Showing posts with label Corporate Training Compay in chennai. Show all posts
Showing posts with label Corporate Training Compay in chennai. Show all posts

Monday, December 7, 2015

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு..?

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு..?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது பழமொழி. 

இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். 

நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. 

சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 

21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். 

பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 

15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். 

அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

oil pulling
எந்தநேரத்தில் செய்யவேண்டும்..?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. 

நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்..?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். 

ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

 நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள். 

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய்துர்நாற்றம்:

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

 ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு:

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். 

பல் கூச்சம் நின்று பல் வலி மறையும்.

at_home_dental_hygiene_oil_pulling
உடலின் எனர்ஜி அதிகரிக்கும்:

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி:

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

3D Character with head in hands, sitting on the word Stress

சைனஸ் ஆஸ்துமா:

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால் , இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்:

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்:

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு:

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக்கோளாறு:

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டுபிரச்சனைகள்:

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

 சிறுநீரக செயல்பாடு:

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. 

கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். 

தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும். பொடுகு தொல்லை தீரும். 

பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

Sunday, September 6, 2015

வியாபாரத்தை விரிவுபடுத்தலும் சிக்கல்களைக் கையாளுதலும்

விரிவுபடுத்தலும் சிக்கல்களைக் கையாளுதலும்
  1. உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் முடிவு செய்தவுடன், பின்வரும் எந்த நடவடிக்கைகளையும் பிறரிடம் ஒப்படைக்கக்கூடாது:
    1.  காசோலைகள் எழுதுதல்
    2.  காசோலைகளில் கையொப்படமிடல்
    3.  பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்
    4.  இலாபம் ஈட்டும் நிலையத்தின் பொறுப்பு
  1. பணியாளரை ஊக்குவிக்க, தரகுத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் உறுதிப்படுத்தவேண்டியது:
    1.  நிறுவனச் செலவுகளை அந்தப் பணியாளர் கட்டுப்படுத்துகிறாரா என்பதை ஆகும்.
    2.  நிறுவனச் செலவுகளை தொழில்தருநராகிய நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்.
  1. வளர்ந்து வரும் உங்கள் வியாபாரத்திற்கான மிகவும் பொருத்தமான ஊக்குவிப்புத் தொகை (இலாபப் பகிர்வு) திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த இடம்:
    1.  உஙகள் கணக்காளர்
    2.  மெக்டொனால்ட்ஸ்
    3.  உங்களின் மிகச் சிறந்த போட்டியாளர்
    4.  நூலகம்
  1. நீங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பது, உங்கள் வியாபாரத்தை நிர்வகிப்பதற்கான மிக முக்கியத் திறமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விற்பனையில் எதிர்பாராத வீழ்ச்சியை உங்கள் வியாபாரம் சந்திக்கும் போது, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை:
    1.  விற்பனை அளவை மீண்டும் அதன் நிலைக்கு மீண்டும் மாற்ற உங்கள் பொருட்களின் விலையைக் குறைத்தல்.
    2.  உங்கள் சேவை அல்லது பொருளின் தரத்தை மீளாய்வு செய்து மேம்படுத்தல்.
    3.  செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளை உடனே காணுதல்.
  1. சரியான நேரத்தில் வாடகையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டியது:
    1.  வங்கியில் பணம் இன்றி திரும்பும் காசோலையை உடனே வழங்குவதை விட, பணம் இருக்கும் நாளுக்கான முன்திகதியிட்டு வழங்கலாம்.
    2.  தாமதம் ஆகும் நிலையிலும், வங்கியில் பணம் வரும் வரை காத்திருந்து, அதன் பிறகு காசோலையை அனுப்பவும்.
    3.  தாமதம் ஆகும் நிலையையும் அதற்கான காரணத்தையும் நில உரிமையாளரை அழைத்து, அவரிடம் விளக்கவும். காசோலை உங்களுக்கு எப்போது வரும் என்பதை அவரிடம் தெரிவித்து, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவும்.
  1. மிகப் பொருத்தமான சந்தைகளை தொடர்ச்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடவும். வியாபார முடக்கத்தையும், பணியாளர் திருட்டையும் இந்த வியாபாரம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதற்கான சிறந்த வழி:
    1.  சௌகரிய சந்தை அமைப்பில் (Convenience Market Association) உறுப்பினராக இணைதல்.
    2.  சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் தொடர்பான பட்டப் படிப்பைப் பின்பற்றல்.
    3.  மிகச் சிறந்த போட்டியாளராக நீங்கள் கருதுபவரிடத்தில் வேலைக்குச் சேரவும்.
    4.  இந்த இழப்புகளைக் கட்டுப்படுத்த, வியாபாரத்தில் உங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில், வியாபார முறைகளை உருவாக்கவும்.
  1. "குக்கீ கட்டர்" அணுகுமுறையிலான விரிவாக்கம் இவற்றைக் குறிக்கிறது:
    1.  நீங்கள் மிகவும் விரும்பும் குக்கீ போட்டியாளரின் சந்தைப்படுத்தல் முறையைப் பின்பற்றுதல்.
    2.  இலாபம் ஈட்டும் வரையில், பைலட் இயக்கத்தில் ஏற்படும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, "குக்கீ கட்டர்" பிரதிபலிப்பில் அதை விரிவுபடுத்தல்.
    3.  பல வகையான விரிவாக்க வகைகளை உருவாக்க, வெவ்வேறு அமைப்பிலான, "குக்கீ" கருத்துக்களை முயற்சித்துப் பார்க்கவும்.
  1. உங்கள் பணப்புழக்கத் திட்டம், ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே இருந்தால், முதல் தீர்வு பின்வருமாறு இருக்க வேண்டும்:
    1.  வியாபாரத்தை விற்க முயற்சிக்கவும்.
    2.  மாற்று வியாபார வாய்ப்புகளைத் தேட முயற்சிக்கவும்.
    3.  விற்பனையை அதிகரித்து, செலவுகளைக் கட்டுப்படுத்தி, நிதி ஆதாரங்களைப் பெற்று, உங்கள் பணப்புழக்கத் திட்டத்தை "சிறப்பாக்கவும்".
  1. இரண்டாவது கடையை நீங்கள் திறந்திருந்து (சங்கிலித் தொடர்பில் நுழைவீர்கள்!), மாதம் ₨3,000 வீதம் ஐந்தாண்டு குத்தகை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை:
    1.  ஒவ்வொரு மாதமும் ₨3,000
    2.  ₨180,000
    3.  ₨130,000
  1. சிறந்த முகாமையாளர்களை சிறப்பாக ஊக்குவிக்கும் வழிகள்:
    1.  நிறுவனத்தின் வருவாய்க்கு ஏற்ப ஊக்குவிப்புத் தொகையை அறிவித்தல்.
    2.  நிறுவனத்தின் அதிகாரி மற்றும். துணைத் தலைவர் ஆகியோருக்கு பதவி உயர்வுகளை வழங்குதல்.
பதிப்புரிமை© 1993, 1997-2008, மை ஓன் பிஸ்னெஸ், இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Thursday, September 3, 2015

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
மனிதர்களின் மன நிலை, யோசிக்கும் திறன், மூளையின் செயல் திறன், உடல் நலம், மன நலம் இவற்றுடன் தொடர்புள்ளவை நிறங்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
சிவப்பு நிறம் எதனையும் வெற்றி கொள்ளும் தன்மையையும் பாதுகாக்கும் தன்மையையும் அளிக்கிறது.
பழுப்பு நிறம் சுயநல எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.
பச்சை நிறம் ஒருவரின் மன உறுதியை வெளிப்படுத்தும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
மஞ்சள் நிறம் உயர்ந்த கொள்கைகளையும் நோக்கங்களையும் கொடுக்க வல்லது. மூளை செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் முன்னேற்றம் காண உதவும். ஆன்மிக எண்ணத்தைப் பிரதிபலிக்கும். மனோ தைரியத்தையும், அறிவுத் திறமையையும், சுறுசுறுப்பாக இயங்கும் செயல்திறனையும் அளிக்கும்.
நீல நிறம் உற்சாகத்தை வழங்கும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவும் பயன்படும். நட்புறவு, மகிழ்ச்சி, அமைதி நிலவ உதவும்.
ஊதா நிறம் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும் சுபாவத்தைக் கொடுப்பது. ஆராய்ச்சி எண்ணங்களையும் படைப்பாற்றலையும் அளிக்கும். தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்யும்.
வெள்ளை நிறம் தியாக சிந்தையையும் தன்னலமற்ற குணத்தையும் தருகிறது.

Wednesday, September 2, 2015

Masterpiece on Economics

Masterpiece on Economics :-

One day a tourist comes to the only hotel in a debt ridden town in Kenya. He lays a 100 dollar note on the table & goes to inspect the rooms. 

Hotel owner takes the note & rushes to pay his debt to the butcher. 

Butcher runs to pay the pig farmer. 

Pig farmer runs to pay the feed supplier. 

Supplier runs to pay the maid, who in these hard times gave her services on credit. 

Maid then runs to pay off her debt to the hotel owner whom she borrowed from in these hard times.

Hotel owner then lays the 100 dollar note back on the counter. 

The tourist comes down, takes his money & leaves as he did not like the rooms.

No one earned anything. But that group of people is now without debt & looks to the future with a lot of optimism.
And that is how the world is doing business today!

Worth a read..!!! - www.happy4all.org 

Thursday, August 27, 2015

வெற்றிகரமான செய்திக்குறிப்புகளை எழுதுதல்

வெற்றிகரமான செய்திக்குறிப்புகளை எழுதுதல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஊடகங்களில் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று செய்தி குறிப்புகளாகும். செய்தியறிக்கையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள் ஆகியோர் செய்திகளைப் பெற ஆவலுடன் இருக்கின்றனர். புதிய, வித்தியாசமான உற்பத்திப் பெருட்கள் மற்றும் நிறுவனங்கள், போக்குகள், தகவல் குறிப்புகள். பிற அபிவிருத்திகள் என்பன பற்றி அறிவதற்கு இந்த செய்தி குறிப்புகள் பயன்படுகின்றன. செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், அல்லது வர்த்தகப் பத்திரிகைகள் போன்றவற்றில் நீங்கள் வாசிப்பவற்றில் பெரும்பான்மையானவை, வானொலியில் கேட்பவை அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பவை ஆகிய அனைத்தும் செய்தி வடிவத்தில் இருந்து உருவானவையே ஆகும். துரதிர்ஷ்ட்வசமாக, ஒரு சாதாரண பதிப்பாசிரியர் ஒரு வாரத்துக்கு பல்லாயிரக் கண்ணகான செய்திகளைப் பெறுகிறார், இதில் பெரும்பான்மையானவை "கோப்பாக்க"மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு செய்தி ஊடகவியலாளரைத் தூண்டி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்குவதே நீங்கள் எதிர்நோக்கும் சவாலாகும்.

கவனிக்கத்தக்க செய்திக்குறிப்பை உருவாக்க இந்த 10 தகவல் குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

செய்தியாளரின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல்மிக்க தலைப்பைப் பயன்படுத்தவும்

உங்கள் செய்திகள் தனித்துவம் மிக்கதாக இருக்க தலைப்பே முக்கியமாகும். அதை சுருக்கமாகவும், திறன்மிக்கதாகவும், தெளிவாகவும் தயாரியுங்கள்; வேறு விதமாக சொல்வதானால் "ஜான் டோ விருது பெற்றுள்ளார்"என்பதற்கு பதிலாக "டோ இந்த ஆண்டின் சிறந்த மனிதர்" என்று பயன்படுத்தவும் என்பதாகும்.

மிக முக்கிய தகவல்களைத் தொடக்கத்தில் வையுங்கள்

இது இதழியலின் சோதிக்கப்பட்ட உண்மையான விதியாகும். ஒரு ஊடகவியலாளர் முதலில் இரண்டு பத்திகளிலும் அந்த செய்திக்குறிப்பு என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் அனைத்தையும் வாசிப்பார்கள் என்பது உறுதி கிடையாது. எனவே நல்ல தகவல்களை மறைக்காதீர்கள். மேலும் முக்கியாமான "5 கேள்விகளை" கேட்க மறக்காதீர்கள் – அதாவது உங்கள் செய்திக்குறிப்பானது யார், என்ன, எப்போது, ஏன் மற்றும் எப்படி என்ற ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

விளம்பரம் மற்றும் உறுதியற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கவும்

விற்பனைக்கான விளம்பரத்தை மிகவும் எளிதாக ஒரு எழுத்தாளரால் கண்டறிந்து விட முடியும். அளவுக்கதிகமான தற்பெருமை கூற்றுகளைத் தருவதற்கு பதிலாக, உண்மையான, பயன்மிக்கத் தகவல்களை தரவும். உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் தனிப்படுத்தி காண்பிக்கும் முறையான வழிகளை கண்டறிந்து அவற்றை அழுத்தமாக கூறுங்கள். உங்கள் வியாபாரத்தை மேம்படுத்த, உங்கள் வியாபாரத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமான செய்திக்குறிப்பை எழுதவும். பொதுவாக தகவல்களையும்,ஏன் என்று தெரிவிக்காமல் உங்கள் வியாபாரம் மிகச்சிறந்தது என்பதை மட்டும் தெரிவிக்கும் தகவல்களையும் தவிர்த்து விடுங்கள்.

சிறப்பாக, சொல்ல வேண்டிய விடயங்களை நேரடியாக சொல்லுங்கள்

உங்கள் செய்தியில் நீங்கள் எவ்வாறு ஆர்வமுடையவராக இருப்பீர்களோ அதே ஆர்வத்தை வாசகர்கள் மத்தியிலும் தூண்டும் மொழிநடையைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய செய்திக்குறிப்பானது சலிப்பூட்டுவதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருப்பின் நீங்கள் சரியான நேர்காணும் நபரல்ல என மக்கள் நினைப்பார்கள். .

இரண்டு அல்லது அதைவிட குறைந்த பக்கங்களில் செய்திக்குறிப்பை அமையுங்கள்

முக்கிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டும் மூன்று பக்கங்களைப் பயன்படுத்துங்கள். வேறு நிலைகளில் உங்களால், இரு பக்கங்களில் செய்தியை குறிப்பிட முடியாவிட்டால், உங்களால் செய்தியை தெளிவாக கூற முடியவில்லை என்று பொருள்.

ஒரு தொடர்பைச் சேர்க்கவும்

செய்தியாளர் மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு நபரின் தொடர்பு செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நபருக்கு செய்திக்குறிப்பில் உள்ள அனைத்து செய்திகளும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் செய்திக்குறிப்பை வெளியிடுங்கள் – இது நம்பகமானதாகவும் ஊடகவியலாளர் உங்கள் நிறுவனத்தை அடைவதற்கான மற்றொரு வழியாகவும் இது அமையும்.

தெளிவற்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள்

நீங்கள் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நபர் என்றால், தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள். பல ஊடகவியலாளர்கள் உங்களைப் போல உங்கள் நிறுவனத்துக்கோ அல்லது உங்கள் தொழிற்துறைக்கோ நெருங்கிய அறிமுகம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். தெளிவற்ற சொற்களை விட தெளிவான ஆங்கிலம் அல்லது தமிழில் உங்கள் கட்டுரையை எளிதாக விளக்கும்.

நன்மைகளை அழுத்தமாக கூறுங்கள்

"இப்போது சொல்ல வேண்டாம், காண்பிக்க வேண்டாம்" என்ற வகையின் கீழ் இது வரும் "தனித்துவம் மிக்கது" அல்லது "மிகச்சிறந்தது"என்று குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக எவ்வாறான நன்மைகளைப் பெறுவார்கள் என்பதை காண்பியுங்கள் – அதாவது நேர பண சேமிப்பு , எளிமை போன்றவற்றை காண்பியுங்கள்.

குறிப்பாகவும் விரிவாகவும் விளக்குங்கள்

"Six Steps to Free Publicity" -இன் பதிப்பாசிரியரான மார்சியா யுட்கின் இதனை "ஆம், ஆனால் இது என்ன?" நோய் என்று குறிப்பிடுகிறார். வாசகர் புதிய உற்பத்திப் பொருளொன்றை காணக்கூடியவராக இருத்தல் வேண்டும். அல்லது புதிய சேவை எவ்வாறு இயங்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். சந்தேகமிருந்தால், உங்கள் உற்பத்திப் பொருள் அல்லது சேவைகளைப் பற்றி அதிகம் அறிந்திராத நபர் ஒருவரை வைத்து உங்கள் செய்தியை அறியப்படுத்தி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை விவரியுங்கள். மிக சொற்ப விவரங்களைப் பயன்படுத்துவதை விடவும், அதிகமான விவரங்களைப் பயன்படுத்துவது நல்லது. எனவே, யுட்கின் குறிப்பிடுவது போல " ‘ஜக்சனின் புதிய புத்தகத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளருக்கான அறிவுரைகள் உள்ளன’ என்பதற்கு பதிலாக, ‘ஜக்சனின் புத்தகத்தில் சந்த ஆய்வுக்கான ஆறு தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு சாதாரண முதலீட்டாளர்களரும் எளிதாக இலாபமீட்டும் பங்குகளைத் தெரிவு செய்ய முடியும்.’ என்று குறிப்பிடவும். இன்னும் சிறப்பாக வேண்டுமானால், ஏழில் இரண்டு தத்துவங்களை செய்திக்குறிப்பிலேயே விவரியுங்கள்."

பிழைத்திருத்தம்

செய்திக்குறிப்பை உருவாக்கி முடித்த பின்னர், எழுத்துப்பிழைகள் உள்ளதா என்று சரிபார்க்கவும். உங்களால் பிழைத்திருத்தங்களை சிறப்பாக செய்ய முடியாது என்று எண்ணினால், ஒரு நண்பர் அல்லது சகப் பணியாளரிடம் அதனை ஒப்படைத்து பிழைத்திருத்தம் செய்யுமாறு கூறுங்கள். உங்கள் செய்திக்குறிப்பு சலிப்புண்டாக்கக்கூடியதாக அக்கறையின்றி உருவாக்கப்பட்டதாக இருக்குமாயின் நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள்
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.- www.v4all.org

Thursday, August 20, 2015

பணத்தை பெற இதோ மந்திரம் !

பணத்தை பெற இதோ மந்திரம் !
from - www.happy4all.org

மனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம். ஆனால் இன்று அந்த தூயக்காற்றை கூட விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் காற்றை வாங்க காசு தேவை. ஆக, மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாக பணம் இருக்கிறது. கைநிறைய பணம் இருந்தால் அதை சில மணிநேரங்களிலேயே மிகச்சுலபமாக செலவும் செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக பெறுவதற்கு இரத்தத்தை சிந்த வேண்டி இருக்கிறது. சிலருக்கு மிக சுலபமாக பணம் கிடைக்கிறது. பலருக்கு பல்லக்கு தூக்கி பாடுபட்டாலும் பணம் கிடைப்பதில்லை. மனிதன் பணத்தை பெற சுலபமான வழி இருக்கிறதா?
வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால் கூட அதை விழுங்குவதற்கு சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டும். சிரமம் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே கிடைக்காது. எனவே எப்போதும் சுலபமான வழியில் பணம் கிடைக்கவே கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நேற்று வரையில் ஓட்டை குடிசையில் இருந்தானே இன்று திடீரென்று சொந்த காரில் பயணம் செய்கிறானே அவன் பாடுபட்டா பணத்தை சேர்த்திருப்பான்? எப்படியோ செய்யக்கூடாததை செய்து, சேரக்கூடாததை சேர்த்து சம்பாத்தித்திருக்க வேண்டுமே தவிர பாடுபட்ட வழியில் பெற்றிருக்க முடியாது என்று பலரும் பேசுகிறோம். இது தவறு. நேற்றுவரை என்ற வார்த்தை ஒரு மனிதனை வெளிப்புறமாக வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்ததை வைத்து சொல்லப்படுவது ஆகும். அதற்கு முன்னால் அவனுக்குள் என்னென்ன நடந்தது, எந்த வகையில் அவன் அறிவு வளர்ந்திருந்தது, மெளனமாக அவன் செயல்பட்டது எப்படி? என்பதை நாம் அறிய மாட்டோம்.
அறியாமல் பேசுவது தவறு. ஒரு மனிதனுக்கு தொழில் செய்வதனால் மட்டும் பணம் வந்துவிடப்போவது கிடையாது. தொழில் செய்வதற்காக அவன் எந்த வகையில் தன்னை நெறிப்படுத்தி கொள்கிறான். தனக்கென்று சுயக்கட்டுப்பாடுகளை வகுத்து கொள்கிறான். மற்றவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு பணத்திற்கான யோகம் அமைகிறது எனலாம். மற்ற நாடுகளை விட நம் நாட்டு பெரியவர்கள் பணம் பெறுவதற்கு வெளிப்படையான முயற்சிகளையும் உள்முகமான ஒழுக்கங்களையும் மிக அதிகமாக சொல்லி சென்றிருக்கிறார்கள். அவற்றை கடைபிடித்தாலே கண்டிப்பாக செல்வ வளம் கிடைக்கும்.
நமது முன்னோர்கள் பணம் பெறுவதற்கு கூறிய வழிகளை நீங்கள் சொல்ல இயலுமா?
ஒரு நாளின் துவக்கம் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் மனிதனுக்கு நாள் என்பது சூரிய உதயத்திற்கு முன்பே துவங்கி விடுகிறது. ஆம். அவன் அதிகாலையில் கண்விழிக்க வேண்டும். தொழில் நிமித்தம் இல்லாது வேறு எந்த காரணத்தினாலும் சூரிய உதயம் வரையில் படுக்கையில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழில் நிமித்தம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைய வேலைகள் பல விடியற்காலை நேரத்தில் தான் முடிகிறது. அப்படிப்பட்ட வேலை செய்பவனை ஐந்து மணிக்கு எழுந்துகொள் என்றால் அது அவனை கொலை செய்வதற்கு சமமாகும்.
அடுத்ததாக காலை எழுந்தவுடன் கண்விழித்து தன் முகத்தையோ, தாயின் முகத்தையோ, மனைவியின் முகத்தையோ பார்க்க வேண்டும். அது இயலாத போது தனது உள்ளங்கையை பார்க்கலாம் அல்லது இஷ்ட தெய்வத்தின் உருவத்தை காணலாம். இது இல்லாமல் வேறு பொருட்களை, வேறு மனிதர்களை தினசரி பார்த்தால் மனதளர்ச்சி ஏற்படும். படுக்கையில் இருந்து இறங்கும் போது வலது காலை பூமியில் ஊன்றி இறங்கவேண்டும். அப்படி இறங்கும் போது குலதெய்வத்தின் பெயரையோ, இஷ்ட தெய்வத்தின் தோத்திரத்தையோ, மகாலஷ்மி அல்லது விநாயகர் மந்திரங்களையோ சொல்ல வேண்டும்.
ஆண்களாக இருந்தால் செவ்வாய்கிழமையும், பெண்களாக இருந்தால் சனிக் கிழமையும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. தலைமுடி குறைத்த பின்போ முகச்சவரம் செய்த பிறகோ, உடனடியாக தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது. கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து நின்று குளிக்க வேண்டும். எப்போதும் பிறந்தமேனியாக குளிக்க கூடாது. இடது கையை தரையில் ஊன்றியோ, சாதத்தை உருட்டியோ, இலையை அல்லது உணவுத்தட்டை வழித்தோ சாப்பிடக்கூடாது. பகல் வேளையில் பால்சாதமும், இரவுவேளையில் தயிர்சாதமும் கூடவே கூடாது. கிரகணம் அன்று தாம்பத்திய உறவோ, மெத்தையில் படுக்கையோ கூடாது. புதிய ஆடைகளை ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே அணிய வேண்டும். திருமணம் ஆன பிறகு தகுந்த காரணம் இல்லாமல் நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மேல் முடி வெட்டாமல் இருக்க கூடாது. நகத்தை கடிக்க கூடாது இரவில் நகம் வெட்டக்கூடாது. மற்றவர்களின் உடை, செருப்பு, சாப்பிடும் பாத்திரம் இவைகளை பயன்படுத்தக்கூடாது.
தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசி பிழியும் போது உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முறத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும். எச்சில் கையால் தலையை தொடக்கூடாது. நகம், முள், கரித்துண்டு, சாக்பீஸ், இரத்தம் இவற்றால் தரையில் எழுதக்கூடாது, கோலம் போடக் கூடாது. அசுத்தமாக இருக்கும் போது சூரியனையோ, சந்திரனையோ நேருக்கு நேராக பார்க்ககூடாது. பகல் நேரத்தில் கணவன்-மனைவி இணையக்கூடாது. உடைந்து போன நாற்காலிகளை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பமான மனைவி உள்ள கணவன் கடலில் நீராடக்கூடாது. அமாவாசை அன்றும், வெள்ளிக்கிழமை அன்றும் எல்லா நாட்களிலும் காலை, இரவுகளில் நெல்லிக்கனியை உண்ணக்கூடாது
சுடுகாட்டில் எரிந்த கரி, சுடுகாட்டு எலும்பு, நெருப்பு, பருத்தி விதை, பசு, உமி, திருநீறு, குரு, பிராமணர் இவற்றில் (இவர்களின் மீது) கால்படக்கூடாது. சமுத்திரம், பாம்பு புற்று, கோவில் தேர் போன்றவற்றில் சிறுநீர் கழிக்ககூடாது. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தலையை சொரியக்கூடாது, தேன் கூடு, குருவிக்கூடு, கர்ப்பப்பை சிசு போன்றவற்றை கலைக்ககூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இவைகளை செய்தால் மனிதர்களின் எண்ணங்கள் கெடுதியாகி தரித்திரம் மேலோங்கும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். மேலும் ஆட்டுக்காலிலிருந்து கிளம்புகிற தூசு, கழுதை கிளப்புகிற புழுதி, அதிர்ந்து நடக்கும் பெண்களின் கால்களிலிருந்து கிளம்பும் புழுதி, போன்றவைகளும் குடும்பத்தை வறுமைப்பிடியில் தள்ளும் என்பது அவர்களின் கருத்தாகும்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னீர்கள். எதை செய்தால் செல்வம் பெருகும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களை பணம் வைக்கும் இடத்தில் தினசரி புதிதாக வைக்க வேண்டும். வலம்புரி சங்கை ஓசை வரும்படி பூஜையறையில் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் கணபதி, மகாலஷ்மி, வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்களின் உருவங்களை அல்லது சின்னங்களை வைக்க வேண்டும். மாதத்தில் ஒருமுறை சிறந்த பிராமணருக்கும், வாரத்தில் ஒருமுறை இயலாத            பிச்சைக்காரனுக்கும், தினமும் ஒருமுறை எறும்புக்கும் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் துளசி, மல்லிகை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். சாளக்கிரமம், ருத்ராட்சம், பாதரசம், தாமரைப்பூ, பசுஞ்சாணம் இவற்றில் எதாவது ஒன்று வீட்டில் தினசரி இருக்க வேண்டும்.
இது தவிர செல்வம் பெருக ரகசிய வழிகள் ஏதாவது உண்டா?
நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும்.
மேலும் வெள்ளிக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தில் சுக்கிர ஓரையில் வில்வம், துளசி, செந்நாயுருவி போன்ற வேர்களை முறைப்படி காப்புக்கட்டி எடுத்து வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக்கொண்டாலும் சித்தர்கள் கடைபிடிக்கிற ஜோதிப்புல் சூரணத்தை வீட்டில் வைத்துக்கொண்டாலும் மிக கண்டிப்பாக பணத்தட்டுபாடு இருக்காது. பணத்தை நம்மை நோக்கி ஈர்க்க செய்யும் குருபரம்பரை வழியான மந்திரங்களும் உண்டு. அவற்றை இங்கே பகிரங்கமாக சொல்ல இயலாது. ஆனால் அவைகள் மிகவும் வீரியம் உள்ள மந்திரங்கள். நீங்கள் இங்கு சொல்லப்பட்டதை கடைப்பிடித்து பாருங்கள். இது  பெரிய கோடீஸ்வரர்களாக நீங்கள் ஆகவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கடன் இல்லாமல் விரும்பிய பொருளை வாங்கி அனுபவிக்கும் பேறு பெற்றவர்களாக இருப்பீர்கள். இப்போது நான் சொன்னது எதுவும் பெரிய கடினமான வேலைகள் அல்ல. ஆனால் இதையும் கூட பலரால் செய்ய முடிவதில்லை…


Wednesday, August 12, 2015

Strategies for Powerful Life Change — How to Experience True Success

Do you ever feel stuck? Do you ever feel that you are a slave to your work, yet your work doesn’t fulfill you and it leaves you feeling empty and unaccomplished? Have you ever felt that what you are doing is meaningless, or that despite your success you feel you aren’t on the right path in life?
It wasn’t too long ago I was stuck with no direction. I had my nose buried in the grindstone and I wouldn’t allow myself to look up from what I was doing for a second. I used to think I was a hard worker, and that I was dedicated, brave, and strong, but it took some time to realize that I was wrong about it all.
I was training full time in the martial arts and neglecting every single other aspect of my life: family, career, finances, and relationships. I told myself I did it for the love of the sport, I told myself that this was my calling in life, and then one day it all dawned on me that the life I had been living was a lie. I wasn’t throwing myself into my passion, and I wasn’t growing as a person, I was just hiding from the hostility of life within something that I enjoyed.
I was obsessed: I trained some days for 6 hours or more, my body was beat down, I was financially broke, I was unfulfilled, and when I wasn’t training I was miserable. Most of the time even when I WAS training I was miserable. When I was at home I was lazy, irresponsible, unmotivated, and callous. I dove into the martial arts, because I was too afraid to deal with life, so I threw myself into a sport that dominated my life.
Am I saying it is wrong to throw yourself into a passion? Absolutely not, after all, I have other passions now, and I hope in time I will fall back in love with Brazilian Jiu-Jitsu. Maybe it was burnout from training hard, maybe it was fear that I would never accomplish what I wanted, or MAYBE it was that I realized that what I wanted to accomplish in martial arts and the person I really wanted to become did not intersect.
I thought my accomplishments in Martial Arts would make me into the person that I wanted to be: someone that people would respect and look up to, but then I realized one day I was only going to become the person I wanted to be if I started building the character traits I needed to be that person.
Diving into martial arts gave me an excuse to neglect everything else, I didn’t have to worry about bills, relationships, work, self improvement or anything else in life. I just threw myself into the moment and claimed it all as hard work, but while I dedicated myself fully to one thing, I had to give up everything else. I kept saying I would start reading again soon, I would start phoning my parents more often soon, and I would start making money soon. I was stuck in waiting, and while I went on autopilot in my training, I neglected the rest of my life.
I was an ostrich with it’s head stuck in the dirt, and while I trained and ignored the world around me, it left me behind. One day I woke up and I was 25 years old with nothing to my name, no money, no legacy, no special skills or value other than the martial arts, and I realized this: if I wanted to someday be a business owner, help people, and give back to the world, I wouldn’t have any of the skills I needed to do what I REALLY wanted to do in life. So I decided to start developing myself instead of just my craft.
I got blinded by the thirst of achievement, I wanted to win a world championship so bad, because if I won, I thought that would make me worth something: if I won, I thought everyone would want to train with a world champion, and maybe that’s true, but who had I become in the process? What others skills had I learned from training? How would my life really change if I won a world title?
I guess that’s when everything changed for me, when I realized that I don’t change when I win a world title. I was seeking accomplishments to make me the man I wanted to become, but I realized that by delaying my own growth and development as a person, all I was doing was living as a child. I said a championship would make me into the man I wanted to be, but really I was just a little boy who wanted to stay home and play instead of going to school. I realized I am not my accomplishments, I am what I develop, and if I want to become someone great, I need to develop who I am first. The change I was looking for had to take place from within, I couldn’t create it just by diving into my work head first.
So the last year has been a process, but I have learned a lot. I still have a ton of learning to do, and I still have many failures and hardships to endure. But now, I am finally focused on the process of becoming, rather than focusing on what I can accomplish.
I was focusing only on results, and I am starting now to focus more on the process. Success comes as a byproduct of loving what you do and focusing on your own personal growth. The more you grow and learn, the better suited you are to meet life’s tests and trials with courage, while the more you focus on some point in the future you often begin to lose the love of the process.
I was so focused on winning a world title: that was the only way I was going to be happy. I wasn’t training to get better, I was training for a title. Every time the title didn’t come, I worked a little harder, and every time I lost, I started to hate what I was doing a little more.
Now I am focusing on following my heart more, listening to the little voice deep inside of me. Now I am focusing on loving what I do again, and trying to turn life into something that makes me better each day,rather than just getting stuff done. I guess what I really wanted all along was a “qualification” that I was a good person and was worthy to start helping people, but I can help people right this very moment, and so can you.
Every second we can choose to live our life with purpose or indiscretion. Its pretty simple when you look closely at it all. Your life is not some point in the future, and you don’t become the wealthy person when you hit the lottery and win a million dollars, because you are still mentally poor, and all the money is going to leave you again.
Now I know that I am a winner, and I don’t need a win to prove anything to anyone, now my confidence comes from within, and it comes from the man that I have become (from deep seated beliefs and integrity) I don’t seek results as a battleground to prove my worth as a man, I just focus on becoming a better man each day.
You have learn to love yourself as you are in this very moment, but also learn to love the process of making yourself a little bit better each day. You aren’t some perfect person in the future, and you aren’t some terrible person from your past, you are living in this moment and you are everything you decide to be right now.
The change you seek is within you waiting right now; your life doesn’t start at some point in the future, it starts now, so don’t get stuck in the waiting room, just get up and start making it happen today.

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வை்தான்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.


மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர்.


ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”வியாபாரி கேட்டான்.

 “எப்படி?”“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”


இன்னொரு மகன் சொன்னான்.“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”“

வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.

ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன்.

 ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.


மூன்றாம் மகன் சொன்னான்,“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”


வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”“


அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.


 அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். 

ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.


முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.ஆனால்,இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.

அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது.

 மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.


எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள். 

புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.

சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும ் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்."


முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “..www.happy4all.org

Monday, August 10, 2015

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"s

"இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"


பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்
பாகவே இருக்கிறது. அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!
சிவாயநம! - www.happy4all.org

Friday, August 7, 2015

அருணகிரிநாதர் அருளிய திருத்தணி திருப்புகழ்



அருணகிரிநாதர் அருளிய திருத்தணி திருப்புகழ்
அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!!
திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் நம் மனதில் தோன்றும் முதல் எண்ணம்
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர் என்று!!
மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!
திருத்தணி திருப்புகழ்
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன ...... தந்ததான
.........
புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு
இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?
னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ
நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ
யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?
ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா
நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா
எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!
தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா
தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா
அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!
த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ
தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ
பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?
எ னக்கிது ...... சிந்தியாதோ
எனக்கு இது சிந்தியாதோ ?
ஏது
[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]
ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே
ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே
நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே
ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே
நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!
மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே
மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே
நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.
மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.
அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!
எனக் கூத்தாடுகிறார். நாமும்தான்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
திருச்சிற்றம்பலம்

Tuesday, August 4, 2015

செல்வ செழிப்பை தரும் குபேர வசிய மந்திரங்கள்

செல்வ செழிப்பை தரும் குபேர வசிய மந்திரங்கள்
(share) செய்யுங்கள்
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.
2. ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.
3. ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா
மேற்கண்ட மந்திரங்களை குபேரனின் படம் வைத்து தினமும் 108 முறை வியாபார நிறுவனங்களிலோ, வீட்டிலோ சொல்லி வந்தால் அந்த இடம் சுபிட்சம் பெறும். வியாபாரம் அதிகரிக்கும். - www/happy4all.org


DrStar Anand

Tuesday, July 21, 2015

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை
(share) செய்யுங்கள்)
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand