ருசிக்காக சாப்பிடாதீங்க... பசியோட சாப்பிடுங்க! - www.v4all.org
வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
ருசிக்காக சாப்பிடாதீங்க
ருசி என்பது நாவின் சுவை நரம்புகளுக்கு மட்டும்தான் தெரியும். ருசிக்கிறது என்பதற்காக கண்டதையும் அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடைசியில் அதுவே ஜீரணகோளறுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.
சுழற்சி முறையில் சாப்பிடுங்கள்
சத்தான உணவுகளையே சுவையானதாக சமைத்து சாப்பிடலாம். வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.
உடல் மேலாண்மை
உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.
சத்துள்ள உணவுகள்
எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவியல் நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் நேரத்திற்கு பசிக்கும். சத்தான உணவுகளை நேரத்திற்கு சாப்பிடலாம்.
அளவாக சாப்பிடுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
நொறுக்குத்தீனி வேண்டாம்
சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

No comments:
Post a Comment