Showing posts with label counseeling center in coimbatore. Show all posts
Showing posts with label counseeling center in coimbatore. Show all posts

Friday, March 4, 2016

நீரிழிவு நோய்-விளக்கம்

நீரிழிவு நோய்-விளக்கம்
உடலுக்குள் உணவை ஆற்றலாய் மாற்றும் ரசாயன செயல்பாடுகளில் நிகழும் மாற்றம் காரணமாய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும். இவ்வாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறச் செய்பவை மூன்று விஷயங்கள்:
1) இன்சுலின் குறைவாக சுரத்தல்.
2) உடல் திசுக்கள் இன்சுலினை குறைந்த அளவிற்கு பயன்படுத்துதல்.
3) அதிகப்படியான சர்க்கரை உற்பத்தி. நீரிழிவு நோய் இரு விதங்களில் ஏற்படுகிறது. இவற்றின் அடிப்படையில் இதை நீரிழிவு நோய் வகை 1 மற்றும் வகை 2 என்று இரு வகைகளாய் பிரிக்கலாம்.
நீரிழிவு நோய் வகை 1
நாம் உண்ணும் உணவிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கு ரத்தம் அதை அணுக்களில் கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு அணுவும் சர்க்கரை மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று கொள்வோம். அணுக்களுக்குள் சர்க்கரை நுழைவதற்கு அவற்றைத் திறக்கும் ஒரு சாவியைப் போன்றதே இன்சுலின். இந்த இன்சுலின் என்பது கணையத்திலுள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஹார்மோன் ஆகும்.
நீரிழிவு நோய் உருவாக இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த இன்சுலின் எனப்படும் சாவி தொலைந்து போய் விடுகிறது. அதனால் செல்களைத் திறந்து உட்புக முடியாமல் ரத்தத்திலேயே சர்க்கரை தேங்கி விடுகிறது (சென்னையில் மழைக்காலங்களில் தெருவெங்கும் நீர் தேங்குவது போல்). இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதன் விளைவாக ஏற்படுவதே நீரிழிவு நோய் வகை 1.
நீரிழிவு நோய் வகை 2:
அணுக்களின் கதவைத் திறப்பதற்காக இன்சுலின் இருந்தும், பூட்டு பழுதாகி விடுகிறது என்று கொள்வோமே. இப்போது இன்சுலின் தேவையான அளவுக்கு இருந்தும் அதனை பயன்படுத்தி சர்க்கரை அணுக்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது. மற்றொரு வகையில் சொல்வதனால் இன்சுலின் இருந்தும், அதை பயன்படுத்தி சர்க்கரையை ஆற்றலாக மாற்ற அணுக்கள் மறுக்கின்றன. தொழிற் நுட்ப ரீதியில் இதை ‘அதிகப்படியான இன்சுலின் தடுப்பாற்றல்‘ என்கிறோம். இன்னொரு பெயர் நீரிழிவு நோய் வகை 2.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்:
நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் தோன்றாது. அதிக அளவில் சிறுநீர் கழிப்பது, அடங்காத தீவிர பசி, தொடர்ந்த எடையிழப்பு, நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்கென தூக்கம் கலைதல், அதிகாலையில் ஏற்படும் கடுமையான தாகம் ஆகியவை நீரிழிவு நோயாளிகள் எளிதில் உதாசினப்படுத்தி விடக்கூடிய ஆரம்ப கட்ட அறிகுறிகள். ரத்த சர்க்கரை அளவு 400-ஐத் தாண்டும் போது ஏற்படும் அறிகுறிகள் கீழ்வருமாறு:
1 குமட்டல்
2 வாந்தி
3 தாகம்
4 அபரிதமான அளவிலான சிறுநீர்
5 வயிற்று வலி
6 மூச்சு விடுவதில் சிரமம்
7 காய்ச்சல்
8 மாறுபட்ட மன இயக்கம்
9 சோம்பல்
10 மனச் சோர்வு
11 வாய் துர்நாற்றம்
12 தலைவலி
13 உணர்விழந்த முழு மயக்கநிலை (கோமா)

Thursday, November 26, 2015

நீங்களும் தலைவர் ஆகலாம்!

நீங்களும் தலைவர் ஆகலாம்! 
கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த
தலைவராய் இருக்க முடியாது’ என்கிறார்
அரிஸ்டாட்டில்.

நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப்
பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது
கண்ணுக்குப் புலப்படுவார்கள்.

நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில்
புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய
கண்களுடன் ஹிட்லரும் வரலாம்.

அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த
வினாடியில் ராஜபக்சேவும் எட்டிப் பார்க்கலாம்.

சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர்
அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும்
நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ
இருக்கலாம். 

ஒல்லிப்பிச்சானாய், ஆறடி உயரத்தில்
மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும்
இருக்கலாம், சக்கர நாற்காலியில் வலம் வரும்
ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம்.

முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும்
கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச்
ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம்.

தலைவர்கள் யாரும் ரெடிமேடாய்
செய்யப்படுபவர்கள் அல்ல. 

மக்களிடையே இருந்து
புறப்பட்டு வருபவர்கள் தான்.

ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர்
தலைவராகிவிடுவார். 

ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம்
பேர் இருப்பார்கள். ஒரு சிலர் தலைவர்களாகி
விடுவார்கள். 

அந்த குறிப்பிட்ட மனிதர்களை
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால்
அவர்களிடம் ஏதோ ஒரு ‘ஸ்பெஷாலிட்டி’ இருப்பது
புரியும்.

தலைவர்களாக வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம்
இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து
அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது!

மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது
தலைவருடைய முதல் பண்பு. 

உற்சாகமாக இல்லாத
ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக
வைத்திருக்க முடியாது. 

ஏகப்பட்ட எரிச்சல்கள்,
கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம்
இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை
உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான
முக்கியமான தகுதிகளில் ஒன்று.

‘கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால்
நிர்ணயிக்கப்பட்டனர். 

தற்காலத்திலோ, மக்களோடு
இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்’
என்கிறார் மகாத்மா காந்தி.

தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு
முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக
இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன்
எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.

‘சாரி… மறந்துட்டேன்’ என நாம் சகஜமாகச்
சொல்லும் வார்த்தை தலைவருடைய
அகராதியிலேயே இருக்கக் கூடாது.

ரொம்ப நேர்த்தியாக எல்லா
செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய
வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. 

எதை எந்த
நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான
திட்டமிடல் ரொம்ப அவசியம்.

தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர்
அல்ல! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர்.

யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம், எந்த
வேலையைக் கொடுக்கக் கூடாது, அவர்களிடம்
நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும்
சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின்
அடையாளங்கள்.

ஜெய் தீசன் என்பவர் 5 மில்லியன் டாலர்
மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர்.

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர்.

நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம்
யாராவது பைல் கொண்டு வந்து
கையொப்பமிடச் சொன்னாலோ,
மெயில் வாசித்து பதில் போடச்
சொன்னாலோ ‘நேரமில்லை, அப்புறம்
பார்க்கலாம்’ என்று ஒதுக்கி வைப்பார்.

அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில்
வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை
வெளியிட்டார்- ‘எனக்கு எழுதப் படிக்கத்
தெரியாது!’.

உடன் பணிசெய்தவர்களெல்லாம்
அதிர்ந்தனர். 

இப்படி ஒரு குறையை வெளியே
தெரியாமல் எப்படி மறைத்தார் என
ரொம்பவே வியந்தனர்.

தனது 56வது வயதில்தான் கொஞ்சம்
எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.

‘மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று
சொல்லுங்கள், எப்படிச் செய்ய
வேண்டுமென சொல்லாதீர்கள்.

அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக
நடக்கும்’ என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன்.

இது மக்களுடைய உண்மையான திறமைகளை
வெளிக்கொணரும் நல்ல முயற்சி என்பதைத்
தலைவர்கள் அறிவார்கள்.

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு
குணம் தைரியம்.

சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே
தேவைப்படும். 

தோல்வியை நேர்மையாய் ஏற்றுக்
கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே!

சொல்லப்படாத ஒரு விஷயம் எப்போதும்
கேட்கப்படுவதில்லை. 

தேவையான விஷயங்களை பகிர்ந்து
கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப்
பண்பு. 

அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன்
கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி.

அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான
ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். 

மக்களும்
உற்சாகமடைவார்கள்.

தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல
தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக
விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட
விஷயங்களையும் தெரிந்திருப்பது தலைவருக்கும்,
அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் தலைவருக்குத்
தேவையான இரண்டு விஷயங்கள். 

தலைவருக்கே
தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை
இல்லாமல் தான் இருக்கும்.

குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது
தலைவருடைய இன்னொரு பணி. 

மற்றவர்களை
உற்சாகப்படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள
வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. 

வேலையைச் சரியாய்
செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச்
செய்வதும் ஒரு தலைவரிடம்
கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும்.

தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய்
இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை. 

குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக
இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப்
பரிமளிக்க முடியாது.

எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக்
கொண்டிருக்கவே விரும்புவார்கள். 

எனவே
தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம்.

தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து
கொள்வதும், அந்தத் திறமைகளைப்
பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக்
கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய
முக்கியமான குணங்களாகும்.

பல தலைவர்கள், திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப்
பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. 

தனது குழுவினர்
சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க
வேண்டியதும், அப்படிச் செயல்படும்போது மனம் திறந்து
பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின்
அம்சங்களாகும். 

தனது குழுவின் செயல்பாடை
வைத்துத் தான் தம்முடைய மதிப்பு கணக்கிடப்படும் எனும்
எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.
நிறுவனத்தில் லட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு
தலைவர் இருக்க வேண்டும். 

எங்கே இருக்கிறோம், எங்கே
செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன
செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை
விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த லட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள்,
வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப்
பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ கடந்த பத்து ஆண்டின் சிறந்த
சி.இ.ஓ ஆக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக்
பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த
சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை,
சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும்
புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென
உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர்.

காரணம் இவரிடமிருந்த தனித்துவமான
வித்தியாசமான சிந்தனைகள்.
ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க
வேண்டும்.

ஆங்கிலத்தில் ‘கால்குலேட்டட் ரிஸ்க்’ எனப்படும்
கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத்
தயங்காதவர்தான் தடைகளைத் தாண்டி முன்னேற
முடியும். 

‘எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்துவது
தலைவருடைய வேலையல்ல. 

எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக்
கொள்வதும் தலைவருடைய பணியல்ல’ என்பதை
ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்களை மனதில்
கொண்டிருங்கள். 

வாய்ப்புக்
கிடைக்கும்போதெல்லாம் இந்தத் திறமைகளை
உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச்
செய்யுங்கள். 

விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை
வந்தடையும்!

துணிவும், பணிவும் தலைமைக்கு
இருந்தால் வாழ்க்கை வளமைக்கு!
வாருங்கள் தலைவராகுங்கள், உங்கள் கனவு களை அடையுங்கள்!
- www.v4all.org


Thursday, August 27, 2015

வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
Center for Exhibit Industry Research –இன் ஆய்வின் படி, அடுத்த 12 மாதங்களுக்குள் உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் தான் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தருவார்கள். இதுமாதிரியான ஒரு வாய்ப்பை வீணாக்கிவிடாதீர்கள் – உங்கள் பணியாளர்கள் சிறப்பாக விற்பனையை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
மென்மையான விற்பனைகளைத் தவிருங்கள்
வியாபாரக் காட்சிகளுக்கு கடின விற்பனை அணுகுமுறை தேவைப்படுத்துகின்றது. பங்கேற்பாளர்கள் உங்கள் அரங்கிற்கு வருகை தரும் போது அவர்களிடம் உடனடியாகச் சென்று, உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வருமாறு அவர்களை அழைக்க வேண்டும். மக்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. வர்த்தகக் கண்காட்சிகளில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகக் கடினம். 60 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் உதவி கிடைக்காத பட்சத்தில், உங்கள் அரங்கை விட்டு அவர்கள் நகர்ந்து விடுவார்கள்.
தொடர்புபடுத்துங்கள்
உங்கள் அரங்குக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்க சிறந்தவழி உங்களுடைய தொழில் நேர்த்தி மற்றும் உதவும் தன்மை ஆகியவற்றை பிரதிபலித்துக் காட்டுவதாகும். பொருத்தமற்ற வரவேற்புகளான "நான் உங்களுக்கு உதவலாமா", "ஹாய், ஹவ் ஆர் யூ?", அல்லது "கண்காட்சி எப்படி நடக்கிறது?" போன்ற கேள்விகளைத் தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக, நேரடியான கேள்வியைக் கேட்பதன் மூலமாக பார்வையாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் இதனால் அவர்களின் ஆர்வங்களும் தெரியவரும் -- " எங்கள் புதிய கருவியைப் பற்றி நான் என்ன கூற வேண்டுமென விரும்புகிறீர்கள்?" அல்லது "ஹலோ, எங்களுடைய இந்த கருவியைப் பாருங்கள்?" என்று கூறுங்கள்.
உங்கள் நடத்தைகளில் கவனமாக இருங்கள்
நீங்கள் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தால், உங்களுக்கு ஆர்வமில்லை என நினைத்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் நகர்ந்து விடுவர். அமந்திருக்க வேண்டாம். அரங்கில் இருக்கும் போது உணவருந்தவோ, குடிக்கவோ, புகைக்கவோ கூடாது. உங்கள் அரங்கை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் உங்கள் சக பணியாளர்களுடன் நேரத்தை செலவிட வேண்டாம்.
அனுகூலமானதை மிக வேகமாக கணக்கிடவும்
ஒருவரை முதலில் பார்க்கும் போதே, அவர் யார் என்பதையும் (வாங்குபவர், முடிவு எடுப்பவர், விநியோகத்தர், போட்டியாளர், மற்றும் பல ) எங்கு இருக்கிறார் என்பதையும் கண்டிப்பாக நீங்கள் கண்டறிய வேண்டும். இதன் மூலம், உங்கள் உற்பத்திப் பொருளை சேவையை கொள்வனவு செய்ய விருப்பமில்லாதவர்களுடன் அல்லது உங்கள் சேவை கிடைக்காத இடத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கலாம். அவர்களிடம் சில முக்கிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்களது பேட்ஜ் அல்லது பெயர், முகவரிகளைக் கொண்ட விசிடிங் கார்டுகளைப் பார்ப்பதன் மூலம் இத்தகவலை நீங்கள் அறியலாம்.
ஏராளமான கேள்விகளைக் கேளுங்கள்
ஆம்/இல்லை என்பதை காட்டிலும் அதிகமாகப் பதிலளிக்கக்கூடிய வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள். அவர்களது தேவைகள் மற்றும் ஆர்வத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் பதில்களைக் கொண்டே, இந்தத் தேவைகளை உங்கள் உற்பத்தி அல்லது சேவை எந்தளவு நிறைவேற்றுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 80/20 என்ற விதியைக் கடைபிடிக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் -- அதாவது 80% கவனிக்கவும், 20% பேசவும். ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த விற்பனை வாசகங்களைத் தவிர்க்கவும், 50 வது முறை அதே பேச்சை தொடரும் போது உங்கள் குரல் இயந்திரம் போல் மாறிவிடும்.
சிறந்த பதிவுகளை வைத்துக்கொள்ளவும்
அனுகூலமானவை எனத் தெரிபவை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் ஒரு "குறிப்பு அட்டையில்" பதிந்து கொள்ளுங்கள். அதில், நபரின் பெயர், தொழில், முகவரி, தொலைபேசி/தொலைநகல் இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இவை அனைத்தும், ஒரு நபரின் வர்த்தக அட்டையில் கிடைக்கும்), அவரது தேவைகள்/ஆர்வம், பாதீடு மற்றும் நேரம் என்பன இருத்தல் வேண்டும். கண்காட்சி முடிந்து அலுவலகம் சென்றதும், இந்த அட்டையில் உள்ள தகவலைக் கொண்டு வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Wednesday, July 8, 2015

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பாட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்

urs
www.v4all.org 

Thursday, June 25, 2015

எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை... பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”

கங்கை அமரனின் பேட்டி ஒன்று ,
என் கண்களில் பட்டது இன்று ....
“நீங்கள் பல்கலை வித்தகராக இருக்கீங்க... இதில் உங்களின் எந்த முகம் உங்கள் மனைவிக்குப் பிடிக்கும்?” என்று கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பப்பட...
இதற்கு கங்கை அமரன் சொன்ன இடக்கு மடக்கான பதில்..:
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. ‘வீட்டிலேயே தங்க மாட்டார்… பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…’ இப்படித்தான் புருஷன் மேல் மனைவிகள் விமர்சனம் பண்றாங்க.
பத்து பேர் முன்னாடி ஒரு கணவன் கிட்டே ஒரு மனைவி நடந்துக்கிற விதத்துக்கும்,
எல்லோரும் போன பின்னாடி நடந்துக்கிற விதத்துக்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கும்...
அவங்களுக்கு நாம ஈஸியா கிடைச்சிடுறோம்… அதனால் நம்ம பெருமை அவங்களுக்குப் பிடிபடுறதில்லை. நம்மைப் பார்க்க எத்தனையோ பேர் தவமிருப்பான். சந்தித்ததைப் பெருமையா நினைப்பான். ஆனால், அவங்களுக்கு ஆஃப்டரால் புருஷன்தான்...
என் அனுபவம் மட்டுமல்ல. (சில வி.ஐ.பி.களின் பெயரைக் குறிப்பிடுகிறார்). இவர்களின் அனுபவங்களும் இப்படித்தான். ”
# கங்கை அமரனின் இந்த பேட்டியைப் படிக்கும்போது , அவர் சொன்ன சில வி.ஐ.பி.க்களின் பெயர்களில் ரஜினியின் பெயரும் கட்டாயம் இருந்திருக்கும் என்று தோன்றியது..
ரஜினியை கே.பாலச்சந்தர் பேட்டி கண்ட , அந்த ஸ்பெஷல் விழா மேடையில்...
ரஜினி தனது குருநாதர் கே.பாலச்சந்தர் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்க ....அதை உணர்ந்த லதா ரஜினி கீழே இருந்தபடி , தன் முகத்தில் காட்டிய எக்ஸ்பிரஷன்..:
"ஐயய்யோ...இவர் இந்த மேடையில.., "உதைக்க வேணாம், தூக்கி போட்டு மிதிக்க வேணாம்" ..இப்படி எதுவும் பேசாம இருக்கணுமே..?"
# மறுபடியும் மனதில் நினைவுக்கு வருகிறது ,
கங்கை அமரனின் அந்த பேட்டி :
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை...
பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”
# கங்கை அமரன் சொன்னது உண்மைதானோ..?
www.v4all.org 

Tuesday, June 9, 2015

கோபக்கார மாமியாரை வசியப்படுத்த மருமகளுக்கு அட்வைஸ்

திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் பெண்கள் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் செல்வார்கள். தாய் வீட்டில் செல்லமகளாக வளர்ந்துவிட்டு, புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, சந்திக்கும் புது உறவுகளை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்ற தயக்கம் இருக்கும். 

கணவன்மார்களுக்கும் தங்கள் துணையின் மேல் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதே போன்று, வீட்டிற்கு வரும் மருமகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்படுத்துவாள் என்று ஒவ்வொரு மாமியாரும் நம்புவார்கள். ஆனால், ஒரு சில வீட்டில் ஒற்றுமை இருந்தாலும், பலரது வீட்டில் வேற்றுமையே மேலோங்கும். 

ஒரு நல்ல மருமகள் வீட்டை சரிசமமாக கையாண்டு சிறந்த வழியில் கொண்டு செல்லலாம். வேறொரு குடும்பத்தில் இருந்து வந்து, புதிய மனிதர்களிடமும், புதிய குடும்பத்திலும் அனுசரித்து போவதற்கு சில காலம் தேவைப்படும். நமது குடும்பத்தை சரிசமமாகவும், நல்முறையில் வழிநடத்தவும், நாம் புகுந்த வீட்டில் சண்டைகளை தவிர்க்க வேண்டும். 

அதனால் அந்த சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு நடப்பதால், வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம். சந்தர்ப்பங்களை புரிந்து கொள்ளாமல், கோபமாக கையாண்டால் மாமியார், மருமகள் உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் கணவரை நல்ல ஒரு மனிதராக வளர்த்ததற்காக அவரது பெற்றோர்களை பாராட்டுங்கள். அவர்கள் உங்கள் கணவரை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஏற்றுகொள்ளுங்கள். 

இது அவர்களுக்கு நிச்சயமாக ஒரு இனிமையான உணர்வை கொண்டு வரலாம். திருமண வாழ்க்கையில் சண்டைகள் வருவது பொதுவான ஒன்றாகும். உங்கள் கணவரிடம் சண்டை ஏற்பட்டால் தேவை இல்லாமல் அவர்களது பெற்றோரை இழுக்கக்கூடாது. இதுவே அவர்களோடு சண்டை ஏற்படுவதை தவிர்க்கும். 

ஒரு நல்ல மருமகளாக அவர்களின் உணர்ச்சிகளையும் பாதுகாப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல மருமகள் தனது மாமியாருக்கு எப்பொழுதுமே நல்ல தோழியாகவே இருப்பார். எனவே உங்கள் மாமியாரை தோழியாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

Saturday, June 6, 2015

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.
நிற்காத கடிகாரமாயிருப்போமா
காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது!
இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி பேசுமே! என்ன செய்வது?” என யோசித்தபடியே உறங்கி விட்டான்.
அன்று கனவில் ஒரு தேவன் வந்தான்.
“”அன்பனே! நாளை முதல் இந்த தவத்தையெல்லாம் விட்டு விடு. பக்கத்து ஊருக்குப் போ. அங்கே உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அங்கு வசிக்கும் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய். நிம்மதி உன்னைத் தேடி வரும்,” என்றான்.
இவனும் மறுநாள் பக்கத்து ஊருக்குப் போனான். பண்ணையாரும் வேலை கொடுத்தார்.
உழுதான், உரமிட்டான், நாற்று நட்டான், களையெடுத்தான், அறுவடைப் பணிக்குச் சென்றான். அந்த உழைப்பின் பலன் இரவில் நிம்மதியாகத் தூக்கம் வந்தது. கையில் போதுமான அளவு பணம்…சிறிது காலத்தில் அவனே நிலம் வாங்கினான். கடுமையாக உழைத்தான். துறவு வாழ்வை விட உழைத்து வாழும் வாழ்வே உயர்தரமானது என்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! தன் நிலத்தில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களது குடும்பமும் வாழ வழி செய்தான்.
வேலை செய்யும்போது மனம் பக்குவப்படுகிறது. பணமும் கிடைக்கிறது. உடலுக்கு வலிமையும், ஆத்மாவுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால் துருப்பிடிக்காது. அதுபோல், உழைத்துக்கொண்டே இருந்தால் தான் சலிப்பு ஏற்படாது.
கடிகாரத்தின் முள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் தான் அது சரியான நேரத்தைக் காட்டும். நீங்களும் நிற்காத கடிகாரமாயிருங்கள்.

Monday, June 1, 2015

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!


உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel
படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

Thursday, May 28, 2015

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!!!

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!!! - www.v4all.org 
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அவர்களை கையாள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் கோபமாக இருக்கும் போது குழந்தைகள் அதிகமாக பிடிவாதம் பிடிப்பதுடன், அந்த கோபத்தை மிகவும் கடுமையாக வெளிக்காட்டுவார்கள். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வார்கள். ஆனால் அப்படி இருந்தால், குழந்தைகள் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியுமா? ஆம், குழந்தைகளுக்கு தங்களின் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாது. அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆகவே இப்போது குழந்தைகள் கோபமாக இருக்கும் போது, அவர்களிடம் பெற்றோர்கள் எப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
அதிக அளவில் உணர்ச்சிவசப்பட வேண்டாம் :
குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்நேரத்தில் அவர்களை சமாதானம் செய்வது என்பது மிகவும் கடினம். இதனால் பெற்றோர்களுக்கும் சில நேரங்களல் கோபம் வரும். இருப்பினும் அந்நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்
அடிப்பதை தவிர்க்கவும்:
சில பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதை கேட்கவில்லை என்று ஒரு கட்டத்தில் அவர்களை அடிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உள்ள கோபம் தணிவதற்கு பதிலாக, அவர்களுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வர ஆரம்பிக்கும். எனவே எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தையிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.
கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது :
சில பெற்றோர்கள் என்ன சொன்னாலும் குழந்தை கேட்பதில்லை என்று அவர்களை கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தவே கூடாது. இதனால் அவர்களின் மனதில் இந்த கெட்ட வார்த்தைகள் பதிந்து, மற்றவர்களிடம் சண்டை போடும் போதோ அல்லது கோபப்படும் போது அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்த நேரிடும்.
காரணம் தெரியாமல் முடிவு வேண்டாம்:
சில பெற்றோர்கள் குழந்தைகள் எதற்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கான உண்மையாக காரணம் தெரியாமலேயே முடிவு எடுத்துவிடுவார்கள். ஆனால் அப்படி முடிவு எடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் மனதில் உள்ள கோபத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
குழந்தைகளை அச்சுறுத்துவது:
எந்த ஒரு காரணம் கொண்டும் குழந்தைகளை அச்சுறுத்தக்கூடாது. அப்படி அவர்களை அச்சுறுத்துவது முட்டாள்தனமான ஒன்று. இதனால் அவர்கள் மனதில் பயம் தான் அதிகம் இருக்கும். இப்படி பயம் அதிகம் வந்துவிட்டால், பின் அவர்களின் பயத்தைப் போக்குவது மிகவும் கடினமாகிவிடும். ஆகவே உங்கள் குழந்தை கோபமாக இருந்தால், அவர்களிடம் கூலாக பேசி, உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டு, பின் உரிய ஆலோசனையை வழங்குங்கள். இதனால் அவர்கள் பிற்காலத்தில் உங்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
(நன்றி : இணையத்தில் இருந்து )


பொன். சிவகுமார்'s photo.

Sunday, May 24, 2015

அன்புப் பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்..

நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,

மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

.அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

” மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவரும் ஒரு மாருதி கார் வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.


மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்..

“போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.

சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்

பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?”
மாமியார் செத்துட்டுது

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே

ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”

மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

Friday, May 22, 2015

மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!

மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!

'மழை காலங்களில் சிறந்த உணவு எது?'னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

Saturday, May 16, 2015

நல்ல குடும்பம் / குடும்ப அமைதி

நல்ல குடும்பம் / குடும்ப அமைதி


1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய ன்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

அப்துல் கலாம் - ஜெயித்துக் காட்டுவோம்

அப்துல் கலாம் - ஜெயித்துக் காட்டுவோம் - www.v4all.org 





‘புதிய எண்ணங்களுடன் வெற்றி காணுங்கள்‘:

 ‘தினமலர்’ மற்றும் டி.வி.ஆர். அகாடமியின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.

அவரது சிறப்புரையின் முழுத்தொகுப்பு:

புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க

எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.

வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,

என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.

நண்பர்களே, இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை வருடம் தோரும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். மாணவர்களை பரிச்சைக்கு தயார் படுத்தி, மேல்படிப்புக்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தி அதன் மூலம் மாணவர்களை தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்ககூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுக்கள். இந்த பணி ஒரு அரும் பெரும் பணியாகும். எனவே மாணவ நண்பர்களே, "புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க" என்ற தலைப்பில் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வெற்றிக்கவிதை

உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளீர்கள் - அதாவது ஜெயித்துக்காட்டுவோம் என்ற உறுதி மொழிதான் அது. இளைஞர்களின் உள்ள உறுதியின் அடுத்த பக்கம் என்னால் முடியும் என்பதாகும். நான் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கவிதையை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கவிதையின் மூலாதாரம் என்னவென்றால், என்னால் முடியும், நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்பதாகும். அந்த வெற்றிக்கு மூலகாரணமானவைகள் எவை. அறிவு, உழைப்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி.

அன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்

நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த

நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்

நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க

நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,

தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,

பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக எனது இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்திய மாணவன் உலகத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல

நான் 11வது குடியரசுத்தலைவராக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழது ஒரு நாள். ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, IAS/IPS அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பையன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான். கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன், அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. அவை என்ன.

1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.

2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.

3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன்.

ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான். ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த் MIT க்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான்.

எழுத்து தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு. அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை ரெடியாக இருக்கிறது என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒருவேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில் இருந்து மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ வெற்றியடைய முடியும்

நான் DRDL, Hyderabadல் டைரக்டராக இருந்த போது, என்னிடம் கதிரேசன் என்பவர் எனது கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு நான் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும் பொழுதெல்லாம், கதிரேசன் எதாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தேன். அதை வெற்றிகரமாக முடித்தார். அதன் பின் B.A படித்தார். அப்புறம் நான் டெல்லி சென்று விட்டேன். அனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார் M.A முடித்தார், MPhil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்

உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

 நீ நீயாக இரு

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.

மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது கிராமப்புர கல்வியின் அனுபவம்

நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்த போது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையில் தான் எங்கள் பள்ளி இருந்தது. இராமேஸ்வரம் தீவில் அது ஒரு பள்ளி தான். 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல் வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கள் கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயரும், அறிவியல் ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப் பட்டவர்கள். நான் அப்பொழுது 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ் தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொன்னார், மற்ற பாடங்களில் 80க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது என்று கேட்டார். மாணவர்கள் நிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்கவைப்பது தான் என்று. அது மட்டுமல்ல, கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம் தான் என்று சொல்வார்.

உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாட்டுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும் படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள் விவாதிக்க வைத்தார். அதன் மூலம், கணிதத்தை எங்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். அப்புறம் 10 முக்கியமான கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகு தான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே, நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.

அறிவு அற்றம் காக்கும்

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.

புத்தகம் படிப்பதின் அவசியம்

ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சிறு புத்தக நூலகம் அமைவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.

அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்

கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்

படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்

சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்

அறிவு உன்னை மகானாக்கும்.

நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.

மனசாட்சியின் மாட்சி

சமீபத்தில் திரு சமர்பண் எழுதிய "Tiya: A Parrot?s Journey Home" என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தகம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் திரு சமர்பண். எப்படி நல் மனசாட்சி கொண்ட ஓரு அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் அது.

கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால்.

எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.

வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,

என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.

புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்

நண்பர்களே, புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி நல்ல புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்...... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம்....... உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Magnetism பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார். கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.

ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney எழுதிய Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார். பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அனால் கணித வாழ்வில், உலக மேதையாகி வெற்றியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக் கொள்வது தான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.

வெற்றி என்பது இறுதிப்புள்ளி....

தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்..

மன உறுதியுடன் இடைப்புள்ளிகளை

தோல்வியடையச் செய்து உன்னால் வெற்றியடைய முடியும்.

வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் தோல்விகள் தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமைப் பெறச் செய்பவை.

திருவள்ளுவர் சொன்னது போல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு

இடும்பை படா தவர்.

எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

புதிய சிந்தனைகளுடன் படி

எனவே மாணவர்களே, இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லும். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூல் நிலையங்களுக்கு சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப் படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது. கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.

நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தக்த்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்த்து. தமிழிலும், கணித்த்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகைகள் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருக்கிறேன். கணிதத்தில் 100 சதவிதம் எடுப்பேன். இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுதவேண்டும், அது மனதில் என்றென்றும் பதிந்து விடும்.

எனவே, ஆசிரியர் சொல்லித்தருவது, உங்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஒவ்வொரு பாடத்தின் முதல் நிலை அறிமுகம் முடிந்தவுடன். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, அந்த பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும், மாணவர்கள் குழு அவர்களது கற்பனைத்திறத்தோடு, பல்வேறு புத்தகங்களின் துணை கொண்டு, பள்ளியில் விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்டு மாணவர்களே அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு பாடத்தையும் செய்து பாருங்கள், எந்த படிப்பும் கஷ்டமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில், பள்ளி விடுதிகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும்.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதானல் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.

தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், உங்களை நீங்கள் பக்குவப் படுத்திக்கொள்வதன் மூலம்.

முடிவுரை

Dear friends, recently I received a mail from Mr. T.R. Viswanathan, he has explained the beauty of mathematics. Now, take a look at this... How to achieve 101% in life?

From a strictly mathematical viewpoint:

1. What Equals 100%?

2. What does it mean to give MORE than 100%?

3. Ever wonder about those people who say they are giving more than 100%?

4. We have all been in situations where someone wants you to GIVE OVER 100%.

5. How about ACHIEVING 101%?

6. What equals 100% in life?

Here&'s a little mathematical formula that might help answer these questions:

If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

If:

H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%

And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

THEN, look how far the love of God will take you:

L-O-V-E-O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will get you there. It&'s the Love of God that will put you over the top! Dear friends, out of all the hard work and the Knowledge that you are gaining from education what you need is the right Attitude and above all love of God to achieve success.

எனவே, மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே கனவு காண்பது என்பது ஓவ்வொரு குழந்தையின், இளைஞர்களின் வாழ்க்கையின் ஓரு முக்கியமான விஷயம். உங்கள் படிப்பில் வெற்றி பெற்று, உங்கள் கனவை நனவாக்க வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறேன். இந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தும் தினமலர் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நன்றி வணக்கம்.