Showing posts with label public speaking course. Show all posts
Showing posts with label public speaking course. Show all posts

Sunday, July 12, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.

Tuesday, June 2, 2015

சாதுர்யப் பேச்சு!!!!

சாதுர்யப் பேச்சு!!!!
.
ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.
.
அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.
இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
.
கடைசியில் ஒருவன் கேட்டான்
.
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
.
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
.
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.
சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும் !!!
urs
www.v4all.org

Sunday, May 31, 2015

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! ”

Thursday, April 16, 2015

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!

 - www.v4all.org





நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை


அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து சௌகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி


கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ?20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செயலாம்.

3.உணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்: கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்: எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்: வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்: நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்: எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை: சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்

Wednesday, April 15, 2015

உண்ணும்போதும்… உடலுறவு கொள்ளும்போதும்…

உணவைக் கூட முக்திக்கான ஒரு வாய்ப்பாக மாற்றும் வழி என்ன? உண்ணும்போதும், உடலுறவு கொள்ளும்போதும் என்ன நடக்கிறது? இக்கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்… சத்குரு: பலருடன் சேர்ந்து உண்ணும்போது… சாதாரணமாக உணவு உண்ணும்போது மக்கள் பலருடன் சேர்ந்து அமர்ந்து, பேசி, சிரித்துக் கொண்டே தான் உண்பர். இன்னும் சொல்லப்போனால், சில மருத்துவர்கள் கூட இந்தப் பழக்கத்தை ஆதரிக்கிறார்கள். பேசிச் சிரித்துக் கொண்டே சாப்பிட்டால், நீங்கள் கொஞ்சம் குறைவாக சாப்பிடுவீர்கள் என்பது அவர்கள் கணிப்பு. குறைவாக சாப்பிட்டால், நன்றாக செரிமானம் செய்யலாம். நீங்கள் குண்டாகவும் ஆகமாட்டீர்கள். முழுமையான ஈடுபாட்டுடன் உண்ணும் செயலில் ஈடுபட்டால், ஒரு வாய் உணவும் கூட உங்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்திடும். ஆனால் நம் யோகக் கலாச்சாரத்தில் தனியாக அமர்ந்தே உண்பார்கள். சேர்ந்து அமர்ந்து உண்டாலும், அடுத்தவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதை பார்க்கமாட்டார்கள். அந்த நேரத்தில், அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பது உங்கள் வேலை இல்லை. உங்கள் வேலை உண்பது மட்டும்தான். ‘உண்பது’ ஒன்றும் சாதாரணமான காரியம் அல்ல. நீங்கள் உண்ணும் உணவை ‘நீங்களாகவே’ மாற்றிக் கொள்ளும் மாபெரும் செயல் அது. நீங்கள் உண்ணும் பீன்ஸ், காரட், இட்லி, தோசை, வடை எதுவாக இருந்தாலும், அதை ஒரு ‘மனிதனாக’ (அ) ‘உங்களாகவே’ நீங்கள் மாற்றுகிறீர்கள். ஏதோ ஒன்று உங்களில் ஒரு அங்கமாக மாறுகிறது. இதில் உங்களை நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். உண்பது… உடலுறவு… இப்படி பிறவற்றை உங்களில் ஒரு அங்கமாக ‘சேர்த்துக்’ கொள்ள பல வழிகள் இருக்கின்றன. உண்பது ஒரு வழி என்றால், உடலுறவு மற்றொன்று. உடலுறவு கொள்ளும்போது, இன்னொருவர் உங்களில் ஒரு அங்கமாக மாறிவிட்டார் என்பது போல் இருக்கும், ஆனால் அது அவ்வாறு நடப்பதில்லை. உண்ணும்போது இது நிச்சயமாய் நடக்கிறது. ‘நீங்கள்’ அல்லாத ஒன்றை, வெற்றிகரமாக உங்களில் ஒரு அங்கமாக உங்களால் சேர்த்துக் கொள்ள முடிகிறது. இது மாபெரும் விஷயம். சுவையினால் அல்ல, ‘சேர்த்துக்’ கொள்ளும் உணர்வு மேம்படுவதால் இது பெரிய விஷயம். மண்ணாய் இருந்ததை உணவாய் மாற்றி, உணவாய் இருப்பதை மனிதனாக மாற்றும் அதிசயம். முழுமையான ஈடுபாட்டுடன் உண்ணும் செயலில் ஈடுபட்டால், ஒரு வாய் உணவும் கூட உங்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்திடும். இன்னும் அதிகமாக நுண்ணுணர்வுடன் நீங்கள் இருந்தால், நீங்கள் சுவாசிப்பதும் கூட உங்களிடம் உணர்ச்சிப் பெருக்கை உண்டு செய்யும். நீங்கள் உள்ளிழுத்து வெளிவிடும் ஒவ்வொரு சுவாசத்திலும், இம்முழு உலகையும் உங்களுள் நீங்கள் அரவணைக்கிறீர்கள். நீங்கள் உள்ளிழுக்கும் காற்று, இதற்கு முன் எத்தனை எத்தனை முறை, எத்தனை எத்தனை ஆயிரம் உயிரினங்களின் உள் சென்று வெளி வந்த காற்று என்பது உங்களுக்குத் தெரியுமா? காற்று எப்போதும் புதுப்பிக்கப் படவில்லை. லட்சம் லட்சம் ஆண்டுகளாக இதே காற்று தான் இங்கு இருந்திருக்கிறது. சரியாக சுவாசித்தால்… நீங்கள் மட்டும் சரியாய் சுவாசித்தால், நீங்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் எல்லாமே இங்கு தான் இருக்கிறது. ஒரு புத்தர், பதஞ்சலி முனிவர், இயேசு, யாரை வேண்டுமானாலும் நீங்கள் இப்போது சுவாசிக்கலாம். அவர்கள் சுவாசித்ததும் இதே காற்றைத் தான். அப்படியென்றால் ஞானம் எல்லாம் காற்றில் தான் கலந்திருக்கிறதா? அப்படியில்லை. இந்தக் காற்று எல்லாவற்றையுமே தொட்டு வந்திருக்கிறது. இதை விட முக்கியமான ஒன்று, நீங்கள் எடுக்கும் இந்த உள்மூச்சு, ‘நீங்களாகவே’ ஆகிவிடுகிறது. இந்த உள்மூச்சு இல்லாமல், உங்களால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. இந்த உள்மூச்சு உங்களுக்கு இத்தனை முக்கியமெனில், அதை உருவாக்கிக் கொடுக்கும் அனைத்துமே உங்களுக்கு முக்கியம்தான். இப்படி செய்யும் ஒவ்வொன்றையும் முழு விழிப்புணர்வுடன் நீங்கள் செய்தால், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றுமே உங்கள் முக்திக்கு வழிசெய்யும். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் உங்கள் முக்திக்கான நுழைவாயிலாய் செயல்படும். இதில் எதை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். உங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டால், பழம் உண்ணும் செயலும் கூட உங்கள் முக்திக்கு வழிசெய்யலாம்.

Saturday, July 19, 2014

பிஸினஸில் ஜெயிக்க 8 தியாகங்கள்…

பிஸினஸில் ஜெயிக்க 8 தியாகங்கள்…



1.நேரம்:

தொழில் முனைவோரானாலே உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை. உங்கள் பிஸினஸை ஓரளவுக்கு நல்ல நிலைக்குக் கொண்டுவரும் வரை நேரம் உங்களை முழுமையாக கையில் எடுத்துக் கொள்ளும். கல்யாணம் காட்சிஊரில் திருவிழா,பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்சினிமாபார்க் என்பதெல்லாம்கூட ஆரம்ப கட்டத்தில் முற்றிலும் மறக்க வேண்டியதுதான்.

2. உறவுகள்:

உறவுகள் மேம்பட பணம் காசு தேவையில்லை. நேரம் ஒதுக்குவதுதான் முக்கியம்.மனைவிகுழந்தைகள் மற்றும் நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நீங்கள்உடனிருந்தால்தான் உறவுகள் மேம்படும். உங்கள் தொழில் உங்கள் தினசரி காலண்டரை நிர்வாகம் செய்தால்தொழில் மட்டும்தான் மேம்படுமே தவிர உறவுகள் அல்ல. தொழில் நிலைத்து நிற்கும் வரை உறவுகளை மறக்க வேண்டியிருக்கும்.
3. உடல் நலம்:

ஆரம்ப காலத்தில் 24 x 7 வேலை என்றிருக்க வேண்டியிருக்கும். பின்னர் அதுபழகிப்போய்விடும்Рஇப்படி 24 மணிநேரமும் முழுகியிருக்கும்போது உங்கள்உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக டாக்டரிடம் போகவே மாட்டீர்கள்.அப்புறம் என்ன பெரிய ரிப்பேர்தான் உங்களை கட்டாய ஓய்வெடுக்க வைக்கும்.உடலுக்கு ஓய்வுபராமரிப்பு மற்றும் மனதுக்கு என்டர்டெய்ன்மென்ட் போன்றவைஅவசியம். ஹெல்த்தைப் பார்க்காமல் தொழில் நிலைகொள்ளும் வரைஓடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

4. வாய்ப்புகள்:

இருக்கும் தொழில் தவிர மற்றவற்றில் நிறைய வாய்ப்புகள் கண் முன்னே தெரிந்தபோதிலும் அவற்றைச் செயல்படுத்த முடியாமல் போகும். பிள்ளையை நல்ல ஸ்கூலில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்கும் தேதியைத் தவறவிடுவதிலிருந்துநல்ல இடத்தில் விலைக்கு வரும் வீட்டுமனையைத் தவறவிடுவது வரை பல்வேறு வாய்ப்புகள் கை நழுவிப்போகும்.

5. பணம்:

பணம் சம்பாதிக்கத்தானே தொழில் என்கின்றீர்களாஅது உண்மை தான். ஆனால்,புதிய தொழில்முனைவோர்கள் பல்வேறு விதத்திலும் பணத்தினை இழக்கவேண்டியிருக்கும். நிறைய விஷயத்தைப் புதிதாகச் செய்வதால் ஒன்றுக்கு ரெண்டாகபல இடங்களில் செலவாகும்.

6. சகிப்புத் தன்மை:

புதுத்தொழில் அல்லவாநம்மிடம் வேலைக்கு இருக்கும் நபர்கள் கூட கொஞ்சம்இளக்காரமாகப் பார்க்கும் காலமாக இருக்கும். செலவுகளுக்குத் தடுமாறும்போது(குறிப்பாக சம்பள நாட்களில்) இந்த கம்பெனி எத்தனை நாளைக்கு ஓடும் என்றஇளக்காரம் ஆபீஸ் பையன் முதல் சப்ளையர் வரை பலருக்கும் இருக்கும். அதைஎல்லாம் புன்முறுவலோடு சகித்துக்கொள்கிற தன்மை வரவேண்டும்.

7. நான் என்கிற எண்ணம்:

உங்கள் புராடக்ட் தரமானதாக இருந்தாலும் புதுசா அதை எடுத்துக்கொண்டு போய்மார்க்கெட் செய்யும்போது படும் கஷ்டமும் அவமானமும் சொல்லிமாளாது. என்னகுவாலிட்டிРஅடிமாட்டு விலைக்குத் தர்றேன். கடைக்காரர் கண்டுக்கவேமாட்டேங்குறாரேД என்று குமைந்து போவீர்கள். நான் என்கிற எண்ணத்தைஒழித்துக்கட்டிவிட்டால்நம்மையோ நம் பொருட்களையோ தவறாகப் பேசினாலும்கோபப்படாமல்அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.

8. மானம் மரியாதை:

மூன்று வருஷ குடும்ப மற்றும் தொழில் ரீதியான செலவுக்குத் தேவையான முழுப்பணத்தையும் பேங்கில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்துக்கொண்டு யாரும்பிஸினஸ் ஆரம்பிக்க முடியாது.
கடனை உடனை வாங்கித்தான் பிஸினஸ் நடத்த முடியும். சப்ளையரிலிருந்து வீட்டுச் செலவு வரை பணம் தேதியில் தராவிட்டால் கொஞ்சம் மரியாதைக் குறையத்தான் செய்யும். அதையும் தியாகம் செய்யத்தான் வேண்டும்.

இப்படிப் பால தியாகங்களைச் செய்து தொழில் முனைந்தால் தான் பங்களாகார் என பல வசதிகள் கிடைக்கும். இந்தத் தியாகங்களைச் செய்ய மனம் வராவிட்டால்உங்களுக்கு மிஞ்சுவது தொழிலதிபராக வேண்டும் என்கிற தாகம் மட்டுமே.

Yours Happily 
Jc.Dr.Star Anandram
www.v4all.org 
cell -97900444225 

Tuesday, July 15, 2014

தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்கள் - பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..


நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.

அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.

நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.

பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான முகபாவனையுடன் சொல்வோமானால் நிச்சயம் அந்த கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏளனத்துடன், கேலியும் கிண்டலும் கலந்து நீங்கள் உண்மையையே பேசினால் கூட அதை நம்ப மறுப்பார்கள். இந்த முறையாலும் நீங்கள் மற்றவர்களைக் கவர முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், எதிரில் இருப்பவர் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிவிடும் அபாயமும் உண்டு.

கடுகடு முகத்துடன், சிடு சிடு வெனப் பேசி, ஒரு கருத்தைச் மற்றவர்களிடம் சேர்க்க நினைக்கும்போது, அந்த கருத்தால் எதிரில் இருப்பவர் மனம் பாதிப்பதோடு, சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக்கொள்கிற மனநிலையை நாம் இழக்க வைத்துவிடுகிறோம். இதனால் மேலும் பிரச்னைகள் கூடுமே தவிர, குறையவே குறையாது. இவ்வாறு பேசுவதால் உங்களுடைய கருத்துகளையும் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.. உங்களுடைய கருத்திற்கு மதிப்பும் இருக்காது.

எனவே எளிமையாக, இனிமையாக, இயல்பாக மனதில் மகிழ்ச்சி பொங்க சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறுங்கள்.

அவ்வாறு தெளிவாகவார்த்தைகளை உச்சரித்து பேசுவதால், கேட்பவர்களின் மனதில் உங்களுடைய கருத்து ஆழ பதியும். இதற்கு எடுத்துக்காட்டாக நமது ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகி சிவம் ஐயா அவர்களைக் கூறலாம். மேடையில் அவர் பேசும்போது உச்சரிக்கும் விதம், வெளிவரும் சொற்களில் ஓசைநயம், அழுத்தம் ஆகியற்றை உன்னிப்பாக கவனித்தால் இக்கலை உங்களுக்கும் கைகூடும்.

உரையாடல் தெளிவாக அமைந்துவிட்டால், அதன் மூலம் நாம் சொல்லக்கூடிய கருத்துகள் மற்றவர்களை அடைவதோடு மட்டுமல்லமால், நல்லதொரு நட்பையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என என் பாட்டி சொன்னதிற்கான சரியான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிபட ஆரம்பித்திருக்கிறது? ஆரம்ப கால பள்ளி நாட்களில் "வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்று சொல்கிறீர்களே... அது என்ன வாயு பாட்டி" என்று என் பாட்டியிடம் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

"சுவாசத்திற்கு தேவையான வாயு ஆக்சிஜனா என்றெல்லாம் கேட்டு கேலியும் கிண்டலும் செய்திருக்கிறேன்." தற்போதுதான் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

வாயுள்ள பிள்ளை - நன்றாக பேசி, தெளிவான வார்த்தைகளை வெளிப்படுத்தி பிறர்மனதில் பதியவைப்பது என்பது தான் இதனுடைய சரியான அர்த்தம் என்பது இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களுடைய எண்ணங்களை எதிரில் இருப்பவரிடம் தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்தி, தான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துச்சொல்லி, கருத்தைப் பதிந்தாலே போதும். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். இதுதான் பேசும் கலை.. இதுவே ஜெயிக்கும் கலை..!

அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, வியாபாரத் தொடர்பான உரையாடல் ஆனாலும் சரி.. வேறு தொடர்பு உரையாடல்களானாலும் சரி...

இவ்வாறு தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்களாகவே, வெற்றியை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பவர்களாகவே வலம் வருகிறார்கள்.. உங்கள் கருத்துகளை சொல்வதில் நீங்கள் எப்படி ? நீங்களும் வாயுள்ள பிள்ளைதானே...

Yours 

Dr.Star Anand Ram
www.v4all.org