Friday, August 21, 2015

வினைத்திறனான வேலை விபரத்தினை உருவாக்குதல்

வினைத்திறனான வேலை விபரத்தினை உருவாக்குதல்

www.v4all.org
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
தெளிவான வேலை விவரத்தை உருவாக்குவது பலதரப்பட்ட விண்ணப்பதாரர்களிலிருந்து சரியான நபரைத் தெரிவு செய்வதற்கு உதவும். பொதுவாக இதில் இரு பகுதிகள் காணப்படும் – வேலையின் பொறுப்புகளின் சுருக்கம், மற்றும் செயற்படுத்த வேண்டிய முக்கிய கடமைகள். வேலை விபரத்தினை முழுமையாக சிந்தித்து உருவாக்குவது உங்கள் நேரத்தையும் வேலையையும் மீதப்படுத்தும். குழப்பமான, தெளிவற்ற, அல்லது தவறான வேலை விபரத்தினால் ஒரு நபரையும் வேலையையும் இணைப்பது குழப்பமானதாக இருக்கக்கூடும். ஏனெனில் குறிப்பிட்ட வேலைக்கு என்ன தேவை என்பதே உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கிறன.
வரிவிளம்பரம், வேலைப் பட்டியலிடல், அல்லது ஏனைய ஆட்சேர்ப்பு செயற்பாடுகளுக்கும் சரியான வேலை விபரம் அவசியமாகிறது. இதனால் எவ்வகை திறமையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறது. மேலும் அந்த திறன்களை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களை கவர்வதற்கு வழிசெய்யப்படும்.
வேலை விபரத்தினை உருவாக்கும்போது பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
பொதுவான விபரங்களைத் தவிர்க்கவும்
எவ்வளவு நுணுக்கமா இயலுமோ அவ்வளவு நுணுக்கமாக வேலையாட்கள் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை விபரியுங்கள். உங்கள் கம்பனி அல்லது உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேலையாட்கள் அளிக்கக்கூடிய நன்மைகளின் அடிப்படையில் சிந்திக்கவும். உதாரணமாக வீடியோ கடை பராமரிப்பவருக்கான வேலைக்கு, "வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு தருபவர்" என்பது போன்ற விபரங்களைத் தராதீர்கள். அதற்கு பதிலாக, "வாடிக்கையாளரின் அண்மைய அல்லது பழைய திரைப்படங்களின் இரசனையினைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் படங்களைத் தெரிவு செய்வதற்கு உதவுபவர்," போன்ற விபரங்களைப் பயன்படுத்துங்கள். திரைப்படங்களை அதிகம் விரும்பும் நபர் ஒருவர் தன்னுடைய ஈடுப்பாட்டை வாடிக்கையாளருக்கு ஏற்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
முன்னுரிமை வழங்குதல்
பொறுப்புகளினதும் கடமைகளினதும் பட்டியலை உருவாக்கியதும், முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும். வேலையைச் செய்ய முக்கியமாகத் தேவைப்படும் திறன்களிலிருந்து ஆரம்பிக்கவும். வேலையை வெற்றிகரமாக நிறைவேற்ற அவசியமானது என்ன, பொதுவாக விரும்பப்படுவது என்ன, உண்மையில் பொருத்தமில்லாததாக எது இருக்கக்கூடும் போன்றவற்றை இந்த வழியில் அறிவீர்கள். பெரும்பாலும் கூலிக்கமர்த்தல் என்பது புரிந்துணர்வு அடிப்படையிலான பரிமாற்றமாகும், ஆகவே முன்னுரிமைப்படுத்தலின் மூலம் எதனுடன் நீங்கள் வாழலாம் அல்லது வாழ முடியாது என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கே உதவுகிறீர்கள்.
அளவிடக்கூடிய அளவுகோல்களைப் பயன்படுத்தல்
ஒருவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கின்ற செயலாற்றுகையின் வகை பற்றி தெளிவாக இருங்கள், அதோடு, எப்போது சாத்தியமோ அப்போது அந்த அளவுகோலை இலக்கங்கள் அல்லது திகதிகளைக் கொண்டு அளவிடும் வழிகளைத் தேடுங்கள். இல்லாவிட்டால், அவசியமான சிறப்புப்பணியைச் செய்யக்கூடிய ஆனால் உற்பத்தித்திறனில் அல்லது அனைத்திலும் குறைந்த ஒருவரை நீங்கள் கூலிக்கமர்த்தியிருக்கக்கூடும். உதாரணமாக, ஒரே நேரத்தில் கணக்கு முகாமையாளர் ஒன்று, நான்கு அல்லது பத்து கணக்குகளைச் செய்துகொண்டிருப்பாரா? கணக்கு வைப்பாளர் ஒருவர் நாள்தோறும், வாராந்தம் அல்லது மாதாந்தம் பெறக்கூடிய கணக்குகளைப் புதுப்பிக்கும்படி எதிர்பார்க்கப்படலாமா?
உதவி கேட்டல்
புதிய ஊழியர் ஒருவர் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவரை நிர்வகிக்கப்போகின்ற அல்லது அவருடன் பரஸ்பர தொடர்பிலிருக்கப்போகின்ற உங்கள் நிறுவனத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்வதற்கு அவசியமான தினசரி திறன்கள் என்ன என்பது பற்றி, ஒருவருடன் முன் வரிசைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் தெரிந்திருப்பார்கள். இந்த உள்ளீடு பெறுமதியற்றது என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No comments:

Post a Comment