நீ அனுபவிக்க வேண்டும் என்று உன் காலில் நூலைக்கட்டி என்னிடம் இழுத்துக் கொண்டேன். அப்படியிருக்க என்னிடம் நீ இருக்கும் போது என்னை விட்டு விட்டு உன் சுயநலத்தை பற்றியே சிந்திப்பானேன். உனது பிரச்சினை என்னவாக இருந்தாலும் சரி அவற்றை முற்றிலுமாக தீர்த்து வைப்பேன். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? யோசித்து எச்சரிக்கையுடன் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அதை தைரியத்தோடு வைக்க வேண்டும். அசட்டு தைரியம் கூடாது. நான் செய்வேன் என்ற முழுமையாக அனுபவித்து தெரிந்து கொண்டிருந்தால் தைரியம் கொள். இந்த அனுபவத்தோடு ஆசை, பிரச்சனைகளை என் பொறுப்பில் போட்டுவிட்டு அடங்கியிரு. அடக்கத்தோடு பொறுமை காத்திரு. பொறுமையோடு என்னை சார்ந்திரு. அப்போது உனக்கு பதில் சொல்வேன். உன்னை மீட்டுக்கொள்வேன்.......................... சாயியின் குரல்
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Sunday, May 31, 2015
தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு
தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :
1 பிரபவ**********1987 - 1988
2 விபவ***********1988 - 1989
3 சுக்ல************1989 - 1990
4 பிரமோதூத******1990 - 1991
5 பிரசோற்பத்தி****1991 - 1992
6 ஆங்கீரச*********1992 - 1993
7 ஸ்ரீமுக***********1993 - 1994
8 பவ*************1994 - 1995
9 யுவ ************1995 - 1996
10 தாது************1996 - 1997
11 ஈஸ்வர*********1997 - 1998
12 வெகுதானிய****1998 - 1999
13 பிரமாதி********1999 - 2000
14 விக்கிரம*******2000 - 2001
15 விஷு*********2001 - 2002
16 சித்திரபானு****2002 - 2003
17 சுபானு********2003 - 2004
18 தாரண*********2004 - 2005
19 பார்த்திப*******2005 - 2006
20 விய**********2006 - 2007
21 சர்வசித்து*****2007 - 2008
22 சர்வதாரி ******2008 - 2009
23 விரோதி*******2009 - 2010
24 விக்ருதி*******2010 - 2011
25 கர************2011 - 2012
26 நந்தன********2012 - 2013
27 விஜய********2013 - 2014
28 ஜய**********2014 - 2015
29 மன்மத*******2015 - 2016
30 துன்முகி******2016 - 2017
31 ஹேவிளம்பி***2017 - 2018
32 விளம்பி*******2018 - 2019
33 விகாரி********2019 - 2020
34 சார்வரி*******2020 - 2021
35 பிலவ********2021 - 2022
36 சுபகிருது******2022 - 2023
37 சோபகிருது*****2023 - 2024
38 குரோதி********2024 - 2025
39 விசுவாசுவ*****2025 - 2026
40 பரபாவ********2026 - 2027
41 பிலவங்க******2027 - 2028
42 கீலக*********2028 - 2029
43 சௌமிய *****2029 - 2030
44 சாதாரண******2030 - 2031
45 விரோதகிருது**2031 - 2032
46 பரிதாபி*******2032 - 2033
47 பிரமாதீச******2033 - 2034
48 ஆனந்த******2034 - 2035
49 ராட்சச******2035 - 2036
50 நள*********2036 - 2037
51 பிங்கள******2037 - 2038
52 காளயுக்தி****2038 - 2039
53 சித்தார்த்தி****2039 - 2040
54 ரௌத்திரி****2040 - 2041
55 துன்மதி******2041 - 2042
56 துந்துபி*****2042 - 2043
57 ருத்ரோத்காரி**2043 - 2044
58 ரக்தாட்சி *****2044 - 2045
59 குரோதன******2045 - 2046
60 அட்சய******2046 - 2047
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்
மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement) :
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement) :
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
நேர மேலாண்மை – ஓர் மிகப்பெரிய பொக்கிஷம்
நேர மேலாண்மை – ஓர் மிகப்பெரிய பொக்கிஷம்
நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும்.
நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.
ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு காலை வணக்கம் சொல்லி, இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும். இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும். மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து, கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத்தான் பார்ப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை. ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.
குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முயாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது. சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!
நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.
தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள். நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.
தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும். “நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார். அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’
அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.
நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.
நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி. கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.
இதுதான் பார்வை
இதுதான் பார்வை!
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.
அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.
அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.
மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.
அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.
பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!
பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!
தொப்பைஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!
கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!
1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.
2.கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
3.உற்று நோக்கும் பயிற்சி, கணினியில் வேலை செய்பவர் பலர் இரண்டடி தூர இடைவேளையை மட்டுமே உற்று நோக்கி நான் முழுதும் வேலை செய்வதால், தொலை தூர பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்வது அவசியம்.
4.கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும்.
5.லைசன்ஸ் வாங்க உங்கள் வாகனத்தில் பெரிய “8” போட்டதைப் போல, நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்து, கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.
6.ஜூமிங் (zooming) பயிற்சி, உங்கள் விழிகளுக்கு அருகாமையில் இருந்து தூரம் வரை ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்கும் பயிற்சி. உதாரணமாக, கைக் கட்டை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து தூரம் வரை நகர்த்தி உற்று நோக்குதல்.
7.அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்.
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் . ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் . ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.
மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
* ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.
* பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
* மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும்.
* வெள்ளைப்பூண்டு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
* இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும்.
* ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் துளசி சாற்றை சாப்பிடுவது நல்லது. உடலில் தடைபட்டிருக்கும் ரத்த குழாயை துளசி சாறு குணப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
* நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள ‘செலினீயம்‘ என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.
* நரம்பு தளர்ச்சி நீங்க: நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க:
* நன்றாக உறங்க வேண்டும்.
* மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும்.
* உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.
* தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்த கூடாது.
தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி
போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.
* மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கிவிட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.
* உடல் தளர்ச்சி: வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது. இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
* வயிற்றுப்புண்: வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், நிறைய பூண்டு போட்டு நன்றாக வேக வைத்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணும், வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
* வலிப்பு நோய்: வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும்.
* தலைவலி: தலைவலி வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்புடன் சேர்த்துப் பருகினால் தலைவலி உடனே குணமாகும்.
* நெல்லிக்காய்: நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக்கனியில் உள்ளது.
* இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கற்றாழை
*கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உப பொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு எனர்ஜியை தரக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.
நம் மூதாதையர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?
நம் மூதாதையர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?இந்திய வம்சாவழியின் தொடக்கம் கண்டறியப்பட்டுள்ளதுசமீபத்திய இந்திய-அமெரிக்க கூட்டு ஆராய்ச்சி முடிவுகள்! |
பள்ளியில் பரிணாமம் படித்த நம் எல்லோருக்குமே ஒரு கேள்வி இருக்கும்.அது என்னவென்றால் மனிதர்களாகிய நாம் அனைவரும் முதலில் தோன்றியது எங்கே?அதாவது இன்றைய உலகின் எந்த பகுதியில் மனித இனம் முதலில் தோன்றியது என்பதுதான் அந்த கேள்வியின் பொருள். இதுவரையிலான மரபனு ஆராய்ச்சி முடிவுகளின்படி மனிதன் உலகில் முதலில் தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டம் எனச் சொல்லப்படுகிறது. சரி ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம், நாகரிகம் அடைய அடைய, மெல்ல ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் நோக்கி பயனப்பட்டு வாழ முற்பட்டது.
இந்த செயல்பாடுள்ள மனித இனம் “நாடோடி” (nomads) என்று அழைக்கப்பட்டது.இன்று அந்த வகையான செயல்பாடுகள் முற்றிலும் இல்லை எனச் சொல்லமுடியாதென்றாலும், அது மிக மிக குறைவு.ஏன் இல்லை எனச் சொல்ல முடியாது என்றால், இன்றும் மங்கோலியாவில் நாடோடிகளாகவே மக்கள் வாழ்கிறார்கள், அதையும் விரும்பி செய்கிறார்கள் என என்னுடன் ஆராய்ச்சி செய்யும் மங்கோலிய நண்பன் ஒருவன் சொல்லக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், நண்பனின் கூற்றுப்படி, மங்கோலிய மக்கள் இன்றைய தொழில்னுட்ப முன்னேற்றங்களை ஏற்றபின்னும் அதை பயன்படுத்தியும் கூட தங்களின் நாடோடி வாழ்க்கை முறையையே விரும்பி வாழ்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, நாடோடியாய் திரிந்த மனிதன் ஓரிடத்தில் வாழ வேண்டி, நாகரிக முன்னேற்றத்தால் காடுகளை திருத்தி குடில்கள் அமைத்து பின் விவசாயம் செய்தல், வணிகம் என பல்வேறு நாகரிக முன்னேற்றங்களை அடைந்தான் என்பது வரலாறு.இந்த முன்னேற்றப் பாதையில் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறியது மனித இனம்.இதனால் மொழி,இன,மத வேறுபாடுகள் மற்றும் நிற, உணவுப் பழக்கம், தொழில் போன்ற பலவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.இது உலக வரலாறு.இப்போது நாம் இப்பதிவின் முக்கிய செய்தியைப் பார்ப்போம்.
உலகில் இன்று மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம் பரிணாம வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? முழுமையாக யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த வரலாற்று உண்மையை அறியவே இந்தியாவின் முன்னனி ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆரின்(C.S.I.R) ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றான ஹைதரபாத்தில் அமைந்துள்ள சி.சி.எம்.பி யும்(C.C.M.B) அமெரிக்காவின் “ஹார்வர்டு மருத்துவப் பள்ளியும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டன.இந்த ஆராய்ச்சி முடிவில் அறியப்பட்டதாவது:
ஒரு மனிதன் மற்றொரு மனிதனிமிருந்து வெறும் 0.1% விழுக்காடு அளவே தன் மரபனுக்கோப்பான ஜீனோமில் வேறுபட்டாலும், அந்த0.1% விழுக்காடு அளவுதான் மனிதனின் ஆதி முதல் அந்தம் வரையிலான இயல்புகளின் சாரம் என்கிறது மரபனுத்துறை.மேலும் இந்த வேறுபாட்டிலிருந்து மனிதனின் பரிணாம வரலாற்றினை வரையறுத்திட முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்! உலகின் பல்வேறு மனித இனத்தின் பரிணாம வரலாறு நன்கு அறியப்பட்டபோதும் இந்தியாவின் வரலாறு இதுவரையில் முழுமையாக அறியப்படவில்லை!
25 விதமான பாரம்பரிய மனித சமுதாயத்திலிருந்து, ஆறு மொழிகள் சார்ந்த, 13 வெவ்வேறு மா நிலத்தைச் சேர்ந்த, 132 தன்னார்வலர்கள் கலந்து கொண்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது கூறுவதாவது:
இந்தியாவின் மனித இனத்தை இரண்டு பெரிய குழுக்களாகப் பிரித்தால், ஒன்று இன்றைய வட இந்தியர்கள் மேற்கத்திய ஐரோப்பிய- ஆசியர்கள் (western eurasians) வழிவந்தவர்கள் 40 முதல் 80 விழுக்காடு வரையிலும், மீதமுள்ளவர்கள் பாரம்பரிய தெனிந்தியர்கள் என்றும்,மேலும் தென்னிந்தியர்கள் எந்தவொரு வெளிநாட்டவருடனும் மரபனு முறையில் தொடர்பில்லாதவர்கள் மரபனு ஆராய்ச்சி முறையில் வகுத்துள்ளார்கள்! இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி.இது ஏறக்குறைய முன்னமே வரலாற்றின் வழியாக நம்மில் பலருக்கு தெரிந்த செய்திதான் எனினும் இந்த முடிவு அறிவியல் ரீதியாக வரையறுக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நம்பகமானது!
சரி இது தவிர வேறு என்ன வீஷேசம் இந்த ஆராய்ச்சியில் அப்படியென்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது! விஷேசம் உள்ளது நண்பர்களே.அது என்னவென்றால்,
1. நமக்கு மிகவும் தேவையான?! நெருக்கமான?! அவசியமான?! (ஏன் இத்தனை “மான” என்கிறீர்களா? இது எல்லாம் இனியும் தேவைதானா எனும் ஒரு வயித்தெறிச்சல்தான்! ) ஜாதிகளெல்லாம் உள்ளதல்லவா, இவையெல்லாம் பழங்குடியினராய் மனிதன் வாழத்தொடங்கியதிலிருந்தே தொன்றுதொட்டு வந்து நம்மை இம்சிக்கின்றன என்று உறுதியாய் சொல்லமுடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் திரு.குமாரசாமி தங்கராஜ்!
2.அந்தமான் மக்கள் தென்னிந்தியர்களுடன் மட்டுமே தொடர்புடையவர்கள் என்றும் வட இந்தியர்களுக்கும் அந்தமானியர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார்கள்!
3.மேலும் அந்தமானியர்களை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் தென்னிந்தியர்களின் பிரிவு எங்கு,எப்படி தொடங்கியது என்பதை அறிய வாய்ப்புள்ளது என்கிறார் இந்தக் குழுவின் மற்றுமொரு ஆராய்ச்சியாளர் நிக் பேட்டர்சன்!
மேலும் பல மருத்துவ ரீதியான புதிய விவரங்களையும் இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
|
Saturday, May 30, 2015
தஞ்சாவூர் ஓவியங்கள்
தமிழ் நாட்டை ஆண்ட விஜயநகர நாயகர், பீஜபூர் சுல்தான், கடைசியாக மராட்டியர் ஆட்சி இவைகளால் தமிழ் நிலத்தில் பொருளாதார, கலாசார மாற்றங்கள் நிகழ்ந்தன. தஞ்சை மண்ணில் புதிய கலைத் தளங்கள் தோன்றின.மராட்டிய ஆட்சி தஞ்சையை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டில் 16ஆம் நூற்றாண்டு முதல் இரண்டு நூற்றாண்டு காலம் இருந்தது. தென் இந்திய அரசியல் களம் குழப்பத்தில் இருந்த நேரம் அது. இந்த ஓவியப்பாணி 16 முதல் 18ஆம் நூற்றாண்டுகளில் நாயகர்-மராட்டிய ஆட்சிக் காலத்தில் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தது.
18ஆம் நூற்றாண்டில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட மராட்டிய மன்னர்கள் மராட்டிய மண்ணில் போற்றப்பட்ட பல கலாசாரப் பழக்கங்களை தமிழ் மண்ணுக்கு அறிமுகப்படுத்தினர். ‘கதா காலட்சேபம்’ என்று இன்று புழக்கத்தில் இருக்கும் இசையுடன் கலந்த கதைசொல்லும் உத்தி, குழுப்பாடல் மூலம் இறைதுதி செய்யும் ‘நாம சங்கீர்த்தன’ பாணி, ‘புரவி ஆட்டம்’, ‘தஞ்சாவூர் ஓவியங்கள்’ என்று அழைக்கப்படும் ஓவியப் பாணி போன்றவை இங்கு வேர்பிடித்து, தழைத்து வளர்ந்தன. மராட்டிய ஆட்சியில் மக்களும் கலைஞர்களும் மைசூர், ஆந்திரா, பீஜபூர், மராட்டா, குஜராத் பிரதேசங்களிலிருந்து தஞ்சைப் பகுதியில் நிலைகொண்டு வாழத் தலைப்பட்டனர். இவர்களின் கலை உத்திகளும் பாணிகளும் தமிழ் மண்ணில் புழங்கத் தொடங்கின. அத்துடன் மேலை நாடுகள், சீனா தேச ஓவிய உத்திகளும்கூட இவற்றுடன் கலந்தன. மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது.
கருப்பொருள்:
தஞ்சாவூர் ஓவியங்களில் கருப்பொருள் என்பது இந்து மதம் சார்ந்ததாகவே இருந்தது. கடவுளரின் உருவங்கள் அதில் வரையப்பட்டன. வடிவங்கள் உறைந்த தன்மையிலேயே இருந்தன. இதை, முகம் ஓவியமாக்கப்படும் (Portrait) மேலை நாட்டு ஓவியப் பாணியுடன் ஒப்பிடலாம். அசைவுகள், நிகழ்வுகள் போன்றவை தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன்’, ‘ஆலிலைமேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிஷேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ என்பதான ஓவியங்கள் திரும்பத் திரும்ப படைக்கப்பட்டன. மக்களால் அவை விரும்பப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
உத்தி:
பொதுவாக பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப் பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன்கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல்கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும். மைய உருவம் கரும் பச்சை, திட நீலம் அல்லது ஒளிர் சிவப்பு ஆகிய பின்புல வண்ணங்கொண்டு சமைக்கப்படும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை நிறங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாக தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும். திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தைக் கட்டும்.
வடிவம்:
தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் சரிகை திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.
தஞ்சாவூர் ஓவியங்களில் நாம் அதன் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.
கித்தான் உருவாக்கும் முறை:
‘பட சித்ர’ முறை ஓவியம்போல தஞ்சை ஓவியம் தீட்ட அதன் கித்தான் அமைப்பதும் மிகுந்த அயர்ச்சி கொடுக்கும் செயல்தான். பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகைகளை ஒருங்கிணைத்து, புளியங்கொட்டையை அரைத்துக் கிடைக்கும் பசைகொண்டு பலகையின் மேல் தடிமனான அட்டையை பிசிர் இன்றியும், காற்றுக்குமிழ் இல்லாதவாறும் ஒட்டுவார்கள். நன்கு காய்ந்த பலகையின் மீது இரண்டு அடுக்குகளாக துணியை ஒட்டிக் காயவைப்பதுடன் முதல்நிலை முடியும். பொடி செய்யப்பட்ட கல்லுடன் கிளிஞ்சலைப் பொடி செய்து கிடைக்கும் சுண்ணாம்பை நன்கு கலந்து, அதில் கோந்து சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து, பலகையின் மேல் இரண்டு மூன்று முறை பூசுவார்கள். வழுவழுப்பான கல்கொண்டு பலகையின் பரப்பை நன்கு தேய்த்து தடையற்ற வழுவழுப்பான தளமாக ஆக்குவார்கள். படைக்கப்போகும் ஓவியம் திடமாக அதில் அமரத்தான் இத்தனை முன் ஏற்பாடுகள்.
ஓவியம் சமைத்தல்:
முன்பே தாளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களை கித்தான் பரப்பில் பொருத்தி, அதன்மேல் விளம்பிப் பதிவெடுப்பார்கள். அதில் அனைத்து வடிவங்களின் கோடுகளும் இடம்பெறும். பின்பு தூரிகைகொண்டு வடிவங்களை வண்ணத்தால் வரைந்துகொள்வார்கள்.
கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியை பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசி சிறிதுபோல புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையை திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்கு பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள்.
மற்றவை:
தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. இந்தப் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.
மற்ற கிராமிய கலைபோன்று இந்த ஓவியங்களைப் படைத்ததிலும் ஓவியனின் குடும்பத்தின் பங்களிப்பு என்பது இருந்திருக்கிறது. இவற்றின் விலையும் எல்லோரும் அணுகிவிட முடியாதபடிதான் இருந்திருக்க வேண்டும். அரசவை, மற்றும் செல்வந்தர் இல்லங்களில்தான் இவை இடம் பெற்றிருக்க வேண்டும். கோயில்களுக்கு இந்த ஓவியங்களை தமது சந்ததியருக்குப் புண்ணியம் தேடி காணிக்கையாக அவர்கள் கொடுத்திருக்கவேண்டும். மிகையான ஒளிரும் வண்ணங்கள்கொண்டு இவை படைக்கப்பட்டதற்கு, இந்த ஓவியங்கள் பெரும்பாலும் ஒளி குறைந்த பூஜை அறைகளிலும், கோயில் மண்டபங்களிலும் பார்வையிலிருந்து விலகியும் இருந்ததைக் காரணமாகச் சொல்லலாம்.
இன்று, இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. இங்கு ஓவியன் முக்கியமல்ல. ஏனெனில் அவன் எதையும் படைக்கவில்லை. மறுபதிவு தான் செய்கிறான். ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அந்த ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.
தஞ்சாவூர் ஓவியப் பாணியை கிராமியக் கலையாக அணுக இடமில்லை. இசை வடிவில் கிடைத்த புதிய வடிவை ஏற்று வளர்த்த தமிழ்மண் ஓவியத்தில் அவ்வாறு செய்ததற்கான தடையம் ஏதும் உண்டா? ஓவியர்கள் பயன்படுத்திய தூரிகை எத்தகையதாக இருந்தது? அது அவர்களாலேயே உருவாக்கப்பட்டதா? தமிழ் மண்ணில் தடம்பதித்த இந்தப் பாணி மராட்டிய மண்ணில் என்னவாயிற்று? என்பது போன்ற ஐயங்களுக்கு விளக்கம் கிடைத்தால் இக்கட்டுரை முழுமை பெறும்.
மூளையின் செயல்திறனை தூண்ட கருவி.
மூளையின் செயல்திறனை தூண்ட கருவி...
‘மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், மின்சாரத்தின் உதவியுடன் தூண்ட செய்தால் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனையும், வேகத்தையும் அதிகப்படுத்தலாம்’ என்று ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பக்கவாதத்தால் தாக்கப்பட்டவரின் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்காக அந்த பகுதிகளுக்கு குறைந்த அளவான மின்காந்தப்புலத்தை, உரிய உபகரணங்களை கொண்டு செலுத்தும் சிகிச்சையை இந்த விஞ்ஞானிகள் செய்தனர்.
சிகிச்சைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படுத்த துவங்கியது.
இந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் செய்த போது அவர்களின் கற்கும் தன்மையும், வேகமும் அதிகமானது தெரிய வந்தது.
‘இன்னும் சில பரிசோதனைகளின் முடிவில், மூளையின் செயற்திறனை, குறிப்பாக கற்கும் திறனை அதிகரிக்கச்செயும் மின் காந்த கருவி ஒன்றை உருவாக்க முடியும்’ என்றும் இந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படியானதொரு கருவி விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படக்கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இணையத்தின் அட்சய பாத்திரம்
கூகுள் ஆண்டவர் இல்லாமல் இங்கு பலருக்கு வேலை ஓடாது. கூகுள் வந்த பிறகு பலருக்கு நினைவுத்திறன் குறைந்தது. பலரது நினைவு திறனுக்கு மதிப்பில்லாமல் போனது. கூகுள் சர்வர் முடங்கினால் 40 சதவீதம் அளவுக்கு இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் அளவுக்கு இணையம் முழுவதும் கூகுள் வியாபித்திருக்கிறது.
கூகுள் பற்றிய மேலதிக விவரங்கள் இதோ...
லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் இரண்டு நண்பர்கள் உருவாக்கியதுதான் கூகுள். சமகாலத்தவர்களான இவர்கள் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது நண்பர்களானார்கள். மேலும் இவர்கள் இருவரும் இடதுசாரி சிந்தனை உடையவர்களும் கூட.
தங்களுடைய புராஜெக்டாக ஒரு தேடு பொறியை உருவாக்கினார்கள். நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை/ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கியதுதான் இந்த தேடுபொறி (google.stanford.edu). இதை பிஸினஸாக மாற்ற இவர்களுக்கு விரும்பம் இல்லை. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு 50 ஆவணங்களை தேடிக்கொடுத்தது. இப்போது லட்சக்கணக்கான ஆவணங்களை நொடியில் தேடிக்கொடுக்கிறது.
யாரிடமாவது 10 லட்சம் டாலருக்கு விற்க நினைத்தார்கள். ஆனால் இந்த ஐடியாவை யாரும் வாங்கத் தயாராக இல்லை. ஒரு வேளை வாங்கி இருந்தால் இந்த அளவு வளர்ச்சி சந்தேகமே.
Andy Bechtolsheim என்பவர் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்ய, 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் உதயமானது.
ஆரம்பத்தில் Googol, googolplex என்கிற பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. Googol என்பது எண் ஒன்றுக்கு அடுத்த 100 பூஜியங்களை கொண்ட எண் ஆகும். இந்த பெயர்தான் google என்று மாறியது.
googolplex என்பது Googol-ன் பத்து மடங்கு. googolplex என்ற பெயர்தான் கூகுள் கார்ப்பரேட் அலுவலகத்தின் பெயர்.
கூகுள் என்ற உச்சரிப்புக்கு ஏற்ற பல பெயர்களை இந்த நிறுவனம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
நிறுவனம் ஆரம்பித்த நான்கு வருடங்கள் வரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்தே பணியாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். முக்கியமான பொறுப்புக்கு நிறுவனர்களே நேரடியாக தேர்வு செய்வார்கள்.
53,000 பணியாளர்களுக்கு மேல் இங்கு பணிபுரிகிறார்கள். சராசரியாக ஒரு பணியாளர் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் டாலருக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
கூகுள் கார்ப்பரேட் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானலும் செல்லலாம்.
தங்களுடைய அலுவலக நேரத்தில் 20 சதவீத நேரத்தை புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்காக செலவு செய்யலாம். ஆனாலும் இருக்கும் வேலையை செய்வதற்கே நேரம் இருக்காது, 20% என்பது தேவையற்ற விளம்பரம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
2004-ம் ஆண்டு கூகுளுக்கு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் ஆர்குட், ஜிமெயில் உள்ளிட்ட விஷயங்களை அறிமுகம் செய்தது. பொது பங்கு வெளியீடு வந்ததும் இந்த ஆண்டுதான். (பேஸ்புக் போட்டியை சமாளிக்க முடியாமல் சமீபத்தில் ஆர்குட் மூடப்பட்டது)
2004-ம் ஆண்டு கூகுள் பங்குச் சந்தையில் பட்டியலிட்ட போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4052 கோடி டாலர்தான். ஆனால் தற்போதைய சந்தை மதிப்பு 37,649 கோடி டாலராகும்.
ஆண்ட்ராய்டு, யூடியூப், மோட்டோரோலா என இதுவரைக்கும் 170க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த இன்மொபி நிறுவனத்தைக் கையகப்படுத்தப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டேட்டா பாதுகாப்புக்காக உலகத்தின் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது.
வேலை செய்வதற்கு பணியாளர்கள் விரும்பும் இடமாக கூகுள் இருக்கிறது. பார்சூன் பத்திரிகை வெளியிடும் அறிக்கையில் கூகுள் தொடர்ந்து ஆறு வருடங்களாக முதல் இடத்தில் இருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் 14 லட்சம் செயலிகள் (ஆப்ஸ்) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள்தான் அதிகம்.
தவிர கூகுள் பிளஸ், கூகுள் கிளாஸ், இன்டர்நெட் பலூன், டிரைவர் இல்லாத கார் என கூகுள் நிறுவனத்தின் புதுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)