Showing posts with label corporate trainings. Show all posts
Showing posts with label corporate trainings. Show all posts

Sunday, August 2, 2015

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18.

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18. அனைவர்க்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்றுசங்கடஹர சதுர்த்தி விரதமும்ஆடிப் பதினெட்டும் சேர்ந்து வருகின்றது .. தங்கள் அனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெற விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! ஆடிமாதம் 18ம் திகதியாகிய இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது .. நீர்நிலைகள் வற்றாமல் இருக்க வருணபகவானையும் .. தேவதைகளையும் வணங்கும் நாள் இது .. கிராமப்புறங்களில் வகைவகையான சாதங்கள் தயார் செய்துகொண்டு நீர்நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து சொந்தபந்தங்களுடன் உண்பது வழக்கம் .. நகர்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர் .. காவேரிக்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. காவேரிநதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டென்றும் .. அங்கே பதினெட்டு யோகிகயர்களும் ..மகரிஷிகளும் .. சித்தபுருஷர்களும் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர் .. அவர்கள் ஆடிப்பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு காவேரிநதியில் நீராடி தங்கள் தவப்பயனை காவேரியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம் .. அதனால் காவேரியானவள் அதிகசக்தியையும் .. புனிதத்தையும் பெறுகிறாள் .. ஆகவே இந்நாளில் காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் .. நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. இராமப்பிரானும் ஆடிப்பதினெட்டில் காவேரியில் நீராடி புனிதம் பெற்றார் .. இன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை கருகமணி .. மலர் .. மஞ்சள் .. பழங்கள் .. வெல்லம் கலந்த அரிசிப்புட்டு படைத்து வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டினையோ வைத்து பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வர் .. வாழ்வில் என்றும் வசந்தம் வீச அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக . வாழ்க வளமுடனும் .. நலமுடனும

Wednesday, July 8, 2015

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பாட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்

urs
www.v4all.org 

Saturday, July 4, 2015

மறதியை மறக்க 7 வழிகள்

மறதியை மறக்க 7 வழிகள்


ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும்ஆனால்பாடலின் பல்லவிமட்டும் நினைவுக்கு வராதுபடத்தின் பெயர்பாடலைப் பாடியவர்இசை அமைத்தவர்என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்பாடலின் முதல்வரியைத் தவிர

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால்பாடலின் முதல் வரிநமக்குத் தெரியும்ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை.நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம்.நினைவாற்றல் என்றால் என்னஅது எப்படி வருகிறதுஅதை அதிகரிப்பதற்கானவழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.

நினைவாற்றல்   என்றால் என்ன?

நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம்கணினியில் தகவலைப்பதிவுசெய்கிறோம்அதேபோல்மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம்இதை'என்கோடிங்’ என்போம்பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது.இதை 'ஸ்டோரேஜ்’ என்போம்தேவையானபோது கணினியில் உள்ள தகவலைஎடுக்கிறோம்அதேபோல்மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலைஎடுக்கிறதுஇதை 'ரெட்ரிவல்’ என்போம்தகவலைக் கொண்டுசேர்ப்பதுசேமிப்பது,தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல்இந்தமூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல்பாதிக்கப்படும்.

எப்படி வேலை செய்கிறது?

என்கோட்காட்சிசமிக்ஞைமொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக்கொண்டுசெல்லப்படுகிறதுஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போதுஅனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  
ஸ்டோரேஜ்மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல்மிகக்குறுகிய நினைவாற்றல்நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில்சேமிக்கப்படுகிறதுகுறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது.சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம்அடுத்த சிலநிமிடங்களில்என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம்இது மிகக் குறுகியநினைவாற்றல்ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும்அதைப் பற்றிசிந்தித்துக்கொண்டே செல்வோம்அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சிலநாட்கள் வரை நம் நினைவில் இருக்கும்இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம்.நம்முடைய பெயர்அப்பா பெயர்வீட்டு முகவரிசெல்போன் எண் போன்றவற்றைத்திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம்அதனால் அது பல காலத்துக்கு நினைவில்இருக்கும்இது நீண்ட கால நினைவாற்றல்.


ரெட்ரிவல்நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்குவந்துவிடும்ஆனால்நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார்என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம்அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது.கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும்படித்த பள்ளிக்கூடம்,நண்பன்முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்துகடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும்நினைவாற்றல் பெருகக் கவனம்செலுத்துதல் முக்கியம்கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகிஇருக்க வேண்டும்மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்''என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப்பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.


 மறதி நல்லது!


 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டேஇருக்கின்றனஇதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு,தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளைஅப்படி மறக்கவில்லை என்றால்மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும்அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னைஅப்போதுதான் அதுமறதிநோய் (டிமென்ஷியாஆகிறதுஇந்த நோயில்தகவலானது உள்ளே போகிறது.ஆனால்அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை

மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்புரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில்கோத்துக்கொள்வதுதலையில் அடிபடுவதுவயது அதிகரிப்புஅல்சைமர்ஸ் எனப்படும்மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்புஏற்படுகிறதுஇதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல்இருக்காதுமன அழுத்தம்மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல்மூளைக்குள்ளேயே செல்லாதுஇதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவேஇருக்கும்.