Sunday, August 2, 2015

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18.

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18. அனைவர்க்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்றுசங்கடஹர சதுர்த்தி விரதமும்ஆடிப் பதினெட்டும் சேர்ந்து வருகின்றது .. தங்கள் அனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெற விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! ஆடிமாதம் 18ம் திகதியாகிய இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது .. நீர்நிலைகள் வற்றாமல் இருக்க வருணபகவானையும் .. தேவதைகளையும் வணங்கும் நாள் இது .. கிராமப்புறங்களில் வகைவகையான சாதங்கள் தயார் செய்துகொண்டு நீர்நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து சொந்தபந்தங்களுடன் உண்பது வழக்கம் .. நகர்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர் .. காவேரிக்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. காவேரிநதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டென்றும் .. அங்கே பதினெட்டு யோகிகயர்களும் ..மகரிஷிகளும் .. சித்தபுருஷர்களும் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர் .. அவர்கள் ஆடிப்பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு காவேரிநதியில் நீராடி தங்கள் தவப்பயனை காவேரியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம் .. அதனால் காவேரியானவள் அதிகசக்தியையும் .. புனிதத்தையும் பெறுகிறாள் .. ஆகவே இந்நாளில் காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் .. நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. இராமப்பிரானும் ஆடிப்பதினெட்டில் காவேரியில் நீராடி புனிதம் பெற்றார் .. இன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை கருகமணி .. மலர் .. மஞ்சள் .. பழங்கள் .. வெல்லம் கலந்த அரிசிப்புட்டு படைத்து வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டினையோ வைத்து பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வர் .. வாழ்வில் என்றும் வசந்தம் வீச அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக . வாழ்க வளமுடனும் .. நலமுடனும

No comments:

Post a Comment