Showing posts with label Corporate Training Company in chennai. Show all posts
Showing posts with label Corporate Training Company in chennai. Show all posts

Wednesday, May 18, 2016

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்


கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்க சிறிய வெள்ளை துணியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்க மேற்கண்டவை நீங்கும். அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது கருப்பு உப்பு.

Tuesday, September 29, 2015

பகவான் கிருஷ்ணன் ஏன் பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றவில்லை?

பகவான் கிருஷ்ணன் ஏன் பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றவில்லை?

(கண்ணனின் அற்புத விளக்கம்) -www.v4all.org

*****************

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், 

''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு மகாபாரதத்தில் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. 

அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’.

அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:

''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்

.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 

# 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? 

போகட்டும்.

# விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.

தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

# தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

# 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். 

அதையும் செய்யவில்லை.

# மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

# ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். 

''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.

துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, 

கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். ( தனக்கு தெரியாவிட்டாலும், தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும், Management Principle) 

தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,

'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
( Ego) 

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? 

அல்லது, 

அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? 

போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். 

ஆனால், 

அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டு விட்டேன், ஆனால், 

இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. 

கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; 

என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான்.நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால்என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? 

இல்லை.

அவளும் சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!

நல்லவேளை..

. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது கை பலத்தை முதலில் நம்பி, அது தோற்ற பின்பே, போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி.

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். 

( பைபிளிலும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றே உள்ளது. தட்டாத பட்சத்தில் கதவு திறக்கப்படாது என்பது உண்மை) 
இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன்.

ஆனால், ஏமாறவில்லை.

உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர்.

''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. 

நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம்பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! 

எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

Monday, September 21, 2015

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!

சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;
தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;

மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;

மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;
வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;

ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;

அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;

இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் ஒம்சிவசிவஒம் என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;

அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)


பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;
இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;

நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;

எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?

ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;

அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;
ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;

இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;
-www.v4all.org

Saturday, September 5, 2015

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
அறிமுகமற்ற அழைப்புகள் என்பவை, உங்களை யாரென்று தெரியாத வாடிக்கையாளர்களிடம், தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் செல்வது மூலமாக விற்பனை செய்ய முயற்சி செய்வதாகும். அறிமுகமற்ற அழைப்புகளின் நோக்கம், வாடிக்கையாளரின் வலிமையைப் பற்றிய தகவலைச் சேகரிப்பது ஆகும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக்கூறுவது, மற்றும் சில நேரங்களில், அவர்களைச் சந்திக்க அனுமதி வாங்குவது ஆகியவை ஆகும். அறிமுகமற்ற அழைப்புகளில் சில சவால்கள் உள்ளன, அவை: ஐயம், கடந்தகால உதவியாளர்களைச் சந்திப்பது, செயலாளர்களைச் (secretaries) சந்திப்பது, மற்றும் பிற வாயில் காப்பாளர்களைச் சந்திப்பது, சரியான நபர்களைக் கண்டறிவது, விற்பனைச் செயல் முறையை விரைவாக நிறைவு செய்ய உதவும் தளத்தைக் கண்டறிவது ஆகியவை.
இந்த சவால்களை முறியடிக்க, பின்வரும் தகவல் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
சற்றும் "அறிமுகமற்ற" தன்மை கொண்ட அறிமுகமற்ற அழைப்புகளைத் தவிர்க்கவும்.
உங்கள் நடப்பு வாடிக்கையாள்களிடம் இருந்து மேற்குறிப்புகளைப் பெறுங்கள், பின்னர், அந்த நபர்களிடம் பேசுங்கள், இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அறிமுகமற்ற தன்மை சற்றுக் குறையும். உங்கள் வாடிக்கையார்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பெயர் மற்றும் இலக்கங்களைக் கேட்காமல், அவர்களே அதைக் கூறும் வகையில் அவர்களிடம் உரையாடுங்கள். உதாரணமாக, நீங்கள் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு காப்பீடு வாங்கும் ஆர்வம் இருப்பது தெரிந்த ஒருவர் பெரும்பாலும், அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அந்த நேரத்தில் யாரைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்பது பற்றியும் அவரது நண்பர்களுக்கும் குழந்தைகள் இருகிறார்களா என்பது போல கேட்கும்போது, அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும் எதிர்காலத் திட்டமிடும் அவசியம் இருந்தால் அவர்களைப் பற்றிக் கூறலாம் என உணர்வார்கள்.
இப்போதே செய்யுங்கள்
விற்பனை அழைப்புகளைச் செய்ய நீங்கள் எப்போதும் தயாராகப் போவதில்லை, ஆகவே, சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் ஐயம் எப்போதும் இல்லாமல் போகாது, ஏனெனில், நீங்களாகவே ஒருவரை அழைத்து, அவர்கள் உங்களிடம் பேச மறுப்பதை எதிர்கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆகவே, தள்ளிப்போட வேண்டாம் காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக, இப்போதே செய்துவிடுங்கள்.
வெளிப்படையாக இருங்கள்
நீங்கள் ஒரு காவலாளி, ஒரு உதவியாளர் அல்லது தொலைபேசியில் எதிர்பார்ப்பவர் ஆகிய எவரைச் சந்தித்தாலும், வெளிப்படையாக எதற்கு நீங்கள் அழைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் அழைப்பின் அவசியத்தைக் குறிப்பிடுங்கள். நேர்மையாகவும் விவரமாகவும் இருங்கள். அழைப்பது எதற்கு என்று கூறுவது, சரியாக இல்லாவிட்டால், மக்கள் உங்களைத் தவிர்க்கலாம், அல்லது சந்தேகப்படலாம். பேசுவதற்கு இது சரியான நேரம்தானா எனக் கண்டறியுங்கள் – அதிக தகவலைக் கொடுங்கள், அப்படி முடியாவிட்டால், பின்னர் மீண்டும் அவர்களை எப்போது அழைக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.
விரைவில் மற்றும் தாமதமாக அழையுங்கள்
உதவியாளர் தொலைபேசியை எடுப்பதால், செயலாளர் பதிலளிப்பதால் அல்லது அழைக்கும்போதெல்லாம் குரல் அஞ்சல் பதிலளித்தால், ரு சிலரைத் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தால், வழக்கமற்ற நேரங்களில் அழையுங்கள். நாம் எதிர்பார்ப்பவர், காலை 8.00 மணி அல்லது மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே தானாகவே தொலைபேசியை எடுக்கலாம். மேலும் அவர்கள் தளர்வாகவும் பேசுவதற்கு நேரத்தோடும் இருப்பார்கள், ஏனெனில், இப்போது அவர்கள் 9 –இலிருந்து 5 வரை இருக்கும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. நேரடியாகவே விற்பனை அழைப்புகளைச் செய்தால், வழக்கமற்ற நேர அழைப்புகளைச் செய்ய, காலையை விட மாலை நேரம் சிறந்தது.
மக்கள் மீண்டும் உங்களை அழைப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.
அவர்கள் உங்களை அழைக்க காத்திருக்கக்கூடாது. அவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூட அவர்கள் அழைக்காமல் போகலாம். அவர்கள் மீண்டும் உங்களை அழைப்பதாகக் கூறினால், அப்படியே செய்வார்கள் என நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் மமதையை தள்ளிவிட்டு நீங்களே அவர்களை அழையுங்கள். அப்படிச் செய்யும் போது, இனிமையாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களை மீண்டும் அழைக்காததால், நீங்கள் எவ்வளவு வெறுப்படைந்திருந்தாலும் பரவாயில்லை.
மனிதனாக நடந்துகொள்ளுங்கள்
விற்பனையாளர்கள் பொதுவாக அவர்கள் சொல்வதை மூச்சு கூட விடாமல் சொல்லிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். இப்படிச் செய்யாதீர்கள். அது இயல்பாக இருக்காது, மற்றும் உதவாது. மக்கள் அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடமிருந்தே வாங்குவார்கள், அவர்களையும் அவர்களுடைய வியாபாரத்தையும் புரிந்து கொள்பவர்களிடம் இருந்தே வாங்குவார்கள். நீங்கள் அணுகுபவர்களை, பல கேள்விகளைக் கேட்டு பதில் பெறுங்கள், அவர்களிடம் உண்மையாகவே ஆர்வம் கொண்டிருங்கள்.
குறைவாகப் பேசுங்கள், அதிகம் பேசாதீர்கள்
நீங்கள் அணுகுபவர்களின் தேவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க, அறிமுகமற்ற அழைப்புகளைப் பயன்படுத்துங்கள். அந்த நபர் உங்களிடம் பேச, நீங்கள் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைக் பற்றிய அதிகமான தகவல்களை நிச்சயம் வழங்க வேண்டும். ஆனால் அதிகமாகப் பேசாதீர்கள். நீங்கள் அணுகுபவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியாமல், நீங்களாக பேசிக்கொண்டே இருந்தால், அவர் வெறுப்படைவார். நீங்கள் அணுகுபவரை, அவரது சிக்கல்கள் மற்றும் தேவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்டு (நீங்கள் இந்த கேள்விகளை ஏற்கனவே எழுதி வைத்துக் கொள்ளலாம்) அவர்களின் பதில்களைக் கூர்ந்து கவனியுங்கள். பின்னர், அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உதவும் தயாரிப்பின் நன்மை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுக் கூறுங்கள். நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்
ஒருவர் உங்களை, எழுத்து தகவலை அனுப்ப வேண்டினால், அவரிடம் நேரில் சென்று 15 நிமிடம் விளக்கமாகக் கூறலாமா எனக் கேளுங்கள். இந்த முறை அவர்களுக்கு, உங்கள் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக செயல்திறனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் தகவல்களைச் சிறப்பாகப் பெறலாம், மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிக்கலாம். மேலும், ஒருவரைச் சந்திக்கும் போது, அவர்களிடம் இனிமையான குணத்தோடு பழகுங்கள், இதனால், அவர் உங்களையும் அவர் உங்கள் தயாரிப்பை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவில் வைத்திருக்க உதவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.- WWW.V4ALL.ORG

Tuesday, September 1, 2015

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
வலையமைப்பு என்பது தொடர்புகளை உருவாக்கு பயன்படும் கலையாகும். ஒரு மக்கள் தொகுப்பு மற்றும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் மதிப்பை நேரடியாக உயர்த்தும் தகவலை உருவாக்குவது, வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைப்பது, மற்றும் மிக முக்கியமாக, உங்கள் போட்டியாளர்கள், அவர்கள் ஒரு போதும் அடைய முடியாது என நினைத்த ஒன்றை நீங்கள் அடைந்தது எப்படி என்று ஆச்சரியப் படவைப்பது ஆகியவையே, வலையமைப்பு என்பதன் நோக்கங்கள் ஆகும்.
பல சிறு வியாபார உரிமையாளர்கள் வலையமைப்பு செய்வதை விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அது, உங்கள் வர்த்தக அட்டையை எவரிடமாவது கொடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விளக்குவது பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், வலையமைப்பு என்பது உண்மையில், நீங்கள் உதவக்கூடிய மற்றும் உங்களுக்கு உதவக்கூடியவர்களை அறிந்து கொள்வதைப் பற்றியதே ஆகும்.
வலையமைப்பு நிபுணரான, ஸ்டீவன் M. க்ராஷர், நெட்வொர்க் அஸ்ஸோஸியேட்ஸ் தலைவர், ஹிக்ஸ்வில்லி, நியூயார்க்,பல வியாபாரிகள், வலையமைப்பு என்பதை ஒரு செயல்திறன் மிக்க ஒரு வர்த்தகக் கருவியாக எவ்வாறு மாற்றுவது என்பதை அறியவில்லை என வலியுறுத்துகிறார். "உங்கள் மேசை ட்ராயரில், வர்த்தக அட்டைகள் குவிந்து கிடப்பதே, உங்கள் வலையமைப்பின் முடிவுகள் மற்றும் வியாபாரத்தில் மேலதிக நல்ல விளைவுகள் எதுவும் இல்லையெனில், நீங்கள் உங்கள் முறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் அது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்".
க்ராஷர், சிறு வியாபார உரிமையாளர்கள், தாங்கள் சந்திக்கப் போகும் மக்களை இரண்டு குறிக்கோள்களுடன் அணுக வேண்டும் என்கிறார்: கூடுமான வரை அதிகமான மக்களைத் தெரிந்து கொள்வது, மற்றும் அவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவைப்பது. மேலும் அவர், உங்கள் வலையமைப்பு, சிறந்த விளைவை உண்டாக்க, பின்வரும் நான்கு படிகளை சிபாரிசு செய்கிறார்:
தகவல் கொடுத்து தகவல் பெறுங்கள்

வலையமைப்பு என்பது இரு வழிப் பாதையாகும். நீங்கள் எவரையாவது சந்திக்கும் போது, நீங்கள் அவர்களின் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மற்றும் அவர்களிடம் உங்கள் வியாபாரத்தைப் பற்றியும் கூற வேண்டும். அடிப்படைகளில் தொடங்குங்கள் – பெயர், கம்பனி, சேர்ப்பு, நிலை, வியாபாரத்தின் தன்மை போன்றவை. நீங்கள் அடுத்ததாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் ஒருவருக்கொருவர் உதவ முடியுமா என்பது ஆகும். இந்த தலைப்புகளை முயற்சி செய்யுங்கள்:
  • உங்கள் கம்பனி என்ன செய்கிறது?
  • எந்த விதமான வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் சேவையை வழங்குகிறீர்கள்?
  • உங்கள் நிறுவனத்தில், ஒவ்வொரு சேவை அல்லது தயாரிப்புகளை வாங்குவது குறித்து முடிவு செய்வது யார்?
  • போட்டிச் சூழலில் உங்கள் தனித்துவம் என்ன?
தொடர்பின் மதிப்பை மதிப்பீடு செய்யவும்

நீங்கள் அனைவரிடமும் முழுமையாக வலையமைப்பு செய்ய முடியாது. நீங்கள், முதன்மையான தகவல்களைப் பெற்றவுடன், இந்த நபரை மறு முறை தொடர்பு கொள்வதும் உறவைத் தொடர்வதும் பயனுள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா மற்றும் அவர்கள் உங்களுக்கு உதவ முடியுமா? இரண்டிற்கும் பதில் "ஆம்" என்று இருக்க வேண்டும்.
மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் மற்றவர்களுக்கு உதவுவதில் உண்மையான ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிவது, எந்த வேண்டுகோளும் இல்லாமல். இன்னும் கூறப்போனால், உங்களை நீங்களே ஒரு வலையமைப்பாளராகவும் சிக்கல் தீர்ப்பவராகவும் நினைத்துக் கொள்ளாதீர்கள், மற்றும் உங்கள் தனிப்பட்ட வலையமைப்பில் சேர்க்க விரும்பும் எவரிடமும் அதே குணாதிசியங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒரு திறமுறையான கூட்டை உருவாக்குங்கள்

ஒரு வலையமைப்பு என்பது, வர்த்தக அட்டைகளைச் சேகரிப்பது அல்ல, மக்களைச் சேகரிப்பதாகும். உங்கள் வலையமைப்பில் உள்ளவர்களுடைய வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய நேரம் நுகரும். நீங்கள் அங்கத்தவர்களை புத்திசாலித்தனமாகத் தெரிவு செய்தால், அது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அவர்களுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் யாருக்காக செய்கிறீர்கள் என்பது பற்றி எல்லாம், விளக்கமாகக் கூறுகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் புதுப்பித்தல்களையும், ஊக்கத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், விற்பனை நபர்களாகிறீர்கள்.
வலையமைப்பு செய்வதன் நோக்கம், உங்கள் தொடர்பின் வியாபாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்த அனைவரின் வியாபாரத்தையும் பெறுவதற்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்களை உங்கள் மேலாண்மை சிந்தனைகள், அறிவுரை, லீட்கள், மேலும் விற்பனையாளர் சிபாரிசுகள் ஆகியவற்றுக்கான வலையமைப்பில், அவர்களையும் சேர்க்க முடியும். நீங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் நிறைய அறிகிறீர்கள், இருவரும் இலாபம் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டிலும், ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்காகப் பங்களிக்கிறீர்கள்.
பராமரிப்பு

உங்கள் தொடர்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உங்கள் தகவல் வளையத்தில் (loop) உள்ளவர்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். செயல்திறன் மிக்க நேர நிர்வாகத் திறமைகளைப் பயன்படுத்துங்கள், உங்கள் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். உங்களுக்கு அதிக பயனுள்ளவர்களிடம் அவ்வப்போது தொடர்பு வைத்துக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். அவர்கள், உங்கள் உள் வட்டம் ஆகிவிடுவார்கள்.
எப்போதும் உறவுக்கு பங்கம் ஏற்படாதவாறு கவனமாக இருங்கள், நீங்கள் ஒருவரிடமிருந்து எப்போது உதவி பெற வேண்டியிருக்கும், உங்கள் உதவி எப்போது ஒருவருக்கு தேவைப்படும் என தெரியாது. தற்போது ஒருவர் உங்களுக்குப் பயனற்றவராக இருந்தாலும் ,நீங்கள் அவரை மீண்டும் மீண்டும் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் உதவலாம். வேறு முறையில் கூறினால், அனைவரிடமும் இனிமையாக இருங்கள் ஏனெனில், எப்போது அவர்களின் உதவி தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Saturday, August 29, 2015

நம்பிக்கை நாணயமற்ற ஒரு பெரிய சாத்தியமான வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுவது

நம்பிக்கை நாணயமற்ற ஒரு பெரிய சாத்தியமான வாடிக்கையாளரை எவ்வாறு கையாளுவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு நல்ல வாடிக்கையாளரின் நிலை அறிக்கையை நீங்கள் பார்க்கும்போது ஏராளமான எச்சரிக்கைளை காண்பீர்கள் – தாமத கட்டண செலுத்தல்கள், நிலுவையிலுள்ள சட்டப்பிரிவுகள், மிகுதியான கடன் சுமை போன்றவை. இந்த வாடிக்கையாளர் கடன் ஆபத்தாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்காக அவருடன் உள்ள வியாபார உறவை முறித்து கொள்ள வேண்டுமா? அவ்வாறு இல்லை. சந்தேகத்துக்குரிய கடன் ஆபத்து உள்ள நிறுவனங்களுடன் தொழிற்படும்போது, ஆபத்தைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகளை எடுங்கள்.
ஆழமாக விசாரிக்கவும்
ஒவ்வொரு சிறந்த வாடிக்கையாளர்களின் கடன்களும் பல்வேறு சூழல்களால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும், எனவே மோசமான கடன் நிலைகளை ஆராய்வது பயனளிக்கும். உதாரணமாக, ஒருவர் விடுமுறை கால பொருட்களை விற்பவராக இருந்தால், அந்த வியாபாரம் குளிர்காலத்தை விட கோடைகாலத்தில் அதன் காசுப்பாய்ச்சல் சிக்கலானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. வியாபாரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தால், இந்த கருத்துகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் வகையில் கடன் விதிமுறைகளை உருவாக்குங்கள். பருவமல்லாத காலங்களில் C.O.D. கட்டணங்களையும் விற்பனை அதிகமான காலங்களில் ஆரம்பக் கட்டணங்களும் உங்களுக்கு கிடைக்கலாம்.
சிபாரிசுகளை செவ்வைபாருங்கள்
ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய மோசமான கடன் நிலைகளை வலிமையாக நியாயப்படுத்தினால், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு பிற கடன் பரிந்துரையாளர்களிடம் பேசுங்கள். எஞ்சியிருக்கும் கடனானது இந்த நபரைத் தவறாக கடன் ஆபத்து உடையவர் என்று குறிப்பிடுகிறது என்றும் கூட நீங்கள் கண்டறியக் கூடும். பெரிய வாடிக்கையாளர் அளித்த சிபாரிகளுடன் தொடர்பு கொள்வதைவிடவும், முழுமையான விநியோகத்தர்களின் பட்டியலை நீங்கள் பெற முயற்சிக்கலாம். இதிலிருந்து எந்த விநியோகத்தரை அழைப்பது என்று நீங்கள் முடிவு செய்யலாம்.
செலுத்துதல் நியதிகளை வரையறுங்கள்
உங்கள் கட்டணம் செலுத்தல் நியதிகள் புரியவில்லை என்று கூறும் வாய்ப்பை ஆபத்தான வாடிக்கையாளர்களுக்கு வழங்காதிருங்கள். செலுத்துதல் பாலிசிகளை வாசிக்கச் செய்து அவற்றை ஏற்று கொள்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையில் கையெழுத்து பெற்று உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். நியதிகளை உங்களுடைய அனைத்து கொள்முதல் ஆணை மற்றும் ரசீதுகள் போன்றவற்றில் குறிப்பிட்டு கண்காணித்து வாருங்கள். செலுத்துதல் முறைகள், அதிக காலங்கள், விரைவில் செலுத்துவதற்கான தள்ளுபடிகள், தாமதமான செலுத்தல்களுக்கான அபராதங்கள், மற்றும் தாமதமான பில்கள் நீங்கள் கையாளும் முறைகள் போன்ற விவரங்களைக் குறிப்பிடுங்கள்.
முற் பணம் செலுத்தும்படி கோருங்கள்
ஒரு நிறுவனம் அதிக கடன் ஆபத்து நிறைந்ததாக இருப்பின், முழு அல்லது பகுதி முற்பணத்தைக் கோர அஞ்சாதீர்கள். மோசமான கடன் நிலைகளில் உள்ள பல நிறுவனங்கள் இதனை அறிந்துள்ளன, மேலும் நீங்கள் அவற்றுடன் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வீர்கள் என்பதை எதிர்பார்க்கும். மோசமான கடன் நிலைகளில் உள்ள நிறுவனங்கள் பொதுவாக அவற்றின் மதிப்பை அதிகரிக்க விரும்பும், முற்பணம் செலுத்தல் நியதிகளை கூறி இந்த உறவுமுறை நீடித்தால் அவற்றுக்கு ஒரு கடன் பரிந்துரையாளராக எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
தனிப்பட்ட கடன் வரலாறுகளை கருத்தில் கொள்ளுங்கள்
கடன் வரலாறு எதுவும் இருக்க முடியாத ஒரு புதிய நிறுவனத்தை எதிர் கொள்ள நேர்ந்தால், அதன் உரிமையாளரின் கடன் அறிக்கையைப் பார்த்து அவர் எவ்வாறு பில்களைக் கையாளுகிறார் என்று காணுங்கள். சிறந்த நிதி மேலாண்மை திறன்களைக் கொண்ட ஒரு நபர் வியாபாரத்திற்கு சிறந்த நிதி மேலாண்மை நடவடிக்கைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வரவிருக்கும் நிதிகளைப் பற்றி கேளுங்கள்
கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அல்லது வரவிருக்கும் சொத்துக்கான ஆதாரங்களை சில நிறுவனங்கள் தரக்கூடும். இந்த ஆவணங்கள் நிச்சயமாக உங்களுக்கு கட்டணம் வரும் என்பதை உறுதிப்படுத்தாவிட்டாலும், ஒரு பெரிய வாடிக்கையாளர் அவருடைய கட்டளைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த நிதி ஆதாரங்களை கொண்டிருக்கிறார் என்பதை உங்களுக்கு அறியச் செய்யும். நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து ஒப்பந்தங்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
உறவை மெதுவாக தொடங்குங்கள்
ஒரு புதிய வாடிக்கையாளரைப் பற்றி நீங்கள் அதிகம் அறியாதவராக இருந்தால், அவர்களுடன் சரியான உறவை ஏற்படுத்தி கொள்ளும் வரை குறைவான தொகைக்கான வியாபாரத்தையே ஏற்று கொள்ளுங்கள். இன்னொரு முறையாவது ஆரம்பத்திலேயே முற் பணம் சிறிது வாங்கிக் கொண்டு, மெதுவாக கடன் வரம்புகளை அதிகப்படுத்துங்கள்.
வேண்டாம் எனச் சொல்லிவிடுங்கள்
பெரும்பாலான நிறுவனங்கள் அதிக கடன் ஆபத்து நிறைந்தவையாக இல்லாவிட்டாலும், ஒரு சில நிறுவனங்களை உங்கள் வாடிக்கையாளர்களாக சேர்ப்பதற்கு முன்பு பல முறை சிந்திக்க வேண்டும். இவ்வளவு முன் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பின்னும், அந்த வாடிக்கையாளரிடம் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், அமைதியாக அவர்களுடான வியாபாரத்தைத் துண்டித்து விடுங்கள். முதலிலேயே 'வேண்டாம்' என்று மறுத்துவிடுவதன் மூலம் சேகரிப்பதிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்கிறீர்கள் மற்றும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறீர்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Friday, August 21, 2015

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு

இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை “மரணத்தின் வர்த்தகன் மரணம்” என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.
“மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்” என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. “நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?” என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.
அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் ‘ப்ளைவுட்’டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.
இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு “மரணத்தின் வர்த்தகன்” என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய “ஆயுதங்களைக் கைவிடுங்கள்” என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.
ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?

ஆர்வமே வெற்றியின் திறவுகோல்

ஆர்வமே வெற்றியின் திறவுகோல்

எழுத்தின் அளவு :
ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய ஆர்வத்தை பொறுத்தே அமையும் என சான்றோர்கள் கூறுகின்றனர். பிரபல அமெரிக்க தத்துவஞானி ரால்ப் வால்டோ, "மனநிறைவுடன் அன்பாக வாழுங்கள்; நிறைவான அறிவு பெறுங்கள்; மனம் விட்டு சிரியுங்கள்' என்று தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருப்பார். இந்த மூன்றும் தான் ஒரு செயலின் மீது ஆர்வம் ஏற்பட தூண்டு கோலாக அமையும். ஆர்வம் என்றால் என்ன? ஒரு செயலை துடிப்புடன் செய்வதற்கு தேவைப்படும் எல்லையில்லாத ஆற்றல் ஆர்வமாகும். ஆனால் நம்மில் பலர் அந்த ஆற்றலை முழுவதும் பெறாமல் அரைகுறையாக பெறுகிறோம்.
அந்த ஆற்றலை சுலபமாக பெறலாம் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது பல நகரங்களில், காலை நேரத்தில் பார்க் அருகில் சென்று பார்த்தால், சிலர் கூட்டமாக கூடி காரணம் இல்லாமல் சிரித்து கொண்டிருப்பர். அதை பார்க்க முட்டாள் தனமாக தோன்றும். ஆனால், அவர்கள் சத்தமாக சிரிப்பதால் மனதில் உள்ள அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை போல் எப்பொழுதும் மனம் விட்டு சிரியுங்கள். நீங்கள் குழந்தைகளை சற்று கவனித்து உள்ளீர்களா? ஒரு விஷயத்தை கற்க மிகுந்த ஆர்வமுடன் இருப்பார்கள்.
அத்தகைய முனைப்புடன் நாமும் செயல்பட வேண்டும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் மனமகிழ்ச்சியுடனும், அன்பாகவும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயலின் மீது உங்களுக்கு ஆர்வம் அதிகமாக ஏற்படும். உங்களுடைய செயலில் வெற்றியோ , தோல்வியோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்போது தான் அடுத்த வேலையில் உங்களுடைய கவனத்தை முழுமையாக செலுத்த முடியும். மேற்கூறியவற்றை உங்கள் செயல்களில் இணைத்து உங்கள் வாழ்விலும், செயலிலும் ஆர்வமுடன் செயல் பட்டு வெற்றி இலக்கை அடையுங்கள்.

Thursday, August 13, 2015

நீங்கள் மரணத்தை வெல்ல முடியுமா?

நீங்கள் மரணத்தை வெல்ல முடியுமா? - www.v4all.org
மனிதன் இறப்பற்றவனா? நீங்கள் இறப்பற்றவரா? தெரிந்து கொள்ளலாம், மேலே படியுங்கள்.
மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, தனக்கு மரணமே வராது என்பது போல் நடந்து கொள்கிறான்.எத்தனையோ சாவுகளைப் பார்த்தாலும், தான் ஏதோ மரணத்தை வென்றவன் போல் நடந்து கொள்கிறான்.
உங்களுக்கு நிறைய இறப்புகளைப் பார்த்தாலும் நாமும் ஒரு நாள் மரணிப்போம் என்று ஏன் தோன்றுவதில்லை? நாம் ஏதோ சாகா வரம் பெற்றவர் போல் ஏன் நடந்து கொள்கிறோம்?
நமது உடலிலுள்ள உயிருக்கு (ஆன்மாவிற்கு) மரணம் என்பதே கிடையாது. மரணம் சம்பவிப்பது இந்த உடலுக்குத் தான். உடல் தான் அழியக்கூடியது. ஆன்மா அழிவற்றது. நமது சட்டை மிகவும் பழையதாகி விட்டால், புதிய சட்டை வாங்கி விடுகிறோம். அதே போல் தான் இந்த ஆன்மாவும் உடல் கெட்டு விட்டால் வேறு உடல் தேடி சேர்ந்து விடுகிறது.
ஆன்மாவுக்கு என்றுமே அழிவில்லை என்பதால் நாம் மரணத்திற்கு பயப்பட வேண்டியதில்லை. நாம் இதே உலகில் மீண்டும், மீண்டும் பிறக்கத்தான் போகிறோம். பின் எதற்கு சாவிற்குப் பயப்பட வேண்டும்?
நம் ஆன்மா பலப் பிறவிகளைக்கடந்து, முதிர்ச்சியடைந்து இறுதியில் இறைவனை அடைவதையே முக்தி அடைதல் என்கிறோம்.
நீங்கள் என்பது உங்கள் உடல் அல்ல. நாம் நம் உடலைத் தான் நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது தவறு. நம் ஆன்மா தான் உண்மையில் நாம்.
உங்கள் ஆன்மாவிற்கு இறப்பு என்பதே இல்லை. ஆகையால் உங்களுக்கு மரணம் என்பதே இல்லை.
ஆமாம், மரணத்தை வென்றவர் தான் நீங்கள்.
இந்தப் பிறவியில் மட்டுமில்லை. எந்தப் பிறவியிலும் உங்களுக்கு மரணமே இல்லை.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Wednesday, August 12, 2015

How to succeed in business as an introvert

Last century, it was the extrovert we valued – that outgoing, gregarious individual who had strong and aggressive leadership skills, who never met a “stranger,” who could make the hard sale, and whose personality was “all over the workplace.” The 21st century, however, is the century of the introvert – that individual who is more introspective, who contemplates and analyzes, who has a quiet fortitude, who has the focus and the creativity that can spread a brand, and who will take the time to analyze and assess all possible strategies and solutions. These are the qualities that we now value in business, and here’s why:
1. Better and More Creative Writers: Introverts are, for the most part, better at telling a tale – the kinds of tales businesses want told in their content marketing. While the extrovert wants to just “tell it like it is” and get on with it, the introvert is thoughtful and more creative, weaving anecdotes, humor, and fresh information into compelling pieces for blogs, forums, social media pages, and such. Good, engaging writers are a “hot” commodity today, and the introvert can fill that need.
2. Better Listeners: Extroverts are so busy getting their points across that they often fail to listen carefully. Introverts, on the other hand, tend to absorb all that is being said, and to use that information to make someone else feel that their points and opinions count. Because they listen well, moreover, introverts have all of the facts and information to make informed decisions and to resolve issues. In an age when developing relationships with consumers, rather than just selling them something, has become so important, introverts are invaluable. They will respond to customer feedback in genuine ways; they will engage in more meaningful conversations with customers and potential customers, especially when those conversations may now take place more online than in person.
3. Online Comfort: Because they enjoy solitude and working alone, introverts are very comfortable engaging people online; they are happy to write those blog posts, to share content all over the place, and to participate in online dialogue. So much business “action” is online in the 21st century, the introvert is in his/her glory, and the company benefits as a result! As well, because introverts tend to spend a lot of time online, they tend to be highly tech-savvy and have taught themselves to do things that others cannot do.
4. Better Collaborators: In a group workplace setting, in which collaboration is needed to resolve issues and solve problems, the extrovert tends to want to be at the center of the action. S/he tends to dominate the conversation, to need to be “heard” on every point, and to want to lead the conversations and work in directions that s/he wants. The introvert, on the other hand, sits back, listens, and absorbs all that others are contributing, analyzes those contributions, and then will come up with real solution options that others have not even considered. When working as a part of a team, the introvert has no need to dominate, and everyone else can thus have equal input. The results will always be better in this environment.
5. Important Recovery Time: The introvert will participate and socialize but will also retreat for valuable “recovery” time. It is during these times that s/he can reflect, analyze, and contemplate creative methods and strategies, and bring those back to the larger group. The extrovert does not value solitude for recovery, preferring always to be around other people. It’s difficult for creative thought to percolate when the brain is always busy interacting with others.
6. Greater Focus: The introvert is happy to attack projects on his/her own and does not need a lot of re-directing or re-focusing. Because the extrovert always wants others around, distractions are pretty common occurrences, and thus focus on the task at hand is often lost.
7. More Creative: If ever creativity was needed, it is in today’s business world. Think about it. This is the age of rich, fresh content; this is the age of infographics, of media, of entertaining customers, potential customers, and visitors who come to websites, blogs and social media pages. The introvert takes the time to come up with the “catchy” titles and phrases, with those stunning headings and sub-headings, and with the content that keeps people reading and coming back to read some more!
8. Less Need for Praise/Recognition: While there is no intention here to “bash” extroverts, the introvert seems to have more ability to garner recognition and praise from within and even avoids being called out “publicly” for his/her accomplishments. The extrovert basks in such public recognition, however, and when it is not forthcoming, has a tendency to become offended when his/her accomplishments are not openly praised. The introvert has inner satisfaction, and that seems to be enough! -www.v4all.org 


Friday, August 7, 2015

இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமி

இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமி


நடிகர் லாரன்ஸ் பிறப்பால் கிருஸ்துவன்.இவருக்கு 24வது வயதில் இரத்த புற்றுநோய் இருந்தது இவர் செல்லாத சர்ச்கள் இல்லை காணத மருத்துவர்களும் இல்லை.மருத்துவர்கள் அனைவரும் லாரன்ஸை குணப்படுத்த முடியாது என கூறினார்கள் மனம் உடைந்தர் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.
லாரன்ஸ்:ரஜினிகாந்த்
அவர்களிடம் தனது பிரச்சனைகள் சொன்னார் லாரன்ஸ்.
ரஜினி காந்த்: நீ கிருஸ்துவனாக இருந்தாலும் பரவாயில்லை நான்(ரஜினி) சொல்லுவதை நீ கேள் இந்துக்களின் விரதமுறையில் அறிவியல் அர்த்தம் உண்டு நீ ஸ்ரீ ராகவேந்திரரை மனதார நினைத்து ப
பரிசுத்தமாக ஒரு மண்டலம் விரதம் இருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வா பிறகு நலமாகும் என்றார்.
லாரன்ஸ்:நான் பார்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துகள் இல்லை இதில் சரியாகாதது இந்து கடவுள்களை வணங்கினால் எனக்கு குணமாகுமா.
ரஜினிகாந்த்:எனது வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் நான் சொன்னதை செய்
லாரன்ஸ்:உங்கள் வார்த்தகைக்கு வேண்டி நான் கண்டிப்பாக கேட்கிறேன்.
(ரஜினி சொல்லியது போல் விரதமும் 48நாள் கழிந்தன மந்த்ராலயம் சொன்று வந்த லாரன்ஸ் முதலில் ரஜினி சந்தித்து சொன்று வந்த அனுபவத்தை கூறினார் லாரன்ஸ்.)
ரஜினி :நீ முதலில் மருதுவரிடம் சென்று பார்
என்றார்
லாரன்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்கள் மருத்துவர்களால்கைவிடப்பட்ட லாரன்ஸை கண்டு மருத்துவர்கள் ஆச்சரிய பட்டன லாரன்ஸிடம் மருத்துவர்கள் உங்களுக்கு பரிபூரணமாக குணமடைந்து விட்டீர்கள் ஆச்சரியம் அடைந்த லாரன்ஸ்
லாரன்ஸ்:ரஜினியை சந்தித்து எப்படி எனக்கு குணமானது என கேட்டார்
ரஜினி: இந்து மத பெருமைகள் எடுத்து சொல்ல லாரன்ஸ் தனது தாய் மதம் திரும்பினார் இந்து மதம் மாறிய பின்னர் தனது பெயரை ராகவன் எனவும் தனது இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமியை வணங்கி வருகிறார்.

Thursday, July 30, 2015

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது..

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது....
1. சரியாக வாழ்ந்தால் எந்த சாமன்யனும் கூட இந்திய நாட்டில் ஜனாதிபதியாக முடியும் என்பதனை....
2. ஏழையாக இருப்பது சாதனைக்குத் தடை இல்லை என்பதனை....
3. புரிந்து படிப்பதனால் விரும்பிய துறையில் உச்சத்தினை தொட முடியும் என்பதனை....
4. ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்தாலும் மதங்களனைத்தையும் கடந்தும் மனிதர்களின் இதயங்களை அன்பால் தொட முடியும் என்பதனை...
5. ஒரு இறப்பு என்பது எத்தனை சிறப்பானதாக மதிப்பு மிக்கதாகவும் புகழ்மிக்கதாகவும் இருக்க முடியும் என்பதனை....
6. காசு கொடுத்தல்ல, சாராயம் வாங்கிக் கொடுத்தல்ல, ,பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொடுத்தல்ல, நேர்மையான வாழ்வின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதனை.....
7. இதனையெல்லாம் கண்கொண்டு பார்க்க முடிகிற அரசியல் வாதிகள் அனைவரும் மனம்கொண்டு பார்த்தால் திருந்திவிட முடியும் என்பதனை.....
குறிப்பு:
மீடியாவுக்காக அழகான வசனம் பேசிவிட்டு ஒரு நாள் அஞ்சலியோடு மறந்துவிட்டு வழக்கமான சுரண்டல் வாழ்கையை வாழ்வோம் என அரசியல் வாதிகள் வாழ்ந்தால்... எத்தனை கலாம்கள் வந்தாலும் இந்த நாடு இப்படியேதான் இருக்கும்.... கலாமின் கனவு கனவாகவே இருக்கும்...

Monday, July 27, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.happy4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.