Saturday, May 30, 2015

நற் சிந்தனைகள்-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

நற் சிந்தனைகள்-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

* மீன் கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும். வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்றுபோய்விடும்.அதுபோல உலக ஆசைகளை விட்டுவிடப் பழகிக் கொள்ளுங்கள்.

* மக்கள் பெரும்பாலும் புகழுக்காகவோ, புண்ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணுகின்றனர்.அத்தகைய உதவிகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ணங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படைக்கின்றன.இந்த நோயைப் போக்க வேண்டுமானால் அடிக்கடி நல்லவர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.

* பணத்தை ஏராளமாகச் சம்பாதித்தவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களுக்காகச் செலவிடுவது போல,கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்காகவும் செலவழிப்பதற்கு முன்வரவேண்டும்.

* உலகில் மக்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவதில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம் வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.

* செடி ஒன்று பெரிய மரமாகிவிட்டால், அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையை அம்மரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை பெற்றுவிடும். அதுபோல, உள்ளத்தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

தயானந்த சரஸ்வதி-நற் சிந்தனைகள்

* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை.
ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால்
அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.

* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான்.தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன.

* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே!இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ,அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை.

* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொன்றுமாக இரண்டு கிடைக்கின்றன.அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகின்றன. இதுவே அத்வைதத்தின் அடிப்படை.

* நாம் வேறு, நம்முடைய அனுபவம் வேறு என்று இரண்டாகப் பிரிந்த நிலையில் நமக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை.அத்வைத நிலையில் உணர்பவரும், உணர்வதும் வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது.ஆழமான அமைதியான ஆனந்தமான ஒன்றிய நிலையே அத்வைதம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம்.

No comments:

Post a Comment