Tuesday, August 4, 2015

கடன் தோஷம் நீங்க

கடன் தோஷம் நீங்க !!! (share) செய்யுங்கள்)
லக்னத்துக்கு 1 முதல் 12 வரை உள்ள கிரகங்கள் 6-வது வீட்டில் அமர்வதால் கடன் தொல்லை ஏற்படுகிறது. எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பரிகாரம்-1: சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை அடைத்துவிடலாம்.
பரிகாரம்-2: குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.

பரிகாரம்-3: 9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி நிம்மதி பெறலாம். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்,
Mantric   மாந்திரீகம்'s photo.

No comments:

Post a Comment