உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
www.v4all.org
வேலைகளில் மிகக்கடினமான வேலை உங்கள் குழுவில் மனிதர்களை எப்படி நிர்வகிப்பது என்பதுதான்”.நிர்வாகத் திறமை என்பது உங்கள் குழுவில்உள்ளவர்களைஎப்படிஊக்குவிப்பதுஅவர்களுக்குவேலைகளில்வரம்பிரச்சனைகளை,சவால்களை எப்படி எதிர்நோக்குவது அதில் இருந்து எப்படி மீண்டு வரச் செய்வது என்பதை குழுவை வழிநடத்தும் தலைவர் எந்த அளவுக்கு செய்கிறார் என்பதைப் பொருத்து உள்ளது.
ஒவ்வொரு மனிதனும் எண்ணத்தால், செயலால், செய்து முடித்திடும் திறனால் வேறு பட்டவர்கள் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் வேலைகளை பங்கிட்டு கொடுக்கும் போதும், செயலை முடிக்கும் திறனை கணக்கிடும் போதும், அது எதிர்பார்த்த அளவு, முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளதா என்பதை அறியும் நாம் தனிமனிதனில் உள்ள வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
இதோ சில குறிப்புகள் :
இந்த மாதிரி மனித ஆற்றலை நிர்வகிக்கும் போது பொதுவாக நான்கு வகையான வழிமுறைகளை கையாளவேண்டும்.
1. செயல்படுத்தும் உங்கள் எண்ணம் (Attitude) என்ன என்பதை மற்றவர்களுக்கு முழுமையாகப் புரிய வையுங்கள்.
2 உங்களிடம் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் தொடர்பை அதிகப்படுத்துங்கள்.
3. உங்களிடம் ஒத்த எண்ணங்களை (consciousof mind) அவர்களிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
4. செய்யும் திறமையை (performance) மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.அதனால் உங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
உதாரணமாக ஆராய்ச்சித்துறை சார்ந்து இருப்பவரை எடுத்துக் கொள்வோம்.
வெற்றி பெற்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகள் ஒரு தனிமனிதனின் விஞ்ஞான அறிவுத்திறனால் மட்டுமேஅமைவதில்லை.இதில் வேளாண்மை ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதனை எடுத்துக் கொள்ளுங்கள். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சிறந்த விஞ்ஞானி என்ற பெயர் எடுத்த பின்பு நாட்டின் ஜனாதிபதி ஆகிய அப்துல் கலாமை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த விஞ்ஞானிகளில் உள்ள தனிப்பட்ட குணம், தன்னைச் சார்ந்த ஆசிரியர்கள்,தன்னுடன் பணிபுரிந்த இளம் விஞ்ஞானிகள், மாணவர்கள் இவர்களை எப்படி அவர்கள் கையாண்டார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் வெற்றி அமைந்தது!
வெறும் அறிவியல் அறிவு மட்டுமே விஞ்ஞானிகளை சிறந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கச் செய்யும் என்று சொன்னால், இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் என்றோ நோபல் பரிசு பெற்று இருப்பார்கள். அவ்வளவு திறமையான விஞ்ஞானிகள் நம்மிடம் உள்ளார்கள்.
ஏன் நம்மால் இன்னும் நோபல் பரிசு அறிவியல் ஆராய்ச்சியில் வாங்க முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. நம்மிடம் உள்ள அறிவியல் கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தொலைநோக்கு திட்டம், முழுமையான செயல்பாடாய் இல்லாமலும், அறிவியல் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் செலுத்தும் முழுமையான ஈடுபாடு, தொழில் தர்மம் இவைகள் குறைவாக இருப்பது போன்ற பல காரணங்களை சொல்லிக் கொண்டு செல்லலாம்.
இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான வேளாண்மை விஞ்ஞானிகள் உள்ளார்கள். ஆனால் எம்.எஸ். சாமிநாதன் மட்டுமே உங்களுக்கு தெரிகிறது. இதை அவர் எப்படி சாதித்து இருப்பார், அறிவியல் அறிவு மட்டுமா அவரை சிறந்த விஞ்ஞானியாக உலகத்திற்கு காட்டியது.
விண்வெளி ஆராய்ச்சியில் எவ்வளவு விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். எப்படி அப்துல் கலாமை மட்டும் மக்களுக்கு ராக்கெட் விஞ்ஞானியாகத் தெரிந்தது.
அறிவியல் அறிவு மட்டுமே வைத்து சிந்தித்து விஞ்ஞானியாக முடியாது. அதனுடன் எப்படி தன்னுடன் உள்ள ஆராய்ச்சியாளர்களை மனித அறிவினால் நிர்வாகம் செய்தார்கள் என்பதிலேயே அவர்கள் வெற்றி அடங்கி இருக்கிறது.
வெற்றி பெற்ற விஞ்ஞானியாக வேண்டுமா. உங்களைச் சார்ந்த ஆராய்ச்சி குழுவை எப்படி நீங்கள் நிர்வகிக்கிறீர்களோ அதில்தான் உங்கள் வெற்றி அடங்கி இருக்கிறது. இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். அதைத் தான் அனைத்து நிறுவனங்களும் “HR Manager” மனித வள மேம்பாட்டு இயக்குனர் என்று ஒருவரை வைத்து, தன் நிறுவனத்தை முன்னேற்ற முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் ஏன் அனைத்து நிறுவனங்களும் வெற்றி பெற்ற நிறுவனங்களாக திகழ முடிய வில்லை.இன்றும் அவர்களால் முழுமையாக செயல்படுத்த முடியாமைதான் காரணம்.
அந்தமுழுமையாகசெயல்படுத்தமுடியாத,இன்றும்அனைவரும் விரும்புகின்ற நிர்வாக உத்திகள் என்ன! வேலை செய்யும் எண்ணத்தை ஊக்குவித்தல்.
சில மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தான் செய்யும் வேலை தனது முன்னேற்றத்திற்கு உதவும்,இதனால் தனக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும்.
இதை உண்டாக்க சில ஈடுபாடு உடைய மாணவர்களுக்கு ஒரு முறை சொன்னால் அதை புரிந்து கொண்டு யோசிக்காமல் செயலில் இறங்கி விடுவார்கள்.
சில மாணவர்கள் பலமுறை நீங்கள் சொன்ன கருத்தை யோசிப்பார்கள், இவ்வளவு கடின வேலை செய்துதான் முன்னேறமுடியும?ஏதாவது குறுக்குவழிகள் உள்ளனவா எளிதாக வெற்றி பெற…இந்த மாணவர்களுக்கு நீங்கள் அதிகம் நேரம் செலவழித்து,உண்மையான நிலையை உதாரணத்துடன் விளக்க வேண்டும், மேலும் நீங்கள் ஒரு முன்மாதிரியாக உழைத்துக் காட்ட வேண்டும்.
இன்னும் சிலர் நீங்கள் என்னதான் அறிவுரை சொன்னாலும்,முன் உதாரணமாகஇருந்தாலும்,தங்களுக்குக்கொடுத்தவேலையில் முழுக்கவனம் செலுத்தத் தயங்குவார்கள்.
இவர்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே உங்கள் வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.
எதையும் ஏற்றுக்கொள்.
ஜீரணம் செய்யக் கற்றுக்கொள்.
No comments:
Post a Comment