Wednesday, August 12, 2015

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை- www.v4all.org



ஒருமுறை சுவாமி விவேகானந்தர்,தனது குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கோரிக்கை வைத்தார்;வீட்டில் பணக் கஷ்டம்,அப்பா இறந்ததில் இருந்து வறுமை வாட்டுகிறது;நானோ வீட்டில் கடைசிப் பிள்ளை;எல்லா அக்காக்களும் கஷ்டப்படுவதைப் பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை;நீங்கள் காளியிடம் எனக்காக வேண்டலாமே? என்றிருக்கிறார்;
அதற்கு ராமகிருஷ்ணபரமஹம்சர், நீயே காளிமாதாவிடம் உன் கஷ்டத்தைச் சொல்லிக் கேளேன் என்றார்;அதற்கு விவேகானந்தரும் சரி என்று சம்மதித்தார்;
ராமகிருஷ்ணர் காளிமாதாவிடம் விவேகானந்தரின் கஷ்டத்தைச் சொல்ல வருவதையும்,அவனுக்கு நீ காட்சியளித்து வரம் தா அம்மா என்றும் வேண்டியிருக்கிறார்;
ஒரு சிறப்பான நன்னாளில் ராமகிருஷ்ணர் அனுமதியோடு,தட்சிணேஸ்வரம் காளியை தரிசிக்கிறார் விவேகானந்தர்;காளியை தரிசித்ததும், அவரது குடும்பச் சிக்கல்கள்,பணக்கஷ்டங்களிலிருந்து மீட்கச் சொல்லி எதுவும் தோன்றவில்லை;
“அம்மா,உலகம் முழுவதும் இருக்கும் அப்பாவி மக்கள் நிம்மதியாக தினமும் வாழ வேண்டும்” என்றே வேண்டியிருக்கிறார்;
இப்படி மூன்று முறை காளியை தரிசித்தும் சுவாமி விவேகானந்தரால் தனக்கோ,தனது குடும்பத்தாருக்கோ என்று வேண்டிடத் தோன்றவில்லை;
இணையமும்,வண்ண அலைபேசிகளும் நம்மிடையே பரவலான பின்னர் நமது மனம் உலக வரலாற்றில் இதுவரை எந்த தலைமுறையினரும் அனுபவிக்காத இன்பங்களை அனுபவிக்கும் சாக்கில் மனமானது மிகவும் அழுக்காகிக் கொண்டிருக்கிறது;நமது ஆழ்மனமும் சரணாகதி தத்துவத்தில் இருந்து வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறது;
பார்ப்பதைவிட செய்வதே மேல் என்பதே இளைஞர்களுக்கும்,இளம் பெண்களுக்கும் கூறும் தாம்பத்திய அறிவுரை; என்ன காரணமாக இருந்தாலும் சரி! ஆண்கள் 27 வயதிற்குள்ளாகவும்,பெண்கள் 25 வயதிற்குள்ளாகவும் திருமணம் செய்து கொள்வது அவசியம்;இந்த வயதிற்கு மேல் எந்த காரணமாக இருந்தாலும் சரி; திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள்:
பார்ப்பதால் மனம் அழுக்காகிறது என்று மட்டும் எண்ண வேண்டாம்;நமது ஆத்ம சுத்தியை இழந்துவிடுவோம்;இந்த இழிவான செயல்களில் இருந்து என்னை மீட்டு காப்பாற்று அம்மா என்று அன்னையைச் சரணடைந்தால் நிச்சயமாக அன்னை அரசாலை(வராகி) நம்மை மீட்டுப் பாதுகாப்பாள்;வழிநடத்துவாள்;
உலகத்திலேயே குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிட ஒரு சமுதாயம் 20,00,000 ஆண்டுகளாக முயற்சி எடுத்திருக்கிறது எனில் அது நமது தமிழ்ச் சமுதாயம் தான்! அதை வெறும் 20 ஆண்டுகளில் இணையம் என்ற அரக்கன் மூலமாக சின்னாபின்னப்படுத்திட முயன்றுள்ளது மேற்கு நாடுகளும் அதன் அமைப்புக்களும்! சீனாவைப் போல நமது நாட்டிலும் இணையம் என்ற பகாசுரனுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்;
மறுபுறம்,அன்னை அரசாலையைச் சரணடைந்தால் போதும்;அன்னையிடம் தான் நம்மால் எதையும் கெஞ்சியாவது மன்றாடியாவது கேட்டு வாங்கிட முடியும்;
அம்மா வராகி! எனக்கு என்னை எல்லா விதத்திலும் புரிந்து கொள்ளும் மனைவி அமைய வேண்டும் என்று வேண்டலாம்;
அம்மா வராகி! என் மீது மட்டும் அன்பு செலுத்தும் கணவன் அமைய அருள் புரி தாயே!! என்று இளம் பெண்கள் வேண்டலாம்;
அம்மா அடியேனது வறுமையைப் போக்கி,தினமும் குடும்பத்தை நிர்வகிக்கத் தேவையான பணம் கிடைக்க வழி செய்;அது போதும் என்றும் கூட குடும்பஸ்தர்கள் வேண்டலாம்;
அம்மா வராகி! இப்பிறவியே போதும்;இனி ஒரு பிறவி வேண்டாம் என்று துறவிகள் வேண்டலாம்;சோகங்களை மட்டுமே இதுவரை சந்தித்து தினமும் அழுது கொண்டிருப்பவர்களும் வேண்டலாம்;
இது போல உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் (நியாயமாக இருந்தால் போதும்) வேண்டலாம்;
கருணைக் கடல் என்பது அன்னைதானே !
கருணைப் பிரபஞ்சமும் அவள்தானே!
கருணை உணர்ச்சியை நமக்குத் தந்தவள் அவள் தானே!!!
வாழ்க பைரவ அறமுடன் ! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment