“யார் யார் சிவம் ? நீ நான் சிவம்.. - WWW.HAPPY4ALL.ORG
வாழ்வே தவம்... அன்பே சிவம்”
என்று சொல்லும் கமல் , ஒரு கோணத்தில் பார்த்தால் ரஜினி போல....ஆன்மிகவாதியாகவே தோன்றுகிறார்...
வாழ்வே தவம்... அன்பே சிவம்”
என்று சொல்லும் கமல் , ஒரு கோணத்தில் பார்த்தால் ரஜினி போல....ஆன்மிகவாதியாகவே தோன்றுகிறார்...
ஒரு சிலருக்கு...ஆன்மீகவாதி என்ற சொல் சற்று இடறினால் கமலை “அன்புவாதி” என்று வைத்துக் கொள்ளலாம்...
# அது இருக்கட்டும்....
“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..?”
“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..?”
ஆன்மீக விஷயமாக நண்பர்களோடு பேசும்போது , அடிக்கடி நான் இந்தப் பாடலை உதாரணமாக எடுத்துச் சொல்வதுண்டு...
“பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்”
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்”
இதை விட சிறப்பாக இறைவனைப் பற்றி எப்படி எடுத்துச் சொல்ல இயலும்..?
# “பல நூல் படித்து நீ அறியும் கல்வி...”
பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை என்றாலும் ..பல நூல் படித்து கமல் கற்றுக் கொண்ட உலக அறிவு ஏராளம்... “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியில் கமலின் உலக அறிவைக் கண்டு வியந்தவன் நான் ...
பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை என்றாலும் ..பல நூல் படித்து கமல் கற்றுக் கொண்ட உலக அறிவு ஏராளம்... “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியில் கமலின் உலக அறிவைக் கண்டு வியந்தவன் நான் ...
# அடுத்து.... “பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்..”
இன்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பிற்கு கமல்ஹாசன் எத்தனையோ நிதி உதவிகளை செய்து வருகிறார்...
இன்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பிற்கு கமல்ஹாசன் எத்தனையோ நிதி உதவிகளை செய்து வருகிறார்...
# மூன்றாவது ...” பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்..."
இதற்கு ரஜினி ஒரு விழா மேடையில் சொன்னதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்..
ரஜினி சொன்னார் இப்படி :
இதற்கு ரஜினி ஒரு விழா மேடையில் சொன்னதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்..
ரஜினி சொன்னார் இப்படி :
“இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும்...”
ஆம்...ரஜினியின் உயர்வில் கமலுக்கு இன்பம் இருந்திருக்கிறது....இப்போது மூன்றாவது பாயிண்டும் ஓகேதானே... மொத்தத்தில் இவை அனைத்திலுமே இருப்பது தெய்வம்தானே...அப்போ கமல் தெய்வ நம்பிக்கை ..அல்லது ஆன்மிக நம்பிக்கை ...அல்லது அன்பில் நம்பிக்கை உடையவர்தானே..?
“ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்..”
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்..”
# ரஜினி ஆன்மீகவாதியாக இமயத்தில் தேடும் ஆன்மிக அமைதியை ...
கமல் அன்புவாதியாக தன் இதயத்தில் தேடுகிறார் ..அவ்வளவுதான்...!
கமல் அன்புவாதியாக தன் இதயத்தில் தேடுகிறார் ..அவ்வளவுதான்...!
“ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்...
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்.."
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்.."
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே”
-திருமூலர்-
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே”
-திருமூலர்-
from - FB John
No comments:
Post a Comment