
முடியூம்.அதனால்தான் அடுத்த மாத பணம்
இன்னும் சற்று கூடுதலாக வரவேண்டுமென்று
உங்களது மனதிடம் கேட்டுக் கொண்டே இருங்கள்.
கேட்டது நிச்சயம் கிடைக்கும்.
ஏனென்றால் கேட்டால் கொடுப்பதற்கும்
கொடுத்தால் வாங்கிக் கொள்வதற்கும் நீங்கள்
மட்டுமல்ல கடவூளும் இயற்கையூம் கூட இந்த
'கேட்டால் கொடுப்பதற்கு" பழக்கி விடப்பட்டிருக்க
ிறார்கள்.இந்த உலகமும் ஆரம்பத்திலிருந்தே
இப்படித்தான் இயங்கி வருகிறது.
எனவே நம்புங்கள்.கேளுங்கள். வாழுங்கள்.
ஈர்ப்பு விதி, வாழ்வின் இரகசியம்.  ஒரு
எண்ணத்தை எண்ணும்போது அதையொத்த
எண்ணங்களை
உங்களை நோக்கி ஈர்க்கிறீர்கள்.
எண்ணங் களுக்கு காந்த சக்தி உண்டு;
அவற்றிற்கு குறிப்பிட்ட அலைவரிசையும்
உண்டு. நீங்கள் எண்ணங்களை சிந்தித்துக்கொண
்டிருக்கும் போதே அவை பிரபஞ்சத்திற்குள்
அனுப்பபடுகின்றன. அவை அதே
அலைவரிசையில் இருக்கின்ற அனைத்தையும்
காந்தமென கவர்கின்றன. அனுப்பட்டவை
அனைத்தும் மூலத்திற்கே திரும்பி வருகின்றன
,நீங்கள் தான் அந்த மூலம். உங்கள் எண்ணங்களை
ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் இயக்கிக்
கொண்டிருக்கும் மனித கோபுரம் நீங்கள். உங்கள்
வாழ்வில் எதையாவது மாற்ற வேண்டு
மென்றால் உங்கள் எண்ணங்களை மாற்றுவதன்
மூலம் அந்த அலைவரிசையை மாற்ற முடியும்.
உங்களது நிகழ்கால எண்ணங்களே உங்கள்
வருங்காலத்தை உருவாக்குகின்றன.
நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாக
சிந்திக்கிறீர்களோ, அல்லது கவனம்
செலுத்துகிறீர்களோ அவை உங்களது
வாழ்க்கையாக உங்கள் கண்முன் விரியும். உங்கள்
எண்ணங்கள் பௌதிகப் பொருட்களாக
உருப்பெறும்.

Friday, May 22, 2015

பாலுவும் வேலுவும் பள்ளிதோழர்கள்.

பாலுவும் வேலுவும் பள்ளிதோழர்கள்..www.v4all.org

அப்புறம் ஒன்றாகவே ஆசிரியப்பயிற்ச்சி முடித்தார்கள்..

எம்ப்ளாயிமெண்ட் சீணியாரிட்டியில்கூட இவர்களது எண் வரிசை ஒன்றின் பின் ஓன்றுதான்...

இருவரும்ஆசிரியர் வேலைக்காக காத்திருந்தார்கள் பல வருடங்களாய்...

தீடிரென ஒர் நாள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனடியாக தேர்வு செய்யபோவதாகவும் பட்டியல் ஒட்டியிருப்பதாகவும் கேள்விப்பட்டு பாலு சென்றான்..

அப்போது வேலு எதேச்சேயாக திருப்பதி வரை சென்றுள்ளான் .திரும்ப ஒரு வாரம்.ஆகும்..

பாலுவுக்குஅலுவலகம் போனபோதுதான் தெரிந்தது..மொத்தம் மூன்று பேருக்கு போஸ்டிங்..பத்துபேருக்கு அழைப்பு என்று..

பாலு இன்டர்வீயுல் கலந்தால் கூடதிருப்பதி சென்ற வேலுவுடன் போஸ்டிங் முடிந்துவிடுகிறது...

பாலு'' வேலுவுக்கு தகவல் கொடுத்து அவனை இண்டர்வீயூ கலந்துகொள்ள சொல்லி அவனை வேலையை பெறச்செய்வதா இல்லை..தகவலே கொடுக்கமால் இருந்து வேலையை தான் வாங்கிசெல்வதா,,,,''யோசித்தான்

நட்பு ஜெயித்த்து..

வேலுவுக்கு நாளை இண்டர்வீயூ போட்டுவிட்டார்க்ள கிளம்பி வா...தகவல் அளிக்கிறான்

சாமிகூட கும்பிடாமல் ஆர்வத்துடன் திரும்புகிறான் வேலு..

அலுவலக்த்து போனபிறகுதான் தெரிகிறது..இவனோடு போஸ்டிங் முடிந்தது விடுகிறது..அதற்கு பிறகுபாலு உட்பட கலந்துகொளகிறவர்களுக்கு போஸ்டிங் கிடைக்காது என்று..

''என்ன பாலு இது ..எனக்கு தகவல் கொடுக்காமல் இருந்து போஸ்டிங் வாங்கி போயிருக்காலமே...''எனகிறான்..

''வாங்கியிருக்லாம்..அப்புறம் நணபனுக்கு தெரிந்தெ துரோகம் செய்துவிட்டோம் என்று ஆயுசு முழுதும் மனசு உறுத்தும்..நான் நண்பேண்டா..''என்று சொன்னான்.

இன்டர்வீயூன் போது வேலுவின் வரிசை வந்தபோது இன்டர்வீயூக்கு உள்சென்று வந்தான்...

அடுத்து பாலுவும் இண்டர்வீயூக்கு உள்ளேபோனான்...

உங்களுக்கு முதல் நபர் வேலை வேண்டாம் என எழுதிகொடுத்துவிட்டார் உங்களுக்கு வேலை உறுதி ஆகிறது..என்றார்கள்..

வெளியில் வந்தபோது வேலு நின்றுகொண்டிருந்தான்..நானும் நண்பேண்டா..எதைச்சேயாக தட்டி பறித்த்தாக என்மனசு உறுத்தாதா...சிரித்துகொண்டேசொன்னான்..

சம்பவம் உண்மையே..வசனங்கள் கறபனை..

கொடுக்காப்புளி!!

கொடுக்காப்புளி!! - www.v4all.org

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா?

அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா? - www.v4all.org

அதிகம் நடப்பதால் மூட்டு தேய்ந்துவிடும் என்பது உண்மையல்ல. ஆனால், வாக்கிங் போகும் போது சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என நடக்கக் கூடாது. 

ஆரம்ப காலத்தில், ஒன்றரை கிலோமீட்டர் தொடங்கி 3 கிலோமீட்டர் வரை நடக்கலாம். மூச்சு இறைக்கும்படி வேக வேகமாக நடக்கக்கூடாது. ரிலாக்ஸாக நடந்து பழக வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 10 நாட்கள் மெதுவாக நடக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம். பருமன், மூட்டு வலி இருப்பவர்கள் அதிகம் நடக்க வேண்டாம். 

சரியான வேகத்தில், சரியான இடைவெளியில் நடக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். சரியான சைஸ் ஷூ அணிவது அவசியம். சரிவான பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாக்கிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகமாகி, பிரச்னைகளை உருவாக்கும். சமமான பரப்பில் வாக்கிங் செல்வதுதான் ஆரோக்கியம். 

உடலில் உள்ள மூட்டுகளை ஒரு பொஸிஷனுக்குக் கொண்டு வர ‘வார்ம் அப்’ உதவுகிறது. எனவே, நடைப்பயிற்சிக்கு முன்னால், கை, கால், கணுக்கால், தோள்பட்டை, கழுத்து இவற்றை முன்னும் பின்னுமாக அசைத்து மடக்கி நீட்ட வேண்டும். சுமார் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ‘வார்ம் அப்’ செய்து விட்டு வாக்கிங் செல்லலாம். பின்புறமாக வாக்கிங் செல்ல இட வசதியில்லாதவர்கள், டிரெட்மில்லில் முறையான ஸ்பீடில் நடக்கலாம்.

Sunday, May 10, 2015

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!

ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத்தில் எத்தனை வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம்!

1.அட்டவணைப்படுத்துங்கள்!

வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத் துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான்.

உங்களது ஒருநாளை அட்டவணைப் படுத்துங்கள். ஒருநாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளைக் கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம் என்பது சமநிலையில் அமையும். இப்படிச் செய்தால், வேலைக்காக அதிக நேரம் செலவழித்து குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்றோ, குடும்பத்துக்காக அதிக நேரம் செலவழித்து வேலையில் கோட்டை விட்டுவிட் டோமே என்றோ பிற்பாடு கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

2.புத்துணர்ச்சி அடையுங்கள்!

ஒரு வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. அல்லது நீங்கள்திட்டமிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை முடிக்க முடியவில்லை எனில், உங்களுக்கு சோர்வுதான் ஏற்படும். இந்த சோர்வுடனேயே அந்த வேலையைச் செய்யும்போது, மேலும் பரபரப்பு உண்டாகி, அந்த வேலையைத் தவறாக செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதுமாதிரியான சமயங்களில் அந்த வேலைக்கு சிறிது அவகாசம் தந்துவிட்டு, நீங்கள் புத்துணர்ச்சி அடைந்தவுடன் அதே வேலையைச் செய்தால், எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக அந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். சின்னதாக ஒரு வாக்கிங் போவது, செல்போனில் எஃப்எம் ரேடியோவில் ஒன்றிரண்டு  பாட்டு கேட்பது, ஒரு காபி குடிப்பது (தயவு செய்து சிகரெட் பிடிக்க வேண்டாம்!  இதனால் டென்ஷன் அதிகமாகவே செய்யும்!) என நம்மை நாமே புத்துணர்ச்சி பெற செய்துகொள்ளலாம்.

3.நல்ல தருணங்களை இழக்காதீர்கள்!

உங்கள் வேலைதான் முக்கியம். அதுதான் உங்கள் குடும்பத்தை நடத்த உதவுகிறது. இதற்காக வேலையே கதி என்று இருந்து விடாதீர்கள் ஊரில் நடக்கும் திருவிழா போன்ற விழாக்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அலுவலக வேலை களை முன்னரே திட்டமிட்டு முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்று வாருங்கள்.

அப்போதுதான் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். வேலையைக் காரணம்காட்டி முக்கியமான நிகழ்ச்சிகளை நீங்கள் தவிர்த்தால், மகிழ்ச்சியான தருணத்தை உங்களால் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படுவ துடன், சொந்தபந்தங்களை இழக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படும். எனவே, அந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்.

4.இரண்டையும் கலக்காதீர்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒருசிலர் தங்கள் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டும்; வீட்டில், குழந்தைகளுடன் விளையாடு வதற்கு பதிலாக லேப்-டாப்பை எடுத்துவைத்து அலுவலக வேலை களையும் பார்த்துக் கொண்டு் இருப்பார்கள்.

இப்படி ஒன்றோடு ஒன்றை கலப்பதை நிறுத்தினாலே உங்கள் குடும்பம் - வேலை சமநிலை அடைந்து விடும். அலுவலகத்தில் குடும்பம் பற்றிய நினைப்பு வேண்டாம்; வீட்டுக்கு வந்தவுடன் அலுவலகம் பற்றிய சிந்தனை வேண்டாம். இரண்டையும் ஒன்றோடு ஒன்றை கலக்காமல் இருந்தாலே, வாழ்க்கையை அனுபவித்த திருப்தி யோடு, நல்ல ஊழியர் என்கிற பெயரும் கிடைக்கும்.

5. முழுக் கவனத்தோடு செயல்படுங்கள்!

நீங்கள் செய்யும் வேலையில் முழுக் கவனத்தோடு செயல் படுவதும் அவசியம். கவனமில்லாமல் செய்யும் வேலை உங்களின் நீண்ட நேரத்தை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் சோர்வடைவீர்கள். அப்படி அடையும்போது உங்கள் குடும்பத்துக்கான நேரத்தை நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் குறைந்து, உங்கள் வாழ்க்கை சமநிலை பாதிக்கப்படும். உங்கள் வேலையை முழுக் கவனத்துடன் செய்யும்போது, உங்கள் வேலையும் துரிதமாக முடியும். நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து செலவழிக்கும் நேரமும் அதிகமாகும்.

6.ஸ்மார்ட்னஸை வளர்த்துக்கொள்ளுங்கள்!

சிலர் அலுவலத்தில் அதிக நேரம் இருந்தாலே, கஷ்டப்பட்டு வேலை செய்வதாக நினைத்துக் கொள்வார் கள். அல்லது அப்படி ஓர் எண்ணத்தை அலுவலகத் தின் சக ஊழியர்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் ஏற்படுத்த நினைப்பார்கள். இது தவறு.  ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத் தில் எத்தனை வேலை களை ஸ்மார்ட்டாக செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம். குறைந்த நேரத்தில் ஒரு வேலையை சரியாக செய்துமுடிக்கும் ஸ்மார்ட்னஸ் வேண்டும். இந்த ஸ்மார்ட்னஸ் வரப்பெற்ற ஊழியர்கள், எல்லா வேலைகளையும் சரியாகச் செய்துவிட்டு, ஆபீஸில் நல்ல பெயர் வாங்கிவிட்டு, குழந்தை களை சினிமாவுக்கும் அழைத்துச் செல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். 

7.மனநிலையைச் சரியாக வைத்திருங்கள்!

வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட மனக் கவலையை வீட்டிலோ காட்டா தீர்கள். வீட்டில் நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி வைக்கும் போதே, அலுவலகம் தொடர்பான அதிருப்தியான எண்ணங்களையும் மறந்து விடுங்கள். அதேபோல, வீட்டில் இருக்கும் பிரச்னையை அலுவலகத்தில் ஸ்வைப்பர் கார்டினைக் காட்டி வருகைப்பதிவை பதியும் போதே, மனதிலிருந்து அழித்துவிடுங்கள். வீடு வேறு, அலுவலகம் வேறு என நீங்கள் நினைத்து செயல் பட்டால் மட்டுமே, வீட்டில் குழந்தை களிடம் கொஞ்சி விளையாடவும் முடியும்; அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிரித்துப் பேசி, வேலையை க்ரியேட்டிவ்வாகச் செய்யவும் முடியும்.

8.வொர்க்ஹாலிக் vs ஹோம் சிக்!

சிலர் எப்போதும் குடிபோதையில் இருக்கிற மாதிரி, வேலை, வேலை என்று வேலை போதையில் இருப் பார்கள். இப்படி வொர்க் ஹாலிக்காக இருப்பவர்கள்,  அலுவலக வேலையை அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து செய்தது போதாதென்று, அந்த வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாட அழைத்தால், வள்ளென்று விழுவார் கள். இன்னும் சிலரோ, சின்னக் காரணம் கிடைத்தாலும் வீட்டுக்கு வந்து முடங்கிவிடக்கூடிய ஹோம் சிக்னஸ் கொண்டவர்களாக இருப்பார்கள். வானம் லேஸாக இருட்டினாலும், சார், மழை வரும் போல இருக்கு. நான் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளம்பலாமா என்று கேட்பார்கள். இந்த இரண்டு மனோபாவமும் தவறு. அலுவலகம், வீடு என இரண்டுக்கும் சமமான கவனத்தைக் காட்டினால்தான், முன்னேற முடியும். 

9.இரு தரப்பினருக்கும் புரிய வையுங்கள்!

அலுவலகம் பற்றி குடும்பத்தினருக்கு  புரிதல் இல்லாதபோதும், குடும்பத்தினர் பற்றி அலுவலகத்துக்கு எதுவும் தெரியாதபோதும், தேவை இல்லாத பிரச்னை உருவாகின்றன. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சில உதவிகளை செய்ய வேண்டிய கடமை ஓர் ஊழியருக்கு இருக்கலாம். இதனால் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை போட வேண்டிய கட்டாயம்  ஓர் ஊழியருக்கு ஏற்பட லாம். ஆனால், அந்தத் தகவல் அலுவலகத்துக்குத் தெரியாதபோது, அலுவலகத்துக்கு வராமல் ஊர் சுற்றுவதாக தான் உயரதிகாரி நினைப்பார். இதேபோல, அலுவலகம் எப்படிப்பட்டது என்பது குடும்பத்தினருக்கு நன்றாக எடுத்துச் சொல்லிவிட்டால், சில சமயங்களில் ஆபீஸில் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, தவறாக நினைக்கும் வாய்ப்பு ஏற்படாது.

10.முழுநாள் ஓய்வு!

ஒரு வாரத்துக்கு மொத்தம் 168 மணி நேரம். இதில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என உழைத்தால், ஆறு நாட்களில் 60 மணி நேரம் போய்விடும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் 56 மணி நேரம் போய்விடும். மீதமுள்ள 52 மணி நேரத்தை அடுத்த வாரத்துக்கு தம்மைத் தயார் செய்துகொள்ள செலவழிக்க வேண்டும். கண்ணுக்கு ஓய்வு, கை, காலுக்கு ஓய்வு, மொத்த உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தருவதன் மூலமே நம்மை நாம் சுறுசுறுப்பாக்கிக்கொள்ள முடியும்.



Yours Happily
Dr.Star Anand Ram
Self motivation Trainer 
9790044225
www.v4all.org