Friday, August 21, 2015

ஆர்வமே வெற்றியின் திறவுகோல்

ஆர்வமே வெற்றியின் திறவுகோல்

எழுத்தின் அளவு :
ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய ஆர்வத்தை பொறுத்தே அமையும் என சான்றோர்கள் கூறுகின்றனர். பிரபல அமெரிக்க தத்துவஞானி ரால்ப் வால்டோ, "மனநிறைவுடன் அன்பாக வாழுங்கள்; நிறைவான அறிவு பெறுங்கள்; மனம் விட்டு சிரியுங்கள்' என்று தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருப்பார். இந்த மூன்றும் தான் ஒரு செயலின் மீது ஆர்வம் ஏற்பட தூண்டு கோலாக அமையும். ஆர்வம் என்றால் என்ன? ஒரு செயலை துடிப்புடன் செய்வதற்கு தேவைப்படும் எல்லையில்லாத ஆற்றல் ஆர்வமாகும். ஆனால் நம்மில் பலர் அந்த ஆற்றலை முழுவதும் பெறாமல் அரைகுறையாக பெறுகிறோம்.
அந்த ஆற்றலை சுலபமாக பெறலாம் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது பல நகரங்களில், காலை நேரத்தில் பார்க் அருகில் சென்று பார்த்தால், சிலர் கூட்டமாக கூடி காரணம் இல்லாமல் சிரித்து கொண்டிருப்பர். அதை பார்க்க முட்டாள் தனமாக தோன்றும். ஆனால், அவர்கள் சத்தமாக சிரிப்பதால் மனதில் உள்ள அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை போல் எப்பொழுதும் மனம் விட்டு சிரியுங்கள். நீங்கள் குழந்தைகளை சற்று கவனித்து உள்ளீர்களா? ஒரு விஷயத்தை கற்க மிகுந்த ஆர்வமுடன் இருப்பார்கள்.
அத்தகைய முனைப்புடன் நாமும் செயல்பட வேண்டும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் மனமகிழ்ச்சியுடனும், அன்பாகவும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயலின் மீது உங்களுக்கு ஆர்வம் அதிகமாக ஏற்படும். உங்களுடைய செயலில் வெற்றியோ , தோல்வியோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்போது தான் அடுத்த வேலையில் உங்களுடைய கவனத்தை முழுமையாக செலுத்த முடியும். மேற்கூறியவற்றை உங்கள் செயல்களில் இணைத்து உங்கள் வாழ்விலும், செயலிலும் ஆர்வமுடன் செயல் பட்டு வெற்றி இலக்கை அடையுங்கள்.

No comments:

Post a Comment