Showing posts with label team building program in ooty. Show all posts
Showing posts with label team building program in ooty. Show all posts

Tuesday, November 3, 2015

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:-

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:-

* காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.

*பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.

*ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.

*குளித்தபின் உணவு உண்ணுங்கள். 

பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.

*பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.

*வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள். 

ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.

*ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.

*மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.

*பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.

*கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.

*மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.

*பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு,திங்கள் வியாழன், சனி.

*வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

*லுங்கி,கைலி அணியாதீர்கள். வறுமை வாட்டும். 

வேஷ்டியே நல்லது. 

நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.

*வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள். 

இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.

*புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.

*அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.

*மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.

குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.

வயிரவர் அகவல்

வயிரவர் அகவல்.

சீர் புகழ் வயிரவன் செந்தமிழ் உரைக்க
கார் புகழ் மேனிக் கணபதி அருளே
ஆதிபராபரி அருளிய நூதல்விழி
சோதி போலெழும்பி சுடரொழியாகி
வீதியில் எழும்பி விசும்பையும் கடந்து
ஓதிய மந்திரம் உட்சாடனமாய்
ஓங்காரம் கொண்டு ஒரு முகமாகி
ஆங்காரம் கொண்டகாரமாகி
விக்கினம் தீர்க்கும் விறுமவயிரவா
அப்பமும் அவலும் ஆலங்காயும்
செப்பிய மாங்கனி திகழ் தட்டுறட்டி
தேன் கதலிப்பழம் பலாப்பழம்
அத்தனை எல்லாம் அருந்திடுவைரவா
ஐயும் கிலியும் அகோர வைரவா
மவ்வும் கிலியும் ஆன வைரவா

சவ்வும் கிலியும் சங்கார வைரவா
றியுங் கிலியும் ஏறு வயிரவா
பவ்வும் கிலியும் பாதாள வயிரவா
சதியோடு அருள்புரி சச்சுதானந்தா
பாம்பெலும் பணியும் பராபர சொரூபமே
சாம்பலும் அணிந்து தலையோடேத்தி
சுடலையில் நின்று சுடலை காத்தாயே
கெங்கைக் கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நடனம் புரிந்து
பாரிக்கும் பேயை பதற அடித்து
பக்கப் பசாசை பதறத் துரத்தி
ஈடளித்திடுவாய் ஏக வயிரவா
ஐயனே உந்தன் அருளுண்டானால்
வையகம் பிணி வாதபித்தம் வந்திடு சிலேட்டுமம்
அப்பிணி எல்லாம் அகற்றிடு வயிரவா
கையில் பிடித்த கண்ட கோடாலியும்
காதிலணிந்த கவச குண்டலமும்
காலில் தரித்த தண்டை பாடகமும்
பாதக் கொலிசு பழ பழ என்றொலிக்க
நாத வீணை நலம் பெற முழங்க
செம்பொன் மேனியும் திருநீற்றழகும்
உச்சும் குடும்பியும் உதிர வாயும்
அலறிய பல்லும் அண்ணார்ந்த பார்வையும்
அரையில் கட்டிய காவியொட்டியாணமும்
சூலமும் மழுவும் சுடரொழி வாழும்
அன்பாய் வந்து அடியேன் செய் பூசையை
நன்பாய் வந்து நல்லருள் புரிவாய்
நாய் வாகனத்தில் நடனமிடுபவா
கெங்கை கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நல்வரமளிப்பாய்
நான்முகன் சிரசை நறுக்கிய வயிரவா
நளின காளியுடன் நடனம் புரிந்தவா
எப்போதும் என்னை ரட்சித்தருள்வாய்
ஈசன் தன் திருமகனே
மாதன வாவி மலர்த் தடாகத்தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் பருவத்துதித்துக் களிக்கும்
சச்சிதானந்தா சரணம் சரணம்.

Monday, November 2, 2015

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் முன்டாசு கவி பாரதி. உழவுக்கு வந்தனை செய்யும் நாள் தை திருநாள். தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாளே ஆயுத பூஜை. 

சொற்ப்போர், மற்போர், விற் போர், ஒப்பனை அலங்காரம் முதலான அணைத்து கலைகளுக்கும் அதிபதி அன்னை கலைவாணியே. 

அகஸ்திய முனி அருளிய சரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்ரத்தில். 

அணுரூபே மஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:

என்கிறார். அக்காலத்திலேயே அணுத்துகள் இருந்து இருக்கிறது. அனுவிற்கு அணுவாகி என்கிறார் மாணிக்க வாசக பெருமான். ஔவையார், கம்பர் என அக்கால கவிங்கர்கள் பலர். உடல் அணு, அணுத்துகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள். 

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

அக்காலத்திலேயே விஞ்ஞானம் இருந்து இருக்கிறது. விஞ்ஞானம் என்கிற சொல்லும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது சித்தர்களையும், ரிஷிகளையும் விட பெரிய விஞ்ஞானிகள் உண்டோ?

எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே. நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.

குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். அவர் இயற்றிய சகல கலா வல்லி மாலையை சொன்னால். உங்களுக்கு சகலமும் நடக்கும், சர்வமும் கிடைக்கும் என்றெல்லாம் அடியேன் ஓவரா பில்ட் அப் செய்ய விரும்பவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றில் தனி தன்மை, திறமை இருக்கும். அதை சிலர் உணர்வதில்லை. சிலர் உணர்ந்தும் அதை வெளிபடுத்த. அதன் மூலம் பணம், புகழ் பெறும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. 

இந்த சகல கலா வல்லி மாலையை நீங்கள் சொல்ல, சொல்ல. உங்களுக்கு இயற்க்கையாக எதில் திறமை உள்ளதோ. அந்த திறமையை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் திறமைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் உங்களுக்குள் உள்ள கலை திறமை நீங்கள் சகல கலா வல்லி மாலையை சொல்ல, சொல்ல அது மேலும் வளரும். உங்களின் உள்ளொளி பெருகி. உங்கள் முகத்தினிலே ஒரு வித தேஜஸ் வரும். உங்களின் விதி கூட. இதனால் சற்று மாறும். மாபெரும் சபைகளில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் விழும். கலைவாணியின் அருளோடு. கடுமையான பயிற்ச்சியின் மூலம். உங்களுக்கு வராத சில கலைகளை கூட கற்று அதில் திறமையை வளர்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சகல கலா வல்லி மாலையை ஓதி. நீங்கள் விஜயம் பெற அதை இங்கே தருகிறேன். 

விஜய தசமி அன்று தான் இதை நீங்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்றிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம். 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? ஜகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3 

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5 

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6 

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7 

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8 

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
urs




Wednesday, October 28, 2015

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

Wednesday, October 7, 2015

தினம் ஒரு முருகன் ஆலயம்

தினம் ஒரு முருகன் ஆலயம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

மூலவர் : ஓதிமலையாண்டவர்
உற்சவர் : கல்யாண சுப்பிரமணியர்
தல விருட்சம் : ஒதிமரம்
தீர்த்தம் : சுனை தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஞானமலை
ஊர் : இரும்பறை
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா: 
தைப்பூசத்தில் 9 நாள் பிரம்மோற்ஸவம், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம். 
தல சிறப்பு: 
ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். 

திறக்கும் நேரம்: 
திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 - மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும். 

முகவரி: 
அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், புஞ்சைபுளியம்பட்டி வழி, இரும்பறை - 638 459. மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம். 

போன்: 

பொது தகவல்: 
வெண்மணல் பிரசாதம்: சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார். 

பிரார்த்தனை: 
இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, "வரம் கேட்டல்' என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 

நேர்த்திக்கடன்: 
சுவாமிக்கு பாலபிஷேகம், சந்தனக்காப்பு செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். 

தலபெருமை: 
அம்பிகை இல்லாத சிவத்தலம்: படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, "கவுஞ்சவேதமூர்த்தி' என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது. பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' என்று அழைக்கப்படுகிறது.

தல வரலாறு: 
படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு "ஆதிபிரம்ம சொரூபம்' எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார்.

urs
www.v4all.org 

Wednesday, September 30, 2015

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் .

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் .
* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில்இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்
.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லது
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும்.
புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
Ankhamuthu Kumar's photo.

Tuesday, September 22, 2015

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை



Wednesday, September 16, 2015

ஈசனை ஏன் வணங்கவேண்டும் ?

ஈசனை ஏன் வணங்கவேண்டும் ?
நமச்சிவாய
சிவத்தை ஜீவனாக உணர்வோர் பாதம் பணிகிறேன்
எத்தனையோ தெய்வம், எத்தனையோ முறைகள், எத்தனையோ வழிகள் என்று சிறுவயது முதல் வழிபட்டு வந்த என்னை, எல்ல இடத்திற்கும் அலையவிட்டு, மெய்யை உணர்த்தி ஈசன் தான் முழுமுதற்கடவுள் என்றுணர்த்தி நின்னை பற்ற வைத்த நின் கருணையால் விளைந்ததே இப்பதிவு
# எம் தேவையை கேட்டு அழுது புலம்பி பெறாமல், எம் தேவையை எனக்கு முன் அறிந்து அருளும் கருணை,
# அந்த பூஜை, இந்த நேரம், அந்த வேண்டுதல் என்று எதையும் செய்யாமல் தூய அன்புடன் வணங்கினால் அகிலத்தையே அருளும் கருணை.
# அங்கு சென்று கேட்க வேண்டும், இங்கு சென்று பணியவேண்டும், என்று இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைத்து அருளும் கருணை.
# நான் எதை பெற்றாலும் நின் மூலம் தான் பெற்றேன் என்று தன்னை வெளிக்காடமல் அருளும் கருணை.
# நான் எங்கு சென்றாலும், எதைசெய்தாலும் என்னுடன் இருந்து காக்கும் கருணை.
# நீ பொய், நீ இல்லை என்று உன்னை விட்டு விலகிசென்றாலும் ஈர்த்து ஆண்டு அருளும் கருணை.
# உன் இடம் பெற்றதை கொண்டு தெய்வமான பலர் இருக்கு, நீ தான் மெய்தெய்வம் என்று வெளிக்காடமல் அவர்கள் மூலமாகவே அருளும் கருணை.
# ஆயிரம் மந்திரம் கூறி வணங்க வேண்டாம், “ நமசிவய “ என்று ஐந்து எழுத்து மந்திரம் மூலம் எதையும் பெறவைக்கும் கருணை.
# உற்றார் உறவினர் என்று அனைவரும் விடுசெல்லும் மயானதில்கூட இருந்து யமக்கு அருளும் கருணை.
# எவராலும் அருளமுடியாத பிறவிப்பிணி அறுத்து என்னை உன்னையாகும் மாபெரும் கருணை.
இன்னும் எதனை எத்தனையோ நின் கருணையை சொல்ல இப்பிறவி போதாது பெருமானே.
உணர்ந்ததை கூட பதியமுடியாமல் இருக்கவைக்கும் நின்கருனையுடன் திருச்சிற்றம்பலம்
அடியேன்
அங்கமுத்து குமார்

Sunday, September 13, 2015

5 Ways To Increase Your Annual Income


5 Ways To Increase Your Annual Income- WWW.HAPPY4ALL.ORG


Invest in Enriching Your Life and Increasing Your Income
Invest in Enriching Your Life and Increasing Your Income
Increasing your annual income has many benefits- mainly, ability to afford a quality lifestyle for you and your family, and also the ability to manage unexpected money requirements.
Here are five practical ways to increase your annual income.
#1: Invest in Yourself – Add Value to Your Self Worth
Investing in yourself will give you disproportionately high return on investment- both for the amount of money invested and the time you spent.
DIY Tips to Invest in Yourself
  • Leverage the power of learning. Add a new skill, learn a new language, or try something that’s been on your bucket list.
  • Set aside time on a daily or weekly basis to read informative blogs, articles or books.
  • Attend a workshop, webinar or training to stay updated on the latest trends.
  • Explore your creative side to exercise untapped areas of your mind. This will open up different doors of perception- personally and professionally.
Invest time in taking a sabbatical – Retrospect, introspect and regain your focus
How Does This Increase My Annual Income?
Better skills, greater knowledge and wider perception, all lead to a higher level of opportunities.
#2: Invest Smart – Monetarily not Momentarily
Talking about increasing income is incomplete without considering the actual monetary aspect of investing smart.
DIY Tips to Increase Your Future Annual Income
How Does This Increase My Annual Income?
Increase your profits by investing wisely. Instill a long term perspective to evade myopic results from a short-sighted plan.
#3: Invest in a Long Term Career Path – Map Your Progression Professionally
Mapping your professional interests can help you strategically build your career path.
DIY Tips to Chart Your Career Path
  • Do a SWOT analysis on your professional traits. Determine your strengths, weaknesses, opportunities and threats. In this way you can identify the best opportunities that can help you progress with purpose.
  • Inculcate a long term vision. Do not let short term challenges come in the way of building your potential in the future.
How Does This Increase My Annual Income?
Being at the right place, at the right time with the right capabilities, tactically improves your career prospects.
#4: Invest in Rewarding Risks – Zone Out of Your Comfort Zone
Taking risks can snap you out of your comfort zone.
DIY Tips to Zone Out of Your Comfort Zone
  • Take a chance to challenge yourself. Push your limits beyond the monotony of mediocre tasks. It is a bitter truth that machines will replace you eventually.
  • Focus on work that allows you to build your capabilities, even if it means making a drastic change.
How Does This Increase My Annual Income?
Stepping out of your bubble automatically unlocks new possibilities
#5:  Invest in Health – Focus on Your Physical, Mental and Social Well Being
The real wealth is in the health and well being of your body, mind and social interaction. While the increase in disposable income may translate to a higher standard of living, it could also lead to increasing health issues.
DIY Tips to Enrich Your Wealth in Health
  • Physical Health
    • Exercise. If not for the physical benefits, it also helps in reducing your healthcare bills.
    • Eat healthy. A home cooked meal is not only healthier but also lighter on the pocket.
  • Mental Health – Many occupational lifestyle diseases are creeping into urban population. Maintain a good work-life balance to avoid mental problems such as depression, hypertension and neurological issues.
  • Social Well Being – Whether you admit it or not, who you interact with socially and your lifestyle have a big impact on your personality. The social environment you choose to be influenced by will affect the way you think and the decisions you make. Choose wisely.
How Does This Increase My Annual Income?
You become the environment you live in. Make it clean, green and lean on the body, mind and wallet.

Thursday, September 3, 2015

The mountain man was given due respect and a state funeral by the Government of Bihar.


People from his own village laughed and made fun of him as the task seemed impossible, but he continued with his work for nearly 22 years continuously . Dashrath Manjhi, also popularly known as the Mountain Man of India who took on a mountain and single-handedly carved a path through it. He gave 22 years of his life to his village and made a difference in the lives of the people of this small village in the state of Bihar.
Using a hammer and chisel as his only work tools over these 22 years, Dashrath Manjhi, a poor, landless farmer, carved a path through a mountain in the Gehlour Hills, Bihar just so that his village could have easier access to medical facilities. Manjhi – The Mountain Man, is an upcoming documentary on the life of this man and will be Directed by Ketan Mehta, .
dashrath-manjhi-mountain-man-of-india-who-carved-the-poor-mans-taj-mahal
Let’s inspire ourselves to do the impossible and read some facts about the Mountain Man:
The villagers from Manjhi’s village had to travel 70 kilometres to reach to the nearest town to get medical attention.
In the year 1959, Dashrath Manjhi’s wife Falguni Devi died from lack of medical care.
In the memory of his wife, he took up a challenge and started carving the path in the Gehlour hills so that his village could have a better and easy access to medical facilities being offered in a nearby village.
  • He worked day and night for 22 years and broke down the hill.
  • The path is 360 foot long and 25 foot deep.
  • He shortened the distance from 70 kilometres to just one kilometre.
  • He worked from 1960 to 1982.
  • For his achievement, Manjhi became popularly known as the ‘Mountain Man’.
  • He died on August 17, 2007 at the age of 73, while suffering from gall bladder cancer.
  • To honour his achievements, a hospital in his name is also proposed for serving the villagers.
  • He was called the poor man’s Shah Jahan by filmmaker Ketan Mehta who has also made a documentary on his life.
  • His name was also proposed by the Bihar government for the Padma Shri award in 2006.
When a movie on his life titled ‘Manjhi’ was announced to be made by a Bollywood producer-director duo, Manjhi was on his deathbed. He just put his thumb impression on an agreement and gave away the “exclusive rights” to make a film on and around his life.
The mountain man was given due respect and a state funeral by the Government of Bihar.

Thursday, August 27, 2015

வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

வர்த்தக காட்சிகளில் எவ்வாறு விற்பது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
Center for Exhibit Industry Research –இன் ஆய்வின் படி, அடுத்த 12 மாதங்களுக்குள் உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் தான் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தருவார்கள். இதுமாதிரியான ஒரு வாய்ப்பை வீணாக்கிவிடாதீர்கள் – உங்கள் பணியாளர்கள் சிறப்பாக விற்பனையை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
மென்மையான விற்பனைகளைத் தவிருங்கள்
வியாபாரக் காட்சிகளுக்கு கடின விற்பனை அணுகுமுறை தேவைப்படுத்துகின்றது. பங்கேற்பாளர்கள் உங்கள் அரங்கிற்கு வருகை தரும் போது அவர்களிடம் உடனடியாகச் சென்று, உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வருமாறு அவர்களை அழைக்க வேண்டும். மக்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. வர்த்தகக் கண்காட்சிகளில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகக் கடினம். 60 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் உதவி கிடைக்காத பட்சத்தில், உங்கள் அரங்கை விட்டு அவர்கள் நகர்ந்து விடுவார்கள்.
தொடர்புபடுத்துங்கள்
உங்கள் அரங்குக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்க சிறந்தவழி உங்களுடைய தொழில் நேர்த்தி மற்றும் உதவும் தன்மை ஆகியவற்றை பிரதிபலித்துக் காட்டுவதாகும். பொருத்தமற்ற வரவேற்புகளான "நான் உங்களுக்கு உதவலாமா", "ஹாய், ஹவ் ஆர் யூ?", அல்லது "கண்காட்சி எப்படி நடக்கிறது?" போன்ற கேள்விகளைத் தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக, நேரடியான கேள்வியைக் கேட்பதன் மூலமாக பார்வையாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் இதனால் அவர்களின் ஆர்வங்களும் தெரியவரும் -- " எங்கள் புதிய கருவியைப் பற்றி நான் என்ன கூற வேண்டுமென விரும்புகிறீர்கள்?" அல்லது "ஹலோ, எங்களுடைய இந்த கருவியைப் பாருங்கள்?" என்று கூறுங்கள்.
உங்கள் நடத்தைகளில் கவனமாக இருங்கள்
நீங்கள் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தால், உங்களுக்கு ஆர்வமில்லை என நினைத்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் நகர்ந்து விடுவர். அமந்திருக்க வேண்டாம். அரங்கில் இருக்கும் போது உணவருந்தவோ, குடிக்கவோ, புகைக்கவோ கூடாது. உங்கள் அரங்கை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் உங்கள் சக பணியாளர்களுடன் நேரத்தை செலவிட வேண்டாம்.
அனுகூலமானதை மிக வேகமாக கணக்கிடவும்
ஒருவரை முதலில் பார்க்கும் போதே, அவர் யார் என்பதையும் (வாங்குபவர், முடிவு எடுப்பவர், விநியோகத்தர், போட்டியாளர், மற்றும் பல ) எங்கு இருக்கிறார் என்பதையும் கண்டிப்பாக நீங்கள் கண்டறிய வேண்டும். இதன் மூலம், உங்கள் உற்பத்திப் பொருளை சேவையை கொள்வனவு செய்ய விருப்பமில்லாதவர்களுடன் அல்லது உங்கள் சேவை கிடைக்காத இடத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கலாம். அவர்களிடம் சில முக்கிய கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்களது பேட்ஜ் அல்லது பெயர், முகவரிகளைக் கொண்ட விசிடிங் கார்டுகளைப் பார்ப்பதன் மூலம் இத்தகவலை நீங்கள் அறியலாம்.
ஏராளமான கேள்விகளைக் கேளுங்கள்
ஆம்/இல்லை என்பதை காட்டிலும் அதிகமாகப் பதிலளிக்கக்கூடிய வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள். அவர்களது தேவைகள் மற்றும் ஆர்வத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் பதில்களைக் கொண்டே, இந்தத் தேவைகளை உங்கள் உற்பத்தி அல்லது சேவை எந்தளவு நிறைவேற்றுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 80/20 என்ற விதியைக் கடைபிடிக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் -- அதாவது 80% கவனிக்கவும், 20% பேசவும். ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த விற்பனை வாசகங்களைத் தவிர்க்கவும், 50 வது முறை அதே பேச்சை தொடரும் போது உங்கள் குரல் இயந்திரம் போல் மாறிவிடும்.
சிறந்த பதிவுகளை வைத்துக்கொள்ளவும்
அனுகூலமானவை எனத் தெரிபவை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் ஒரு "குறிப்பு அட்டையில்" பதிந்து கொள்ளுங்கள். அதில், நபரின் பெயர், தொழில், முகவரி, தொலைபேசி/தொலைநகல் இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இவை அனைத்தும், ஒரு நபரின் வர்த்தக அட்டையில் கிடைக்கும்), அவரது தேவைகள்/ஆர்வம், பாதீடு மற்றும் நேரம் என்பன இருத்தல் வேண்டும். கண்காட்சி முடிந்து அலுவலகம் சென்றதும், இந்த அட்டையில் உள்ள தகவலைக் கொண்டு வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Friday, August 14, 2015

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்
(share) செய்யுங்கள்)
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை


DrS
tar Anand

மாந்திரீக தந்திர ரகசியங்கள்

மாந்திரீக தந்திர ரகசியங்கள்
(share) செய்யுங்கள்)
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.
விளக்கு ஏற்றும் விதம்
(7)தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
(8)வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
(9)புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
(10)சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
(11)பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
(12)கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
(13)மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்
(14)பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(15)குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(16)நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
(17)நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
(18)விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
(19)வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
(20)ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்
அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்


DrStar Anand

நம்பிக்கை தான் வாழ்க்கை

நம்பிக்கை தான் வாழ்க்கை
நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டிருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம். நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது நிஜம். நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும். ஆம், நம்பிக்கை தான் வாழ்க்கை. மேலே படியுங்கள்......
நாம் எல்லோரும் நம் மனதில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் வாழவே முடியாது என்பது தானே நிஜம்? இரவில் நிம்மதியாக தூங்கப் போகின்றோம், நாளை கண்டிப்பாக தூக்கத்திலிருந்து விழிப்போம் என்கின்ற நம்பிக்கையில். அம்மாவை நாம் அவர் தாம் நம் அம்மா என்று நம்பிக்கையுடன் ஏற்க வில்லையா? அவர் காட்டியவரை தந்தை என்று நம்பிக்கையுடன் ஏற்கவில்லையா? இதிலெல்லாம் சந்தேகம் அல்லது நம்பிக்கையின்மை வந்து விட்டால் வாழ்க்கை நரகமாகிப் போகாதா?
எப்பொழுதும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. அஷ்ட லஷ்மிகளில் எல்லா லஷ்மிகளும் நம்மை விட்டு போய் விட்டாலும் தைரிய லஷ்மியை மட்டும் நாம் நம்மை விட்டுப் போக விடக் கூடாது. அப்படி தைரிய லஷ்மியை நம்மோடு வைத்துக் கொண்டால், நாம் ஒரு போதும் நம்பிக்கையை இழக்க மாட்டோம்.
நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினைக்க வேண்டும் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்? 30 வருடங்களுக்கு மேல் ஒருவன் வாழ்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்பார்கள்.
இன்று பணக் கஷ்டம், அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். இறைவனை நம்பிக்கையுடன் வணங்குங்கள். வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும். வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.



வாசியை அறிந்தவன்'s photo.

மறு பிறவி உண்டா?

மறு பிறவி உண்டா?
என்ன தான் நாம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில விஷயங்கள் நமக்கு இன்னும் புதிராகவே உள்ளன. அவற்றில் ஒன்று தான் இறப்புக்குப் பின் என்ன என்பது. இன்றைய விஞ்ஞானிகள் இறப்புக்குப் பின் ஒன்றும் இல்லை என்பார்கள்.
நமது பண்டைய முனிவர்கள் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூற்றுப் படி இறப்பு என்பது மனித உடலுக்குத்தானேயொழிய 
உயிருக்கு அன்று. உயிர் அழிவற்றது. உயிரை ஆன்மா என்றும் சொல்லலாம்.
ஆன்மா ஒரு உடல் கெட்டுப் போய் விட்டால் அதை விட்டு பிரிகிறது. மீண்டும் சரியான நேரத்தில் இன்னொரு உடலுக்குள் அது பிரவேசிக்கும்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் அடையாத, நிறைவேறாத விஷயங்கள் பொறுத்து உங்கள் அடுத்த ஜென்மம் அமையும். உதாரணமாக இந்த ஜென்மத்தில் அற்ப ஆயுளில் ஒருவரது உயிர் பிரியும் நிலையில் இருந்தால் அவரது ஆன்மா நீண்ட ஆயுளுக்கு ஏங்குகிறது. அந்த ஏக்கம் அடுத்த ஜென்மத்தில் நீண்ட ஆயுள் உடையவராக பிறக்க வைக்கிறது.
இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய முடியாத ஒரு காதலனை அல்லது காதலியை நீங்கள் அடுத்த ஜென்மத்தில் அடையக்கூடும்.
இந்த பிறவிக்கு முடிவு தான் என்ன? உங்கள் ஆன்மா வளர்ச்சியடைத்து கொண்டே செல்லும் பல பிறவிகளில். தன்னை அறிந்து, பரமாத்மாவை உணர்ந்துமுக்தி அடையும் நிலை வரும் வரை இந்த பிறவித் தொடர் கதை தொடரும்.
தியானம் செய்தால் உங்கள் ஆன்மா வளர்ச்சியுறும் என்பதில் ஐயம் வேண்டாம். நீங்கள் முக்தி அடையும் ஜென்மம் விரைவில் வரும்.
இதைப் படிக்கும் சிலருக்கு இது அபத்தமாக தெரியக்கூடும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது சில வருடங்களுக்கு முன்.


வாசியை அறிந்தவன்'s photo.

விவாகரத்து இந்தியாவில் அதிகரிப்பது ஏன்?

விவாகரத்து இந்தியாவில் அதிகரிப்பது ஏன்?- www.v4all.org
இந்தியப்பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ, விவாக ரத்து மட்டும் ராக்கெட் போல் உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடிய நிகழ்வாக இருந்தக் காலம் போய் விட்டது. தொட்டதெற்கெல்லாம் விவாக ரத்து என்ற நிலை இங்கேயும் என்று வந்துவிட்டது.
விவாகரத்து இந்தியாவில் அதிகரிப்பது எதனால்?
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதிக அளவில் இன்று வேலைக்கு போகிறார்கள். சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் அவர்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லை. அதனால் அவர்கள் இல்லறத்தில் பெரிய பிரச்சனைகள் வரும் போது விவாக ரத்துக்கு தயாராகிவிடுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். பெண்கள் சம்பாதிப்பது என்பது நல்ல விஷயம் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் விவாக ரத்துக்கள் அதிகமாகிறது என்பது மட்டும் நிஜம்.
சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகள் இன்றைய இந்த நிலைமைக்கு ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
மேலை நாட்டு கலாச்சாரம் இங்கே பெரிய அளவில் ஊடுருவ்வுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பெண்கள் அதிக அளவில் இன்று படிப்பதும், உலக விஷயங்கள் பற்றி அறிந்து இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
பெண்கள் தங்கள் உரிமை பற்றி விளிப்புணர்வு பெற்று இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்போது சில கெட்ட விஷயங்களும் நடக்கத்தான் செய்யும்.
விவாக ரத்து அதிகரிப்பது தவறு என்று சொல்ல முடியாது. அது காலத்தின் கட்டாயம்.
ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் யாதெனில், அற்ப விஷயங்களுக்காக விவாகரத்து வரை செல்லக்கூடாது என்பது தான்.
விவாக ரத்து என்பது கணவன் மற்றும் மனைவி மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. அவர்கள் பிள்ளைகளை அது பெரிதும் பாதிக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடா து.
ஆறுதலான விஷயம் என்ன வென்றால், என்ன தான் இந்தியாவில் விவாக ரத்து அதிகமாகி விட்டாலும் இன்றும் உலக அளவில் பார்க்கும் போது நம் விவாக ரத்து எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
மேலை நாட்டுடில் கல்யாணம் பண்ணாமல் சேர்ந்து வாழுவது தான் அதிகம் என்கிறார்கள். கல்யாணம் பண்ணும் அந்த கொஞ்ச பேரில் சுமார் 52 சதவிகிதம் பேர் விவாகரத்து பெறுகின்றனர்.
இந்தியாவில் எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு தான் வாழ்கிறோம்.இருப்பினும் நம்மில் வெறும் 1 சதவிகிதத்தினர் தான் விவாகரத்து கோருகின்றனர்.
உலகில் மிக குறைந்த அளவில் விவாக ரத்து பெறுவதில் நாம் இரண்டாம் இடத்தில் உள்ளோம். அயிரிஷ் மக்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.
திருமணத்தை மதிப்போம்.பெண்களை மதிப்போம். விவாகரத்தை தவிர்ப்போம். வாழ்க இந்தியக் கலாச்சாரம்!


வாசியை அறிந்தவன்'s photo.