அன்னை அரசாலை(வராகி)யின் ஆலயங்கள் பட்டியல்
காசி பஞ்சகங்கை கட்டத்தில் இருந்து சிறிது தொலைவில் பிந்து மாதவர் கோவில் இருக்கிறது;அதற்கும் சற்று தொலைவில் வாராகி கோவில் இருக்கிறது;
இந்த வராகியே முதன்மைக் கோவில் ஆகும்;கோவிலுக்கு சூரிய உதயத்திற்கு முன்பே சென்றுவிட வேண்டும்;சூரிய உதயம் ஆனதும் கோவில் நடையை மூடிவிடுவர்;மறுநாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமே திறப்பர்;
கோவிலின் உள்ளே பாதாள அறையில் சுமார் 5 அடி உயர வராகியின் திரு உருவம் இருக்கிறது;உக்கிரமான தேவியாக காணப்படுகிறாள்;அறையின் உள்ளே யாரையும் அனுமதிப்பதில்லை;சன்னதியின் மறுபக்கம் உள்ள துளையின் வழியாக பாத தரிசனம் செய்யலாம்;
காசிக்கு வருபவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்களில் இந்த ஆலயம் முதன்மையானதும்;முக்கியமானதும்;சூட்சுமமானதும் ஆகும்;
காசிக்கு வருபவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்களில் இந்த ஆலயம் முதன்மையானதும்;முக்கியமானதும்;சூட்சுமமானதும் ஆகும்;
அரியலூர் ஆலந்துறையார் சன்னதிக்கு முன் படி ஏறும் பகுதியில் வராகி காட்சி தருகிறாள்;இவளை வணங்கியப் பின்னரே ஆலந்துறையாரை வணங்க வேண்டும்;திரும்பும் போது கவுமாரியை வணங்க வேண்டும்;
இவ்வாலயத்தில் சப்தமாதர்களின் ஆலயம் இருக்கிறது;இங்குள்ள ஒப்பிலா அம்மன் சக்தி வாய்ந்தவள்;இங்கு போர்க்காளி என்ற பெயரில் வராகியை வழிபடலாம்;
பவுர்ணமி நாட்களில் அரளிப்பூ மாலையை போர்க்காளிக்கு அணிவித்து அர்ச்சனை செய்தால் பதவி உயர்வு கிட்டும்;திருமணத் தடை நீங்கும்;
சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்து இருப்பது செங்கண்மால் கிராமம்;இங்கே சாலையோரம் இருக்கும் சிவாலயத்தில் செங்கண்மாலீஸுவரர்;அம்பிகை பெரியநாயகியுடன் அருள்பாலித்து வருகிறார்;இந்த கோவிலுக்கு வடக்கே சுவேத வராக தீர்த்தம் இருக்கிறது;
திருப்பன்றிக்கோடு கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருக்கிறது;
அரித்துவாரமங்கலத்தில் அலங்காரவல்லி சமேத பாதாள வரதர் அருளாட்சி புரிந்து வருகிறார்;அரியால் துவாரம் செய்யப்பட்ட மங்கலம் என்பதே இதன் பெயர் ஆகும்;மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டத் துவங்கிய இடம் இதுதான்;இன்னும் (பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னரும்) இந்த அடையாளங்கள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன;
குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் உடன் பாலகுஜாம்பாளாக காட்சி தருகிறார்;இங்கே மூலவரின் பின்புறம் சப்த கன்னியர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன;இதில் வராகியின் திரு உருவம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது;இந்த ஆலயத்தில் மட்டுமே இறைவன் சன்னதியிலேயே சப்த கன்னியர் இடப் பெற்றுள்ளனர்;
தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில் அன்னை வராகியின் சன்னதி இருக்கிறது;முதலில் அன்னை வராகி ஆலயம் இருந்ததாகவும்,பின்னரே பிரகதீசுவரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக கர்ணபரம்பரைச் செய்திகள் தெரிவிக்கின்றன;
உத்தரகோசமங்கை ராமநாதபுரம் தூத்துக்குடி சாலையில் 18 வது கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது;இங்கே மூலஸ்தானத்தில் ஸ்ரீவராகி எட்டுத் திருக்கரங்களுடன் ஒரு காலை குத்திட்ட நிலையிலும்,மற்றொரு காலை வீராசன நிலையில் வைத்தும் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறாள்;
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது;மேலும் நவராத்திரி நாட்களில் இங்கு அன்னை வராகிக்கு அபிஷேகம்,அலங்காரம்,சகஸ்ர நாம அர்ச்சனை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது;10 ஆம் நாள் அன்று அன்னை வராகி திருவீதி உலா வருகிறாள்;
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது;மேலும் நவராத்திரி நாட்களில் இங்கு அன்னை வராகிக்கு அபிஷேகம்,அலங்காரம்,சகஸ்ர நாம அர்ச்சனை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது;10 ஆம் நாள் அன்று அன்னை வராகி திருவீதி உலா வருகிறாள்;
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 15 வது கி.மீ.தொலைவில் பள்ளூர் இருக்கிறது;இங்கு அன்னை வராகிக்கு பழமையான கோவில் இருக்கிறது;இங்கே தேவி தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அன்பு ஆட்சி புரிந்து வருகிறாள்;இங்கே வராகீயின் பெயர் அரசாலை;அன்னை வராகீயின் 1008 திருநாமங்களில் ஒன்றுதான் அரசாலை!!!
அண்ணாமலை+உண்ணாமுலை அம்மன் தம்பதியாக நின்று அருள்பாலிப்பது திரு அண்ணாமலை;மஹாவிஷ்ணு ஈசனின் பாதத்தை கண்டறிய வராக அவதாரம் எடுத்து ,முடிவில் ஈசனுக்கு இணையான கடவுள் என்று ஈசனாலேயே வரம் பெற்றதும் இங்கேதான்;உண்ணாமுலை அம்மன் சன்னதியில் அவ்வளவு தெய்வீக வராகி ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன;
திருக்காளஹஸ்தியில் சிவன் சன்னதிக்கு எதிரே இருப்பது முதலில் பன்றிசிலைதான்; அதன் பிறகே நந்தி சிலை இருக்கிறது;இந்த பன்றி சிலைக்கு செவ்வாய்க்கிழமை ரோஜா மாலை வாங்கிப் போட்டு வழிபட்டால் காரிய சித்தியாகும்;
திருப்பதி மலை மீது ஆதிவராகர் இருக்கிறார்;மலை மீது இருக்கும் புனித குளத்தின் மூலையில் ஆதிவராகருக்கு தனிச்சன்னதி இருக்கிறது;முதலில் அவரை வழிபட்டப் பின்னரே வேங்கடவனைத் தரிசிக்க வேண்டும்;
எந்த அம்மன் சன்னதியிலும் காலை 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்குப் பிறகும் வராகி ஜபம் செய்யலாம்;அல்லது சப்த கன்னியர்கள் முன்பாக அமர்ந்த நிலையிலும் வராகி ஜபம் செய்யலாம்;
No comments:
Post a Comment