உச்சகட்டமான பாதுகாப்பை அருளும் வராகிமாலை!
அபிராமி பட்டர் திருக்கடையூர் வாழ்ந்து வந்தார்;அவர் அபிராமி அந்தாதி இயற்றியவர்;அபிராமி,லலிதா,பரமேஸ்வரி என்பதெல்லாம் ஆதிபராசக்தியின் வேறு பெயர்களே! அவர் எப்போதும் அன்னை அபிராமியின் நினைவாகவே இருப்பவர்;ஒருமுறை அப்பகுதியை ஆண்ட மன்னன் திருக்கடையூர் ஆலயத்திற்கு வந்தான்;மன்னன் வருகையைப் பார்த்த கோவில் ஊழியர்கள்,கோவிலுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் மன்னனை வணங்கினர்;அபிராமி பட்டரோ அன்னை அபிராமியின் நினைவாகவே இருந்ததால்,அவருக்கு மன்னனின் வருகையை உணரமுடியவில்லை;மன்னன் துணுக்குற்றான்;
மன்னன் அபிராமி பட்டரை அணுகி, ‘பட்டரே! இன்று என்ன திதி?’ என்று வினவினான்;
அபிராமி பட்டரோ,அன்னை அபிராமியின் நினைவாகவே இருந்தபடியால் அன்று அமாவாசை என்பதை மறந்து, ‘பவுர்ணமி’ என்று கூறினார்;மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது;இருப்பினும் கோபத்தை அடக்கிக் கொண்டு தனது காவலர்களை அபிராமி பட்டருக்கு காவல் போட்டுவிட்டு உத்தரவிட்டான்;
‘இன்று மாலை பவுர்ணமி உதயமாகாவிட்டால் இந்த பட்டரைச் சிரச்சேதம் செய்துவிடுங்கள்’
மன்னன் போய்விட்டான்;கோவிலில் இருந்தவர்கள்,அபிராமி பட்டரிடம் இன்று அமாவாசை திதியே;ஏன் மாற்றிச் சொன்னீரய்யா? இன்று மாலையோடு உமது உயிர் போய்விடுமே.. என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டு அவரைப் பயமுறுத்திவிட்டனர்;
அவருக்கு என்ன தெரியும்? அன்னை அபிராமியைத் தவிர!
அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றும் படி அன்னை அபிராமியிடம் வேண்டிப் பாடினார்;அதுதான் அபிராமி அந்தாதி!!!
அப்படி அவர் பாடியதால்,அமாவாசையான அன்று மாலையில் பவுர்ணமி உதயமானது;மன்னன் தனது அரண்மனையில் இருந்து ஒடோடி வந்தான்;அபிராமி பட்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்;
25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பவுர்ணமி,அமாவாசை,பவுர்ணமி என்ற திதி சுழற்சி ஒருமுறை விதிவிலக்காக மாறி பவுர்ணமி,பவுர்ணமி,பவுர்ணமி என்று மாறும்;பிறகு வழக்கம் போல,அமாவாசை,பவுர்ணமி,அமாவாசை என்று திதிச்சுழற்சி ஏற்படும்;தொடர்ந்து மூன்று பவுர்ணமிகள் இம்முறை வந்தால்,அடுத்த 25,000 ஆண்டுகளுக்குப்பிறகு தொடர்ந்து மூன்று அமாவாசைகள் வரும்;இதை இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது;
“தனம் தரும்;கல்வி தரும்;ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்;தெய்வ வடிவம் தரும்;நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்;நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே” என்ற பாடல் வரிகள் வராகி மாலையை தினமும் காலையில் 6 மணிக்கு முன்பு ஒருமுறையும்,மாலையில் 6 மணிக்குப் பின்னர் ஒருமுறையும் பாடினால் அன்னை அரசாலையின் அருள் கிட்டும்;
வராகி மாலையை இயற்றியவர் சோழர் படைத்தளபதியான சுந்தரேசர் ஆவார்;
முதலாம் குலோத்துங்க சோழனுக்கும்,சாளுக்கிய மன்னன் ஆறாவது விக்கிரமாதித்தியனுக்கும் கர்நாடக தேசத்தில் நடந்த போரில் பல வீர சாகசங்கள் புரிந்து சாளுக்கியரின் கொடியைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார் சோழர் படைத்தளபதி சுந்தரேசர்;அவருக்குப் பரிசாக பாண்டிய மன்னன் ஒரு பெரிய நிலப்பரப்பை வழங்கினான்;அந்த கிராமத்தில் தங்கி சுந்தரேசர் வராகி மாலையை இயற்றினார்;அந்த கிராமத்தின் பெயர் வீரசோழன்!
சுந்தரேசர் சோழர் சேனையின் குதிரைப்படைத் தலைவனாக இருந்தார்;அதனால்,இவருக்கு வராகியின் முக்கிய ரூபமான அஸ்வாரூடாவின் மீது தணியாத பக்தி உருவானது;இன்றைய கால கட்டத்தில் நம் ஒவ்வொருவருமே நான் என்ற அகங்காரத்தால் அல்லது (இணையம்/செல்போன்/திரைப்படங்கள்/விளம்பரங்கள் மூலம்) தூண்டப்படும் மிதமிஞ்சிய காம இச்சையால் அவதிப்படுகிறோம்;இதை முழுமையாக நீக்கி பாவமே செய்யாத ஆத்மாவாக மாற வேண்டும் எனில் அஸ்வாரூடா என்ற குதிரைக்காரி என்ற அஸ்வாருட வராகியைச் சரணடைய வேண்டும்;- www.v4all.org
No comments:
Post a Comment