Monday, August 3, 2015

வியாசர்-நற் சிந்தனைகள்

வியாசர்-நற் சிந்தனைகள்

* பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை.பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.

* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

* பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம்.பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

* பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால்,அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

* கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது.பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.

* புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.

* நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.

குருநானக்-நற் சிந்தனைகள்

* உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம். நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்தி,அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள்.

* உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது?சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை.கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.

* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

* சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு.அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.

கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் - நற் சிந்தனைகள்

* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய,அதிலுள்ள முள்ளைச் சீவ வேண்டியதில்லை. அதுபோல,படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளிவிட வேண்டும்.

* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும்.
அதுபோல குதர்க்கபுத்தி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும்.அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான்.

* கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றினாலும்,அதை சாவி கொடுத்து இயக்கியவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா?அதுபோல,உலகவாழ்க்கை இயற்கையாகவே நடப்பது போல கண்ணுக்குத் தோன்றினாலும்,அதை இயக்குவிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.

* உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள். உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை.அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில் அறியவல்லவர் தான் யார்?

* ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும். காய்ந்த மண்ணில் செடி பட்டுவிடும். அதுபோல,இரக்கம் கொண்ட மிருதுவான இதயத்தில்தான் பக்தி வளரும். கடினமான இதயத்தில் பக்திக்கு இடமே இருப்பதில்லை.

ஹரிதாஸ்கிரி சுவாமி-நற் சிந்தனைகள்

* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால்,பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது. அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான்.

* கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.

* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம்.இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால்,நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது,நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.

பாம்பன் சுவாமி-நற் சிந்தனைகள்

*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும்.ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள்.நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால்,கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.

பார்பர்-விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

1.ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

2.எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

3.எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

4.செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

5.பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

6.நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

7.நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.

சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி

1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

பாரதியார்-நற் சிந்தனைகள்

துன்பம் நம்மைத் தீண்டும்போது, கலங்காமல் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள்.அப்படி சிரிக்கத் தொடங்கினால் அந்தச் சிரிப்பே துன்பத்தை வெட்டுகின்ற வாளாக மாறிவிடும்.

* கோயிலுக்குப் போனாலும், போகாவிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தெய்வத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும் தவறில்லை. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வத்தின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

* தைரியம் இருக்குமிடத்தில் தான் உண்மையான தெய்வபக்தி இருக்கும்.தைரியத்தை வளர்த்துக் கொண்டால் இந்தப் பிறவியிலேயே மனிதன் அழியா இன்பம் பெறுவான்.

* தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காணும் ஆற்றல் இல்லாதவன் மலைச் சிகரத்திற்குச் சென்று தவம் செய்தாலும் கடவுள் காட்சியைப் பெற முடியாது.

* நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் தெய்வத்திடம் உடனே பெற முடியாது.பக்திநிலையில் பக்குவம் பெற்ற பிறகே நம் எண்ணங்கள் ஈடேறத் தொடங்கும்.

* ஒருவன் தனக்குத் தானே நண்பனாக இருந்தால் உலகமே அவனுக்கு நண்பனாகிவிடும்.
பகைவனாக இருப்பவன் இந்த உலகத்தை தனக்கு எதிரியாக்கிவிடுவான்.

urs
www.v4all.org



No comments:

Post a Comment