Showing posts with label self motivation Trainer in tripur. Show all posts
Showing posts with label self motivation Trainer in tripur. Show all posts

Wednesday, September 2, 2015

குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில்

குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். ஸ்ரீதட்சணாமூர்த்திதான் குரு பகவான் என்று பலர் நினைக்கிறார்கள். சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி வேறு, நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் என்பவர் வேறு. சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி,  குருபகவானுக்கும் குரு. கல்வி – ஞானத்திற்கும் குருவாக சிவபெருமான் இருக்கிறார். தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் சிவபெருமானை ஸ்ரீதட்சணாமூர்த்தியாக – குருவாக தேவர்கள் வணங்குகிறார்கள். ஆனாலும் குரு பெயர்ச்சி அன்று தேவர்களுக்கும் – நவகிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் பிரகஸ்பதி என்கிற குருபகவானை வணங்க வேண்டும். குரு பகவானுக்கே குருவாக இருக்கின்ற சிவபெருமானாகிய ஸ்ரீதட்சணாமூர்த்தியை குருவாக பாவித்து வணங்குவதில் தவறில்லை என்றாலும், ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை, அன்று பிறந்தநாள் காணும் நபருக்கு தானே சொல்வோம், அந்த நபரின் தாய்-தந்தைக்கா சொல்வோம்.?  அதுபோல, குரு பெயர்ச்சி அன்று குரு பகவானை வணங்குவது மேலும் நல்லது. ஒவ்வொரு கோயிலிலும் குருபகவான் நவகிரக சந்நதியில் அருள்பாலிக்கிறார். அங்கிரச முனிவருக்கு பிறந்த குருபகவான், கல்வியில் சிறப்பாக விளங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். சிவபெருமான் குருபகவானின் தவத்தை ஏற்று, நவகிரகங்களில் ஒருவராக திகழ ஆசி வழங்கினார். அத்துடன் சூரியபகவானுக்கு மேலான சக்திபடைத்தவராகவும் திகழ ஆசி வழங்கினார். அதுபோல, மங்களங்கள் யாவும் தரும் சக்தியையும் கொடுத்திருக்கிறார். ஆகவே சிவபெருமானின் சக்தியை பெற்ற பிரகஸ்பதி என்ற குருபகவானைதான் குருபெயர்ச்சி அன்று வணங்க வேண்டும். கெட்ட நேரமாக இருந்தாலும்,  குருபகவானின் அருள்பார்வை நம் மீது இருந்தால் நல்ல நேரமாக மாறும். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் இருக்கிறது. அதில் ஒன்று இது –  குரு பார்வை ஒரு சிறந்த ஜோதிடர். அவர் தன் மகளின் ஜாதகத்தை கணித்தார். மகள் ஜாதகப்படி யார் அவளை திருமணம் செய்கிறார்களோ அந்த மணமகன் மறுநாளே இறந்துவிடுவான் என்பதை கணித்து அறிந்தார். தான் பெற்ற மகளாக இருந்தாலும் தன் மகளை திருமணம் செய்ய முன் வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடுவார் அந்த தந்தை. பெண்ணின் தகப்பனாரே இப்படி கூறினால் யார் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வருவார்கள்.? இதனாலேயே அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கவில்லை. ஒருநாள், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை பார்த்து பிடித்துபோய், தங்கள் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தனர். வழக்கமாக எல்லோரிடம் சொல்வதை போல பெண்ணின் தந்தையான ஜோதிடர், இந்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் தன் மகளின் ஜாதக இரகசியத்தை சொன்னார். இதை கேட்ட பிறகு, “தெரிந்தே நெருப்பில் விழுவதா?” என்று அதிர்ந்த மாப்பிள்ளை வீட்டார், அய்யா சாமீ… உங்கள் சகவாசமே வேண்டாம் என்று எழுந்துக் கொண்டனர். ஆனால் மாப்பிள்ளைக்கு அந்த பெண்ணை பிடித்துவிட்டது. தன் பெற்றோரை சமாதானப்படுத்தினான். திருமணம் செய்தால் இவளைதான் மணப்பேன் என்ற பிடிவாதம் பிடித்து அந்த பெண்ணையே திருமணம் செய்தான். மறுநாள் மாப்பிள்ளை இறப்பது நிச்சயம் என்ற முடிவுடன் மனதை தைரியப்படுத்திக் கொண்டார் ஜோதிடர். அந்த அளவில் ஜோதிடத்தில் வல்லவர் அவர். அதனால் எந்த நேரத்திலும் தன் மகள், அறையின் கதவை திறந்து கதறி கொண்டே வருவாள் என்று நினைத்து கொண்டே தூங்காமல் அறையின் கதவையே பார்த்து கொண்டே இருந்தார். ஆனால் மறுநாள் தன் மகள் மகிழ்ச்சியான முகத்துடன் கதவை திறந்து கொண்டு வந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் தந்தை. “ஜாதகம் பொய்யா… அல்லது நான் தவறாக கணித்து விட்டேனா..?“ என்று சந்தேகம் அடைந்து, தான் வணங்கும் விஷ்ணு பகவானை வேண்டி தன் சந்தேகத்தை கேட்டார். “நீ சராசரி மனிதன் அல்ல. நீ குரு பகவான். உன் மகளும் மருமகனும் தங்கிய அறை இருக்கும் திசையை கவலையுடன் பார்த்து கொண்டே இருந்ததால், உன் பார்வையின் சக்தியால் உன் மகளின் மாங்கல்யம் பலம் பெற்றது. குருவாகிய உன் பார்வைபட்டால் போதும் அதுவே கோடி புண்ணியம். மூங்கில் மரத்தின் அருகில் நெல்லை போட்டால் மூங்கில் மரம் பட்டுப்போகும். ஆனால் உன் பார்வைபட்டால் தோஷமான மாங்கல்ய பலம் கொண்டவர்களும் மங்கலகரமாக வாழ்வார்கள்“ என்றார் விஷ்ணுபகவான். அசுரர்களை வீழ்த்திய குரு    தேவர்களுக்கும் – அசுரர்களுக்கும் தொடர்ந்து போர் நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் தேவர்கள் மனம் வருந்தி பிரம்மனிடம் சென்று, தங்களுடைய மனகவலையை சொன்னார்கள். “நீங்கள் குருபகவானை வணங்கி அவரை உங்கள் தலைவராக ஏற்றால், நிச்சயம் உங்களுக்கு அசுரர்களால் தொல்லை ஏற்படாது” என்றார் பிரம்ம தேவர். பிரம்மன் கூறியது போல, இந்திரனும் மற்ற தேவர்களும் குருபகவானை வணங்கி தங்களுடைய குருவாக ஏற்றார்கள். இதன் பிறகுதான் அசுரர்களை தேவர்களால் வீழ்த்த முடிந்தது. திருமணயோகம் தரும் குரு   ஒருவருக்கு திருமண பேச்சை எடுத்தாலே குருபிராப்தம் வந்ததா? என்று பெரியோர்கள் கேட்பார்கள். குரு பிராப்தம் இருப்பவர்களுக்குதான் விரைவில் திருமணம் நடக்கும். மாங்கல்ய பலம் கிடைக்கும். செல்வம் தேடி வரும். கல்வியில் சிறந்து விளங்குவர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்வும், குருவின் ஆசி ஆயுள் முழுவதும் கிடைக்க   வேண்டும் என்பதால்தான், பெண்கள் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில், மஞ்சள் அல்லது இயற்கையாக மஞ்சள் நிறம் கொண்ட தங்கத்தை மாங்கல்யமாக செய்து அணிகிறார்கள். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் இருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சல் வஸ்திரம் அணிவிக்கலாம். இதனால் குருதோஷம் நீங்கும். திருமணம் தடைப்படுபவர்கள், ஏதாவது ஒருநாள் உங்களுக்கு சௌகர்யப்படும் நாளாக தேர்வு செய்து, அந்த நாள் வியாழகிழமையாக வருவதாக பார்த்து, குருபகவானை மனதால் நினைத்து புஷ்பராக ரத்தினத்தை குருவிரல் என்று சொல்லும் ஆள்காட்டிவிரலில் அணிந்து கொண்டு, தினமோ அல்லது வாரத்திற்கு ஒருநாள் வியாழகிழமையில் அந்த ரத்தினத்தை குரு பகவானாக பாவித்து பூஜை செய்து விரலில்  அணிந்துக்கொண்டால் விரைவில் திருமணம் கைக்கூடும். வியாழன்தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி, நவகிரக சந்நதியில் உள்ள குரு பகவானை வணங்கி வருவதும் திருமண தடை அல்லது கல்வி தடைக்கு விசேஷ பரிகாரமாகும். குருபெயர்ச்சியன்று மஞ்சள் வாங்கினால் மங்கலகரமான சுபிட்சமான வருடமாக இந்த வருடம் முழுவதும் அமையும். மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தாலும் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறு மஞ்சள் நிறம் கலந்து இருந்தாலும் யோகம் ஏற்படும். எப்படி சிகப்பு நிறத்தை கண்டால் துஷ்டசக்திகள் விலகுகிறதோ, விஞ்ஞான மருத்துவமும் அதிக நேரம் சிகப்பு வண்ணத்தை நோயாளியின் உடலில் பாய்ச்சி ரத்த ஓட்டம் சீராக செல்ல பயன்படுத்துகிறார்களோ அதுபோல், மஞ்சள் நிறத்திற்கும் வேறு பல நல்ல சக்திகள் இருக்கிறது. எந்த பிரச்னைகள் வந்தாலும் அதை முறியடித்து மங்கலகரமான  வாழ்க்கையை கொடுக்கும் சக்தி குருபகவானுக்கு இருக்கிறது. நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய குருபகவான் அருளட்டும். குருபிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மஹேஸ்வர குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம.
- www.v4all.org 

Sunday, July 12, 2015

போதிதர்மா-ஒரு முழு வரலாறு

போதிதர்மா-ஒரு முழு வரலாறு

போதிதர்மா-ஒரு முழு வரலாறு 

போதிதர்மா...rko..

போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது? 

 அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெற்றிபெற்றது, பின் தாய்நாடு திரும்பியது பற்றி அனைவருக்கும் தெரியும். போகும் பொழுது தாம் வென்ற பகுதிகளை நிர்வாகம் செய்ய அவர் ஒரு படைத் தளபதியையும் படை வீரர்களையும் விட்டுச் சென்றார் என்கிறது வரலாறு.
அலெக்சாண்டர் great..rko..

அந்தக் காலகட்டத்தில்தான் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார். சில காலத் திற்குப் பின் மௌரியப் பேரரசு வலிகுன்றியது. 
சந்திரகுப்த மௌரிய
அதேசமயத்தில் அதாவது கி.மு. 234-ல் சாதவாகனப் பேரரசு தக்காணத்தில் தோன்றியது. இவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றியவர்கள். ஏறக்குறைய 450 ஆண்டுக்காலம் சாதவாகனர்களின் பேரரசு நீடித்திருந்தது. அது வலி குன்றிய காலத்தில் பல்லவ ஆட்சி தொடங்கியது.

அதற்கு முன்பு பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் படைத் தலைவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 80 முதல் கி.பி. 104 வரையில் அரசாண்ட சாதவாகனப் பேரரசனான கௌதமி புத்திர சதகர்ணி சகர், பல்லவர், யவனர் ஆகியவர்களை அழித்தவனென்று வர்ணிக்கப்பட்டான். இதன்மூலம் அலெக்சாண்டர் படையெடுப்பின்போது வந்த யவனர்கள் வடஇந்தியா மட்டுமல்லாது தென்னிந்தியா வரை பரவி, அங்கங்கே படைத் தளபதிகளாய் இருந்தனர் என்பதை அறியலாம்.

இப்படி ஆந்திர நாட்டிலிருந்து வடஇந்தியா வரை பரவியிருந்த மிகப் பெரிய சாதவாகனப் பேரரசு அழிந்தபோது, அதன் பல பகுதிகளையும் ஆங்காங்கு பொறுப்பில் இருந்தவர்கள் ஆளத் தொடங்கினர். 
அப்படித்தான் அந்தப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர்கள் தங்களுடைய ஆட்சியை நிறுவினார்கள். அவர்கள் தங்களைப் பரத்துவாஜ கோத்திரத்தினர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றினார் கள். அவர்கள் ஆட்சி பெற்ற முதல் சில நூற்றாண்டு களில் வெளியிட்ட செப்பேடுகளும் பட்டயங்களும் வடமொழியிலேயே அமைந்திருந்தன. பாரவி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களையே ஆதரித்தனர். யாகங்களைச் செய்து தான- தருமங்களையும் செய்தனர்.

முற்காலப் பல்லவனான ஸ்கந்தவர்மன் அரசனாயி ருந்த காலத்தில் பல்லவ ராஜ்ஜியம் வடக்கே கிருஷ்ணா நதி வரையிலும், மேற்கே அரபிக்கடல் வரையிலும் பரவியிருந்தது. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான குமாரவிஷ்ணு கைநழுவிப் போயிருந்த காஞ்சியைக் கைப்பற்றினான். இவனுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவரே போதிதர்மர் என்று அறியப்பெற்ற புத்த வர்மன் ஆவார்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA ) 

போதிதர்மா வரலாறு .


போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான். 

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய – மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் – தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான். 
  
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான். 

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 

அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

சீனாவில் பௌத்த மதம் செல்வாக்கோடு திகழ்ந்த போதிலும் அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. எனவே சீனாவின் தென்பகுதியை ஆண்ட லொயாங் அரச மரபைச் சேர்ந்த சக்கரவர்த்தி வு டியின் வேண்டு கோளுக்கு இணங்க, 27-ஆவது குரு பரம்பரையைச் சேர்ந்த பிரஜ்னதாரா என்பவர் தமது சீடரான போதிதர்மாவை அங்கு செல்லும்படி கட்டளையிட்டார்.

அவர் கட்டளையை ஏற்று கடல்வழியாக சீனா புறப் பட்ட போதிதர்மா ஜாவா வழியாகக் கான்டன் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து நான்ஜிங் சென்றவரை சக்கரவர்த்தி வு டியே நேரில் சென்று வரவேற்றார். பெரிய கண்கள், ஆக்ரோஷமான முகம், அச்சந்தரும் தோற்றம், கையில் நீளமான தடியுடன் போதிதர்மாவைப் பார்த்த சக்கரவர்த்திக்கு அச்சம் பிறந்தது.

அரண்மனையிலேயே தங்கும்படி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்ட போதிதர்மர் ஷாங் மலையில் உள்ள ஷாவோலின் கோவிலுக்குச் சென்று தங்குகிறார். விடியற்காலையில் தனியே வந்து சக்கரவர்த்தி யைப் பார்த்து "மனதைத் தேடிக் கண்டுபிடி' என்று சொல்லி தியானத்தில் அமரச் சொல்லுகிறார். தியானத்தில் தன்னை மறந்து போகும் சக்கர வர்த்தியைப் பாராட்டுகிறார்.

அதன்பிறகு அந்த மலையில் உள்ள சிறிய குகை ஒன்றில் புகுந்து அதன் சுவரைப் பார்த்தபடி அமர்ந்து கொள்கிறார். சுமார் ஒன்பது வருடங்கள் தியானத்தில் இருக்கும் அவரை ஹியூகி என்பவன் திரும்பி அனைவரையும் பார்க்கும்படிச் செய்கிறான். அவனையே முதல் சீடனாக ஏற்றுக்கொள்கிறார். 

அதன்பிறகு மேலும் மூன்று சீடர்கள் சேருகிறார்கள்.

ஷாவோலின் துறவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதி தர்மா தென்னிந்தியக் களரிச் சண்டை முறையை சீன நாட்டில் அன்றிருந்த சண்டை முறையோடு கலந்து குங்ஃபூ என்ற தற்காப்புக் கலையை உருவாக்கி அனைவருக்கும் கற்றுத் தந்தார்.

துறவிகள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முற்றிலும் புதிய "டாய்சீ' என்ற நடனக் கலை யைக் கற்றுத் தந்தார். ஸென் என்னும் புதிய தியான முறையைக் கண்டுபிடித்து சீனாவில் புகுத்தினார். ஷாவோலின் துறவிகள் கட்டாயம் வைத்தியம் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமென்று எண்ணி அதையும் கற்றுக்கொடுத்தார். இவருடைய முறைகள் சீனா முழுவதும் பிரபலமானது.

தனக்குப் பிறகு தான் கண்டுபிடித்தவற்றைத் தொடர்ந்து பரப்புவதற்கு வாரிசு ஒருவரை நியமிக்க எண்ணி, முதல் சீடனான ஹியூகியைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பும் செய்தார். அதனால் பொறாமையும் சினமும் கொண்ட மற்ற மூன்று சீடர்களில் ஒருவன் அன்றி ரவு அவருடைய உணவில் விஷத்தை வைத்துவிட்டான்.

போதிதர்மா இறந்ததும் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அவர் இறந்த சில நாட்கள் கழித்து இமயமலையின் சாரல் பக்கமாக போதிதர்மரைப் போன்ற ஒருவர் தடியோடு சென்றதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

துறவிகள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகப் தன்னுடைய கண்ணிமைகளில் இருந்து பிடுங்கி எறிந்த உரோமங்களே தேயிலைச் செடிகளாக முளைத்தன என்று ஒரு செய்தியும் சீனா வில் உலவுகிறது. என்ஸைக்ளோபிடியா ஆப்பிரிட் டானிக்காவிலும் இந்தச் செய்தி இருக்கிறது.

மேலே உள்ள செய்திகள் சரித்திரத்தின் அடிப்படை யில் தரப்பட்டன. போதிதர்மர் தமிழரா அல்லவா என்ற விவாதத்திற்குள் நுழைய நான் விரும்பவில்லை. இன்று உலகிலுள்ள மக்களில் பெரும்பாலோர் பல்வேறு கட்டங்களில் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகி தனித் தன்மையை இழந்துவிட்டிருக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளரின் துணிபு.

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!


போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றா
ம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்


போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

தவிரவும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கின்படி தமிழ் பேசி தமிழ்நாட்டில் வசித்து வரும் அனைவரும் தமிழரே. 

அப்படியானால் போதிதர்மாவும் தமிழர்தானே. ,,,,.....,,,

Saturday, July 4, 2015

தாய்மார்கள் வாழ்க! தாயன்பு வாழ்க! வாழ்க வளமுடன்!

தாய்மார்கள் வாழ்க! தாயன்பு வாழ்க! வாழ்க வளமுடன்!
அன்பிற்கு இணையான ஒன்று இவ்வுலகில் இல்லை. அன்பே சிவம் என்பர். அன்பு தான் இவ்வுலகை சுழல செய்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்பில் பல வகை உண்டு.
தாயன்பு, தந்தையின் அன்பு, சகோதர சகோதிரிகளின் அன்பு, உறவினர்களின் அன்பு, நண்பர்களின் அன்பு, காதலன் அல்லது காதலியின் அன்பு, கணவன் அல்லது மனைவியின் அன்பு என்று பல வகையான அன்பு நம்மை மகிழ்ச்சியாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லாவிதமான அன்பும் சுயநலமானதாகவே இருக்கிறது. ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உயிருக்குயிராய் காதலிப்பவர்களும் சுயநலமாகவே அன்பு செலுத்துகிறார்கள் என்பது தான்.
பணமோ, அழகோ குறைந்து விட்டால் காதல் காணாமல் போவதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?
வேலை போய் விட்டால் காதல் போய் விடுகிறது. சொத்து போய் விட்டால் காதல் போய் விடுகிறது. அழகு போய் விட்டால் காதல் போய் விடுகிறது. பதவி போய் விட்டால் காதல் போய் விடுகிறது. அரசனைப் பார்த்தால் புருஷனைக் கைவிடுகிறார்கள். பணக்காரப் பெண்ணைப் பார்த்து விட்டால் காதலிக்கும் பெண்ணுக்கு டாட்டா காண்பித்து விடுகிறார்கள்.
செல்வமும், செல்வாக்கும் போய் விட்டால் நட்புகளும், உறவுகளும், காதல்களும் காணாமல் போய் விடுகின்றன என்பது தான் நிஜம்.
இந்த அவசர உலகில் இன்னும் ஒரே ஒரு அன்பு தான் தன்னலமற்றதாக இருக்கிறது. அது தான் தாயன்பு. தாயின் அன்பு மட்டும் தான் கலப்படமில்லாத, சுயநலமில்லாத, நிபந்தனையற்ற அன்பாக விளங்குகிறது. நீங்கள் பிச்சைக்காரனாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும், தாயின் 'அன்பு ஊற்று' மட்டும் வற்றவே வற்றாது. நீங்கள் விபத்தில் காலை இழந்து விட்டாலும், ஊரே உங்களை ஒதுக்கி வைத்து விட்டாலும் தாயின் அன்பு மட்டும் மாறவே மாறாது.
கடவுள், தான் .எல்லா இடத்திலும் இருக்க முடியாதென்பதால் தாயைப் படைத்தான் என்பர். என்ன உண்மையான வார்த்தைகள்? உங்களால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால், உங்கள் தாயை கும்பிட்டு வாருங்கள், அதே பலன்கள் உங்களுக்கு உறுதியாய் கிட்டும்.
தாயன்பிற்கு நிகரான ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை. அதற்கு அடுத்தபடியான தன்னலமற்ற அன்பு என்றால் தந்தையின் அன்பை சொல்லலாம்.


வாசியை அறிந்தவன்'s photo.

Thursday, June 11, 2015

தத்துவங்கள்

தத்துவங்கள்…
* ஒவ்வொருவரும் தனது வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், லாபம் பெறுவது, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது இரண்டையும் சமமாக கருத வேண்டும்.
* எந்த ஒரு தொழிலுக்கும் அன்பு நிறைந்த உபசாரமும், இனிமை கலந்த உரையாடலும் வெற்றியை தேடி தரும்.
* பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
* எந்த ஒரு செயலிலும் மன துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
* ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
* கடுமையாக உழைப்பவனை விட, திறமையாக உழைப்பவன் வாழ்வில் முன்னேறுகிறான்.
* ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.
* நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
* பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.
* எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.
* இந்த உலகில் நிகரில்லா செல்வம் ஒன்று உண்டு என்றால்  அது தன்னம்பிக்கை மட்டுமே…..

Wednesday, June 10, 2015

சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.
அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப்பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று. ஆனால், அடுத்தவர்களின்அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும். அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசமும் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.
உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்னமனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும்.உதாரணமாக, ஒருவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதைவிடவும்சரியானவழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத்துவரிடம் போவது.மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடியிலிருந்தே அவர் அந்தப்பின்னடைவிலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.
உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப்பின்னடைவு வரும்போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.
பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பயணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூட்டுவதற்காகவே நேர்கின்றன.
பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில்நம்மை துரிதப்படுத்துகிறது. இன்னும் தெளிவான பயணத்தை நமக்குத் தருகிறது.
உலகின் பல சாதனையாளர்கள், பின்னடைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில்சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதிவுகள் சோர்விலிருக்கும் யாரையுமேதீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந்தவை.
  • எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமைகிறது.
  • சவாலான நிமிஷங்களை சாதாரணமான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமேசெய்கிறார்கள். சாதனையாளர்களோ, சவாலை எதிர்கொண்டு, இன்னும் பலமாய்வெளிப்படுகிறார்கள்.
  • பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என்றுநினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமுனை என்று நினைப்பவர்கள் வளருவார்கள்.
  • எதிர்மறையான மனிதர்களை எதிர்கொண்டும் நேர்மறையாய் செயல்படுவதுதான்உண்மையான முன்னேற்றம். எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கும் நம்பிக்கை மனிதர்களை மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை.
  • ஒரு செயலைச் செய்ய உங்களால் முடியாதென்று நினைப்பவர்களை சந்திக்கநேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கேதோன்றட்டும்.
  • ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில்விழுகின்றனவா? அதில் இருக்கும் நடுநிலையான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில்தங்கட்டும்.
  • உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோன்றுகிறதா? உங்களுடன் நீங்கள்உட்கார்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் – பலவீனங்களைஅலசுங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.
  • உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும்சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழிஇருக்கிறது. உங்களை உயர்த்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களைநினைவில் கொண்டு நிறுத்துங்கள்.
  • அதிகாலை நேர நடைப்பயிற்சியின்போது, உங்கள் திறன்களுக்காகவும், உங்கள்வாழ்க்கைக்காகவும், கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாய், நன்றியுணர்வைஉங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.
  • அச்சம் வரும்போதெல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கையின் உயரம்,அச்சத்தின் உயரத்தைவிட அதிகமாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும்போது கடவுளை நோக்கி உங்களை முழுவதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும்சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக்கொண்டு மீண்டு வாருங்கள்.
  • நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான்.அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காகவருந்தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்போதுதான்.உலகுக்கும் உங்களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.
  • சில விஷயங்களைத் தக்கவைக்க முயல்வதால் வாழ்வின் மற்ற விஷயங்கள் பாதிக்கிறதா? சிறிதும் தயங்காமல் அவற்றை வெளியேற விடுங்கள்.
  • ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட்டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும்உங்களை எதிர் நோக்குகிற போது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடுங்கள்.
  • www.happy4all.org

Tuesday, June 9, 2015

சிறப்பு

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.
2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.
3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.
4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.
5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.
6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.
7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக
சேமித்து வைப்பது சிறப்பு.
8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.
9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.
10. பிறர் நம்மீது வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை சீர்கெடாமல் வாழ்வது சிறப்பு.
11. மனபலத்தையும், உடல் பலத்தையும் பாதிக்கும்
தீய செயல்களைச் செய்யாமல் வாழ்வது சிறப்பு.
12. தீயவர்களுடன் சேராமலும், நல்லவர்களுடன் நட்புறவு கொள்வது சிறப்பு.
13. அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும், புன்னகையுடனும் பழகுவது சிறப்பு.
14. பிறரை ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாமலும் வாழ்வது சிறப்பு.
15. தீயது என தெரிந்ததை செய்யாமலும், நல்லது என அறிந்ததை துணிவுடன் செய்துநல்ல மனசாட்சியுடன் வாழ்வது சிறப்பு.