மூளையின் செயல்திறனை தூண்ட கருவி...
‘மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், மின்சாரத்தின் உதவியுடன் தூண்ட செய்தால் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனையும், வேகத்தையும் அதிகப்படுத்தலாம்’ என்று ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பக்கவாதத்தால் தாக்கப்பட்டவரின் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்காக அந்த பகுதிகளுக்கு குறைந்த அளவான மின்காந்தப்புலத்தை, உரிய உபகரணங்களை கொண்டு செலுத்தும் சிகிச்சையை இந்த விஞ்ஞானிகள் செய்தனர்.
சிகிச்சைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படுத்த துவங்கியது.
இந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் செய்த போது அவர்களின் கற்கும் தன்மையும், வேகமும் அதிகமானது தெரிய வந்தது.
‘இன்னும் சில பரிசோதனைகளின் முடிவில், மூளையின் செயற்திறனை, குறிப்பாக கற்கும் திறனை அதிகரிக்கச்செயும் மின் காந்த கருவி ஒன்றை உருவாக்க முடியும்’ என்றும் இந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படியானதொரு கருவி விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படக்கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment