விவேகானந்தரின் நண்பர் ஒருவர் தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்க முடியாமல் பல நாட்களாக தவித்து கொண்டிருந்தார்.
அந்த புத்தகத்தின் கடினத் தன்மை பற்றி விவேகானந்தரிடம் விளக்கி சொல்லி அந்த புத்தகத்தை அவரிடம் தந்தார்.
மாலையில் அந்த நண்பர் விவேகானந்தரைச் சந்தித்த போது முழுப் புத்தகத்தையும் அவர் படித்திருந்தார். நண்பரால் நம்ப முடியவில்லை.
ஆனால் விவேகானந்தரோ எந்த பக்கத்தில் எந்த பாராவில் எந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது என்பதை பார்க்காமலே பல முறை சொல்ல நண்பருக்கு வியப்பு ! எப்படி ? என்று அவரிடம் கேட்டார்.
அதற்கு விவேகானந்தர் சொன்ன பதில் “நீங்கல் கண்களால் படிக்கின்றீர்கள். நான் மனதால் படித்தேன் மனமொன்றி செய்யும் எதுவும் எளிதாகவே இருக்கும்” என்பது தான்
நீங்களும் எந்த வேலையையும் கண்ணால் மட்டும் பார்த்தால் அது கடினமான கல்லாகத்தான் தெரியும்.
அப்படிப் பார்க்காமல் உங்கள் மனதால் பாருங்கள். அதே வேலை உங்களுக்கு கல்கண்டாக இருக்கும்......www.v4all.org
No comments:
Post a Comment