அரங்கு இல்லாத வர்த்தகக் கண்காட்சிகள்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.-www.v4all.org
உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வர்த்தகக் கண்காட்சியில் சொந்தமாக அரங்கு அமைக்கத் தேவையில்லை. சொந்த அரங்கு அமைத்து நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதைத் தடுக்க பல வழிகள் உள்ளன இதோ நீங்கள் முயற்சித்து பார்ப்பதற்கான சில வழிமுறைகள்:
பேச்சாளராக இருங்கள்
பல பெரிய வியாபாரக் காட்சிகள் சிறப்பான கருத்தரங்கங்கள் என்பன நடாத்தப்படுகின்றன. ஒரு அரங்கில் அல்லது தொழில்நுட்ப அமர்வில் பங்கேற்று கொள்வதன் மூலம் உங்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துங்கள். சிறந்த முறையில் பொருந்தும் வழிகளை கண்டறியுங்கள். உதாரணமாக, ஒரு கணக்காளர் மென்பொருள் உருவாக்குபவர்கள் கருத்தரங்கில் புதிய வரி மாற்றங்கள் எவ்வாறு அவர்கள் தொழிலை பாதிக்கும் என்று பேசலாம். அதே போல ஒரு இயணய வடிவமைப்பாளர், கணக்காளர்களின் கூட்டத்தில் சிறப்பான இணையத்தளங்களை உருவாக்குவதை காண்பிக்கலாம். உங்கள் விளக்கக்காட்சியின் நகல்களை வைத்திருக்க மறக்க வேண்டாம், மேலும் வர்த்தக அட்டைகளையும் வைத்திருந்தால் பார்வையாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வழிகள் ஏற்படும். உரையாற்றிய பின்னர் கேள்விகள் மற்றும் கலந்துரையாடலுக்கு தயாராக இருங்கள்.
தனிப்பட்ட சந்திப்புகளை நடாத்துங்கள்
வியாபாரக் காட்சிகளின் அடிப்படை நன்மை என்னவென்றால், அவை உங்கள் வாடிக்கையாளர்களை ஒரே இடத்தில் ஒருமுகப்படச் செய்கின்றது. ஒரு அரங்கை வாடகைக்கு எடுப்பதற்கு பதிலாக, உங்கள் வாடிக்ககையாளா்கள் மற்றும் வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதை கருதலாம். இந்த சந்திப்புகள், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அல்லது உணவக மண்டபத்தில் நடைபெறலாம், அல்லது உங்கள் சொந்த இடத்தில் கூட நடத்தலாம். இதனால் நீங்கள் குறைவான செலவுகளையே செய்வீர்கள் – உங்கள் ஹோட்டல், உணவு மற்றும் போக்குவரத்து) மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் அலங்காரமான இடத்தைக் கண்டு ஆச்சரியமடைய வேண்டிய அவசியமும் தவிர்க்கப்படும்.
உங்கள் உற்பத்திப் பொருட்கள்/சேவைகளை வேறொருவரின் அரங்கத்தில் விளக்குங்கள்
உங்கள் தயாரிப்புகளை நிறைவு செய்யும் தயாரிப்புகளை வழங்கும் கம்பெனியைத் தேடுங்கள். இவர்கள், உங்கள் சந்தையில் கூட்டாளர்களாகவோ, உங்கள் விநியோகத்தர்களாகவோ, உங்கள் வாடிக்கையாளர்களாகவோ அல்லது வேறு கம்பெனியாகவோ இருக்கலாம். பின்னர், அவர்களுடைய அரங்கத்தில் இடம் இருந்தால், உங்கள் உற்பத்திப் பொருள் அவர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை விளக்குங்கள். உதாரணமாக, ஒரு மென்பொருள் உருவாக்குபவர், ஒரு புதிய தொகுப்பை, கணனிகள் வியாபாரியின் அரங்கத்தில் விளக்கலாம். ஒரு வீட்டுப்பொருள்கள் விநியோகத்தர், ஒரு தளபாடத் தயாரிப்பாளரின் கட்டில் மற்றும் நாற்காலிகளுக்காக, தலையணைகளையும் பிற துணைப் பொருள்களையும் காண்பிக்கலாம்.
ஆராய்ச்சியை நடாத்தவும்
ஆராய்ச்சியை நடாத்துவதற்கு, சில வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் சிறந்தது. அவை, உங்கள் போட்டியாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்கள் எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள் என்பதையும், தங்கள் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வாறு விலையிடுகிறார்கள் மற்றும் சந்தைப்படுத்துகிறார்கள் செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் போட்டியாளரின் செயல்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வாறு பதிலை அளிக்கிறார்கள் என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அல்லது நீங்கள் உங்கள் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்களைப் பார்க்கலாம், மற்றும் அவர்களுடன் இணைந்து உங்கள் வியாபாரத்தில் நன்மையடையும் திறமுறைகளில் அந்த செயலதிகாரிகளைப் பங்கு பெறச் செய்யலாம். இறுதியாக, வியாபாரக் காட்சிகள் உங்கள் விநியோகத்தர்களை கண்டறியவும், விநியோகிப்பாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளை கண்டறியவும் மிகச் சிறந்த இடமாகும்.
No comments:
Post a Comment