Showing posts with label communication skills training company in coimbatore. Show all posts
Showing posts with label communication skills training company in coimbatore. Show all posts

Saturday, July 18, 2015

விபூதி தாரண பலன்

இரவு உறங்க செல்லும் முன்விபூதி தாரணம்செயய்து விட்டு தான் உறங்க வேண்டும் காலையில்எழுந்த உடன் விபூதி தரிக்க வேண்டும் தலை மாட்டில் விபூதி பையை வைத்துஇருப்பது உத்தமம்
விபூதி தாரண பலன்
விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது. காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர். அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம். அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினாமிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்தகைநல மளிப்பது தவள நீறரோ.
- தணிகைப் புராணம்


Ankhamuthu Kumar's photo.

Sunday, June 14, 2015

திபெத்திய தியானமும் செய்முறையும் அதில் உள்ள ஆழமான சுக்சுமங்களும்

திபெத்திய தியானமும் செய்முறையும்
அதில் உள்ள ஆழமான சுக்சுமங்களும் .
----------------------------------------------------------
இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.
புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.
தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.
தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.
2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.
3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.
4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.
5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.
6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.
7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள்.
அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள்.
ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம்.
மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.
தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.
ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம்.
உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?


Saturday, June 13, 2015

முள்ள முள்ளால தான் எடுக்கனும்!!!

முள்ள முள்ளால தான் எடுக்கனும்!!!
ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..
ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு .. . .
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம்
சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப்
யூ !! .
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம்
ஆய்டிச்சா.. ? .
"வாட் ..!! அத பத்தி நான்
உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..!
எதுக்கு போன் போட்டிங்களோ அத
பத்தி மட்டும் கேளுங்க..!"
"கோவப்படாதிங்க மேடம்...!
கல்யாணம் ஆய்டிச்சா ?"
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.." .
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..!
" .
"நான் ஒரு ஆப்பர்
தரேன் ..என்னை லவ் மேரேஜ்
பண்ணா...
ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்...
அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ்
போலாம்!! .
"சார்..!! நான் தான் இஷ்டம்
இல்லைன்னு சொல்லிட்டேன்ல ..
என்ன ஏன்
தொந்தரவு பண்ணுறீங்க..? .
இப்ப புரிதா !!.. நான் இஷ்டம்
இல்லன்னா கூட அந்த ஆப்பர்
இருக்கு இந்த ஆப்பர்
இருக்கு , இந்த காலா்டியூன் வைங்க அந்த காலா் டியூன் வைங்கன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான்
மத்தவங்களுக்கும் இருக்கும்..!!!


Buvanesh Bhuvi's photo.

Tuesday, June 2, 2015

சாதுர்யப் பேச்சு!!!!

சாதுர்யப் பேச்சு!!!!
.
ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.
.
அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.
இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
.
கடைசியில் ஒருவன் கேட்டான்
.
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
.
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
.
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.
சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும் !!!
urs
www.v4all.org

நற் சிந்தனைகள்

சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி-நற் சிந்தனைகள்

நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம்.இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம்.வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம்.

முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு,பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள்.

காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால்,தேர்வில் தோல்வி அடைகிறார்கள். மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை "இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.

சுவாமி கமலாத்மானந்தர்-நற் சிந்தனைகள்

* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாதஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

* மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி,இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.

* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.

* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.

* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும்.ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.

சாய்பாபா-நற் சிந்தனைகள்

* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாகஇல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.

* இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.

* ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில்,ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.

* குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.

* வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது.மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்.

ராமானுஜர்-நற் சிந்தனைகள்

*கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

* கடவுளுடைய பக்தர்களுக்குப் பணி செய்யத் தன்னையே எவன் தியாகம் செய்யாமல் இருக்கிறானோ,அவன் சிறந்தவனாக இருந்தாலும் அழிந்து விடுவான்.

* தன் உறவினர்களை எப்படி நேசிக்கிறீர்களோ அவ்வாறே கடவுளின் பக்தர்களைப் பாடி மகிழ வேண்டும்.

* காலையில் எழும்போது ஆன்மிகச் சொற்களை உச்சரித்துப் பழக வேண்டும்.

* கடவுளுக்கு முன்னால், ஆசிரியருக்கு முன்னால், கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது.

* கோயில், விமானம், கோபுரம் ஆகியவற்றைக் கண்டதும் மரியாதையுடன் தலைவணங்குதல் வேண்டும்.

* ஒருவனுடைய பிறப்பைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வதே மேலானதாகும்.

* நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பக்தியும் கொண்டவர்களிடம் இருந்து மட்டும் உணவைப் பெற்று மகிழுங்கள்.ஒரு கடவுள் வணக்கமே மேலானது.

நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்-நற் சிந்தனைகள்

பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.

* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர்,குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.

* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.

* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.

* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில்,சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.

* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம் செய்யக்கூடாது.பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. - www.v4all.org

Sunday, May 31, 2015

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :




1 பிரபவ**********1987 - 1988
2 விபவ***********1988 - 1989
3 சுக்ல************1989 - 1990
4 பிரமோதூத******1990 - 1991
5 பிரசோற்பத்தி****1991 - 1992
6 ஆங்கீரச*********1992 - 1993
7 ஸ்ரீமுக***********1993 - 1994
8 பவ*************1994 - 1995
9 யுவ ************1995 - 1996
10 தாது************1996 - 1997
11 ஈஸ்வர*********1997 - 1998
12 வெகுதானிய****1998 - 1999
13 பிரமாதி********1999 - 2000
14 விக்கிரம*******2000 - 2001
15 விஷு*********2001 - 2002
16 சித்திரபானு****2002 - 2003
17 சுபானு********2003 - 2004
18 தாரண*********2004 - 2005
19 பார்த்திப*******2005 - 2006
20 விய**********2006 - 2007
21 சர்வசித்து*****2007 - 2008
22 சர்வதாரி ******2008 - 2009
23 விரோதி*******2009 - 2010
24 விக்ருதி*******2010 - 2011
25 கர************2011 - 2012
26 நந்தன********2012 - 2013
27 விஜய********2013 - 2014
28 ஜய**********2014 - 2015
29 மன்மத*******2015 - 2016
30 துன்முகி******2016 - 2017
31 ஹேவிளம்பி***2017 - 2018
32 விளம்பி*******2018 - 2019
33 விகாரி********2019 - 2020
34 சார்வரி*******2020 - 2021
35 பிலவ********2021 - 2022
36 சுபகிருது******2022 - 2023
37 சோபகிருது*****2023 - 2024
38 குரோதி********2024 - 2025
39 விசுவாசுவ*****2025 - 2026
40 பரபாவ********2026 - 2027
41 பிலவங்க******2027 - 2028
42 கீலக*********2028 - 2029
43 சௌமிய *****2029 - 2030
44 சாதாரண******2030 - 2031
45 விரோதகிருது**2031 - 2032
46 பரிதாபி*******2032 - 2033
47 பிரமாதீச******2033 - 2034
48 ஆனந்த******2034 - 2035
49 ராட்சச******2035 - 2036
50 நள*********2036 - 2037
51 பிங்கள******2037 - 2038
52 காளயுக்தி****2038 - 2039
53 சித்தார்த்தி****2039 - 2040
54 ரௌத்திரி****2040 - 2041
55 துன்மதி******2041 - 2042
56 துந்துபி*****2042 - 2043
57 ருத்ரோத்காரி**2043 - 2044
58 ரக்தாட்சி *****2044 - 2045
59 குரோதன******2045 - 2046
60 அட்சய******2046 - 2047