கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு
சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த
பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச
சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில்
வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை
கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க
வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச
சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம்
ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும்
அளப்பரிய சக்தியை கொடுத்துக்
கொண்டிருக்கிறது.
ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித
மனம்தான் அறிவுமனம் (இர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்)
ஆழ்மனம் (நன்க்ஷஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) என்று
இருவிதமாக வேலை செய்து கொண்டு
இருக்கிறது.
“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை
உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத
ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம்
காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம்
வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.”
இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி
வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம்
ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு
பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும்
அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம்
விரும்பியது தான்!
ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம்
துலங்குகிறது? ஏன் சிலருக்கு
தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு
சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே
போகிறது? இப்போது இதற்கு காரணம்
உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது
முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும்
காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி
நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம்
நினைக்கும் அனைத்தையும் நடத்திக்
கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக்
கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே
ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய
அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு
வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள
வேலையாள்தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம்
எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்
களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள்
தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று
பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை
வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப்
படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை
அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம்
ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த
எண்ணம் வண்ணமாவது திண்ணம்.
No comments:
Post a Comment