Monday, June 15, 2015

குண்டலினி எழுந்தால் என்னவாகும்?

குண்டலினி சக்தியை எழுப்புவ தற்காக
சித்தர்கள் சொன்ன உண்மை ரகசியங்கள் .
---------------------------------------------------------------
குண்டலினி எழுந்தால் என்னவாகும்?
-----------------------------------------------------------
குண்டலினி என்பது நமக்குள்
புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும்,
அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக
சுருண்டு நமது மூலாதாரத்தில்
புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த
குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது,
இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன்
மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு
அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட
முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர்,
நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு
ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது
உடலானது எழுபத்தி இரண்டாயிரம்
நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும்,
இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில்
இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில்
விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும்
குண்டலினியை கவனிப்போம்.
குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த
நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை
சீண்டினால் என்ன ஆகும் சீறிக்
கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு
ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!
ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது
மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி
கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற
குண்டலினி சக்தியானது
மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து
துரியம் என்கிற உச்சந்தலை வரை
கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த
துரியத்திற்கு குண்டலினியை கொண்டு
வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை
காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.
இப்படி குண்டலினியை மூலாதாரத்தில்
இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு
கொண்டு வந்தால் என்னவாகும்?
அந்த அனுபவத்தை கொங்கணவர்
பின்வருமாறு விளக்குகிறார்.
உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.
- கொங்கணவர் -
உணர்வற்று, உடலற்று, யோகமற்று,
ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று,
பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய
இரண்டும் அற்று லெச்சை, கூச்சம்,
சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று,
நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும்
புத்தியும் லயித்து போகவேண்டும் என்று
எண்ணினால் குண்டலி யோகத்தை செய்
என்கிறார் கொங்கணவர்.
இப்போது குண்டலினியை எழுப்பி மேலே
கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில்
மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு
நிலையாக உயர்த்திட வேண்டுமா?
குண்டலினியும் நாடியும்!!
-----------------------------------------
குண்டலினி பற்றிய அடிப்படை
தகவல்களைத்தான் இது வரையில் நாம்
பார்த்திருக்கிறோம். குண்டலினி என்பது
என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி
இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக்
கூடியது? என்பது மாதிரியான விவரங்களை
இதுவரை பார்த்திருக்கிறோம்.
இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியை
எழுப்புவது, அதன் செயல்பாடுகள்,
விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க
வேண்டி இருக்கிறது.
அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்த
பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.
நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்தி
இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித்
தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்த
நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம்
இப்போது அவசியமாகிறது.
நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல்,
நோக்குதல் போன்றவை நேரடி
அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை
நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என
பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற
மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்
சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த
நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம்.
ஆனால் நரம்புகளைப் போல இவற்றை
நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை
சூட்சுமமானது என்கின்றனர்.
மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம்
நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர்
பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும்
விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில்
7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம்
நாடிகளும், இடது கண்ணில் 2000ம்
நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலது
காதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500
நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,
பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,
முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம்
நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலது
கையில் 1500 நாடிகளும், இடது கையில்
1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம்
நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம்
நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,
பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில்
13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள்
என ஆக மொத்தம் 72000ம் நாடிகள்
இருக்கின்றதாம்.
இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள்
முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை
பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை,
காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை,
சங்கினி, குரு என்பதாகும்.
பிங்கலை என்பது வலது நாசியிலும்,
இடங்கலை என்பது இடது நாசியிலும்,
சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு
நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும்,
காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன்
என்பது வலது கண்ணிலும், அத்தி என்பது
வலது காதிலும், அலம்புடை என்பது இடது
காதிலும், சங்கினி என்பது பிறப்பு
உறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும்
ஓடுகிறதாம்.
இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த
எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது
உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு
மையங்களில் இணைந்து பிரிந்து
செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார
மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார
மையங்கள்தான் நமது உடலை இயக்கிக்
கொண்டிருக்கின்றன. இவை
மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான
துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக
அமைந்திருக்கின்றன.
இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு
விளக்குகிறார்.
உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
கொச்சிநரை சொல்லவில்லை
வெளுத்தமார்க்கம்
குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.
- காகபுசுண்டர் -
1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம்
3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம்
6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதார
மையங்கள். இவை மனித உடலில் முறையே
1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு
4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு
7.உச்சந்தலை என ஆறு இடங்களில்
அமைந்திருக்கிறது.
இதுவரை நாடிகள் மற்றும் அவை
குவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றிய
அடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமது
குண்டலினியானது இந்த ஆதார மையங்களின்
ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்
நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி
இந்த பதிவினை இடைச் செருகலாய்
பகிர்ந்தேன்.
குண்டலினியும்... சாதகனும்!
---------------------------------------------
குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோ
இல்லை. அது ஒரு வகையான உள்நிலை
உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து
கொள்ள முயற்சிப்பதில்தான் இதன்
செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்
சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது
உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம்.
உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற
வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.
குண்டலினியை எழுப்பிட பல்வேறு
உத்திகளை நமது முன்னோர்கள்
சொல்லியிருக்கின்றனர்.
அது பற்றி பின்னர்
பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற்
கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர்
பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன்
முதலில் மெய்யான குருவினை கண்டறிய
வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை
குறைத்தவனாக இருப்பது மிகவும்
அவசியமாம். தீவிர
வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க
வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும்,
மனத்தின் ஆவேசமான ஆசைகளைத்
துறந்தவனை மெய்யான குரு தானாகவே
அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே
முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார்.
இத்தகைய குருவின் வழிகாட்டுதலில்
பயிலும் சாதகனே குண்டலியை
எழுப்புவதால் உண்டாகும் முழுப்
பலனையும் அடைவான் என்கின்றனர்.
நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம்,
பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால்
மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன்
இடறி விழுந்து தன்னையே கெடுத்துக்
கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற
அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே,
சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள்
(குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும்
காரணமாய் அமையும் என்கின்றனர்.
யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை.
ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க
வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு
இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க
ஆசிரியன் அவசியம். கடைசியாக
நிதானமானதும் குண்டலினி
எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில்
பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை)
உண்டாகும். ஆதலால் சாதகன்
ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த
ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி
விடுவான்.
குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த
சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க
வேண்டியது மிக அவசியம். குண்டலினி
பற்றிய விபரங்களோ விளக்கங்களோ
முழுமையாக தெரியாதவர்கள் இதில்
வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய
அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.
குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!
----------------------------------------------------------------------
மூலாதாரத்தில் புதைந்திருக்கும்
குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள்
கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில்
பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி,
ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால்
குண்டலினியை எழுப்ப முடியுமாம்.
இராஜயோகிகள் சலனமற்ற
தியானத்தினாலும், மனப்
பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.
சாமான்யர்கள் பக்தி அதாவது
முழுமையான சரணாகதியின் மூலம்
எழுப்புகின்றனர்.
ஞானிகளோ பிரித்து அறியும் மன
உறுதியினால் எழுப்புகின்றனர். இதை
விவேக வைராக்கியம் என்கின்றனர்.
தாந்திரிகர்கள் மந்திர சக்தியால்
குண்டலினியை எழுப்புகின்றனர்.
இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு
முறையும் இருக்கிறது. அதாவது குருவினை
பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப்
படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால்
சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய
தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும்
குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை
எல்லோருக்கும் அருளுவதுமில்லை.
ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை
எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது.
எனினும் நமது உடல் மற்றும் மனப்
பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு
செய்ய குருவினால் மட்டுமே முடியும்.
அவரே நமக்கு சரியான வழி எது என்பதை
உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால்
குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம்
இல்லாத எளிதான காரியம்தான்.
அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?
எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த
ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு
செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு
நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம்
வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான
செயல் இல்லை. மிகுந்த பொறுமை,
விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி
உள்ளவர்களுக்கு மட்டுமே இது
சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா
சக்திகளும் சித்திக்கும்.
எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு
ஆதார மையத்தையும் அடையும் போது
அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல
மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை
வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த
சக்தி மையம், தலை அல்லது முகம்
மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம்
மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த
அதார மையங்களை சக்கரம் என்று
அழைப்போம்.
எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு
சக்கரத்தையும் கடந்து செல்லும் போது
ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி
வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும்
சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.
குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
---------------------------------------------------
நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை
விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை
நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான
யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை
ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள்.
ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப்
பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து
பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக
விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை
திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே
அடிப்படைகளை மட்டும் தொட்டுச்
செல்வோம்.
தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி
யோகத்தின் முதல் நிலை. இதை நாம்
பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை
பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால்
அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்
கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக
பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும்
தேவையானவைகளை சேகரித்து வைப்பது,
அதனை பாதுகாப்பது போன்றவைகளையே
தன்னை உணர்தல் என நினைத்துக்
கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல்
அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது
அறிதல்கள்.
நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும்
மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர்
கவனித்திருப்போம். உண்மையில் தன்னை
அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும்
மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான்
துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது,
அதுவாகவே வெளியே போகிறது என
தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம்
அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில்
நமது மகத்துவமே இந்த மூச்சில்தான்
அடங்கி இருக்கிறது.
சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான
தாளகதியில் நமக்குள் நடந்து
கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால்
மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண
நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல்
அல்லது மனம் வருந்த ஒரு செயலை
செய்யும் போது விடும் சுவாசத்திற்கும்
வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த
தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல்
நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க
கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர
முடியும்.
சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச
முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை
உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம்,
முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக
தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள்
நமது சுவாசம் எத்தகையது என்பதை
உணர்ந்து அவற்றை முழுமையான
சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும்.
இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள்
உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன்
பொருட்டே இதனை விளக்கிக்
கொண்டிருக்கிறேன்.
அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ
மந்திரமோ இல்லை ஒரு வகையான
பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை
அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க
அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை
கவனிக்க மனம் அதில் ஒடுங்கும்.
கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும்.
சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க
உண்டாகும் மாற்றங்களே குண்டலினி
பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி
விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை,
இது சிரமமான வேலையும் இல்லை.
ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும்
உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.
குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும்
சாதகன் முதலில் தனிமையான இடத்தை
தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக
இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய
வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை,
வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய
பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி
உள்ள இடங்களும் சிறப்பானதே.
அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை
செய்திட எல்லா வகையான ஆசனங்களை
பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம்
இல்லை. தளர்வாகவும், வசதியாகவும்
அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை
தெரிந்து பயன்படுத்துவது அவசியம்.
சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான
பத்மாசனம் போதுமானது. உட்காருவது
கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில்
அமர்ந்து செய்யலாம்.
குண்டலினியும் முன் தயாரிப்பும்!
-----------------------------------------------------
குண்டலினி யோகத்தை துவங்குவதற்கு
தேவையான முன் தயாரிப்புகளையே
இத்தனை நாளாக பார்த்து
வந்திருக்கிறோம்.அந்த வரிசையில்
தனிமையான,அமைதியான சூழலில்
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து
இந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பது
வரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.
பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத்
தண்டானது நிமிர்ந்து இருப்பதால்
சுவாசமானது மூலாதாரத்தில் இருந்து
துரியம் வரை தடையின்றி செல்லும்
என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும்
போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்க
முடியும்.மேலும் இப்படி அமரும் போது
விரல்களில் சின் முத்திரை அல்லது ஞான
முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்த
நிலை சுவாசத்தை கவனிக்க
ஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போல
தினமும் இத்தனை நிமிடங்கள்
அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில்
எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும்
அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினை
வரையறுக்க வில்லை. நம்மால் எத்தனை
நேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்க
முடியுமோ அத்தனை நேரம் செய்வது
சிறப்பு.
ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால்
சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படி
யாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் என
யாரும் சொன்னால் அதை நம்பவும்
கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அது
எங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்க
ஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களை
நோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போது
சுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம்
குவியும். வலிந்து செய்வதை காட்டிலும்
இது மிக எளிய உத்தி!
வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால்
போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும்
என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது.
உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவே
இந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சில
மாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனை
வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
என்னுடைய அனுபவத்தைச் சொல்ல
வேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதி
உண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாக
இருக்கும்.
இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றி
யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இனி நமது செயல்திட்டம் இரண்டு
கட்டங்களை உள்ளடக்கியது. முதலில்
குண்டலினியை விழித்தெழச் செய்வது,
அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதார
மையங்களான சக்கரங்களை நோக்கி
நகர்த்துவது அல்லது உயர்த்துவது.
இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறு
நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு
சக்கரமும் மலரும் போது அதற்கான
பலன்களை நாம் உணரத் துவங்குவோம்.
இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சில
பிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ள
வேண்டியிருக்கும்.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

No comments:

Post a Comment