Wednesday, August 26, 2015

பிடிவாதம்



“பிடிவாதம் என்ற ஒன்று இருக்கத்தான் வேண்டும் - ஆனால்
அது நன்மைக்கான பிடிவாதமாக மட்டுமே இருக்க வேண்டும்”- www.v4all.org
-இன்று நான் படித்த ... பிடித்த ஒரு நல்ல பிடிவாதப் பதிவு இது...
ஏற்கனவே நான் கேள்விப்பட்ட சில டி.எம்.எஸ். விஷயங்கள் , இந்தக் கருத்தை உண்மை என்று உணர்த்துகின்றன...
# “எக்கோ” எபெக்ட் வைத்தால்தான் “யாருக்காக” பாடலைப் பாடுவேன் என “வசந்த மாளிகை” யில் டி.எம்.எஸ். பிடித்த பிடிவாதம்... அப்போது தயாரிப்பாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும்..... அந்தப் பாடல் திரையரங்கில் ரசிகர்களிடம் ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு அந்த எக்கோ எபெக்டே காரணம் என உணர்ந்த தயாரிப்பாளரின் ஆனந்தம்...
அது டி.எம்.எஸ்ஸின் அக்கறைப் பிடிவாதம்...
# 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்;
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்'
என்ற வரிகளைப் பாட மறுத்து... “சாக வேண்டும்” என்ற வரிகளை 'வாட வேண்டும்' என்று கண்ணதாசன் மாற்றித் தந்த பின்பே பாடிய பக்திப் பிடிவாதம்...
# அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியாததால்... நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடிய அந்த ஆர்வப் பிடிவாதம்...
# இவ்வளவு பிடிவாதம் பிடித்த டி.எம்.எஸ். இன்னொரு பிடிவாதமும் பிடித்திருக்கலாம்...
டி ராஜேந்தரின் “ஒரு தலை ராக”த்தில் ... “நான் ஒரு ராசி இல்லா ராஜா”.....” பாடலையும் , “என் கதை முடியும் நேரம் இது” ... பாடலையும் பிடிவாதமாக பாடாமலே தவிர்த்திருக்கலாம்...
"“அறம்” விழும் பாடல் இது .. வார்த்தைகளை மாற்றலாமே.." என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இருக்கிறார் டி.எம்.எஸ்....
பின் வாங்க மறுத்து விட்டார் டி .ராஜேந்தர்..
அன்று கண்ணதாசனே டி.எம்.எஸ் சுக்காக வார்த்தைகளை மாற்றி வளைந்து கொடுத்தார்..ஆனால் டி.ராஜேந்தர்...?
பாடினார் டி.எம்.எஸ்...!
"ராசி இல்லா ராஜா "வாகவே ஆகிப் போனார்...
என்ன செய்வது..? விதி வலியது...!

No comments:

Post a Comment