Friday, May 22, 2015

அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா?

அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா? - www.v4all.org

அதிகம் நடப்பதால் மூட்டு தேய்ந்துவிடும் என்பது உண்மையல்ல. ஆனால், வாக்கிங் போகும் போது சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என நடக்கக் கூடாது. 

ஆரம்ப காலத்தில், ஒன்றரை கிலோமீட்டர் தொடங்கி 3 கிலோமீட்டர் வரை நடக்கலாம். மூச்சு இறைக்கும்படி வேக வேகமாக நடக்கக்கூடாது. ரிலாக்ஸாக நடந்து பழக வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 10 நாட்கள் மெதுவாக நடக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம். பருமன், மூட்டு வலி இருப்பவர்கள் அதிகம் நடக்க வேண்டாம். 

சரியான வேகத்தில், சரியான இடைவெளியில் நடக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். சரியான சைஸ் ஷூ அணிவது அவசியம். சரிவான பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாக்கிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகமாகி, பிரச்னைகளை உருவாக்கும். சமமான பரப்பில் வாக்கிங் செல்வதுதான் ஆரோக்கியம். 

உடலில் உள்ள மூட்டுகளை ஒரு பொஸிஷனுக்குக் கொண்டு வர ‘வார்ம் அப்’ உதவுகிறது. எனவே, நடைப்பயிற்சிக்கு முன்னால், கை, கால், கணுக்கால், தோள்பட்டை, கழுத்து இவற்றை முன்னும் பின்னுமாக அசைத்து மடக்கி நீட்ட வேண்டும். சுமார் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ‘வார்ம் அப்’ செய்து விட்டு வாக்கிங் செல்லலாம். பின்புறமாக வாக்கிங் செல்ல இட வசதியில்லாதவர்கள், டிரெட்மில்லில் முறையான ஸ்பீடில் நடக்கலாம்.

No comments:

Post a Comment