Showing posts with label husband and wife counselling. Show all posts
Showing posts with label husband and wife counselling. Show all posts

Wednesday, May 18, 2016

தொழிலுக்கு அவசியம்

தொழிலுக்கு அவசியம் இலக்கும், உத்திகளும். எதை அடைவது என்பது இலக்கு. அதை எப்படி அடைவது என்று தீர்மானிப்பது உத்தி. எந்த பிசினஸுக்கும் குறிக்கோளும் அதை குறிபார்த்து அடிக்கும் திறனும் வேண்டும். மார்க்கெட்டிங் என்பதே உத்திகள்தானே. அவை எப்படி இருக்க வேண்டும், அமைக்க வேண்டும் என்று ஹார்வர்ட் யூனிவர்ஸிடியின் நிர்வாகவியல் பேராசிரியர் ‘மைக்கேல் போர்ட்டர்’ விளக்கியுள்ளார். 1980ல் ‘காம்பெடிடிவ் ஸ்ட்ரேடஜி’ என்ற தன் புத்தகத்தில் ‘ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்ற சித்தாந்தத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 
மார்க்கெட்டில் போட்டிகளை சமாளிக்க, காலகாலத்துக்கும் ப்ராண்டு களை பாதுகாக்க தொழிலுக்கு மூன்று வித உத்திகள் இருக்கின்றன என்கிறார் போர்ட்டர். ஒவ்வொரு கம்பெனியும் தனக்கேற்றபடி அந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும். தேர்ந்தெடுத்த அந்த உத்திதான் தொழிலின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் நிர்ணயிக்கவேண்டும் என்கிறார். 
அந்த மூன்று உத்திகளுக்கு நிர்வாக உலகம் அவர் பெயரையே வைத்து ‘போர்ட்டர்ஸ் ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்றழைக்கிறது. எந்த தொழிலுக்கும் அதன் உத்திகளுக்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அந்த மூன்று தாய் உத்திகளை இப்பொழுது பார்ப்போம். 
தயாரிப்பு செலவைக் கட்டுக்குள் வைத்தல் (Overall cost leadership)
பொருள் வகையில் மற்றவர்களை விட தயாரிப்பு செலவை கணிசமாகக் குறைத்து அனைவரையும் விட குறைவான விலையில் விற்பது முதல் வகை உத்தி. இது லேசுபட்ட காரியம் அல்ல. அனைவருக்கும் சாத்தியப்படக்கூடியதும் அல்ல. வெறும் செலவைக் குறைப்பது மட்டுமல்ல இவ்வகை உத்தி. 
மற்றவர்கள் நெருங்க முடியாத வண்ணம் செலவுகளை குறைத்து விலை விஷயத்தில் மற்றவர்களுக்கு தலைவனாய் இருப்பதே இந்த உத்தி. இந்த உத்தியைத் தேர்ந்தெடுக்கும் கம்பெனியின் விலைக்கு தன் விலையை குறைத்து விற்கும் போட்டியாளர்கள் அந்த விலையில் நஷ்டம்தான் அடையமுடியும் என்கிற நிலையை உருவாக்கும் உத்தி இது. ’சரவணா ஸ்டோர்ஸ்’ சக்கைப் போடு போடுவது இந்த உத்தியைக் கையாண்டுதான்.
வித்தியாசப்படுத்திக் காட்டுதல் (Differentiation)
முதல் உத்திக்கு நேர் எதிர் இது. இதில் விலை முக்கியமல்ல; தயாரிப்பு செலவு ஒரு பொருட்டல்ல. போட்டியாளர்களைவிட தங்கள் ப்ராண்டை ஏதோ ஒரு வகையில் வித்தியாசப்படுத்தி காட்டும் உத்தி இது. ப்ராண்டின் வடிவிலோ, இமேஜிலோ, வாடிக்கையாளர் சேவையிலோ அல்லது இதன் கலவையாலோ ப்ராண்டை வித்தியாசப்படுத்தி காட்டுவது. ‘சரவண பவன்’ தேர்ந்தெடுத்திருப்பது இதையே.
ஒருமுகப்படுத்தல் (Focus)
ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவையோ, பொருள் வகையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊரையோ மட்டும் குறிவைத்து விற்பது இவ்வகை. குறிவைத்த பிரிவுக்கு மட்டும் ப்ராண்டை வடிவமைத்து, அந்த பிரிவுக்கு மட்டும் விலையை குறைத்தோ அல்லது ப்ராண்டை வித்தியாசப்படுத் தியோ காட்டும் முயற்சி இது. ‘டெக்கத்தலான்’ என்கிற ப்ராண்ட் பெரிய அளவில் பல ஊர்களில் கடை திறந்து சிறந்த சேவையுடன் விளையாட்டு சாதனங்களை விற்கிறது. அதை மட்டுமே விற்கிறது. சிலர் பிசினஸை விளையாட்டாய் பார்க்க, டெக்கத்தலான் விளையாட்டை பிசினஸாய் பார்க்கிறது!
இந்த மூன்று வகை உத்திகள் தான் தொழிலுக்கு ஆதாரமானது. எந்த கம்பெனியும் இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும் என்கிறார் போர்ட்டர். பலத்திற்கேற்ப, திறமைக்கேற்ப, மற்றவர்களால் காப்பியடிக்க முடியாத உத்தியை அழகாய் தேர்ந்தெடுத்து, அதற்கு அமர்க்களமாய் செயல் வடிவம் கொடுத்து, அதை அட்டகாசமாய் நிர்வகிப்பதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்.
தெளிவாக உத்தியைத் தேர்ந் தெடுக்காமல் தொழில் செய்பவர்களும் ஒரு உத்தியை தேர்ந்தெடுத்து இன்னொரு உத்தியை சேர்த்து பிரயோகிப்பவர்கள் குழப்பத் திலகர்கள். தோல்வியடைய காத்திருப்பவர்கள். ‘ஃபுட்வோர்ல்ட்’ டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல.
‘ஆர்பிஜி’ குரூப்பும் ‘டெய்ரி பார்ம் இண்டர்நேஷனல்’ என்ற பன்னாட்டு நிறுவனமும் சேர்ந்து தொடங்கிய கம்பெனி இது. டிஃப்பரென்சியேஷன் உத்தியை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கினார்கள். நகரின் பிரதான சாலைகளில் பெரிய கடைகள், ஏசி வசதி, பார்க்கிங், தேர்ந்த விற்பனையாளர்கள் என்று பிசினஸை வடிவமைத்தனர். ஆனால் நாளடைவில் விற்பனையை அதிகரிக்கும் பேராசையுடன் ‘சேல்’, ‘இலவசம்’, ‘இது வாங்கினால் அது ஃப்ரீ’ என்று டிஃப்பரென்சியேஷனோடு சேர்ந்து விலைக்குறைப்பு உத்தியையும் கையாண்டனர்.
ஃபுட்வோர்ல்ட் தலைகீழாக நின்றாலும் அவர்கள் விலைகள் மற்ற கடைகளை விடக் குறைவாக இருக்க முடியாதே. ஏனெனில் ஃபுட்வோர்ல்ட் மலிவான விலைக்கு விற்கும்படி வடிவமைக்கப்படவில்லை. விலை குறைப்பால் பணவரவும் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையையும் வழங்க முடியவில்லை. 
அதனால் வெறுப்படைந்த வாடிக்கையாளர்கள் ’இது புட்வோர்ல்ட் அல்ல. பேட் வோர்ல்ட்’ என்று பைபை காட்டி பக்கத்து கடைக்குப் போய்விட்டனர். டெய்ரி பார்ம் கம்பெனிக்கு அசாத்திய கோபம். ‘உங்களுக்கு பிசினஸ் செய்யவே தெரியல. நாங்க போறோம். நீங்கள் எக்கேடுகெட்டு போங்கள்’ என்று ஆர்பிஜியுடன் பார்ட்னர்ஷிப்பை முறித்துக்கொண்டனர். அதோடு ஃபுட்வோர்ல்ட் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவிட்டனர். ஃபுட்வோர்ல்ட் ‘ஸ்பென்சர்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
‘ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை, ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை’ என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது போலவே நடந்து தொலைத்தது!
போர்ட்டர் சொன்னபடி செய்து வெற்றிகரமாக செயல்படும் கம்பெனி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வகையிலேயே உண்டு - ‘நீல்கிரீஸ்’. கடை தொடங்கியது முதல் அவர்கள் தேர்ந்தெடுத்தது டிப்ரென்ஷியேஷன் உத்தியை. ‘உலகத் தர ஷாப்பிங் அனுபவத்தை தருவதே எங்கள் உத்தி’ என்று வரையறுத்தது நீல்கிரீஸ். இன்று வரை அது போலவே தொழில் புரிந்து வருகிறது.
பிரதான சாலைகளில் கடை விரித்து, பரந்த பரப்பளவுடன் அமைத்து, பார்க்கிங் வசதி படைத்து, ஏசி குளுமை கொடுத்து, தேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் கொண்டு தங்கள் உத்திக்கேற்ப தொழிலை வடிமைத்தது நீல்கிரீஸ். ‘உலகத்தர சேவை’ என்ற உத்திக்கு என்ன தேவையோ அதைச் செய்தனர். அதை மட்டுமே செய்தனர்.
அதனால் நீல்கிரீஸ்ஸில் ’சேல்’, ‘விலைக் குறைப்பு’ போன்றவற்றை பார்க்க முடியாது. ஏனெனில் நீல்கிரீஸ் வாடிக்கையாளர்கள் இதை எதிர்பார்த்து வருவதில்லை. ‘எனக்கு விலை பொருட்டல்ல, நல்ல ஷாப்பிங் அனுபவம் தான் முக்கியம்’ என்று நினைப்பவர்களை மட்டுமே கவர்வதால் தான் நீல்கிரீஸ், சேவை மூலம் தங்களை வித்தியாசப்படுத்த முடிகிறது. இன்று வரை இந்தியாவின் தலைசிறந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஒன்றாக வெற்றியுடன் திகழ முடிகிறது.
ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் திறமைக்கேற்ப, தேவைக்கேற்ப ஓர் உத்தியைத் தேர்ந்தெடுத்து வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு உத்தியை மட்டும் வைத்துக்கொள்வதற்கு பதில் இரண்டாய் வைத்துக்கொண்டால் இன்னும் பெட்டர் போல தோன்றும். ஃபுட்வோர்ல்ட் நினைத்தது போல. ஆனால் அது தப்பாட்டம். 
தொழில் புரிய பிரதான உத்திகளை விவரமாக விளக்கி உங்கள் பிசினஸ் சுமையை இறக்கி வைத்திருக்கும் இந்த போர்ட்டருக்கு நீங்கள் டிப்ஸ் ஏதும் தரவேண்டாம். அவர் சொன்ன டிப்ஸ் படி நடந்துகொண்டால் போதும்!

Monday, October 5, 2015

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.
தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை.
எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.
நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.
"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.
பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.
பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன்.
இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

Friday, August 21, 2015

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

வியாபார காட்சிகள், அரங்குகள், கூட்டங்கள் மற்றும் பிற பொருட்காட்சிகளில் வெளிக்காட்டுவது உங்களுக்கு தனிப்பட்ட விற்பனை வாய்ப்புகளை அளிக்கும், மேலும் இவற்றால் புதிய முதலீடுகள், விநியோகத்தர்கள் ஆகியவற்றை உருவாக்கவும், உங்களுக்கான போட்டியை அறிந்து கொள்ளவும், நெட்வொர்க்கிங் செய்வது போன்றவற்றால் விளம்பரம் பெற முடியும். சுருக்கமாக சொல்வதானால், பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலிருந்து நீங்கள் செய்யக்கூடியவைகளை ஒரே வியாபாரக் காட்சியில் நீங்கள் செய்து முடிக்க முடியும். மேலும் அது உங்கள் பணத்தையும் சேமிக்கும் -- Center for Exhibit Industry Research –இன் ஆய்வின்படி நேரடியாக களச் செயற்பாட்டில் முதலீடு பெற செலவாவதை விட 62% குறைவாக வியாபாரக் காட்சிகளில் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பெறுவதற்கு நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதாவது சரியான வியாபாரக் காட்சியைத் தேர்ந்தெடுப்பது, தெளிவான இலக்குகளை அமைப்பது, செயல்திறமிக்க காட்சியை உருவாக்குவது மற்றும் உங்கள் இருப்பை விளம்பரப்படுத்துவது போன்றவையாகும். இவை அனைத்துமே நீங்கள் வியாபாரக் காட்சிக்கு செல்வதற்கு முன்பே செய்யப்பட வேண்டும். உங்கள் வியாபாரக் காட்சியிலிருந்து அதிகமான பயன்களைப் பெறுவது பற்றி அறிய பின்வரும் படங்களை கிளிக் செய்யவும்.
ஆயிரக்கணக்கான வியாபாரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்றன, அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீடு, நேரம் மற்றும் பணத்துக்கு சிறந்தப் பயனைப் பெறுதல் மிகவும் கடினமான ஒன்றாகும்.
உங்கள் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைக்கு பொருந்தும் வியாபாரக் காட்சிகளைத் தெரிவு செய்ய தொடங்குங்கள். இணையத்தளத்தில், பின்வருவதில் ஒன்றைப் போன்ற வியாபாரக் காட்சி தேடல் தளங்களை முயற்சிக்கவும்:
வியாபாரக் காட்சிகளைப் பற்றி அறிவதற்கான மற்றொரு வழி, உங்களுடைய தொழிற்துறையின் வியாபாரச் சங்களாகும், ஏனெனில் பெரும்பாலான காட்சிகள், கூட்டங்கள் தொழிற்துறை குழுக்களால்தான் நடாத்தப்படுகின்றன.
சரியானதைத் தேர்ந்தெடுக்க இதோ மேலும் சில தகவல் குறிப்புகள்:

எண்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் உற்பத்தி அல்லது வாடிக்கையாளர்களைச் சேர்க்காத வரை, பெரிய வியாபாரக் க்காட்சிகளுக்கு வரும் மக்கள் உங்கள் வியாபாரத்திற்கு நேர விரயமாக இருக்க வாய்ப்புண்டு. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை உன்னிப்பாக நோக்கி, அங்கு வரும் நபர்கள் உங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க முடியுமா என்பதை மதிப்பிடுங்கள். காட்சி முகாமையாளர் உங்களுக்கு இந்த தரவுகளைத் தரக்கூடும்.

உங்கள் வாடிக்கையாளர்களை உதவும்படி கோருங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் எந்த வியாபாரக் காட்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று அறியுங்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வியாபாரக் க்காட்சிகளில் பிற வாய்ப்புடைய வாடிக்கையாளர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் போட்டியாளர்களிடமும் பேசி அவர்களுக்கு எந்தெந்த வியாபாரக் காட்சிகள் அதிக பயன் தந்தது என்று அறியவும்.

அதிக நேரத்துக்கு முன்பே இவற்றை செய்து முடியுங்கள்

ஒரு வியாபாரக் காட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, நேரடியாக சென்று பார்ப்பதுதான். நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு வியாபாரக் காட்சிக்கு ஒரு பார்வையாளாராக செல்லுங்கள். வியாபாரக் காட்சி செயல்திறமிக்கதாகவும் சிறப்பாகவும் இருக்கிறதா? வியாபாரக் காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் வாய்ப்புள்ளவர்களா? பிற வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்கள் யார், மேலும் உங்கள் உற்பத்திகள்/சேவை இதில் எங்கு பொருந்தும்? அங்குள்ள மக்களை அணுகி நுணுக்கமாக கண்காணியுங்கள்.

கவனமாக மதிப்பிடுங்கள்

வியாபாரக் காட்சியின் சாத்தியங்களைப் பட்டியலிட்ட பின்னர், உங்கள் நோக்கங்களுக்கு இந்த வியாபாரக் காட்சி சரியானதா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:
  • அனைத்து வகையான வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவரும் அளவுக்கு இது பெரிதான வியாபாரக் காட்சியா – ஆனால் அதே நேரம் உங்கள் தொழிலின் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அளவுக்கு பெரிதாக இல்லையா?
  • உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புவியியல் ரீதியாக சரியான இடத்தில்தான் அமைந்துள்ளதா – அவர்கள் உள்ளூரா, வட்டாரம் சார்ந்தவர்களா, தேசிய அளவில் உள்ளவர்களா, அல்லது சர்வதேச அளவில் உள்ளவர்களா?
  • புதிய வியாபாரத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் புதிய முதலீடுகளைப் பின் தொடரக் கூடிய காலத்தில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளதா?
  • வியாபாரக் காட்சியின் விளம்பரதாரர்கள் நம்பகமானவர்களா மற்றும் நிர்வாகத்துக்கு வெற்றிகரமான முன்னைய நிகழ்வுகள் உள்ளனவா?
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்

சில பிரபலமான வியாபாரக் காட்சிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் நீண்ட நேரம் காத்திருந்தால், காத்திருப்பு பட்டியலில் நீங்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விரைவில் வியாபாரக் காட்சிக்காகப் பதிவு செய்தால், உங்கள் அரங்கில் நல்ல சிறந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பும் அதிகம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் முதலீடு செய்யும் நேரம், பணம் மற்றும் திறனுக்கான அதிகமான பயனைப் பெற, அங்கு இருப்பதற்கு உங்களுக்கான நோக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதே ஆகும். வியாபாரக் காட்சிக்கு முன்னர், அது நிகழும்போது மற்றும் அதற்கு பின்பு நீங்கள் செய்யும் அனைத்தும் இந்த இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படும் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

வியாபாரக் காட்சிககு சாத்தியமான இலக்குகள்

வியாபாரங்கள் வியாபாரக் காட்சியில் பங்கேற்பதற்கான சில காரணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை உங்கள் இலக்குகள் உள்ளடக்கியிருக்கலாம், அல்லது உங்கள் சிறுவியாபாரத்திற்கு முக்கியமான பிறவற்றைக் கொண்டிருக்கலாம்:
  • விற்பனை கட்டளைகளைப் பதியுங்கள்
  • போட்டி பற்றி ஆராயுங்கள்
  • இட மாதிரிகளைக் கண்டறியுங்கள்
  • எதிர்கால விற்பனைக்கான முன்னேற்பாடுகளை உருவாக்குங்கள்
  • சரியான நபர்களின் பெயர்களுடன் மெயிலிங் லிஸ்ட்டை உருவாக்குங்கள்
  • சிறந்த அல்லது மலிவான விநியோகத்தர்களைக் கண்டறியுங்கள்
  • நடைமுறை வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
  • ஊடகச் செய்திகளைப் பெறுங்கள்
  • புதிய உற்பத்திப் பொருளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்குங்கள்
  • தொழிற்துறையில் உங்கள் நிறுவனத்தைப் பிரபல்லியப்படுத்துங்கள்
உங்கள் அரங்கின் பணியாளர்கள் போதுமான அளவுக்கும் நேர்த்தியானவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

இதை தனியாக செய்ய முடியாது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், நீங்கள் அரங்கை விட்டு வெளியேறும்போது, இடைவேளைக்கு வெளியே செல்லும்போது, அல்லது போட்டியை அவதானிக்க வெளியே செல்லும்போது குறைந்தது ஒரு நபராவது உங்கள் "இடத்தை" நிரப்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஒரு நபரை வைத்திருப்பது சிறந்த வழியாகும். சிறந்த தோற்றத்தில், சிறந்த பயிற்சியுடன், சிநேகிதபூர்வமாகவும் அறிவுடனும் உங்கள் பணியாளர்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அடைவதற்கான அவர்களின் பங்கை அறிந்திருக்க வேண்டும். சம்பளம் பெறும் பணியாளர்களாக உங்களிடம் பணியாளர்கள் இல்லையென்றால், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் போன்றோரை நாடலாம்.

உங்கள் செய்தியைத் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

இரண்டு அல்லது மூன்று முக்கிய யோசனைகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் நீங்களும் உங்கள் பணியாளர்களும் அதிகமான பயிற்சிகளைக் கொண்டிருங்கள், இதனால் "செய்தியில் குறிப்பாக இருக்கலாம்". கிராஃபிக்ஸ், காட்சிக்கு முன்பான விளம்பரம், மற்றும் விபரக்கொத்து விளம்பரம் போன்றவற்றை உங்கள் செய்திச் சுருக்கத்தில் திட்டமிடுங்கள்.

பாதீட்டைத் தயாரியுங்கள்

எந்த வியாபாரக் காட்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்கு ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் ஒரு பாதீட்டைத் தயாரியுங்கள். ஒரு பாதீடு இல்லையெனில் செலவுகள் எளிதாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் (உதாரணமாக, கடைசி நேர நெருக்கடியான கொள்வனவு செய்யும் கூட்டம்). மேலும் இவை உங்களுடைய சிறந்த திட்டங்களை அழிக்கக் கூடும். உங்களுடைய மொத்த பாதீட்டில் நான்கிலொரு பங்கு இடத்துக்கான செலவில் உள்ளபடி திட்டமிடுவது சிறந்ததாகும். எனவே இடத்துக்கான வாடகையாக நீங்கள் என்ன செலவழிக்கிறீர்கள் என்று தெரியும்போது, அதனை நான்கால் பெருக்கி உங்கள் செலவுகளைப் பற்றி தூர சிந்தனையைப் பெறுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட செலவுகளைச் சேர்க்காதீர்கள்.
உங்கள் அரங்கு எங்கு அமைந்துள்ளது என்பதும் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதும் உங்கள் வியாபாரக் காட்சியின் வெற்றியைப் பாதிக்கும். பின்வரும் தகவல் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக மக்கள் வரும் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான இடத்தைத் தரிவு செய்யும் முன்னர் நடைபாதை வழியை கவனிக்கத் தவறாதீர்கள். பொதுவான ஒரு வியாபாரக் காட்சி தளத்தில் சில இடங்களில் அதிக அளவிலான நபர்கள் வருவார்கள். நுழைவாயில்கள். உணவகங்கள், ஓய்வகங்கள், அல்லது பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இடங்களில் அரங்கினை அமைக்க முயற்சியுங்கள். வழிமுடியும் இடங்கள், சரக்கு ஏற்றி இறக்குமிடம், முறையற்ற வழிகள், அல்லது பிற குறைவாக மக்கள் வரக்கூடிய இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அரங்கினைப் பகிர்ந்து கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்

புதிதாக வியாபாரக் காட்சியில் பங்கேற்போர் அதிகம் விரும்பாத இடங்களைத்தான் நாடுவார்கள். இதனைத் தவிர்க்க நல்லதொரு வழி இடத்தில் உள்ள ஒரு அரங்கினை தொடர்புடைய ஒரு தொழிலில் இயங்கும் சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுவதாகும். உங்கள் விற்பனை பிரதிநிதிகள், அல்லது உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் போல விரிவாக நிலைப்பெற்ற வியாபாரக் காட்சியாளர் ஆகியோரிடம் கதைக்க முயற்சியுங்கள்.

உணர்வுப்பூர்வமாக ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் அரங்குக்கு வரும் மக்கள் உங்கள் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அனுபவித்து பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் தொட்டு, கண்டு, உணர்ந்து, கேட்டு அல்லது சுவைத்துப் பார்க்க அனுமதியுங்கள். அலங்காரமான தலையணிகளை விற்கிறீர்களா? அதனை முறையான அமைப்பில் காட்சிப்படுத்துங்கள், மேலும் வாங்குபவர்கள் தொட்டு பார்ப்பதற்கான மாதிரிகளையும் வைத்திருங்கள். ஒரு புது மென்பொருள் தொகுப்பை உருவாக்கியிருக்கிறீர்களா? அந்த மென்பொருளை சோதித்து பார்க்க பல கணனிகளை வைத்திருங்கள்.

எளிமையாக வைத்திருங்கள்

அரங்கு அலங்காரத்தில் மிகவும் பகட்டாக காண்பித்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய ஒரு பெரிய படமானது பல சிறிய படங்களை விட சிறந்தது. பெரிய உரைகளை விடவும், உங்கள் வியாபாரத்தை விவரிக்கும் ஒரு வாசகம் சிறந்ததாகும்.

தந்திரங்கள்

தந்திரங்கள் மற்றும் சிறு பரிசுகள் தந்து உங்கள் அரங்குக்கு மக்களை வரவழைக்கலாம். ஒரு நேர்காணலை நடாத்துங்கள், சத்தமாக உற்பத்திப் பொருளின் விளக்கக்காட்சிகளை மேற்கொள்ளுங்கள், மிட்டாய்களைத் தாருங்கள். இந்த தந்திரம் உங்கள் நிறுவனத்தின் மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காவிட்டால் சிறந்த வியாபாரக் காட்சி திட்டமிடல் பயனளிக்காது போகலாம். ஏறத்தாழ மூன்றிலொரு வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது, வியாபாரக் காட்சிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று CEIR அவதானிக்கப்பட்டுள்ளது. உறுதியாக முன்னரே காண்பிக்கப்படும் விளம்பரங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன காண்பிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றி தெரிவிக்கிறன. இந்த தகவல் குறிப்புகள் உதவக்கூடும்.

தொலைபேசிகளைத் தொழிற்படச் செய்யுங்கள்

வியாபாரக் காட்சிக்கு 6 வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, உங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். பெரும்பாலான நபர்கள் காட்சிக்கு அதிகமான வேலைகளுக்கு மத்தியில் வருவார்கள், பிற அரங்குகளை காண்பதற்கு அவர்களுக்கு மிக குறைவான நேரம் அல்லது நேரமே இல்லாமல் இருக்கும். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ஒரு வாரம் அல்லது காட்சிக்கு முன்பாகவே நிச்சயப்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள்.

அஞ்சல்களை அனுப்புங்கள்

முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களின் அஞ்சல் பட்டியலை வாங்கி வியாபாரக் காட்சியின் நிர்வாகம் வழங்கக்கூடும். உங்கள் அரங்குக்கு வருவதால் உண்டாகக்கூடிய நன்மைகள் இரண்டை விவரிக்கும் எளிமையான அஞ்சலைப் பயன்படுத்த முயற்சியுங்கள். உங்களுடைய அரங்கு இலக்கத்தையும் சேர்த்து சில தொடர்பு விவரங்களும் அதில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்

வியாபாரப் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் போன்றவற்றில் வியாபாரக் காட்சியை உள்ள்டக்கிய செய்திக்கட்டுரைகளை பிரசுரியுங்கள். உங்கள் செய்திக்குறிப்புகளில் உங்கள் அரங்கைப் பற்றிய மதிப்புடைய செய்திகள் இருக்கலாம் – ஒரு புதிய உற்பத்திப் பொருள் அறிமுகம் அல்லது விசேட விளக்கக்காட்சி போன்றவை. வியாபாரக் காட்சிக்காக பல ஊடகவியலாளர் தொகுப்புகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊடகவியலாளர்களின் அறைகளுக்கு அனுப்பி வையுங்கள், இதனால் ஊடகவியலாளர்களிடம் அவை எளிதில் சென்றடையும்.

வியாபாரக் காட்சிக்கான வெளியீடுகளை தேடுங்கள்

வியாபாரக் காட்சி மட்டுமே பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அதிக செலவாகக்கூடியதாகவும், செயல்திறமற்றதாகவும் இருக்க கூடும். இந்த வெளியீடுகள் குறைவான கவனத்தையே பெறும், மேலும் வியாபாரக் காட்சிக்கு வருகைதரும் மக்கள் வீணாக்கும் காகிதங்களின் அளவில் எளிதில் தொலைந்து போய்விடும்.
உங்கள் பின் தொடர் திறமுறைத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான உகந்த நேரம் வியாபாரக் காட்சி தொடங்குவதற்கு முன்புள்ள நேரமாகும். இம்முறையில், உங்களுடைய வாய்ப்புடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரக் காட்சி மறப்பதற்கு முன்பே உங்கள் பின்னூட்டல் செய்தி அவா்களை சென்றடையலாம். பின் தொடருதல் பற்றி நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

பின் தொடருதலை முதன்மையானதாகக் கருதுங்கள்

Center for Exhibition Industry Research –இன் கருத்துப்படி 80% காட்சி வருகைகள் பின் தொடரப்படுவதில்லை. வருகை தந்தவர்களை பின் தொடருவது வியாபாரக் காட்சிக்கு பின் உங்களுடைய முதல் பணியாக இருக்கும். – நீங்கள் அலுவலகத்துக்கு வராத நாட்களில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது போன்ற வேறு எந்த பணியை விடவும் இதை முதன்மையானதாக கருதுங்கள்.

பின் தொடருதல் அஞ்சலை வியாபாரக் காட்சிக்கு முன்பாகவே பதியுங்கள்

வியாபாரக் காட்சிக்கு பின்னருள்ள அஞ்சலானது ஒரு நன்றி குறிப்பு அல்லது அட்டைக்குறிப்புடன் கூடிய ஒரு கைந்நூல் போன்றவையாகவும் இருக்கலாம். வியாபாரக் காட்சிக்கு புறப்பட முன்னர் இதனை பதிந்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரக் காட்சியிலிருந்து திரும்பிய உடனே அதனை அனுப்பி வைக்க முடியும்.

வியாபாரக் காட்சியின் போதே முதன்மை வாடிக்கையாளர்களை தகுதிப்படுத்துங்கள்

முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் வருகை தந்தவர்களை வரிசைப்படுத்துங்கள், இந்த முக்கியத்துவங்களை காட்சிக்கு பின்னரான செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்குங்கள் வியாபாரக் காட்சி முடிந்து ஒரு வாரத்துக்குள் உங்களுடைய முதன்மையான வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழையுங்கள் – நீண்ட காலம் கடத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புகள் அரிதாக்கூடும். அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான பின் தொடர் அஞ்சலை அனுப்புங்கள்.

உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்

அரங்கில் நீங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுங்கள். போதுமான அளவு கைந்நூல்களையும், உற்பத்திப் பொருட்கள் பற்றிய தாள்களையும் வைத்திருங்கள், இதன் மூலம் கோரப்படும் தகவல்களை கூறியது போலவே நீங்கள் அனுப்பலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Sunday, July 26, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.v4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Friday, July 10, 2015

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்து விடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்..!
இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்குங்கறதுக்காக, ஒட்டு மொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்து விடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு…..!!!
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்..! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது!
ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த தேதி தான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?!
அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.
3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.
இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!
4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption) உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!
5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home) அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!
6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)
7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised) இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்!
அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!
“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

Thursday, July 9, 2015

கொகுடிக்கோவில்


            புனல் நாடு, நீர் நாடு என்ற திருப்பெயர்களைத் தாங்கி மிளிரும் நன்னாடுசோழவளநாடு. "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற்கன்னியாம் காவிரி' பாய்ந்து வளப்படுத்தும் நாடு. இங்கே "ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடமானது ஏழு யானைகளுக்கு உணவளிக்குமளவு நெல்வளம் சான்றது' என்றனர் முன்னோர். இதன்கண் அமைந்த சிவபிரான் திருக்கோவில்கள் பல.

தமிழகத்தில் விளங்கும் கோவில்களில் சில பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், மாடக்கோவில், ஆலக்கோவில் எனும் சிறப்புப் பெயர்களைப் பெற்று விளங்குவதைக் காணலாம். இவற்றுள் "கொகுடிக்கோவில்' என்ற சிறப்புப் பெற்றதும்; தருமபுர ஆதினத்தின் அருளாட்சிக்குட்பட்டதும்; காவிரி வடகரைத் தலங்களில் 37-ஆவது தலமாகப் போற்றப்படுவதும்; பாவலர் மருதூர் அம்பலவாணரால் 298 பாடல்களை தலபுராணமாகக்கொண்டு பெருமை பெற்றதுமான பழம்பதிதான் தலைஞாயிறு. தேவாரப் பதிகத்தில் திருக்கருப்பறியலூர் என குறிக்கப்பட்டுள்ளது.

இறைவன்: குற்றம்பொறுத்தநாதர்;

இறைவி: கோள்வளைநாயகி;

தலவிருட்சம்: முல்லை;

தீர்த்தம்: விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

இத்தலத்தில் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், நிம்புட்கரணி, சங்கபுட்கரணி, பொற்றாமரை, செங்கழுநீர் தடாகம் என எட்டுத் தீர்த்தங்கள் இருப்பினும் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம் மிகச் சிறப்புடையன.

தக்கன் யாகத்திற்குச் சென்ற தீமையால் பல்லையிழந்த சூரியன் ஒளி குன்றினான். அதனால் அவனியில் அவரவர்களும் தத்தம் கடமைகளையும் ஒழுக்கத்தையும் மறந்தனர். உலகமே இருண்டது. தேவர்கள் சூரியனிடம் சென்று, ""சிவநிந்தகன் செய்த யாகத்தில் சேர்ந்தமையால் வந்த கதி இது. நீ திருக்கருப்பறியலூர் சென்று குற்றம் பொறுத்த நாதரை வணங்கி, அவர்முன் தீர்த்தமுண்டாக்கி விதிப்படி மூழ்கி அர்ச்சித்தால் நோய் நீங்கும்'' 

என்றனர். சூரியனும் அவ்வாறே வழிபாடு செய்து, ஒரு ஞாயிறன்று ஈசனின் அருளைப் பெற்றான். 
ஞாயிற்றுக்கிழமை சூரிய தீர்த்தத்தில் நீராடி வழி படுவது மிகவும் சிறப்பு.

அருக்கன் அர்ச்சனை செய்ததால் ஆதித்தபுரி என்றும்; சூரியனால் அர்ச்சிக்கப்பெற்ற பாங்கினால் அமைந்ததால் தலைஞாயிறு என்றும்; கருமூலத்தைப் பறிப்பதனால்கருப்பறியலூர் என்றும்; "வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக', "மறைவளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர்' என்ற வாசகங்களால் அந்தணர்கள் பெருகியிருந்த திருத்தலம் என்றும் தலபுராணம் மூலம் தெளிவாக உணர முடிகிறது. மேலும் மலைக்கோவில் என்று சொல்லப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையாய் உமாமகேஸ்வரர் வீற்றிருப்பதாலும், சீர்காழிக்கு மேற்கே உள்ளதாலும் மேலைக்காழிஎன்ற பெயரும் உண்டு. (இந்த சந்நிதி படியேறிச்சென்று தரிசிக்கும் அமைப்பிலுள்ளதால் மலைக்கோவில் எனப்படுகிறது)முனிவர்கள் வழிபட்டது கயிலை மலைச்சாரலில் ஒரு அழகிய வனம் உண்டு. அதில் அணுவளவு தவம் செய்தாலும் மேரு மலையைப்போல் வளர்ந்து பயன்தரும். அங்குள்ள தடாகத்தின் கரையில் அங்கீரசர், கௌதமர், வாமதேவர், கபாலி முதலான எழுபத் திரண்டு முனிவர்கள் செயற்கரிய பெருந்தவத்தைச் செய்தனர். 

இறைவன் எழுந்தருளி, ""உங்கள் தவத்திற்கு மகிழ்ந்தோம்; பூலோகத்தில் யூதிகா வனம் என்றொரு தலம் உண்டு. (தலைஞாயிறு). அங்கு சென்று தவம் செய்தால் எல்லா சித்திகளும் எய்தலாம்'' என்றருளினார். முனிவர்களும் அவ்வாறே இங்கு வந்து தவம் இயற்றினார்கள்.

இறைவன் அவர்களுக்கு அருள்வழங்குவதற்காக பூதகணம் புடைசூழ, தேவர்கள் வணங்கி நிற்க, அரம்பையர்கள் ஆட, சுயம்பு லிங்கத்திலிருந்து தோன்றியருளினார். இதனைக் கண்ட முனிவர்கள் பரவசப்பட்டு பாடிப் பரவிப் போற்றினர். 

பிறகு முனிவர்கள், ""இன்ப வீட்டினை அருளுதல் வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஈசனும் ""சில நாட்கள் தங்கி சிவப்பணி செய்யுங்கள். சிவகதி நேரலாம்'' என்றருளினார். முனிவர்கள் அவ்வாறே சில நாள் தங்கியிருந்து சித்தானந்த நிலையை அடைந்தனர்.

இராவணன் வழிபட்டது

இராவணன் மூவுலகையும் வென்று பலருக்கும் துன்பத்தை விளைவித்தான்.  அவனது மகன் மேகநாதன் தந்தையைப்போல் எல்லாரையும் வென்று, இந்திரனையும் வென்று இந்திரஜித் என்ற பெயரையும் பெற்றான். திக்விஜயம் முடித்து இலங்கை செல்வதற்காக புட்பக விமானத்தில் புறப்பட்டான். ஓரிடத்தில் விமானம் தடைப்பட்டு நிற்க, "என் விமானம் தடைப்படுவதா? இதைச் செய்தவர் யார்?' என்று சினந்தான். எங்கனும் தேடி யாரையும் காணாமல் தடுமாறினான். இறுதியில் கீழிருந்த ஆதித்தபுரீசரைக் கண்டான். சிவாலயத்தின்மீது விமானத்தின் நிழல்பட்டதனாலேயே இத்தடை ஏற்பட்டது என்றுவருந்தினான். விநாயக நதியில் நீராடி இறைவனைப் பூஜித்தான். 

விமானம் பறந்து செல்லத் தொடங்கியது. "இந்த அற்புத லிங்கத்தை இங்கேயே விட்டுச் செல்வதா? 
இலங்கைக்குக் கொண்டுபோவோம்' என்ற எண்ணம் இந்திரஜித்துக்குத் தோன்ற, திரும்ப வந்து சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றான். 

இயலாமல் சோர்ந்துபோனான். அப்போது ஆகாயவாணி, "இறைவன் திருவருள் இருந்தாலன்றி எந்தக் காரியமும் நடவாது' என புத்தி புகட்டியது. அதைக் கேட்டதும் மயங்கி விழுந்து பிணமானான் இந்திரஜித்.

இராவணனின் செவிக்கு இந்திரஜித்தின் இறப்புச் செய்தி எட்டியது. ஓடோடி வந்த இராவணன் இறைவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி, சிறப்பொடு பூசனை செய்து இந்திரஜித்தின் இறப்பினை நீக்குமாறு வேண்டிக்கொண்டான். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார். இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு குற்றம் பொறுத்தான் என்னும் திருநாமம் விளங்குகிறது.

அனுமன் வழிபட்டது


இராவணாதியர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவபூஜை செய்ய எண்ணிய ராமபிரான், அதற்கான லிங்கத்தைக் காசியிலிருந்து கொண்டுவருமாறு அனுமனைப் பணித்தார். குறித்த நேரத்தில் அனுமன் வராததால், மணலால் லிங்கம் செய்து பூஜையை முடித்துவிட்டார் ராமபிரான். அதன்பின் வந்த அனுமன் நடந்ததைக் கண்டு வருந்தி, மணல்லிங்கத்தை அகற்ற பெரிதும் முயன்று இயலாமல் சோர்ந்தான். அப்போது ராமபிரான். ""நீ செய்தது சிவ அபவாதம். அது நீங்க தவம் செய்வாயாக'' என்றார்.

அதன்படியே அனுமன் தவம் செய்ய, அவன்முன் தோன்றிய இறைவன், ""கன்மநாசபுரம் (தலைஞாயிறு) சென்று பூஜித்தால் உன் குற்றம் நீங்கும்'' என்றருளினார். அனுமனும் இத்தலம் வந்து வழிபட, சிவபெருமான் அருள்பாலித்தார்.

மகிழ்வுற்ற அனுமன் இத்தலத்துக்கு வடகிழக்கில் லிங்கம் அமைத்து, தீர்த்தம் ஏற்படுத்தி வணங்கினான். அத்தலம் திருக் குரங்குக்கா என வழங்கப்படுகிறது.

விசித்திராங்கன் வழிபட்டது


சிந்து தேசத்து அரசகுமாரன் விசித்திராங்கன். இவன் மனைவி சுசீலை. உலகெலாம் ஒரு குடைகீழ் அரசாளும் பெரும்பேறு பெற்றிருந்தும் குழந்தையில்லாக் குறையால் வாட்டமுற்றான் மன்னன். ஆயினும் தானதர்மங்கள் செய்தலிலும், விரதங்கள் அனுஷ்டிப்பதிலும் கொஞ்சமும் தவறவில்லை. அந்த புண்ணியப்பயன் காரணமாக சுசீலை கருவுற்றாள். மாதம் பத்து நிறைந்தது. ஒவ்வொரு நாளும் இன்று குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கியிருந்தனர். இப்படியே ஐந்தாண்டுகள் சென்றன. "நாம் செய்த புண்ணியப் பயன் இதுதானா? கருக்கொண்டது கனவாயிற்றோ?' என்று கவலைகொண்ட மன்னன் அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு, சுசீலையுடன் தலயாத்திரை புறப்பட்டான்.

காசி முதலாக பல சிவத்தலங்களை தரிசனம் செய்தபின், இறுதியில் திருப்புன்கூரிலுள்ள ஒரு வேப்பமரத்தடியில் மனைவியுடன் அமர்ந்தான். அப்பொழுது, "நீவீர் அருகிலுள்ள யூதிகாவனம் (தலைஞாயிறு) சென்று விநாயக நதியில் நீராடி பெருமானை வழிபடுங்கள். கவலை ஒழியும்' என்று ஒரு வாக்கு ஆகாயத்தில் எழுந்தது. மன்னனும் அவ்வாறே விநாயக நதியில் நீராடி, நீறுபூசி நித்திய வழிபாடாற்றினான். வழிபாட்டிற்கு மனமுவந்த பெருமான் கவலை நீங்க அருள்பாலித்தான். சுசீலையும் மகவீன்றாள். இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த மன்னனே சிற்பநூலின்படி இந்த ஆலயத்தை அழகுறஅமைத்தான். 

ராஜகோபுரத்தைக் கடந்ததும் தலவிநாயகர், முருகப் பெருமான், கஜலக்ஷ்மி ஆகியோரை வழிபட்டு, மூலவர் குற்றம்பொறுத்த நாதரை வணங்கியபின், தெற்கு நோக்கிய அம்பிகை கோள்வளைநாயகியை வணங்கி, பின்னர் நடராசப்பெருமானின் தரிசனத்தைக் காண்கிறோம். இதையடுத்து சூரியன், சனி, பைரவர் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்புரிகின்றனர். 

வெளிப்பிராகாரத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதனையடுத்து மலைக்கோவில் எனப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையும் உமாமகேஸ்வரராய் வீற்றிருக்கின்றனர். அதன் துர்க்கை சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. இதனையடுத்து சண்டிகேஸ்வரர் தனது மனைவி யாமினியுடன் அருள்புரிவது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். இக்கோவிலில் நவகிரகங்கள் இல்லை. நவக் கோள்களை வளையல்களாக அணிந்து அவற்றின் செயல்பாடுகளை கோள்வளை நாயகியே பார்த்துக்கொள்ளும் விதத்தில் நின்ற நிலையில் அருள்புரிகிறாள்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறஅருளுகிறார் இத்தல தட்சிணாமூர்த்தி.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன், கோ நேரின்மை கொண்டான், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசதேவர், விஜயநகர அரசர் பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணி செய்த பெருமை பெற்ற தலமாக இது திகழ்கிறது.

""மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கி மறுபிறவியில்லாத பெரும்பேறு வழங்கும் குற்றம்பொறுத்த ஈஸ்வரரின் பேரருளும், கோள்வளை நாயகியின் பெருங்கருணையும் இத்தலத்தின் எழுச்சிக்குக் காரணங்கள். தலைஞாயிறு க்ஷேத்திரத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும்'' என்று உள்ளன்போடு உரைக்கிறார் தலத்தின் பரம்பரை ஆலய அர்ச்சகர் வெங்கடேச சிவாச்சார்யார்.

ஆலயத் தொடர்புக்கு: சந்திரமௌலீ சிவாச்சார்யார், அலைபேசி: 97865 37860.

மயிலாடுதுறையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற சிற்றூருக்கு வடகிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தலைஞாயிறு.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்



           ந்த ஆண்டு ஆவணி மாதம் 6-ஆம் தேதியுடன் (22-8-2013) ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவருடைய புண்ணிய தினத்தில் அவரை வணங்கி, அவருடைய அருளாசியைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டுகிறோம்.

தர்மபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாரப்பட்டி எனும் சிற்றூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமி பிரத்யட்சமாய் காட்சியளித்தார் என்கிற செய்தியைப் படிக்க நேர்ந்தது. அன்று முதல் எனக்கும் பாப்பாரப்பட்டி ஸ்ரீராயர் மடத்தை தரிசிக்கவேண்டும் என்கிற அவா பல்லாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால் அந்த  பாக்கியம் கிட்டவில்லை. விமானத்தில் ஹைதராபாத் செல்லமுடிகிறது; சதாப்தியில் அடிக்கடி பெங்களூர், மைசூர் என்று போகமுடிகிறது. ஆனால் பாப்பாரப்பட்டி மட்டும் பல்லாண்டுகளாக வாஷிங்டனாகவே எனக்கு இருந்தது. திடீரென்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு தர்மபுரி செல்ல நேர்ந்தது. அன்று மாலையே நான் பாப்பாரப்பட்டி சென்றுவிட்டேன். 

பாப்பாரப்பட்டி ஊரின் உள்ளே நுழைந்து, கடைத் தெருவைத் தாண்டி பாப்பாரப்பட்டி அக்கிரகாரம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம். ஊரிலிருந்து தனிமைப்பட்டுக் காட்சியளித்தது அந்த இடம். நான்கைந்து மெலிதான வீதிகள்; சுத்தமான சிமெண்ட் சாலைகள்; குட்டை குட்டையான ஓட்டு வீடுகள்; நடுவில் ஓரிரு மச்சு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பக்கமும் சுகமான திண்ணைகள். மொத்தம் அறுபது வீடுகள்; அனைத்தும் ஒரே மாதிரியாக பளிச்சென்று இருந்தன. அந்த அறுபது வீடுகளிலும் மாத்வ பிராமணர்களே வசித்துவந்தனர்.

என்னுடைய கார் பிருந்தாவனம் அருகே நின்றது. திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் சிலர் என்னைப் பார்த்தார்கள். பல ஆண்களின் உடம்பில் கோபிசந்தன நாமம் அவர்களின் பக்திப் பெருக்கைக் காட்டியது.

என்னோடு பலரும் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்கள். 

சுமார் எண்பது வருஷத்து பிருந்தாவனம் இது. 

பாப்பாரப்பட்டியில்- மைசூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில், அண்ணன்- தம்பியாகப் பிறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோர். திருமணமாகி நீண்டகாலமாகியும் மக்கட்பேறு இல்லாததால், அண்ணனும் தம்பியும் மந்திராலயம் போய் ஸ்ரீராக வேந்திரரை தரிசித்து, 

அவரிடம் மக்கட்பேறுக்காக வேண்டிக்கொள்ள முடிவு செய்தனர். கடைசியில் தம்பி சீனிவாசனும் அவர் குடும்பமும் மந்திராலயம் சென்று சுவாமிகளை வழிபட்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், தன் அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உடனே மந்திராலய சேவையில் கலந்துகொள்ள வரச்சொல்லி கடிதம் எழுதினார் தம்பி ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமூர்த்தி மறுநாள் மந்திராலயம் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.  அன்றிரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

"கிருஷ்ணமூர்த்தி... நீ மந்திராலயம் வரவேண்டாம். நானே பாப்பாரப்பட்டிக்கு வருகிறேன்' என்று கனவில் ராயர் சொல்ல, புளகாங்கிதம் அடைந்தார் அவர். இதை தன் மூத்த சகோதரரான அச்சுதனிடம் சொல்ல, 1933-ஆம் ஆண்டு அச்சுதன் மந்திராலயம் சென்றார். அப்போது பட்டத்தில் இருந்த ஸ்ரீசுவாமிகளிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, பாப்பாரப்பட்டியில் பிருந்தாவனம் அமைக்க மகிழ்வுடன் இசைந்த ஸ்ரீசுவாமிகள், தன் திருக்கரத்தாலேயே புனித மண்ணை (மிருத்திகை) மூல பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். என்ன அதிசயம்! புனித மண்ணோடு ஒரு சிறிய சாளக்கிராமமும் அதிலிருந்தது. உடனே அச்சுதன்மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, ஸ்ரீசுவாமிகளிடம் அந்த அற்புதத்தைக் காட்டினார்.

சுவாமிகளும் அகமகிழ்ந்து, ""ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது (1671-ஆம் ஆண்டு), பிருந்தாவனத்தில் எழுநூறு சாளக்கிராமங்களைக் கொட்டி அதை மூடினார்கள். அதிலொன்று உனக்குக் கிடைத்திருக்கிறது. பாப்பாரப் பட்டியில் இதை வைத்து பிருந்தாவனம் பிரதிஷ்டை செய். எதிர்காலத்தில் உங்கள் ஊர் "தக்ஷிண மந்திராலயம்' என்று புகழ்பெறும்'' என்றார்.

23-5-1935, வியாழக்கிழமை, வைசாக சுத்த சப்தமி அன்று பாப்பாரப்பட்டி முள்பாகல் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர் என்கிற மகானின் திருக்கரங்களால் பிருந்தாவனம் வெகுவிமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீராகவேந்திரர் இந்த பிருந்தாவனத்தில் வாசம் செய்கிறார் என்பது பல அற்புத நிகழ்வுகளால் தெரியவந்தது. ஒரு சிறிய கிராமம்மந்திராலயத்தைப்போலவே திகழ ஆரம்பித்தது.

பாப்பாரப்பட்டி ஸ்ரீராயரின் பக்தர்களோடு பேசியபோது, அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்ததை கண்களில் நீர்மல்க விவரித்தார்கள். 


சுமார் 60 வயதுள்ள ஒருவரின் மனைவிக்கு கை கால்கள் விளங்காமல் போய்விட்டது. உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்த தன் மனைவியை பல பெரிய மருத்துவமனைகளில் சேர்த்தும் குணமாக்க முடியவில்லை. இறுதியாக பாப்பாரப்பட்டி பிருந்தாவனத்திற்கு வெகு கஷ்டப்பட்டு அழைத்து வந்தாராம். மனைவியை ஒரு மூலையில் படுக்க வைத்துவிட்டு அவர் பிருந்தாவன தரிசனம் செய்து கொண்டிருந்தாராம். பெரிய கோவில் மணி, ஜாங்கடை, பூஜை மணி ஒலிக்க, ராயருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தியோடு வேண்டிக்கொண்டே மனைவி கிடந்த மூலையைப் பார்த்தாராம். அடுத்த நொடி "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று அலறிக்கொண்டே ஓடினாராம் அவர். காரணம், அவர் மனைவி மற்றவர்களைப்போலவே நின்றுகொண்டு, மங்கள ஆரத்தியை கைகூப்பிய வண்ணம் தரிசித்துக் கொண்டிருந்தார்! எல்லாம் ராயரின் அனுக்கிரகம்.

""இங்கே முத்தூர் வெங்கட்ராவ் என்கிற பக்தருக்கு ராயர் காட்சி தந்தாராமே? அவர் வீடு எது?'' என்று கேட்டேன்.

""இப்போது அவர் இல்லை. அவரது மகன் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். என்னோடு வாருங்கள்'' என்றார் ஒருவர்.

ஒரு சிறிய தாழ்வான ஓட்டு வீடு. வாசல் திண்ணையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். 

என்னை கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப் படுத்தினர். 80 வயதுக்குமேல் ஆனவர் அவர்.

""உள்ளே வாங்கோ...'' என்றழைத்துப் போனார். ஸ்ரீராகவேந்திரரை நேரில் தரிசித்த தன் தந்தை ஸ்ரீமுத்தூர் வெங்கட்ராவின் படத்தைக் காட்டினார். மனைவியோடு அவர் இருந்த புகைப்படம் அது. கண்களில் ஒற்றிக் கொண்டேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது!

வெங்கட்ராவ் அந்த மடத்தின் சமையல் கலைஞர். ஓர் ஏகாதசி அன்று மடத்தினுள்ளே போய், மறுநாள் காலை துவாதசி என்பதால், ஏழு மணிக்குள் ராயருக்கு நைவேத்தியம் படைக்க வேண்டுமே என்று இரவே அங்கு படுத்துக்கொண்டார்.

""வெங்கிட்டு... கார்த்தால நாலு மணிக்கு வீட்டிலேர்ந்து ஸ்னானம் செஞ்சுட்டுப் போயேன்... பக்கத்துலயே பாம்பு, புழு, பூச்சின்னு எல்லாம் இருக்கு... ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதே?'' என்று நண்பர்கள் தடுத்தார்களாம்.

வெங்கட்ராவ் சிரித்துக்கொண்டே  ""பாம்பா? எல்லாம் ராயர் இருக்கார். பாத்துப்பார்...'' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஓர் லாந்தர் விளக்கோடு படுத்த வெங்கட்ராவ், இருள் விலகாத அதிகாலையில் கண்விழித்தபோது, எதிரிலிருந்த கிணற்றருகேயிருந்து காவி வஸ்திரங்களோடு ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோன ஸ்ரீராகவேந்திரரை அந்த லாந்தர் விளக்கொளியில் பார்த்து பிரமித்துப் போனாராம்!

""இதோ... இதுதான் அப்பா கொண்டுபோன லாந்தர் விளக்கு'' என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவரோடு பேசிவிட்டு விடைபெற்றபோது, ஓர் மாநிறமான இளம்பெண் என்னை வணங்கினாள்.

""இவள் என் மருமகள்'' என்றார் கோபால கிருஷ்ணன்.

""நீ ஏனம்மா என்னை வணங்குகிறாய். ராயரை நேரில் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வள் நீ. ஏழு தலைமுறைக்கும் அந்தப் புண்ணியம் உன்னைக் காப்பாற்றும்'' என்று வாழ்த்தினேன்.

""பல வருஷங்கள் மந்திராலயம் போனதாகவும், 1962-லிருந்து பல புத்தகங்களில் ராய ரைப் பற்றி எழுதி வருவதாகவும் மாமாவிடம் நீங்கள் சொன்னதைக் கேட்டேன். அதனால் உங்களை வணங்கத் தோன்றியது...'' என்றாள்.

எல்லாம் அவரின் அருள்.

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!

Sunday, May 31, 2015

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்….!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! ”

Thursday, May 28, 2015

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!!!

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!!! - www.v4all.org 
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அவர்களை கையாள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் கோபமாக இருக்கும் போது குழந்தைகள் அதிகமாக பிடிவாதம் பிடிப்பதுடன், அந்த கோபத்தை மிகவும் கடுமையாக வெளிக்காட்டுவார்கள். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வார்கள். ஆனால் அப்படி இருந்தால், குழந்தைகள் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியுமா? ஆம், குழந்தைகளுக்கு தங்களின் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாது. அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆகவே இப்போது குழந்தைகள் கோபமாக இருக்கும் போது, அவர்களிடம் பெற்றோர்கள் எப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
அதிக அளவில் உணர்ச்சிவசப்பட வேண்டாம் :
குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்நேரத்தில் அவர்களை சமாதானம் செய்வது என்பது மிகவும் கடினம். இதனால் பெற்றோர்களுக்கும் சில நேரங்களல் கோபம் வரும். இருப்பினும் அந்நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்
அடிப்பதை தவிர்க்கவும்:
சில பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதை கேட்கவில்லை என்று ஒரு கட்டத்தில் அவர்களை அடிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உள்ள கோபம் தணிவதற்கு பதிலாக, அவர்களுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வர ஆரம்பிக்கும். எனவே எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தையிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.
கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது :
சில பெற்றோர்கள் என்ன சொன்னாலும் குழந்தை கேட்பதில்லை என்று அவர்களை கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தவே கூடாது. இதனால் அவர்களின் மனதில் இந்த கெட்ட வார்த்தைகள் பதிந்து, மற்றவர்களிடம் சண்டை போடும் போதோ அல்லது கோபப்படும் போது அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்த நேரிடும்.
காரணம் தெரியாமல் முடிவு வேண்டாம்:
சில பெற்றோர்கள் குழந்தைகள் எதற்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கான உண்மையாக காரணம் தெரியாமலேயே முடிவு எடுத்துவிடுவார்கள். ஆனால் அப்படி முடிவு எடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் மனதில் உள்ள கோபத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
குழந்தைகளை அச்சுறுத்துவது:
எந்த ஒரு காரணம் கொண்டும் குழந்தைகளை அச்சுறுத்தக்கூடாது. அப்படி அவர்களை அச்சுறுத்துவது முட்டாள்தனமான ஒன்று. இதனால் அவர்கள் மனதில் பயம் தான் அதிகம் இருக்கும். இப்படி பயம் அதிகம் வந்துவிட்டால், பின் அவர்களின் பயத்தைப் போக்குவது மிகவும் கடினமாகிவிடும். ஆகவே உங்கள் குழந்தை கோபமாக இருந்தால், அவர்களிடம் கூலாக பேசி, உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டு, பின் உரிய ஆலோசனையை வழங்குங்கள். இதனால் அவர்கள் பிற்காலத்தில் உங்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
(நன்றி : இணையத்தில் இருந்து )


பொன். சிவகுமார்'s photo.