Saturday, May 30, 2015

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்
ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர்
பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz
crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது
ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை
அகற்ற உதவுகிறது. தினமும் உப்புத் தண்ணீரால்
வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப்
படுகிறது. ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத
கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத்
துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச்
சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும்
குறைக்கும்.
குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம் -
நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும்
இடம் குளியலறை / கழிவறையாகும்.�
இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண்
கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன.� எனவே
குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில்
அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய
சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.�
கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல்
உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை /
கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும்.� இந்த
உப்பு எதிர்மறைச் சக்தியை
உறிஞ்சிவிடுகிறது.� உப்பு ஈரமாகி
சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில்
உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

No comments:

Post a Comment