பரிகாரங்களில் மிகச் சிறந்த, அனைத்து தடைகளையும் உடைத்து , உடனடி முன்னேற்றம் தர விஜயாபதி , நவகலச யாகம் !
நமது ஜோதிட பாடம் பயிலும் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை - உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். மிக முக்கியமான கட்டுரை. திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க - ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் - இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி - நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம்.
எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் - நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !
ஆணெனில் 31 வயதுக்குள்ளும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளும் திருமணம் முடிந்துவிட்டால்,அது திருமணத் தடையென்று எடுத்துக்கொள்ள முடியாது.இந்த வயது எல்லை அதிகபட்ச எல்லையாகும். ஆனால்,நடைமுறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.முறைப்படி வரன் பார்த்தும்கூட ஏழு ஆண்டுகள்,பத்தாண்டுகளாக வரனைத் தேடிக்கொண்டே இருப்பவர்களுக்கு சிறந்த,செலவு குறைந்த தோஷப்பரிகாரமாக விஜயாபதி நவகலச யாகம் இருக்கிறது.
திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் கருவுற்றாலே புத்திர தோஷம் இல்லை என்று பொருள்.பல தம்பதிகளுக்கு கருவுறுதல் கூட நடைபெறுவதில்லை;இப்படிப்பட்ட தம்பதியரின் ஜனன ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் யாராவது ஒருவருக்கு புத்திர தோஷம் இருக்கும்.புத்திர தோஷம் கடந்த ஏழு முற்பிறவிகளில் செய்த கடுமையான கர்மவினையின் /வினைகளின் விளைவாக புத்திர தோஷத்தை உருவாக்குகிறது.இந்த புத்திர தோஷம் நீங்கவும் விஜயாபதியின் நவகலச யாகம் சிறந்த பரிகாரமாக அமைந்திருக்கிறது.
லக்னத்துக்கு , ஒன்று , மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் இராகு அல்லது கேது ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது பிதுர்தோஷம் ஆகும்.இது உரிய ஜாதகரின் வாழ்க்கையில் திருமணத்தடை,புத்திர பிறப்புத் தடை,அரசுப்பணியில் சேர இயலாமை,சொந்த வீடு வாங்கவோ/கட்டவோ இயலாமை; நல்ல வாழ்க்கைத் திருப்புமுனைகளை அனுபவிக்க இயலாமல் போகுதல்;குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் இருப்பது போன்றவைகளால் தினசரி வாழ்க்கையே போராட்டமாகிவிடும்.இந்த நிலை நீங்கிட, விஜயாபதியில் நவகலச யாகம் செய்வது அவசியம்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தாலும்,ஒருவரை ஒருவர் ஏழாம் ராசியில் பார்த்தாலும் அது நான்கு தலைமுறைவரையிலும் சொத்துக்காக சண்டைபோட்டு அதன் சாபத்தை அனுபவிப்பதைக் காட்டுகிறது.இந்த கிரகநிலையுள்ள ஜாதகர் எந்த ஒரு சிறு முன்னேற்றத்திற்கும் கடுமையாகப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.இந்த நிலை வாழ்நாள் முழுக்கத் தொடரும்.இந்த சூழ்நிலையை மாற்றி வாழ்க்கையில் நல்ல விரைவான முன்னேற்றம் காண விஜயாபதியில் நவகலசயாகம் செய்துகொள்வது நன்று.
இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம்
ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.
ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .
இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.
ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.
உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.
தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.
ஒரு முறை நவகலசயாகம் செய்ய மொத்தம் சுமார் ரூ.4000/- வரை செலவு ஆகும். ஆகும்.இந்த நவகலச யாகத்தினை குரு தட்சிணை எதுவும் வாங்காமல் செய்து வருபவர் தெய்வத்திரு . ஆன்மீக செம்மல் ஐயா. மிஸ்டிக். செல்வம் அவர்களின் நேரடி சீடர்களில் ஒருவரான , திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் வசித்து வருகிறார்.
விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும்.கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா,இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர் புளியங்குடியிலிருந்து விஜயாபதிக்கு தமது சொந்தச் செலவில் கார் ஏற்பாடு செய்து கொண்டால் நல்லது. போக்குவரத்து வசதி கொஞ்சம் குறைவுதான்.
தோஷமுள்ள ஜாதகர் தமது குடும்பத்தோடு விஜயாபதிக்கு வந்து நவகலச யாகம் செய்வது நல்லது; தவிர்க்க இயலாதவர்கள் தனியாகவும் வரலாம்.மேலும் விபரமறிய திரு.சிவ.மாரியப்பன் அவர்கள்,புளியங்குடி-.இவரை தாங்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எல்லா நாட்களிலும் தொடர்புகொண்டு பேசலாம்.
ஓம்சிவசிவஓம்...

No comments:
Post a Comment