Showing posts with label Personality developments Trainer. Show all posts
Showing posts with label Personality developments Trainer. Show all posts

Monday, June 6, 2016

புத்திகூர்மைக்கான சிறந்த 10 வழிகள்

புத்திகூர்மைக்கான சிறந்த 10 வழிகள்!!

மனுசனுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் ஒன்னு ஒன்னா வர ஆரம்பிக்கும்னும், அப்படி வர்றத தடுக்கமுடியாதுன்னும் நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால, இப்படியான பிரச்சினைகளை அனுசரிச்சுகிட்டு வாழனும்ங்கிற மனப்பக்குவத்தையும் வளர்த்துக்குவோம். இல்லீங்களா?

வயசானா வர்ற இதையெல்லாம் ஏத்துக்கிற நாம, வயசு ஏற ஏற நம்ம அறிவும் கூட வளரனும்/ஏறனும்னு நெனப்போமே தவிர, குறையனும்னு நெனக்கமாட்டோம். அப்படிக் குறைஞ்சா அதை ஏத்துக்கவும்  நம்மால முடியறதில்லை! அதுமட்டுமில்லாம, வயசாக வயசாக அறிவுப்பூர்வமாகவும், புத்திக்கூர்மையுடனும் சிந்திக்காத/ செயல்படாத ஒருத்தர ஏளனமாகவும், முட்டாளாகவும்தான் பார்க்கிறோம்!
ஆக, வயது முதிர்ச்சியோட சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் கண்டிப்பா இருக்கனும்ங்கிறதுக்காக, புத்தகம் படிப்பது, வல்லாரைக் கீரை,  வெண்டைக்காய் போன்றவை சாப்பிடுவது, இப்படி எத்தனையோ வழிகள்ல நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முயற்ச்சி பண்ணுவோம். ஆனா, இது மாதிரியான சில/பல நம்பிக்கைகளுக்கு அறிவியல்/விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லைங்கிறது உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும்!
அதனால, என்ன செஞ்சா நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முடியும்னு, விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகள, சமீபத்துல ஆய்வாளர்கள் முன்வச்சிருக்காங்க. அதையெல்லாம் படிச்சிட்டு, “கத்தியை தீட்டாம புத்தியை  தீட்டுறதுக்கு” நான் தயார், நீங்க?
புத்திகூர்மைக்கான முத்தான 10 வழிகள்!
1. உங்கள் மூளையைத் தூண்டுங்கள் (Tease your brain)
குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்க்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை  பெரிதாக  மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!. ஆனால், கல்வி கல்லாமை என்பது மூளை வளர்ச்சியின்மையில்தான் முடியும் என்பது உறுதி! அதனால, நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தக் கத்துக்க முயற்ச்சி செய்றீங்களோ, அவ்வளவும் உங்க முதுமைக்காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்! ஆக மொத்தத்துல, ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, எப்பவும் ஒரே puzzle சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம்! அடேங்கப்பா, இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?!
2. வைட்டமின் மற்றும் பிற ஊக்கமருந்துகளை தவிருங்கள்! (Skip the supplements)
வைட்டமின்-தாது மாத்திரைகள், அப்புறம் சில மூளை மாத்திரைகள் (அப்படித்தானுங்கோ ஆங்கிலத்துல சொல்றாங்கோ?!), (ginkgo and melatonin) இதெல்லாமே குணப்படுத்துறதா/மேம்படுத்துறதா சொல்லப்படுற எந்த செயலையும், உடல்ல செய்யுறதில்லையாம்! ஐயய்யோ….அப்படியா? ம்ம்…அது மட்டுமில்லாம, இந்த மாத்திரைகளச் சாப்பிடுறதுனால, ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல்னு இல்லாத நோயெல்லாம் வேற வந்துடுதாம்! இது என்னடா சாமீ வம்பா போச்சு?!!
3. சும்மா சில்லுன்னு ஒரு காத்து வாங்கிட்டு வாங்க (Chill out)
மன உளைச்சல்னால, நியாபகச் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) மற்றும் இன்னும் சில பகுதிகள்ல விஷத்தன்மையுள்ள பல வேதியல் பொருள்கள் கொட்டப்படுகிறதாம்.  அதுமட்டுமில்லாம, மன உளைச்சலைக் குறைக்கும் தன்மையுள்ள, யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நியாபகச் சக்தி குறைவது பெரிதும் தடுக்கப்படலாம் என்கிறது ஆய்வு!
4. நிறைய மீன் சாப்பிடுங்க!
உங்கள்ல சில/பல பேருக்கு அத்தியாவசக் கொழுப்பான ஒமேகா 3 (Omega 3) பத்தித் தெரிஞ்சிருக்கும். மனச்சோர்வு போன்ற நோய்களை குணப்படுத்த இக்கொழுப்புச் சத்து பயன்படுகிறதாம். ஓஹோ?!  அதுக்காக, உடனே கடையில மாத்திரைகளா விற்கப்படுகிற Omega 3 மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க! ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளான, மீன்கள், விதைகளச் (flax seeds) சாப்பிடுங்க. ஏன்னா, மாத்திரைன்னு போனாலே, பின் விளைவுகள்னு எதாவது ஒரு வம்பு அதுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருக்க நிறைய வாய்ப்பு இருக்குதாம்! உண்மைதான்,காலாவதியான மாத்திரை விற்பனைன்னு வேற கால ரொம்பவே கெட்டுகெடக்கு. உஷாரா இல்லைன்னா, ஊத்தி மூடிடுவாங்கங்கோவ்!!
5. அந்தக் காப்பியை நல்லா ரசிச்சு-ருசிச்சு குடிங்க!
இந்தக் கொட்டை வடி நீர்னு சொல்றாங்களே (அதாங்க காஃபி!), இனிமே அதைக் குடிக்கும்போது, சும்மா (காலைக்) கடனேன்னு குடிக்காம, கொஞ்சம் ரசிச்சு, ருசிச்சு எல்லாம் குடிச்சிப் பாருங்களேன் (அதான், ப்ரூ விளம்பரத்துல எல்லாம் வருமே அதுமாதிரி?!). ஏன் சொல்றேன்னா, காஃபியில இருக்குற கெஃபீன் (caffeine) அப்படீங்கிற வேதிப்பொருள், மூளையை பாதுகாக்குதாமாம்! அதாவது, ஒரு நாளைக்கு நாலு கப் காஃபி குடிச்சா, அல்ஷெய்மர்ஸ் (Alzheimer’s) அப்படீங்கிற ஒரு வகை நியாபகங்களை அழிக்கிற தன்மையுள்ள நோய் வராம  தடுக்குதாமாம் இந்தக் கெஃபீன் ( 30 to 60 % வரை!). ஆனா, இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன்லேர்ந்து வருதா, ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அப்படீங்கிற வேதிப்பொருள்லேர்ந்து வருதான்னு தெரியலியாமாம்! இந்த மூளைப்பாதுகாப்பு, இன்னைக்கு மத்தியானம் குடிக்கிற காஃபியால, பல வருஷத்துக்கு இருக்குமாம்! அடங்கொக்காமக்கா…..சொல்லவேல்ல?!
6. நன்றாக உறங்கி கனவு காணுங்கள்!
நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காணச் சொன்னாரு! விஞ்ஞானம் என்ன சொல்லுதுன்னா, நல்லா தூங்கி கனவு காணச் சொல்லுது. அதாவது, ஒருவர் சரியான நேரத்தை ஒதுக்கி உறங்கும்போது, கனவுகள் வரும். அப்போது, ஒருவரின் நியாபகங்களின் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்குமாம். ஆனா, சரியா தூங்கலைன்னா, நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்க்கும் திறன் குறைந்துபோகிறதாம்! மிக முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!
7. உடலைப் பேணி பாதுகாத்தல் அவசியம் (Take care of your body)
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொழுப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்!  உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்க்கும் திறனையும், நியாபகச் சக்தியையும் பெரிதும் பாதிக்கின்றனவாம்! ரத்த ஓட்டம் (இருதயத்தை) சீராக வைத்துக்கொண்டாலே (உதாரணத்துக்கு புகைப்பிடிக்காமல், கொழுப்புச் சத்தை ஒதுக்கி) முதுமையினால் வரும் மூளைக்கோளாறுகளை குறைத்துக்கொள்ளலாமாம்! பார்த்து சூதானமா இருந்துக்குங்க நண்பர்களே…!!
8. உணவுக் கட்டுப்பாடை கவனியுங்கள் (Watch that diet)
உணவை அதிகமாக சாப்பிட்டால், மூளையைச் சோர்வாக்கி, பாதிக்கிறதாம்! அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்று மிகவும் குறைவாக சாப்பிட்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அநியாயத்துக்கு டயட்டிங்/உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு மனஅமைதி (?)  கிடைக்குமென்றாலும், அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம்! இது என்ன வம்பாப் போச்சு?!
9. சரிவிகித உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!
உணவிலிருந்து கிடைக்கக்கூடிய மிக அதிகமான/குறைவான சக்தியானது மூளையின் மிருதுவான செயல்பாட்டை பாதிக்கிறது. ஆனால், இனிப்புச் சத்து குறைந்த, அதிக நார்ச்சத்துள்ள, மிதமான அளவில் கொழுப்பும், புரதமும் உள்ள உணவை சாப்பிட்டால், உடலின் செரிமானச் செயல்பாடானது, சீரான அளவில் நடந்து, உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாத்து, சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறதாம்!!
10. சும்மா இல்லாம எதையாவது செய்யுங்க!
என்னப்பா, குத்து மதிப்பா எதையாவது செய்யுங்கன்னு சொல்றியேன்னு கேக்குறீங்களா? அதாவதுங்க, உடற்பயிற்ச்சின்ன உடனே, பலு தூக்கனும், தண்டால் செய்யனும், ஓடனும்னு லிஸ்ட் போட்டு யோசிக்கறதுதான் நிதர்சனம். ஆனா, மூளை ஆரோக்கியத்துக்கு என்ன செய்யனும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்கன்னா, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உங்களால் முடிந்த/பிடிச்ச எதாவது ஒரு உடற்பயிற்ச்சியை செய்தால் மட்டுமே போதுமானதாம். அது நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம். எல்லாம் சேர்ந்ததா இருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! இதத்தான் எதையாவது செய்யுங்கன்னு சுருக்கமாச் சொன்னேன். சரிங்களா?
என்னங்க புத்தியைத் தீட்ட கெளம்பிட்டீங்க போலிருக்கு?! சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கைமுறையை பின்பற்றி உங்க புத்திக்கூர்மையை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சாதிக்க மேலிருப்பானின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Friday, September 11, 2015

என்ன வியாபாரம்

என்ன வியாபாரம் மற்றும் எங்கே என்பதை முடிவு செய்க
வெற்றி பெறும் ஒரு தொழிலதிபருக்கான அம்சங்கள் உங்களுக்கு இருக்கிறது என்றும் நிச்சயமாக தொழில்தான் செய்வது என்றும் நீங்கள் முடிவு செய்து வீட்டீர்கள் என்றால், உங்களுக்குக் சிறந்த தொழில் எதுவென்றும், அந்தத் தொழிலை எந்த இடத்தில் அமைப்பது என்றும் என்பதை முடிவு செய்யவேண்டும். தேர்வு உத்தி இந்த அமர்வின் பின் பகுதியில் விளக்கப்படுகிறது.
முழு நேரமாக ஆரம்பிப்பதா அல்லது பகுதி நேரமாக ஆரம்பிப்பதா என்பதை தீர்மானம் செய்க
உங்கள் வியாபாரத்தை பகுதி நேர வியாபாரமாகஆரமபிப்பதில் சில சுவாரஸ்யமான நன்மைகளும், சில தீமைகளும் உள்ளன. (அதாவது, இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்ந்தபடியே பகுதி நேரமாக வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிப்பது). ஆனால் எப்போதும் பகுதி நேரமாக வியாபாரம் ஆரம்பிப்பதில் உள்ள நன்மைகள் ஆபத்துக்களை பெரும்பாலும் களைந்து விடுகிறது.
  • வேலையிலிருந்து ஓய்வு, ஆரோக்கியம், மற்றும் சில துணைப்பயன்கள், விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் வருமான வாய்ப்புக்களை நீங்கள் தவிர்க்கவேண்டிய சூழலிலிருந்து விடுபடுகிறீர்கள்.
  • உங்கள் வேலையையும், வியாபாரத்தையும் முழுமையாக இருவேரு உலகங்களாக நீங்கள் பிரித்து வைப்பதை உள்ளடக்கிய, உங்கள் முரண் நலன் சார்ந்த துறைகளை பராமரிக்க முடிந்ததென்றால் உங்கள் முழு நேர வேலை பாதிப்படையாது.
  • துணை உற்பத்திகள், ரியல் எஸ்டேட், சிறப்பு உணவு, மின் - வர்த்தகம், நேரடி சந்தைப்படுத்தல் அல்லது குடும்பமாக நடத்தும் தொழில் ஆகிய பகுதி நேர தொழிலுக்குக் ஒத்து வரும் தொழில்களை தெரிவு செய்தால் உங்கள் முழு நேர வேலைக்கும் இதற்கும் முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
  • குடும்பத் தொழிலை நடத்துவதில் பல நன்மைகள் உண்டு. நீங்கள் வேலையில் இருக்கும்போது கூட உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அதை கவனித்துக்கொள்வார்கள். இந்த விதத்தில் ஏற்கனவே உங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு கிடைத்து விடுகிறது. வியாபாரம் செய்வதன் பயன்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடியும்.
ஆனால் ஒரு பகுதி நேரத் தொழிலைத் துவங்குவதில் பரிசீலிக்கவேண்டிய சில ஆபத்துக்கள் உள்ளன:
    நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்திலிருந்தே உங்கள் பகுதி நேர வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்ற சபலம் தோன்றும். இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நியாயம் செய்வதாகாது, மேலும் எந்த ஒரு சூழலிலும் இதனை செய்யகூடாது. (நீங்கள் உங்கள் வேலையில் இருக்கும்போது, நெருக்கடிகளை எதிர்கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரோ அல்லது ஒரு நம்பகமான மனிதரோ இருப்பது அவசியம்.)
  • இன்னொரு பிரச்சனை நீங்கள் உங்களை வேலைக்கு அமர்த்தியவருடன் போட்டியில் இறங்குவது, மறுபடியும் இது ஒரு சரியான விடயமன்று. அதாவது நீங்கள் முதலாளியாக இருந்து உங்கள் ஊழியர் இது போன்று செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் அல்லது கையாள்வீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.
  • உங்களது வேலையுடன் உங்களுக்கு ஏற்படும் முரண் அந்த வேலையை கெடுப்பதோடு உங்கள் பகுதி நேர வியாபாரத்தையும் பாதிக்கும்.
  • அதிகப் வேலைப்பழு, மற்றும் உடற்சோர்வு ஆகியவை ஒரு பகுதி நேர முனைவோர்களின் ஒரு உண்மையான பிரச்சனையாகும்.

Thursday, August 13, 2015

நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை

நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை :-

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை
நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.
நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.
வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.
இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.
வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.
இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.
இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...

Use Creativity to Succeed

Now, more than ever, companies need creativity and creative thinking in the day-to-day operations in order to truly excel and rise above the competition.
We often think of the great innovators such as Thomas Edison or Steve Jobs as the “creatives”, the kind of people who had such revolutionary ideas that they changed the world. Or we read stories like that of Elizabeth Holmes, founder and CEO of Theranos, who developed a simpler, less painful way to test blood that has turned her into the youngest self-made female billionaire in the world and we think “I could never have an idea like that.”
These stories are great examples of game-changing creativity and innovation, but they overlook the everyday creativity and innovation that makes companies tick. And that is the kind of creativity you can use to drive sales, product development, or customer service improvements in your own company. You don’t need to have ideas that change the entire world, you just need ideas to change the world you live in.
Creativity and innovation in the day-to-day starts with looking at things differently and taking on the perspectives of others. Get inside the head of your customer, boss, partner, or supplier to determine how you can impact their outcome in a positive way. This is especially critical for your customers, thinking from their perspective to understand what they want and need. But even if you don’t interact with your company’s customers on a daily basis, think of your boss or partner as a customer, and find a way to delight them with your work.
After you’ve flipped your perspective and taken the view of those around you, start testing. New perspectives on a problem or process can give you lots of ideas about how to improve things or move the needle in terms of sales or growth, but until you try some of those ideas you will never know which is the best or right choice. Without the feedback you get from trying out your ideas, you can’t have enough data to move forward. Don’t get stuck analyzing all of your options without testing at least some of them first. If testing isn’t really feasible with your specific situation, make sure and talk to a number of different people about your ideas and options.
Once you have data and feedback from trying out your ideas, give yourself some space to think. One thing we can learn from some of the great “creative thinkers” of our time is that they took time away from work to ruminate and let their ideas float around and develop. There are stories of Edison having a pipe organ in his workshop and taking breaks to play it while others stopped work and sang along. Getting away from the office or your computer helps your brain make connections between all of the ideas and data points you’ve gathered, giving you those breakthrough Eureka! moments we hear so much about.
Creativity and innovation aren’t just for the special few who were blessed with the insight into customer’s future wants. We can’t all be like Henry Ford, knowing that while our customers say they want faster horses, what they really want are powered cars. But we can learn to develop creative and innovative thinking in everything that we do, including seemingly mundane tasks. As you develop these brain muscles and the associated skills, you begin to have more sales, develop better products, and improve customer service outcomes, and that gets noticed.
When your boss asks how you’ve been able to make such an improvement in the areas you are responsible for, talk to her about perspective and the importance of testing and feedback. Show your passion for innovating in all areas. That mindset, along with the ability to follow through, will accelerate your success in ways you can’t imagine.

Wednesday, August 12, 2015

How to succeed in business as an introvert

Last century, it was the extrovert we valued – that outgoing, gregarious individual who had strong and aggressive leadership skills, who never met a “stranger,” who could make the hard sale, and whose personality was “all over the workplace.” The 21st century, however, is the century of the introvert – that individual who is more introspective, who contemplates and analyzes, who has a quiet fortitude, who has the focus and the creativity that can spread a brand, and who will take the time to analyze and assess all possible strategies and solutions. These are the qualities that we now value in business, and here’s why:
1. Better and More Creative Writers: Introverts are, for the most part, better at telling a tale – the kinds of tales businesses want told in their content marketing. While the extrovert wants to just “tell it like it is” and get on with it, the introvert is thoughtful and more creative, weaving anecdotes, humor, and fresh information into compelling pieces for blogs, forums, social media pages, and such. Good, engaging writers are a “hot” commodity today, and the introvert can fill that need.
2. Better Listeners: Extroverts are so busy getting their points across that they often fail to listen carefully. Introverts, on the other hand, tend to absorb all that is being said, and to use that information to make someone else feel that their points and opinions count. Because they listen well, moreover, introverts have all of the facts and information to make informed decisions and to resolve issues. In an age when developing relationships with consumers, rather than just selling them something, has become so important, introverts are invaluable. They will respond to customer feedback in genuine ways; they will engage in more meaningful conversations with customers and potential customers, especially when those conversations may now take place more online than in person.
3. Online Comfort: Because they enjoy solitude and working alone, introverts are very comfortable engaging people online; they are happy to write those blog posts, to share content all over the place, and to participate in online dialogue. So much business “action” is online in the 21st century, the introvert is in his/her glory, and the company benefits as a result! As well, because introverts tend to spend a lot of time online, they tend to be highly tech-savvy and have taught themselves to do things that others cannot do.
4. Better Collaborators: In a group workplace setting, in which collaboration is needed to resolve issues and solve problems, the extrovert tends to want to be at the center of the action. S/he tends to dominate the conversation, to need to be “heard” on every point, and to want to lead the conversations and work in directions that s/he wants. The introvert, on the other hand, sits back, listens, and absorbs all that others are contributing, analyzes those contributions, and then will come up with real solution options that others have not even considered. When working as a part of a team, the introvert has no need to dominate, and everyone else can thus have equal input. The results will always be better in this environment.
5. Important Recovery Time: The introvert will participate and socialize but will also retreat for valuable “recovery” time. It is during these times that s/he can reflect, analyze, and contemplate creative methods and strategies, and bring those back to the larger group. The extrovert does not value solitude for recovery, preferring always to be around other people. It’s difficult for creative thought to percolate when the brain is always busy interacting with others.
6. Greater Focus: The introvert is happy to attack projects on his/her own and does not need a lot of re-directing or re-focusing. Because the extrovert always wants others around, distractions are pretty common occurrences, and thus focus on the task at hand is often lost.
7. More Creative: If ever creativity was needed, it is in today’s business world. Think about it. This is the age of rich, fresh content; this is the age of infographics, of media, of entertaining customers, potential customers, and visitors who come to websites, blogs and social media pages. The introvert takes the time to come up with the “catchy” titles and phrases, with those stunning headings and sub-headings, and with the content that keeps people reading and coming back to read some more!
8. Less Need for Praise/Recognition: While there is no intention here to “bash” extroverts, the introvert seems to have more ability to garner recognition and praise from within and even avoids being called out “publicly” for his/her accomplishments. The extrovert basks in such public recognition, however, and when it is not forthcoming, has a tendency to become offended when his/her accomplishments are not openly praised. The introvert has inner satisfaction, and that seems to be enough! -www.v4all.org 

Monday, July 13, 2015

சித்தர் மயம்

சித்தர் மயம்
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

Friday, July 10, 2015

மனப் பக்குவம்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பார்கள். நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் எனது முன்னுரிமை பட்டியலில் இல்லாமல் போகலாம். அதே போல் எனது முன்னுரிமைகள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத விஷயங்களாக இருக்கலாம்.
பொதுவாக எல்லோரும் தங்கள் ஆரோக்கியத்திற்கும் தங்களது குடும்பத்தினர் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்கு அடுத்து ஆண்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இன்று பெண்களும் பணம் சம்பாதிப்பதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது நல்ல வாழ்க்கைத்துணை அமைந்து சந்தோசமான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவார்கள். சொந்த வீடு கட்ட வேண்டும், ஒரு நல்ல கார், மற்றும் வங்கியில் ஒரு பெருத்த தொகை இருப்பு இருக்க வேண்டும் என்றும் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.
ஒரு சிலர் இவைகளையெல்லாம் தாண்டி புகழ் பெறவும் விரும்புகின்றனர். ஆக, பொதுவாக மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் முன்னுரிமைக் கொடுக்கும் விஷயங்கள் உடல் ஆரோக்கியம், பணம், அன்பான குடும்பம் மற்றும் புகழ் தான்.
மக்கள் ஏன் மேற்கூறியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்? நல்ல ஆரோக்கியம், பணம், சொத்து, குடும்பம், மற்றும் புகழ் அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புவது தான் காரணம்.
உண்மையில் நம் சந்தோஷத்திற்கு இந்த வெளிக் காரணிகள் எல்லாம் தேவையேயில்லை என்பது தான் நிஜம். உங்கள் மனம் பக்குவப்பட்டு இருந்தால் உங்கள் சந்தோசத்தை நீங்களே தீர்மானிக்கலாம். அதாவது எந்த சூழ்நிலையிலும் நீங்கள் சந்தோசமாக வாழ முடியும்.
அந்த மனப் பக்குவம் இல்லாதவர்கள் இருப்பதை வைத்தாவது சந்தோசமாக வாழக்கற்றுக் கொள்ளவேண்டும்.
வாழ்க வளமுடன்! - www.v4all.org

வாசியை அறிந்தவன்'s photo.

Monday, June 22, 2015

தந்தை.

தந்தை...
நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் உமர் ரலி எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார் அபு பக்கர் சித்தீக் ரலி... வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் உமர் ரலி.... சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...
எதிரில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வருகிறார்கள்... அருமைத்தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்
இவர்கள் மூவரும் வருவதை பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீத்தம் பழங்களை கொடுத்து பரிமாறுகிறார்கள்...
கொஞ்சம் பேரீத்தம்பழங்களை தின்ற நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம் அபூ அய்யூப் அவர்களே நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீத்தம் பழங்களை எடுத்து கொள்ளலாமா என கேட்கிறார்கள்...
அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் ரலி அவர்கள் என்ன யா ரசூல் அல்லாஹ் இப்படி கேட்கிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்... அதை கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்... இல்லை எனக்கு சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை என கூறுகிறார்கள்...
இதை கேட்ட உடனே தனது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள் அபூ அய்யூப் அல் அன்ஸாரி...
உலகம் போற்றும் உன்னத நபிகள் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையாக இருந்தது... அவர்கள் தங்கள் மகள் பாத்திமா ரலி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டு...
# இறைவா எங்கள் வாழ்வில் எங்கள் பிள்ளைகளுக்கு உணவையும் மற்ற மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அளவிற்கு எங்களுக்கு போதுமான செல்வத்தையும் ஆற்றலையும் தந்தருள்புரிவாயாக ரப்பில் ஆலமீனே....

Thursday, June 18, 2015

திருவாலங்காடு

திருவாலங்காடு
பஞ்ச சபைகளுள் இரத்தினசபை இத்தலம். இத்திருத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். தலையால் நடந்து வந்த காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம். நடராசப்பெருமான் ஊர்த்தவ தாண்டவமாக இரத்தின சபையில் அருள்கிறார். நடராசர் ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்’, 'இரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.
ஊர்த்துவதாண்டவம்
திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்களின் குருதியை குடிக்கிறாள் காளி. அதனால் அசுரர்களின் பண்பு பெற்று தவம் செய்து கொண்டிருத்த முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசன் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள்.
இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். காளியால் அதை செய்ய இயலவில்லை.போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிகிறது. ஈசனின் இந்த நடனம் ஊர்த்துவதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.
இரத்தின சபை
இரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

Ankhamuthu Kumar's photo.

Monday, June 15, 2015

முறைப்படி சுத்தமான திருநீறு தயாரிக்கும் முறை

முறைப்படி சுத்தமான திருநீறு தயாரிக்கும் முறை - www.happy4all.org
ஒரே பசுவின் சாணத்தை பசு சாணம் போடும் போது நிலத்தில் விழாமல் தாமரை இலையில் பிடித்து, அதனை உருண்டைகளாக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
நன்றாக ஈரமில்லாமல் காய்ந்த பின்னர் சாணி உருண்டைகளை உமியால் மூடி உமிக்கு தீயிடவேண்டும்.
4 அல்லது 5 நாடகள் கழித்து இதனை மெதுவாக கிளறி சாணத்தின் சாம்பலை மட்டும் சேகரிக்க வேண்டும்.
இதனை துணியில் சலித்து உரிய பாத்திரத்தில் சேகரித்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
அகத்திய மகரிசி தனது நூலில் பஞ்சாட்சர மந்திரத்தினை விபூதி தயாரிப்பதற்கு, அணிவதற்கு எவ்வாறு பிரயோகம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருநீறு செய்வதற்கு பசுவின் சாணத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம் எனப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். பசுவிலிருந்து நீங்கிய மலம் சாணம். அது அக்னியால் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து திருநீறாகிறது.
மும் மலங்களினால் கூடப்பெற்ற பசுவாகிய ஆன்மா சிவ அக்னியில் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து பிறவிப் பயனையடைகிறது.
திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவா என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள், குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.

Wednesday, June 3, 2015

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை!!!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.
3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.