Showing posts with label self motivation Speaker in coimbatore. Show all posts
Showing posts with label self motivation Speaker in coimbatore. Show all posts

Wednesday, July 13, 2016

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

>> பொன்னூதிமாமலை எனும் ஊதியூர் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழமையான பெயரே பொன்னூதிமாமலை என்பதாகும் .
>> ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் "உத்தண்டவர்" எனும் திருநாமத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
>> பின்பு சற்று தள்ளி மேலே "தம்பிரான் சித்தர் சமாதி" உள்ளது . ""தப்பித்தது தம்பிரான் புண்ணியம்"" எனும் பழமொழி இன்னும் நமது பேச்சு வழக்கத்தில் உள்ளது ...ஆபத்தின் உச்சிக்கு சென்றவர் கூட தம்பிரானை தரிசிக்க -மயிரிலையில் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்..தம்பிரானின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளது .இவ்விடம் வந்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .தமது அடியார்களை துணிந்து காப்பதில் வல்லண்மை பொருந்திய தம்பிரானுக்கு இவ்விடம் மட்டுமே சன்னதி உள்ளது ..வேறு எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை ..
>> "தம்பிரான் சித்தர் சமாதிக்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மலை பாதையில் நடந்து சென்றால் வருவது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய "கொங்கண சித்தரின் " பல ஆண்டுகள் தவம் செய்து பரிபூரண கிருபை பொருந்திய இடமாகும் ..இங்கு தான் கொங்கண சித்தர் பல ஆண்டுகள் தவம் செய்துள்ளார் . சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் கொங்கண சித்தருக்கு காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை அருளியுள்ளார் ..
>> அதற்கும் சற்று மேலே கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பெற்ற குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . அமைதியான சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாத ....தவத்திற்கு ஏற்ற .... அருமையான இடமாகும்..படத்தில் நாங்கள் குகைக்குள் அமர்ந்து இருக்கிறோம் கேமரா வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல் தெரிகிறது ...உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி ...உள்ளே வரவும் ..வெளியே செல்லவும் படுத்து தவழ்ந்து தான் போக ,வரமுடியும்

>> இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை செய்த மலையாதலால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..கொங்கன சித்தர் இம்மலையில் தான் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் .நன்றி மறந்த தன்மையுடனும் சுயநலமும் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி பொன் செய்யும் கலையை விடுத்து ..அவர் வைத்திருந்த பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து ..இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என கூறி மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று குரு தண்டனை பெற்று திருவருளால் அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..

> ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் ,முடிந்தவர்கள் சென்று ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன நட்சத்திரம் உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்



Monday, June 6, 2016

சமகால வெற்றிக்கு 16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்...!!

சமகால வெற்றிக்கு 16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்...!!

1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப் படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து...!!

2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.

3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.

4. பெரும்பாலான நட்புகளின் பின்னனியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு வேலையைத் தொடங்கும் போதும் உங்களுக்குள்ளே மூன்று கேள்விகளை கேளுங்கள். 
இதை ஏன் செய்கிறேன்??.
இந்தச் செயலின் விளைவுகள் என்ன?
இதை வெற்றிகரமாகச் செய்வேனா?

6. அச்சம் எப்போது நெருங்குகிறதோ, அப்போதே அதை எதிர்த்து, அடித்துக் கொன்று விடுங்கள்...!!

7. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.

8. காற்று வீசும் திசையில்தான் மலரின் வாசனை பரவும். ஆனால் உங்கள் நல்ல இயல்புகள் எல்லாத் திசையிலும் பரவும்.

9. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.

10. உங்கள் குழந்தைகளை முதல் ஐந்து வயது வரை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்துங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நண்பர்களாய் நடத்துங்கள்.

11. எல்லா இடங்களிலும் மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வி. இளமையின் அழகைக் காட்டிலும் உயர்ந்தது கல்வியின் மதிப்பு.

12. பார்க்க முடியாதவர் முன்னால் நிலைக் கண்ணாடி எப்படி பயன்படாதோ அது போல் முட்டாள்களுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களும் பயன்படாது.

13. ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்கள் முட்டாள் தனத்தைப் பொருட்படுத்தாததன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்.

14. அற்பமான ஜந்துக்களிடம் கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.

15. அரசர் எளிய குடிமகன் போல் வாழ்கிற தேசத்தில், குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள்.

16. தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை...!!

நீடூழி வாழ வாழ்த்துக்கள்...!!

Thursday, March 17, 2016

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்

குட்டிக்கதை:
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!
அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!

Friday, March 4, 2016

Someone asked a teacher,

Someone asked a teacher, 
 why do you feel proud of being a teacher? 

he smiled and said 
" A lawyer's income increases with increase in crime and litigation.

 A  doctor's income increases with increase in disease /  illness.

But a teacher's income increases with increase in knowledge, prosperity of people and
 Nation ...!!".

That's why we feel proud...

Dedicated to all Teachers....

Wednesday, February 24, 2016

தியானம் தான் உனக்கு ஏற்றது என்றால் புத்தரைப் போல உட்கார்ந்து விடு

தியானம் தான் உனக்கு ஏற்றது என்றால் புத்தரைப் போல உட்கார்ந்து விடு 

மௌனமாக ஒன்றும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்து விடு 

சிந்திப்பது கூட ஒரு காரியமாக தெரியும் அளவுக்கு 

ஆழ்ந்த மோனத்தில் உட்கார்ந்து விடு 

சில நாட்களுக்கு சிந்தனைகள் வந்து போய் கொண்டுதான் இருக்கும் 

அவற்றைக் கவனித்துக் கொண்டே வந்தால் 

அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் 

போகப் போக அவை இல்லாமல் போய் விடும் 

நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே வரும்போது சில இடைவெளிகள் கிடைக்கும் 

அந்த இடைவெளிகளில் உன்னுடைய உயிர்த்தலை பார்த்து விடுவாய் 

அப்படி பார்க்கும் காட்சிகளை 

உடலில் இருந்தும் பெறலாம் 

நெஞ்சத்தில் இருந்தும் பெறலாம் 

புத்தியில் இருந்தும் பெறலாம் 

ஏனென்றால் அப்போதுதான் நீ உடலாகவும் நெஞ்சமாகவும் 
மனமாகவும் 

அவற்றைக் கடந்த ஒன்றாகவும் இருக்கிறாய் 

நீ அவை ஒவ்வொன்றில் இருந்தும் சம தூரத்தில் இருக்கிறாய் 

அதுதான் துரியம் என அழைக்கப் படுகிறது 

உடலை மறுக்க வேண்டாம் 
நெஞ்சத்தை மறுக்க வேண்டாம் 
புத்தியை மறுக்க வேண்டாம் 

நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இருந்து கொள் அங்கிருந்தே சாதகம் செய்ய ஆரம்பித்து விடலாம் 

எந்த நம்பிக்கையும் வேண்டியதில்லை 

உன்னை நீயே நம்பி ஏற்றுக்கொள்ளும்  போது பிற நம்பிக்கைகள் எதற்கு 

கடவுள் உன்னை ஏற்றுக்கொள்கிறார் எனும்போது உன்னை யாரும் மறுக்க முடியாது 

கடவுள் உன்னுள் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார் 
அவர் உனக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 

உடலும் நெஞ்சும் மனமும் கூட்டாக ஈடுபடும் தியானத்தை முயன்று பார் 

அப்போது நீ உயிர்த்திருப்பதை உணர ஆரம்பித்து விடுவாய் 

நீ எதனிடமாவது சரணாகதி அடைந்தால் அதுதான் புத்தராகிப் போவது 

அகந்தையானது அகந்தை கழிந்து போன ஒன்றிடம் சரணடைவது சிரமம் 

ஆனால் ஒரு அகந்தை இன்னொரு அகந்தையிடம் சரணடைவது மிகச் சுலபம் 

எங்கே யாரிடம் சரணடைய முடியுமோ அங்கே அவரிடம் சரணடைந்து விடு 

முடிவு அந்த மனிதரை சார்ந்திருப்பது இல்லை 

உன்னுடைய சரணாகதியோடு தொடர்புடையது அதன் பயன் 

சரணடையும் அந்தப் பண்பே உன்னை மாற்றி விடுகிறது 

மனிதர்கள் வார்த்தைகளுக்கு அடிமை ஆகிப் போகிறார்கள் 

எந்தக் கிளர்ச்சியான வார்த்தையும் பயன் தராது 

பிறரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கிறவர்கள் தத்தம் லட்சியத்துக்காகப் பிறரை வற்புறுத்துகிறார்கள் 

முழுமை உனக்குள் இயங்கும் போது நீ அங்கே இருக்க மாட்டாய் 

நீ பரந்த சூன்யமாகிப் போவாய்

Wednesday, February 17, 2016

கந்த சஷ்டிவிரதம் ,நற்புத்திரப்பேறு




Friday, August 29, 2014


கந்த சஷ்டிவிரதம் ,நற்புத்திரப்பேறு


கந்த சஷ்டிவிரதம் 



கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய!கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அநுட்டிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே. 

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து ‘காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். 


மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா! 

மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரதவிழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித் த நாள்.


கந்த விரத மகிமை

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம்விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவுஎன்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.



கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை 

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உபவாசம் இருப்பது மிக நல்லது  எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு,பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனதுசக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த ருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்இதுவாகும்.
கந்தசஷ்டி விரத பயன்கள்
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில்
எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்
போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையைநிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கிஉட்கொள்ள வேண்டும்.



மனித மனம் 

விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது.ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை ஆறு உட்பகைகள் : அவா, கோபம், மயக்கம், கஞ்சத்தனம், செருக்கு, பொறாமை
(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.



கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.


கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்


முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.


அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.


விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.


ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.


அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.


நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

 சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.


மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.


அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.


இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.*


கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?



கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும்ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில்வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்றதலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்தவினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழிஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்குஉரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச்சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாககுழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டிவிரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம்செய்வார் என்பது அசைக்கமுடியாதநம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால்அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாககூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்டமுனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்துகடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும்கடைப்பிடித்த விரதம் இது.
வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக்கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிகஎளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில்உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாகவிரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால்போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களைவிருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தைநியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத்தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம்உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசிஉணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலைமற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர்விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடிநடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலைஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டிகவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ளமுருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில்ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும். 
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்துநீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜைஅறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினைஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருளவேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ளமுருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினைஎடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனைஅகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருளவேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடிசந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாதுபோன்றவற்றால் முருகனின் படம் அல்லதுவிக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டுஅலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில்கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினைவைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்துநறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்தமயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்யபுஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச்சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும்இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத்தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன்செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம்என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரியசஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீபஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம்செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள்அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால்முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனைவதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டுதிருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில்அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோநீராடவேண்டியது அவசியம். அன்று இரவுபக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய்தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்)  பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன்கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தைதரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும்கூறுவதும் உண்டு.  வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம்கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள்எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும்தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராயஅல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடைவீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம்என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன்தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லதுதேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதிஎன்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கியதெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாயஎன்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும்திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியைவிரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒருநாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள்ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில்(அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில்மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில்முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும்அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
சரவணபவ தத்துவம்
சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள்நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம்கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால்அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன்தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம்மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும்பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானைவேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனிஉத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின்அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன்அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும்அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச்செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும்துதிக்கப்படுகிறான்.
உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறுகுழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்றுசேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம்வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன்பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும்இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன்ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).
மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு

ரு - ருத்ரன் என்கிற சிவன்
 - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும்செய்து மக்களுக்கு அருளும் கருணைவடிவமானவன். 
ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரிதேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறுகூறுவார் :
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒருமுகம்.
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும்பெறலாம். 
ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாகவிளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்தஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதிவாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்றுமயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றிவர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகிமுருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுரமயில்.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின்திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமேதிருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்றநாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம்என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம்சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லாபுராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம்சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால்போற்றப்படுகிறான்.
கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:
முருகப்பெருமான்  அசுரர்களானசூரபத்மனாதியோரை வதம் செய்ததிருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி  விரதவிழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்” என்கின்ற  அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்அமையப் பெற்றவன்.
சூரபன்மன்  ஆணவ மலம் கொண்டவன்.தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன்கன்ம  மலத்தின் வடிவம். இவர்களை ஞானம்என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது  எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்றமும்மலங்களில் இருந்து  வீடுபேறடைய ஞானம் என்றஇறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன்  நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.
சூரபத்மனின் வரலாறு:
பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இருபுதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன்சிவனை  நோக்கித் கடுந்தவம் புரிந்து பலவரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாதுயாகம் செய்ததினால் சிவனால்  தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம்  புரிந்து சிவனிடம் இருந்துமேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள்அசுரர்களின்  குருவான சுக்கிரனால்(நவக்கிரகங்களுள் வெள்ளியாககணிக்கப்பெறுபவர்)  ஏவப்பட்ட “மாயை” என்னும்அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமைஎல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும்அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன்கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்டசிங்காசுரனும், யானைமுகம் கொண்டதாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகிஎன்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப்பெற்றனர்.
இவர்களுள்  சூரபதுமன் சர்வலோகங்களையும்அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றுசிவபெருமானை நோக்கி கடுந்தவம்  புரிந்து; 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும்ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும்  தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒருசக்தியாலும் அவனை அழிக்க முடியாது  என்னும்வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன்தம்மைப்போல் பலரை  உருவாக்கி அண்டசராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணைமணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக்கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்குபதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக்கொண்ட-வச்சிரவாகு ஆகிய நாங்கு புதல்வர்களும்,வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர். இவர்களுடன்இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும்கூறப்படுகின்றது.
சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால்ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனானசயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டுசித்திரவதை செய்து அதர்ம வழியில்ஆட்சிசெய்யலானான்.
அசுரர்களின்  இக் கொடுமைகளைத் தாங்க முடியாததேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம்கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க  அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்தஆறுமுகன் அவதரித்தார்.
ஆறுமுகன் அவதாரம்:
தேவர்களை  துன்பத்தில் இருந்து காப்பாறும்நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய  ஐந்துமுகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமேதெரியக்கூடிய “அதோமுகம்”  (மனம்) என்னும்ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறுதீப்பொறிகள்  வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான்ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி  விளையாடும்தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில்மலர்ந்திருந்த தாமரை  மலர்களின் மீது சேர்த்தான்.
அந்த  தீப்பொறிகள் ஆறும் உலகின்பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறுகுழந்தைகளாக  தோன்றின. அந்த ஆறுகுழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள்சீராட்டி,  பாலூட்டி வளர்த்து வரும் வேளைஅகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள்  அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திடஅவையாவும் ஒரு திருமேனியாக  வடிவங் கொண்டுஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒருதிருமுருகனாக  தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடையதிருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப்பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ்என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ  சொரூபியான முருகப் பெருமானிடம்காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும்  கடவுளானருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன்ஆகிய மும்மூர்த்திகளும்  அடக்கம். ஆறுமுகன்சிவாக்கினியில் தோன்றியவன். அதனால்“ஆறுமுகமே சிவம்,  சிவமே ஆறுமுகம்”எனப்பெறுகின்றது.
வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர்தோன்றல்:
சிவபெருமானின்  நெற்றிக் கண்ணில் இருந்து ஆறுதீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து  வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாதுசிவனருகில் இருந்த பார்வதிதேவி  பாய்ந்துஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்முகளில் இருந்த  நவரத்தினங்கள் சிதறிவிழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவன்னின்பார்வை  பட்டதும் அவைகள் நவசக்திகளாகதோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில்  வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர்(100009) தோன்றினர். இவர்கள்  ஆனைவரும் பின்புமுருகனின் படைவீரர்களாயினர்.
அன்னை வழங்கிய சக்திவேல்:
அம்மையும்  தன்னைப்போன்ற ஒரு சக்தியைஉருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்டஓர்  வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன்வெற்றிதரும் வீரவேலை முருகனிடம்  வழங்கினர். ஈசனும் தன் அம்சமாகிய பதினொருஉருத்திரர்களைப் படைக்கலமாக்கி  முருகனிடம்தந்தார்.
அம்மையப்பனிடம்  வேல் வாங்கிய முருகன், தேரேறிதெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி  செல்கையில்; விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன்(ஆனைமுகம்  கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும்பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால்தாரகன் தன் மாயையால்  வீரவாகுதேவர் முதலானமுருகனின் சேனையை அழுத்திசிறைப்படுத்துகின்றான்  அப்போது முருகனின்கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன்அழிகின்றான்.  வீரவாகுதேவர் முதலானோர் மலைச்சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன்  ஒருசிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தைசிவனிடமிருந்து பெற்றவன்.  தாரகனின் நண்பனானகிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம்பெற்று  மலையுருவானது. அந்தமலையாக தனதுமாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட  முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு  துடிதுடித்துவீராவேசம் கொண்டான்.
தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம்பெறுதல்:
மன்னி  ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம்எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப்  பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றிபாசுபதம் என்னும் அஸ்திரம்  வழங்குகின்றார். பின்னர்அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கிமொத்தப்  படையும் கிளப்புகின்றது. முருகன்அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும்  திருச்செந்தூர் வந்து தங்கினர். அங்கு பராசரமுனிவரின் புதல்வர்களும்  (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனைவரவேற்று வீழ்ந்து  வணங்குகின்றனர்.
வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப்  பெருமான் புதிதாக கட்டப்பெற்றஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும்சொல்லுமாறு கேட்கின்றார். அதன்  பின்னரேவீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.
முருகப்  பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம்தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட  அமரர்களுக்கு ஆறுதல்சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான்.முருகன்  என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான்தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது  நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.
சூரனின்  ஆணவத்தால் தூது முறிகின்றது. அதுமாத்திரமன்றி தூது சென்ற  வீரவாகுதேவரையும்சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை  சிறைப்பிடிக்க சென்ற அவுணப்படையுடன் வீரவாகுதேவர் போர்புரிகின்றார்.  அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனானவச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திரவாகு, ஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலைசெய்யப்படுகின்றனர்.
திருச்செந்தூரில்  ஆறுமுகக்கடவுள், திருமால்,பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற  சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போதுவீரவாகுதேவர்  திருச்செந்தூர் திரும்ன்பிவந்துமுருகனிடம் தூது நிகழ்வுகளை முன்  வைக்கிறான்.
முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்றுதிருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்றுஅங்கிருந்து சூரனின் இராசதானியாகியவீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.
கந்தப்பெருமான்  வீரபாகு தேவரை நோக்கி“பாவங்களை அளவில்லாமல் புரிந்துகொண்டிருக்கும்  சூரபத்மன் முதலான அசுரர்களைஅழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம்  பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்துவீரமகேந்திரபுரிக்குச்  செல்லவேண்டும்.”நம் தேரைக்கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.
தங்கள்  துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதியதேவர்கள் கந்தப்பெருமானின்  கழலிணைகளைவணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படிவீரவாகு தேவர்  மனோவேகத் தேருடன் பாகனையும்அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து  இறங்கிய எம்பெருமான், ” நாம் சூரபன்மனை அழிக்கவீரமகேந்திரபுரி செல்கிறோம்.  நீங்களும் அவரவரதுவாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்றுதேவர்களுக்கு  உத்தரவிட்டார்.
பிரம்ம தேவர்  அன்னப்பறவை மீதும், திருமால்கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும்  லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றையதேவர்களும் தத்தம் வாகனங்கள்  மீதும் ஏறிக்கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.
நினைத்த  மாத்திரத்திலேயே எல்லாப்புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும்தொடர்ந்தார்கள். அதனை அடுத்து  இரண்டாயிரம்வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன்புறப்பட்டன. வானவர்கள் பூ  மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம்,  கரடிகை பல வாத்தியங்கள்முழங்கின. முருகப்பெருமானுடன் சென்றபூதப்படைகளின்  பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம்.கடலில் பூத சேனைகள்  இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான்இருந்தது. கடலில்  இருந்து பெரிய பெரிய மீன்களும்திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று  இருந்தன.பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின்  புழுதியாகி எங்கும் பறந்தது.
வீரமகேந்திரபுரி  (சூரனின் இராசதானி)தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அதுநீரில்  மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவுஇலங்கை. இலங்கை வழியாகப்   எம்பெருமான்வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால்,  இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியைவணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன்  இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத்தகுதி பெற்றதல்ல.  அந்நகருக்கு அடுத்தஎல்லையாகிய இங்கேயே தங்கியிருந்துபோர்செய்வதற்குப்  பாசறை அமைத்துக்கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள்.சுவாமி அந்த  வேண்டுகோளைஏற்றுக்கொண்டார்கள்.
தேவதச்சனை  அழைத்து “உடனே விரைந்து இங்குஒரு பாசறை ஏற்படுத்து” என்று எம்பெருமான்  ஆணையிட்டார். தேவதச்சன் உடனேமாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும்,  வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால்நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல  வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்குஏமகூடம்” என்று பெயர்  வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர்  கீழே இறங்கியது. சுவாமிஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளைநிறுத்தினார்.  இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று  அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமேகதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம்  என்றால் ஒளிமயமான விருப்பத்தைஎல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள்.  அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவேஅவரை நேரே தரிசிக்கக்  கூடாதென்று திரைபோடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீபஒளியைத் தரிசனம்  செய்யவேண்டும்.]
ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர்துவங்குகிறது.
பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்றகிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன்அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம்இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன்போருக்குச் செல்கின்றான்.
பானூகோபன்  மாயயால வித்தைகள் செய்துபோர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாகஅவதரித்து போருக்கு வந்துள்ளார்,  தேவர்களைவிடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் எனதந்தையாகிய  சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம்அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன் தானே போருக்குச் சென்று முருகனையும் அவன்சேனையையும் அழிக்கப் போவதாக  வீராவேசம்கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான்மூத்தமகன் இருக்க  தந்தை போருக்கு செல்வதுசரியில்லை என கூறிய பானுகோபன் தான்போருக்குச்  செல்ல அனுமதி தரும்படி சூரனிடம்வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை  ஆசீர்வதித்து போருக்கு அனுப்பிவைக்கின்றான்.பானுகோபன்  நன்நீர்க் கடலில்  முருகன்சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்துவிடுகிறார். அதன் போது  பானுகோபனும் முருகன்வேலுக்கு பலியாகிறான்.
சிங்கமுகன் வதை: 
பானுகோபன்  பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன்போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன்  ஒரு பெரும்ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர்சிவனே. சிவனுடன்  போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர்வாழலாம்  என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன்கேட்காமையால் செஞ்சோற்றூக்  கடனுக்காகபோர்புரியச் செல்கின்றான். இவன் பல மாயவித்தைகள் செய்தும், பல  விதமாக முருகவேளுடன்போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால்உடனே  அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும்வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப்  பெருமான் வேல்கொண்டு கொல்லாதுகுஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம்  செய்கின்றான்.
சூரன் சங்காரம்:
சூரன்  அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம்பெற்றவன். சிறந்த சிவபக்தன்.  ஆணவமலத்தால்பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன்  சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச்சேனைகளையும் இழந்து செய்வதறியாது  நின்றசூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு  செய்து முருகப்பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைதொடுத்தான்.  அவையாவும் முருகவேளின்கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன்  தனதுமாயயாலங்களினால் பலவாறாக தோன்றிபோர்செய்தான். அப்போது முருகன் சூரனை  நோக்கிஇப்போதும் நீ உயிர்வாளலாம் தேவர்களை சிறையில்இருந்து விடுவித்து  விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை.அதனால்  போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய்போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில்  பலப்பல மாயங்கள் செய்துபோர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல்போனதினால், உதவிசெய்ய இருந்த  உற்றமும்சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால்சூரனும் மயங்கித்  தத்தளித்தான். தன்னுடன் போர்செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய  ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டுதன்  திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே  என பரமேசுரவடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும்ஒலியும் போல  ஒருவரே என்றுணர்த்தியும், தன்தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனதுஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன்தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற இந்திரஞாலம்”என்னும்தேரை அழைத்து முருகனின்படைச்சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச  உச்சியில்வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம்என்றதேரும் அவன்  கட்டளையை நிறைவேற்றமுருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்குகொண்டு செறது.  முகனின் வேலானது சீறிப்பாய்ந்துதேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம்  கொண்டு வந்துசேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன்உடைமையாக்கிக்  கொண்டார். இது கண்டசூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால்சிவனால்  அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயைமுருகனை அழிக்கும்படி  ஏவினான்.
சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது  முருகனின் வேல் அதனை மழுங்கச்  செய்துசெயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது.கடைசியாக சூரன் தனது  அம்புப் படையைமுருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல்அதை  பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என  உறுதியாகதெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வதுமானக் குறைவு என  எண்ணிய சூரன் ஆணவமிகுதியால் தொடர்ந்து போராட துணிதுசக்கரவானபக்ஷியாக  உருமாறி வானில் பறந்து பலஅழிவுகளை  ஏற்படுத்தியதுடன்  முருகனின்சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது  கண்டமுருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும்எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்ததர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனைமயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது  பறந்துசூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயாலவித்தைகளினால் மறைந்து  தாக்கி மறைந்தான்.
தனது  படையினரையும்,  படைக் கலங்களையும்இழந்த  சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்துஒழிக்கலானான்.  கடைசியாக முருகப் பெருமான்எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம்துரத்திச்  சென்று கடைசியாக நடுக்கடலடியில்மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை;  நீரினுள்சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம்செய்தது.
ஆணவம்  அழியப் பெற்ற சூரன் தம் தவறைஉணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டிநிற்க; அவன்மேல் இரக்கம்  கொண்டு; பிளவுபட்டமாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால்  சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலைவாகனமாகவும் சேவலைக் கொடியிலும்  தன்னுடன்பிணைத்துக் கொண்டார்.
கந்த  புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில்மாவறுத்தான்” என்ற சொற்றொடர்  மூலம் நகைச்சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகியமுருகப்  பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்தசூரனை இரண்டாக அரிந்தார் என்பது  இதன்பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீரமகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றி  வீரத் திருமகனாய், முருகப் பெருமான்திருச்செந்தூர் திரும்புகின்றான்.  சூரனுடன் முருகப்பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினைஅடக்கி ஆட்கொண்ட  நாளே இறுதி நாளாகிய சஷ்டிஎனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப்பெரமான் குடிகொண்டுள்ள  ஆறுபடை வீடுகளில்ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகியநெய்தல்  நிலமாகிய திருச்செந்தூர் என்னும்தலமென கூறுவாருமுளர்.
சூரனை  அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில்போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின்  ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசைசெய்கிறான் முருகன். இந்தக் கோலமே  நாம்இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன்  செந்தூர் மூலத்தானத்துமுதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால்,  கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே  முருகப் பெருமான் அபயம்/வரம் தரும்கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும்  கோலத்தில்உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும்  வேலையோ/யோகதண்டத்தையோ தோள் மீது சார்த்திவைத்திருப்பார்கள்; பின் கரம்  சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,தியானத்தில்  முழந்தாளில் கைவைத்து, ஈசனைமலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள்செய்யப்படுகின்றன!
மூலவரின்  காலடியில் இரு மருங்கிலும் அவரைப்போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில்  ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து  விட்டது). கருவறையைக்காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும்மூர்த்திகளாக  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில்  சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளைகுடைந்தே கருவறை அமைந்துள்ளது  அதனால்தான்செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள்  (வீதிகள்) என்று பெருகிப்பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.
கிழக்கே  கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன்  ஆதலால், அதேஉயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலைசூடி, மணி முடி  தரித்து, வங்கார மார்பில் அணிப்பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி  நிற்கும்காட்சி!
சூரசம்ஹாரம்  நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர்ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம்  நடைபெறுவதற்குவசதியாக செந்தில் ஆண்டவனின் அருள்கருணையால் உள் முகமாகச்  சென்று சூரசம்ஹாரம்முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும்போது  கடலானது பழைய நிலைக்கு வருவதை காணமுடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின்  முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்டவியர்வைத் துளிகளையும்  காணக்கூடியதாகஇருக்கின்றது.
முருகப்  பெருமான் சூரபத்மனோடும் அவனதுபடையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும்,சேவலாகவும் மாற்றினார். மயில்  முருகனுக்குவாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடிஆகியது.
சூரசங்காரங்கள்  முடிந்த பின்னர், அமரேந்திரன்(இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப்பொய்கையில் முன்னர் தாம் அருளிய  வாக்கின்படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில்மணக்கிறார். பின்னர்,  அவ்வண்ணமே வள்ளிஅம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

ஒரு சமயம் தாரகாசுரன் என்பான், தான் பெற்றவரத்தினைத் தவறாகக் கையாண்டான்; மக்களையும், நல்லோர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும்மிகவும் கொடுமைப்படுத்தினான். அவனதுகொடுமையிலிருந்து விடுபட முனிவர்களும்,ரிஷிகளும்
சிவபெருமானிடம் முறையிட்டார்கள்; அசுரனின்கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றபிரார்த்தனை செய்தார்கள். பக்தர்களின்நிலையறிந்த சிவபெருமான், தன் மகன் முருகனைஅழைத்து தாரகாசுரனை
அழிக்க உத்தரவிட்டார். மேலும் முருகனுக்குபதினாறு வகைஆயுதங்களையும் கொடுத்து அருளாசிவழங்கினார். தன் தந்தையிடம் அருளாசி பெற்றமுருகப் பெருமான், தன்னுடைய படையுடன்தாரகாசுரன் ஆட்சி புரிந்த மாயாபுரி நகருக்குச்சென்றார்.
முருகப் பெருமானின் படையினைக் கண்ட அசுரன்,கிரெளஞ்ச மலையின் உதவியுடன் முருகப்பெருமானின் படையை மயக்கம் அடையச் செய்தான்.படை வீரர்கள் மயக்கமடையக் காரணமாக இருந்தகிரெளஞ்ச மலையை தன்னுடைய வேலாயுதத்தால்தாக்கி, இருக்குமிடம் இல்லாமல்
செய்தார் முருகப் பெருமான். பின் அதே வேகத்துடன்மாயாபுரிக்குச் சென்று, தன்னை எதிர் கொண்டு வந்ததாரகாசுரனை அழித்து, பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார். அந்த நாள் தைப்பூச நட்சத்திரமாகும்.
இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப்பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய
வேண்டும். இதனால்
   - இச்சா சக்தி
   - கிரியா சக்தி
   - ஞான சக்தி
என்ற மூன்று வகை சக்திகளையும் பெற்று வளமுடன்வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.
சிவபெருமான் தைப்பூச நன்னாளில் அம்பிகையுடன்ஆனந்தத் தாண்டவம் ஆடினார் என்று புராணங்கள்கூறுகின்றன. தேவர்களும், முனிவர்களும்சிவபெருமானுடைய ஆனந்தத் தாண்டவத்தைஎல்லோரும் கண்டு மகிழும் வண்ணம் சிதம்பரத்தில்கனகசபை உருவாக்கினர்.
இன்றும் அதில் நடராஜப் பெருமான் நடன தரிசனம்தந்து கொண்டிருக்கிறார்.
நெல்லையம்பதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில்தவமிருந்து இறைவனின் திருவருளினை உமையவள்பெற்றாள். அந்த நாள் தைப்பூசம் என்பர். இந்தப்புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள்எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்பதுஐதீகம்.
*"எவ்வுயிரையும் தம்முயிர் போல் கருதி அன்புசெலுத்தினால் ஒழிய இறைவனின் திருவருளைப் பெறஇயலாது," *எனக் கருதி,* "வாடிய பயிரைக் கண்டபோதும் உள்ளம் வாடியவர்,"* வள்ளலார். அவர்ஜோதி வழிபாட்டினை இதே தைப்பூசத் திருநாளில்தன்னைப்
பின்பற்றுபவர்களுக்கு 25.1.1872ம் ஆண்டுஅறிமுகப்படுத்தி வைத்தார். இன்றும்
இந்த ஜோதி தரிசனத்தை வடலூர் திருத்தலத்தில்தைப்பூச தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்கண்டு தரிசிக்கிறார்கள்.
இந்நாளில்  விரதமிருந்து முருகப் பெருமானைவழிபட்டால்
குறையில்லா வாழ்வும், நிறைந்த செல்வமும் கிட்டும். 

விரதமாவது மனத்தை ஐம்புலன்களின் எண்ணப்படிசெல்லாது கட்டுப்படுத்தி உணவை விடுத்தேனும்குறைத்தேனும், மட்டுப்படுத்தி மனம், வாக்கு, காயம்எனும் முக்காரணங்களாலும் இறைவனைவழிபடுதலாகும்.
முருகனுக்குரிய விரதங்கள்:
விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்டதெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள்மூன்றாகும். ஒன்று வாரத்தையும் மற்றதுநட்சத்திரத்தையும் மற்றொன்று திதியையும்கொண்டமைந்தவை யாகும்.
அவை முறையே சுக்கிரவார (ஐப்பசி வெள்ளி) விரதம், கார்த்திகை (கார்த்திகை மாதக் கார்த்திகைநட்சத்திரம் முதல் மாதந்தோறும் வரும் கார்த்திகைநட்சத்திரங்களில் அனுட்டிக்கும்) விரதம், கந்தஷஷ்டிவிரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்தவிரதம் கந்த ஷஷ்டி விரதமேயாகும்.
இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும்பெருமையும் மிக்க திருச் சொந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும், மிகச் சிறப்பாக பக்தி பூர்வமாக மக்களால் விரும்பிமன ஒருமைப்பாட்டுடன் அனுட்டிக்கப்படுகின்றது.
வருடந்தோறும் ஐப்பசி மாத தீபாவளியினையடுத்துவரும் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறுநாட்களிலும் பக்தி சிரத்தையுடன்கைக்கொள்ளப்படும் விரதம் இதுவாகும்.
அடியார் விரும்பும் பேறுகளையும் சகலசெளபாக்கியங்களையும் சிறப்பாக புத்திரபாக்கியத்தையும் தரவல்லது இவ்விரதம். இதனை“சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” எனும்பழமொழி உணர்த்துகின்றது.
இதன் வெளிப்படையான பொருள் சாதாரணமானதே.எனினும் உட்பொருள் அர்த்தம் அதிகம் பொதிந்தது. அதாவது. சட்டியில் கந்த ஷஷ்டியில், இருந்தால்= விரதமிருந்தால், அகப்பையில்= கருப்பையில், வரும்= குழந்தைச் செல்வம்= கரு உண்டாகும் என்றஅருமையான கருத்தும் தொனிக்கின்றதல்லவா! பிரதமைத் திதியில் தொடங்கி பகல் 12 நாழிகைக்குக்குறைவின்றிப் பஞ்சமித் திதியும் பின் சட்டித் திதியும்உள்ள தினமே சூரன்போர் நாளாகும்.
இதனை வேடிக்கையாக “சங்கரப் பிள்ளைசட்டியிலே மாவறுத்தார்” என்று ஒரு பழமொழிகூறுவர் ஆன்றோர். இதன் உட்பொருள்: சங்கரப்பிளை= சங்கரனின்=பரமசிவனாரின்பிள்ளை= குமரனான கந்தசுவாமியார், சட்டியிலே= கந்தஷஷ்டித் திதியன்று மா= மாமரமாக நின்றசூரனை, அறுத்தார் = தனது வேற்படையினாலே இருகூறாகப் பிளந்தார்.
பல திருத்தலங்களிலே இவ்வாறு நாட்களும் தீவிரமுருகனடியார்கள் முழு உபவாசமாக அன்னஆகாரமின்றி பகல் முழுதும் தூயராகக் கோவில்களிலேயே தங்கிக் காப்புக்கட்டி முருக நாம பஜனை, பூசை புராண படனம் கேட்டல், ஆகிய இறைசிந்தனையுடன் நீரும் குடிக்காமலிருந்து மாலைபூசை தரிசனம் முடிந்ததும் பானக்கம்= பானகம் எனும்நீராகாரத்தை மட்டும் அருந்தி கடுந்தவமிருப்பது
முதல்நாளான அமாவாசையன்றே ஒருநேரஉணவுடன் மறுநாளான பிரதமையன்று அதிகாலைஸ்நானம் செய்து தூய ஆடையணிந்து கோயிலுக்குச்சென்று திரிகரண சுத்தியுடன் விரதமனுட்டிக்கத்தொடங்க வேண்டும். ஆலயங்களில் ஆரம்பநாளிலேயே சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டிஆறுநாட்களும் நோன்பினைக் கடைப்பிடித்து ஏழாம்நாளான பாரணையன்று அதிகாலை நீராடிஅனுட்டானம் செய்து பாரணைப் பூசையை மனதாரத்தரிசித்து வேண்டி காப்பினை அவிழ்த்துத் தர்ப்பையுடன் குருதட்சனை கொடுத்து அடியார்களுக்குஉணவும் கொடுத்துப் பாரணை செய்தலே யாவரும்கைக்கொண்டு வரும் நடைமுறையாகும்.
இது மிக்க மன ஒருமைப்பாட்டுடன் இன்றும்திருச்செந்தூர் முதலாமறு படை வீடுகளிலேயும், இலங்கையில் யாழ் நகரிலுள்ள முருகன்ஆலயங்களிலும், திருகோணமலையிலேவில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் முதலியஆலயங்களிலும் இன்றும் நடைமுறையிலுள்ளதைக்காணலாம்.
இவ்வாறு அனுட்டிக்க இயலாதோர் முதல் ஐந்துநாட்களிலும் பகல் ஒருவேளை உணவுட் கொண்டுசூரன் போர்த்தினமான ஷஷ்டியன்று உபவாசம் = அன்னாகாரம், நீரருந்துதல் எதுவுமின்றிஉபவாசமிருந்து சூரன் போர் முடிய நீராடிக் கடவுள்தரிசனம் செய்து பானகம் மட்டுமருந்திவிரதமிருக்கலாம். சூரன் போரன்று நித்திரையினைத்தவிர்த்தல் வழமை. ஆனால் இது அனைவராலும்கைக்கொள்ள இயலாத ஒன்றே. இயன்றவர்கள்கடைப்பிடிக்க வேண்டியதே!

விரத உத்தியாபனம்: (விரதத்தினை நிறுத்துதல்)
ஆறு, அல்லது பன்னிரண்டு வருடங்கள்உபவாசமாயினும் சரி ஒருபோதுணவாயினும்இடையில் மாற்றமின்றி அனுட்டித்துக் குறித்த வருடம்பூர்த்தியானதும் விரத உத்தியாபனம் செய்து உரியபடிவிரதத்தினை நிறுத்துவதே முறையும் வழமையுமாகும்.
விரதம் தோன்றிப் பரவியமை:
முருகப் பெருமான் தாரகாசுரன் சிங்க முகாசுரன்சூரபத்மன் ஆகியோருடன் ஐப்பசிமாத வளர்பிறைமுதலாறு நாட்களில் போரிட்டு வென்றார். கந்தன்கருணையினையும் அவரது பேரருட் செயலையுங்கண்டு களிப் பேருவகை கொண்ட தேவர்களும்முனிவர்களும் இவ்வாறு நாட்களையும் புனிதநாட்களாகக் கொண்டு நோன்பு அனுட்டித்தனர்.
இதனையே பூலோகமக்களும் கடைப்பிடித்துஅறுமுகப் பெருமானின் திருவருள் பெற்றுய்யஇவ்விரதத்தினை அனுட்டிக்கத் தொடங்கினர்.

விதிவிலக்கு:
இவ்விரத நாட்கள் பெரும்பாலும் ஆறுநாட்கள் வரும்.ஆனால் ஒருசில வருடங்களில் பஞ்சாங்க நேரக்கணிப்புக்கு அமைய திதிகளின் நேரம் கால அளவுகுறைவு ஏற்படுமிடத்து ஐந்து நாட்களும் வரலாம்.
கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்றஷண்முகப் பெருமானைத் தாலாட்டி வளர்த்தகார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர், படைவீடுகளும்ஆறு, அவருக்குரிய சக்தி வாய்ந்த மந்திரஅட்சரங்கள்-அதாவது எழுத்துக்களும் ஆறுயந்திரத்தில் கீறப்படுகின்ற கோணங்களும் ஆறு, ஷட்கோணம் அறுகோணம் என்பர். கைமேல் பலன்அளிக்கின்ற விரதநாட்களும் ஆறு.

விரதகாரர் பெறும் பேறு:
கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டிவிரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர், வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு”நன் மகவு வேண்டின் மக்களைப் பெறுவரெ ன்றும்,பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன்றாங்கு மாழிசூழுலக மெல்லாம் வேண்டினு மடைவர்மாதோ”
இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்யவிரும்பினால் இயைந்த கன்னியர்களைமணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரைவிரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர். பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்தசுடிகையையுமுடைய பலதலைகள் பொருந்தியஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்தஉலகத்தையெல்லாம் பெறுவர்.
பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தைநலமுற முமுட்சு வாகிக் குருவினால் ஞானம் பெற்றுப்புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்தவலைகடல் வடிவாங் கந்த னடியிணை நீழல் சேர்வார்(இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாதுவிரதம் அனுட்டிப் போர் பாவம் நீங்கிசித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்திவிருப்பம் எழப்பெற்று, பின் ஞானசற்குருவையடைந்து, ஐம்புலப்பகைவராதியோரைவென்று, பூரண ஞானானந்த சொருபராகும் முருகப்பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப்பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்). எனவேநாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின்திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வு பெறமுயலுவோமாக.




No comments: