புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள். ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, “ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம்.
சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தை யும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.
இந்நாளில் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் 🌾🙏💐www.happy4all.org
No comments:
Post a Comment