Showing posts with label Auto suggestion. Show all posts
Showing posts with label Auto suggestion. Show all posts

Saturday, June 18, 2016

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்।

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்

Tuesday, March 8, 2016

ஒருமுறை சாக்ரட்டீஸ்

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
 " அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். 
இல்லை என பதில் சொன்னார்.
 " அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். 
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
 "யாருக்கும் பயனில்லாத , நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.............................

Friday, March 4, 2016

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே 
பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”

“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,

“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்   
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…

அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

Sunday, August 2, 2015

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18.

தாய் தமிழ் நாட்டின் சிறப்பான பெருநாள் ஆடி 18. அனைவர்க்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்றுசங்கடஹர சதுர்த்தி விரதமும்ஆடிப் பதினெட்டும் சேர்ந்து வருகின்றது .. தங்கள் அனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெற விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! ஆடிமாதம் 18ம் திகதியாகிய இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது .. நீர்நிலைகள் வற்றாமல் இருக்க வருணபகவானையும் .. தேவதைகளையும் வணங்கும் நாள் இது .. கிராமப்புறங்களில் வகைவகையான சாதங்கள் தயார் செய்துகொண்டு நீர்நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து சொந்தபந்தங்களுடன் உண்பது வழக்கம் .. நகர்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர் .. காவேரிக்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. காவேரிநதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டென்றும் .. அங்கே பதினெட்டு யோகிகயர்களும் ..மகரிஷிகளும் .. சித்தபுருஷர்களும் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர் .. அவர்கள் ஆடிப்பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு காவேரிநதியில் நீராடி தங்கள் தவப்பயனை காவேரியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம் .. அதனால் காவேரியானவள் அதிகசக்தியையும் .. புனிதத்தையும் பெறுகிறாள் .. ஆகவே இந்நாளில் காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் .. நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. இராமப்பிரானும் ஆடிப்பதினெட்டில் காவேரியில் நீராடி புனிதம் பெற்றார் .. இன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை கருகமணி .. மலர் .. மஞ்சள் .. பழங்கள் .. வெல்லம் கலந்த அரிசிப்புட்டு படைத்து வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டினையோ வைத்து பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வர் .. வாழ்வில் என்றும் வசந்தம் வீச அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக . வாழ்க வளமுடனும் .. நலமுடனும

Monday, June 15, 2015

மர்ம குகைகளும் ராஜநாகமும்

மர்ம குகைகளும் ராஜநாகமும்.
==========================
{ தேவ ரகசியம் }
சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாழ்ந்த
மலைக் குகைகளில், அவர்கள் தவம்
செய்து இறைவனை அடைந்த நிலையும்
அவர்களுக்கு துணையாகவும், காவல்
தெய்வமாகவும் ஒரு ராஜநாகம்
அவர்களோடு பவுர்ணமி நாட்களில் தவம்
இருந்த வரலாறு வேலூர் மலையில்
நடந்துள்ளது.
இன்றும் அந்த ராஜநாகம் தவம்
செய்து வருகிறது என்பதற்கு வேலூர்
மலையையும், அதில் உள்ள நூற்றுக்கணக்கான
குகைகளையும் உதாரணமாக கூறலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம்
அடி உயரத்தில் உள்ள இந்த மலையில்
ஒரே நேரத்தில் 100 விலங்குகள் தங்கும்
விலங்கு உறங்கும் பாறை, ஆயிரம் அகோரிகள்
குடிகொண்டு தவம் செய்யும் அகோரி குகை,
படுத்து தவழ்ந்து செல்லும் தவகுகை,
இப்படி பல குகைகள் உள்ளன.
அதோடு அடர்ந்த காட்டுப்பகுதியாக
அக்காலத்தில் இருந்துள்ளது. சூரிய கதிர்கள்
பூமியை தொடாத சூரியன் புகா காடு என்றும்,
அனைத்து மிருகங்களும் வாழ்ந்த ஒரு வனமாக
இந்த மலை இருந்துள்ளது.
மன்னர்கள் படையெடுப்பில் காடுகளில்
பதுங்கிய வீரர்கள் மலைகுகைகளில் வாழ்ந்த
அகோரிகளை விரட்டி அதில் தங்கி போர்
வியூகங்களை வகுத்துள்ளனர்.
அதோடு அடர்ந்த
காடுகளை வெட்டி அழித்து குடில்கள்
அமைத்துள்ளனர். மேலும் பெரிய
பாறைகளை உடைத்து கோட்டையும்
கட்டியுள்ளனர். இதனால் அடர்ந்த
காடு அழிக்கப்பட்டு பாறைகளும்
உடைக்கப்பட்டு பல குகைகள் அழிக்கப்பட்டுவி
ட்டன.
வேலூர் கோட்டை, விரிஞ்சிபுரம் கோவில்
இன்னும் பிற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட
அனைத்து கோவில்களுக்கும் இங்கிருந்துதான்
பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள்
கொண்டு செல்லப்பட்டது.
மலைமீது கட்டப்பட்ட அழகான
ராணிக்கோட்டை பாறைகள்
கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், தேக்கு,
சந்தனமரங்கள் கொண்டு அழகு சிற்பங்களால்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணி அந்தபுரத்தில்
நின்று இயற்கையை ரசிக்கும்போது தென்றல்
காற்றில் சந்தன வாசனையில்
இயற்கை அழகை ரசித்ததாக
வரலாறு கூறுகிறது.
ராணியை காப்பாற்ற மன்னர்கள்
வீரர்களை மட்டும் நம்பாமல்,
ராணி கோட்டையின் நுழைவு வாயிலில் ஆள்
விழுங்கும் விஷ
மூலிகையை வளர்த்து வந்துள்ளனர். இந்த
விஷ செடி ஆட்களின் வாசனை பட்டவுடன்
அவர்கள் இருக்கும்
பகுதி நோக்கி நகர்ந்து அவர்களை மூடி கொண்டு ரத்தம்
உறிஞ்சி சாகடித்து விடுமாம்.
ஆப்பிரிக்கா காடுகளில் மட்டுமே இருக்கும் இந்த
விஷ கொடி அக் காலத்தில் வேலூர் மலையில்
மன்னர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போதும்
இந்த ஆள் விழுங்கும் மூலிகை விஷ
கொடி ராணிக்கோட்டை நுழைவு வாயிலில்
உள்ளது. இதை அறியாத பலர் அந்த கொடியால்
ஈர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதோடு ராணிக்கோட்டையில் மரங்களால்
வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், வாசல் கதவுகள்
சன்னல்கள்
தற்போது கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டன.
அக்காலத்தில் அகோரிகள் நிர்வாணத்துடன் தவம்
கொண்டதால் இவர்களுக்கு துணையாக
ராஜநாகம் ஒன்று பவுர்ணமி நாட்களில்
இவர்களோடு படம் எடுத்து தவம்
கொண்டுள்ளது. அந்த நாட்களில்
மலையை சுற்றிலும் மல்லிகை பூ வாசம்
வீசுவதுடன் அகோரிகள் எலுமிச்சம்பழம் மேல்
கற்பூரம்
வைத்து ராஜநாகத்தை வணங்குவார்களாம்.
அப்போது எலுமிச்சை பழம் விபூதியாக
மாறிவிடுமாம். அந்த விபூதியை நெற்றியில்
பூசி கொள்வதுடன் உடல் எங்கும்
பூசி கொண்டால் உடலில் ஏற்படும்
அனைத்து நோய்களும் குணமாவதாக
கூறப்படுகிறது.
அதோடு காட்டில்
அரியவகை மூலிகைகளை ராஜநாகம்
துணைகொண்டு கண்டுபிடித்ததாகவும்,
அதற்கு சித்தர்கள் சிறப்பு யாகங்கள்
நடத்தி ராஜநாகத்தை வழிபட்டதாக
கூறப்படுகிறது. இன்றும் அகோரிகள் தவம்
செய்த குகைகளில் நிர்வாண சாமியார்கள் தவம்
செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில்
அவர்களுக்கு துணையாக அந்த ராஜநாகம் தவம்
செய்கிறது. சித்தர்கள் நடமாட்டம் இருந்தாலும்
அவர்கள் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லை.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில்
உள்ள மர்ம குகைகளில் இன்றும்
மணியோசை கேட்பதுடன், சாம்பிராணி,
விபூதி ஊதுவத்தி மல்லிகை பூ வாசனைகள்
மாறி, மாறி, வீசுவதாகவும், வாசனை வீசும்
குகைகளில் சித்தர்கள் வாழ்வதாகவும்
நம்பப்படுகிறது.
மலையடிவாரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம்
உள்ளது. இந்த ஆலயம் சித்தர்களால் கட்டப்பட்ட
ஆலயம். இந்த ஆலயத்தில் அகத்தியர் தவம்
இருந்து வழிபட்டதோடு சித்த மருத்துவம்
குறித்தும் அதன் பயன்பாட்டை குறித்தும்
தனது சீடர்களுக்கு எடுத்து கூறியதோடு அதனால்
நீங்கும் நோய்கள் குறித்தும் விளக்கி உள்ளார்.
அகத்தியர் அருளிய
மூலிகைகளை மக்களுக்கு நோய் தீர்க்கும்
மருந்தாக வழங்கி வந்துள்ளனர் அவரது சீடர்கள்.
மருத்துவமணைகள் இல்லாத நாட்களில்
இவர்கள் கொடுத்த
மூலிகையை அப்போது எல்லா நோய்
களையும் தீர்த்துள்ளது. இந்த காசி விஸ்வநாதர்
ஆலயத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான
அகத்திய சீடர்களின் ஜீவசமாதிகள் உள்ளன.
அதோடு அகத்தியர் தவம் செய்த குகையும்
உள்ளது. அகத்திய முனிவர், அத்திரிமுனிவர்,
ஜனகாதி முனிவர் போன்ற முனிவர்கள் தவம்
செய்த குகைகள் உள்ளன. இந்த குகைகள்
அனைத்தும் செடி, கொடிகளில்
மூடப்பட்டு இருந்தாலும், இதன் அருகில்
செல்லம்போது இப்போதும் தெய்வீக மனம்
வீசுவதாக கூறுகின்றனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மலைமேல்
உள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு அருகில்
உள்ள புற்றுக்கு பால் ஊற்ற பவுர்ணமி தோறும்
சென்று வந்த ஒரு பெண்ணை,
அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தவறான
எண்ணத்துடன் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
ஒரு நாள் அதே பெண்
பவுர்ணமி அன்று சாமி தரிசனம்
செய்து புற்றுக்கு பால் உற்றி வரும்
போது அந்த வாலிபர்
வழிமடக்கி தகராறு செய்துள்ளார். அவரிடம்
இருந்து விடுபட்டு ராஜநாகத்தை நினைத்து காப்பாற்று என
கூச்சல் போட்டுள்ளார் அந்தப் பெண். பின்னர்,
பின் தொடர்ந்து வந்த வாலிபர் அந்த பெண்ணின்
கண்களில் தெரியவில்லையாம்.
இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபர் நாகம்
கடித்து இறந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள
பார்த்து கூறியுள்ளனர்
இந்த அதிசயத்தை இன்னும் அப்பகுதி மக்கள்
வியப்போடு கூறுகின்றனர்.
சித்தர்களுக்கு மட்டும் காவல் தெய்வமாக
இருக்கும் ராஜநாகம் நம்பி வருபவர்களுக்கும்
காப்பாற்றும் தெய்வமாக வேலூர் மலையில்
இருந்து வருகிறது.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

Friday, May 1, 2015

உள்ளதும் போச்சு...

உள்ளதும் போச்சு...

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்றுஇருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன்.நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள்நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப்பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல்அவனிடம் சிக்கவே இல்லை.
எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்றுநினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என்தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான்எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்தஅரசன் 'ஒரு முயலைப் பிடிக்க உன்னால்முடியவில்லையா?" என்று கேட்டான்.
"அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்கவேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோகட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவதுஇல்லை" என்றான் அவன்.
"நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்குவருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என்வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப்பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்"என்றான் அரசன்.
மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன்.இனி முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்துஅரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்குஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள்,வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்குவந்தான்.
எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர் களுக்குச்சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது.மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில்அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்" என்றுவேட்டையாடப் புறப்பட்டான்.
வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள்.வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டேதோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்தமுயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்தவேலியை நோக்கி ஓடியது.
அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்பவிடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப்பபக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும்அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும்இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத்துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக்கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்தமுயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின்முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம்முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான்உழவன்.
நீதி...
"சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவி கேட்பது தவறுஎன்று உணராமல் போனேனே. என் அழகான தோட்டம்அழித்துவிட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள்பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவைஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால்பேரழிவைத் தேடிக் கொண்டேன்" என்று வந்திருந்தான்அவன்.
Sri Muthu Krishnan Iyengar's photo.