Showing posts with label money attraction consultant coimbatore. Show all posts
Showing posts with label money attraction consultant coimbatore. Show all posts

Friday, October 28, 2016

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?

108
மேசம் ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
ரிசபம் ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்….
மிதுனம் ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க…
கடகம் ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க…
கன்னி ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க…
துலாம் ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க
விருச்சிகம்..அன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..
தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க…அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்…அர்ஜுனன் ..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்…வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம் ..அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க…
மீனம்..அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..

Thursday, March 10, 2016

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும்அறிவுரை.....*1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.*(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)*2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியைதெருவில் நிறுத்திவிடும்.)*3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.*(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)*4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....*(எதிலும் முன்னெச்சரிக்கைஅவசியம்.)*5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...*(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)*6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....*(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)-------------------------இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால்தெரியும்...!► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை....

Wednesday, March 9, 2016

'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்

'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்


வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குன்மதினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும். பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பதாய் வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம். தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும். இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும். 'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்.

Monday, November 2, 2015

வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது
வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என
ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என
சித்தவைத்தியர்கள்
கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள்
மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய
ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும்
தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில்
பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச
அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை
வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து
விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை
செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை
பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு
பட்டையை நூலுக்குப் பதில்
விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல
பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு
வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர்
செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு
வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை
அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த
வெள்ளெருக்கு விநாயகர். விநாயகர் வழிபாடு அளப்பரிய
பலன்களை தருகிறது. இதை அவரவர்கள்
அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி
மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம்
ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல
இடங்களில் விற்பனை செய்கின்றார்கள்.
வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில்
விநாயகர் செய்து விற்கின்றாகள் அதனால் அது
விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து
விடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால்
இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர்
வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர்
மகிமை உணரலாம்.
விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும்
சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த
நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர்
சாற்றி வணங்கினால் மிக சிறப்பு. சுக்கில
சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி
வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில்
வணங்கினால் வெற்றி கிடைக்கும்.
திருமண காலத்தை விரைவில் காண மஞ்சள்
விநாயகரை48 நாட்கள் பித்தளை தட்டுக்குள்
மூடி வைத்து பூஜை செய்தால் பலன்
கிடைக்கும்.
குடும்ப வறுமையை போக்க, முற்றிலும்
அகற்ற வெள்ளெருக்கு  திரிபோட்டு தீபம் ஏற்ற
வேண்டும்.
நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம்
ஏற்ற பலன் கிட்டும்.உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக
வெள்ளெருக்கு செடியை அடையாளம்
கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர்
ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர்
செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு
காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத்
தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில்
சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல்
தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது
அதன் கதிர்வீச்சுக்கள்
கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம்
வீட்டில் பரவும்படி தயார் செய்து
விட்டோம்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு
செய்யலாம்;தூப தீப நைவேத்தியம்
செய்யலாம்;ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம்
சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.
for வெள்ளெருக்கு விநாயக - Rs,350 + 50 call - 9894624425

Thursday, October 15, 2015

ஆழ்ந்த அன்பு.

தஷ்ரத் மான்ஜி (Dashrath Manjhi) என்பவரின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால், 1959ம் ஆண்டு மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி அவர்கள் இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது.
தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.

Friday, September 11, 2015

படிப்படியான அணுகுமுறை

படிப்படியான அணுகுமுறை
சான்றிதழ்
எலெய்ன் மிட்ச்செல்
சிறப்பு விலங்கு மருத்துவர்
"ஒரே கொள்கையை பகிர்ந்து கொள்ளும் நல்ல வேலையாட்களைத் தெரிவு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது."
Transcription - html
உண்மையில் நீங்கள் வியாபாரத்தில் இருக்கவேன்டுமா என்பதை முடிவு செய்க
உங்களுக்கு மதிப்பு மிக்கவற்றில் சிலவற்றை (அனைத்தையும் அல்ல) நீங்கள் ஆபத்து எல்லைக்குள் கொண்டு வருகிறீர்கள். அதாவது நீங்கள் மையத்திலிருந்து விலகிய ஒரு விசித்திரப் போக்கிற்கு ஆளாக நேரிடலாம், அதாவது, வேலை நேரம் உங்கள் குடும்ப மற்றும் பிற மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்கான நேரங்களை இழந்து ஒரு சமச்சீரற்ற ஒரு வாழ்க்கையை நீங்கள் உருவக்கிக் கொள்ள நேரிடலாம். ஒரு வேலையாளாக நீங்கள் உணராத மன அழுத்த அளவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
என்ன வியாபாரம் மற்றும் எங்கே என்பதை முடிவு செய்க
வெற்றி பெறும் ஒரு தொழிலதிபருக்கான அம்சங்கள் உங்களுக்கு இருக்கிறது என்றும் நிச்சயமாக தொழில்தான் செய்வது என்றும் நீங்கள் முடிவு செய்து வீட்டீர்கள் என்றால், உங்களுக்குக் சிறந்த தொழில் எதுவென்றும், அந்தத் தொழிலை எந்த இடத்தில் அமைப்பது என்றும் என்பதை முடிவு செய்யவேண்டும். தேர்வு உத்தி இந்த அமர்வின் பின் பகுதியில் விளக்கப்படுகிறது.
முழு நேரமாக ஆரம்பிப்பதா அல்லது பகுதி நேரமாக ஆரம்பிப்பதா என்பதை தீர்மானம் செய்க
உங்கள் வியாபாரத்தை பகுதி நேர வியாபாரமாகஆரமபிப்பதில் சில சுவாரஸ்யமான நன்மைகளும், சில தீமைகளும் உள்ளன. (அதாவது, இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்ந்தபடியே பகுதி நேரமாக வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிப்பது). ஆனால் எப்போதும் பகுதி நேரமாக வியாபாரம் ஆரம்பிப்பதில் உள்ள நன்மைகள் ஆபத்துக்களை பெரும்பாலும் களைந்து விடுகிறது.
  • வேலையிலிருந்து ஓய்வு, ஆரோக்கியம், மற்றும் சில துணைப்பயன்கள், விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் வருமான வாய்ப்புக்களை நீங்கள் தவிர்க்கவேண்டிய சூழலிலிருந்து விடுபடுகிறீர்கள்.
  • உங்கள் வேலையையும், வியாபாரத்தையும் முழுமையாக இருவேரு உலகங்களாக நீங்கள் பிரித்து வைப்பதை உள்ளடக்கிய, உங்கள் முரண் நலன் சார்ந்த துறைகளை பராமரிக்க முடிந்ததென்றால் உங்கள் முழு நேர வேலை பாதிப்படையாது.
  • துணை உற்பத்திகள், ரியல் எஸ்டேட், சிறப்பு உணவு, மின் - வர்த்தகம், நேரடி சந்தைப்படுத்தல் அல்லது குடும்பமாக நடத்தும் தொழில் ஆகிய பகுதி நேர தொழிலுக்குக் ஒத்து வரும் தொழில்களை தெரிவு செய்தால் உங்கள் முழு நேர வேலைக்கும் இதற்கும் முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
  • குடும்பத் தொழிலை நடத்துவதில் பல நன்மைகள் உண்டு. நீங்கள் வேலையில் இருக்கும்போது கூட உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அதை கவனித்துக்கொள்வார்கள். இந்த விதத்தில் ஏற்கனவே உங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு கிடைத்து விடுகிறது. வியாபாரம் செய்வதன் பயன்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடியும்.
ஆனால் ஒரு பகுதி நேரத் தொழிலைத் துவங்குவதில் பரிசீலிக்கவேண்டிய சில ஆபத்துக்கள் உள்ளன:
    நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்திலிருந்தே உங்கள் பகுதி நேர வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்ற சபலம் தோன்றும். இது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நியாயம் செய்வதாகாது, மேலும் எந்த ஒரு சூழலிலும் இதனை செய்யகூடாது. (நீங்கள் உங்கள் வேலையில் இருக்கும்போது, நெருக்கடிகளை எதிர்கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரோ அல்லது ஒரு நம்பகமான மனிதரோ இருப்பது அவசியம்.)
  • இன்னொரு பிரச்சனை நீங்கள் உங்களை வேலைக்கு அமர்த்தியவருடன் போட்டியில் இறங்குவது, மறுபடியும் இது ஒரு சரியான விடயமன்று. அதாவது நீங்கள் முதலாளியாக இருந்து உங்கள் ஊழியர் இது போன்று செய்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் அல்லது கையாள்வீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.
  • உங்களது வேலையுடன் உங்களுக்கு ஏற்படும் முரண் அந்த வேலையை கெடுப்பதோடு உங்கள் பகுதி நேர வியாபாரத்தையும் பாதிக்கும்.
  • அதிகப் வேலைப்பழு, மற்றும் உடற்சோர்வு ஆகியவை ஒரு பகுதி நேர முனைவோர்களின் ஒரு உண்மையான பிரச்சனையாகும்.
தேர்வு உத்தி
சான்றிதழ்
மில்லர்ட் மெக்ஆடம்
செயல்சார் தலைமைத்துவம்
""திட்டமிடுவதில் தோல்வி, தோல்விக்கு திட்டமிடுதல்" என்று கூறப்படுவதுண்டு"
படியெடுத்தல் - html

  • நேரம் எடுத்துக் கொண்டு நன்றாக யோசித்து உங்களுக்கான சரியான வியாபாரம் கிடைக்கும் வரை காத்திருக்கவும். வாய்ப்புகளை தொலைத்தால் உங்களுக்குக் யாரும் அபராதம் இடப்போவதில்லை. தொழிலைத் தேர்வு செய்வது என்பது நிறைய திட்டமிடுதலை வேண்டுவது மேலும் உங்கள் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவை வெற்றியடைவதில் முக்கியமானது.
  • பெரும் சவாலை ஏற்படுத்தும் தொழில்களை தேர்வு செய்யாதீர்கள். எப்போதும் ஒரு அடி உயரத்தைத் தாண்டுவது எடுத்தவுடனேயே 7 அடி உயரத்தை தாண்டுவதைக்காட்டிலும் சுலபமானது.
  • நீண்ட நாள் பொருளாதார ஆற்றல் கொண்ட ஒரு தொழிலை அடையாளம் காண்க. வெய்ன் கிரெட்ஸ்கியின் அறிவுரையை கடைபிடியுங்கள்,"பந்து செல்லும் இடத்திற்கு செல்லுங்கள், அது எங்கு இருந்ததோ அங்கு அல்ல.."
  • ஒரு மிகப்பெரிய தவறு என்பது புறக்கணிப்பு செய்யும் பிழையாகும். அதாவது உங்கள் கண் முன்னே தோன்றிய ஒரு வாய்ப்பை நீங்கள் அவதானிக்க தவறுவது.
  • நடைமுறை மற்றும் எதிர்கால சந்தையில் வளர்ச்சி காணும் ஒரு வியாபாரத்தை தெரிவு செய்யவும். சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் பல வியாபாரத்தில் இல்லை, ஏனெனில் வால் மார்ட், ஹோம் டெபோ போன்ற மிகப்பெரிய தொடர் கடைகள் குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் அளித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்துள்ளது.
  • அமெரிக்க வரலாற்றில் ஒரு வெற்றிபெற்ற வியாபார அதிபரும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவர் வொரன் பஃபேயின் அறிவுரையை கடைபிடியுங்கள்: திரு. பஃபே அவர்கள் விலை கொடுக்கும் ஆற்றல், மற்றும் நீண்ட நாளைய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள "வாடிக்கையளர் ஏகபோக வியாபாரங்களைத்" தெரிவு செய்வார். உதாரணம்: சீஸ் கேண்டி'ஸ், கோக கோலா மற்றும் ஜில்லெட் ரேசர்கள். உங்களால் இதுபோன்ற தொழில்களை ஒரு சிறிய அளவில் செய்ய முடியுமா? இந்தக் கொள்கையை நீங்கள் ஒரு சிறிய அளவில் செயல்படுத்த முடியுமா?
  • "சரக்கு அல்லது பண்டக வியாபாரங்களை" தவிர்க்கவேண்டும், ஏனெனில் இது அனைத்தும் விலை தொடர்பானது, வியாபார சந்தைப்போட்டிகளில் ஈடுபட, உங்கள் வியாபாரத்தை காப்பற்ற மிகக்குறைந்த விலையில் நீங்கள் விற்க வேண்டி வரும் திரு பஃபே அவர்கள் கூறுவது போல், "சரக்கு அல்லது பண்டக வியாபாரத்தில் உங்களது அமைதியான போட்டியாளருக்கு ஈடான ஒரு சாமர்த்தியமே உங்களிடம் இருக்கும்.."
  • பெரும்பாலான சேவைத் வியாபாரத்தில் விலை ஆற்றல் உண்டு.
  • உங்களுக்கு தெரிந்த வியாபாரத்தை செய்வீர்களா அல்லது தெரியாத வியாபாரத்தை தெரிவு செய்வீர்களா?
  • நீங்கள் ஒரு பொருளை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், குறைந்த விலையில் உங்களுக்காக உற்பத்தி செய்து வரும் ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பதன் இலாப நட்டங்களை கணக்கிடவும். வேறு வகையில் கூற வேன்டுமென்றால்"ஒரு நிலையற்ற கோபரேசன் நிறுவனத்தை நடத்துவது.." ஒரு" நிலையற்ற நிறுவனம்"என்பது, உற்பத்தி மற்றும் பொதியிடல் ஆகியவற்றை வெளியாள் ஒப்பந்தத்திற்கு விடுவது.
கவனிக்கவேண்டிய விடயங்கள்
சான்றிதழ்
சோபியா கார்சியா
A-Z Glass Company
"இந்த வியாபாரத்தில் முன்னேற, நீங்கள் வேலையைப் பெற அனைத்தையும் செய்யுங்கள்."
Transcription - html

  • Impatienceபொறுமையின்மை
  • உங்களுக்கான வியாபாரத்தை கவனமாக தெரிவு செய்வதில் மூட நம்பிக்கை குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ளவும். எதிர்மறை அம்சங்களை கேட்பதில் அச்சப்படவேன்டாம். இவை பற்றி முன்கூட்டியே அறிந்து கொண்டு எதிர்கொள்வது நல்லது.
  • யதார்த்தமாக இருக்கவும். உயர்ந்த இலாபங்கள் என்ற கவர்ச்சியில் வீழ்ந்து விடவேண்டாம். அது நீங்கள் சரியான வியாபாரத்தை தெரிவு செய்து அதன் அனைத்து விடயங்களையும் புரிந்து கொண்டாலே நிகழும்.
தேவைப்படும் செயற்பாடுகள்
மீண்டும் ஒரு முறை எச்சரிப்பது நல்லது: மிகவும் பொதுவான ஒரு தவறு மற்றும் ஒரு விலைமதிக்கமுடியா தவறு என்பது ஆரம்பிப்பதற்கான சரியான வியாபாரத்தை தெரிவு செய்யாதது. உங்கள் தேடலுக்கு பொருத்தமான நேரம் இதுவே.
நீங்கள் வியாபாரம் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லையா? இதனைச் செய்யவும்:
ஒரு வெற்றுத் தாளின் மேல் பகுதியில் நீங்கள் விரும்பும் ஒரு வியாபாரம் நடவடிக்கையை எழுதுங்கள். (இதனை தலையங்கமாக வைத்துக் கொள்ளவும்). தனித்தனி பக்கத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் நடவடிக்கை பற்றி எழுதுங்கள்.
அதே தாள்களில் நீங்கள் எழுதியுள்ள உங்கள் நடவடிக்கைக்கு தொடர்பான வியாபாரங்களை பட்டியலிட்டுக் கொள்ளவும்.
இதே தாள்களில் உங்கள் நடவடிக்கைக்கு தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் பட்டியலிடவும். சாத்தியமாகக் கூடிய ஒவ்வொரு பொருள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை பட்டியலிட உங்கள் சிந்தனையை தூண்டி விடவும்.
மோசமான காலங்களில் சுமாராக ஓடும் வியாபாரம் பற்றிய பட்டியலை தயாரிக்கவும் (இதில் ஒன்று உங்களுக்கு பொருந்தும்). உதாரணத்திற்கு வெற்றிலைப்பாக்குக் கடை, தானியங்கி வாகன பழுது மற்றும் துணிக்கடை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உதாரணம்
உதாரணமாக நீங்கள் ஒரு 3 வியாபாரங்களை அடையாளம் கண்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்: கயிறு திரித்தல், பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை மற்றும் வாகனப் பழுது பார்க்கும் தொழில். இப்போது நீங்கள் கீழ்வரும் பட்டியலை வைத்து (அல்லதுஉங்களது பட்டியலுடன் கூட) மதிப்பிட்டு கொள்ளலாம். இதற்கு 1- 10 என்று புள்ளிகளையும் வழங்கலாம்.
குறிக்கோள்சணற் கயிறு
திரித்தல்
பயன்படுத்தப்பட்ட
கார்கள் விற்பனை
வாகனப்பழுது
பார்த்தல்

6310
விரிந்து கொண்டே செல்லும் தேவையை நான் பூர்த்தி செய்ய இயலுமா?8510
இதில் நிபுணத்துவம் பெற முடியுமா?7810
நான் அதனை கற்க முடியுமா? முதலில் சோதனை செய்ய முடியுமா?989
இது போன்ற பகுப்பாய்வு உங்களுக்கான வியாபாரத்தை தெரிவு செய்வதில் உங்கள் குறிக்கோளை அடைய உதவும்.
உங்கள் மனத்தில் குறிப்பாக உள்ள ஒரு வியாபாரத்தை எவ்வாறு மதிப்பிடுவது.
உங்கள் சிந்தனைகளை தெளிவு படுத்த உதவும் சில கேள்விகள் இதோ:
  • இது நான் மகிழ்ச்சியுடன் செய்யக் கூடியதா?
    எனக்கு பிடித்தமான நடவடிக்கைகள்: __________________________
    நான் இவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்: ________________________________
  • நெருக்கமான பதலீடு இல்லாத விரிவடைந்து கொண்டே செல்லும் தேவையை இது நிறைவேற்றுமா?
  • வாடிக்கையாளர்கள் இதற்கு நெருக்கமான பதிலீடு இல்லை என்று கருதும் ஒரு இலக்கு நிர்ணயித்த, சிறப்புப்பண்பு பெற்ற ஒன்றில் நான் சிறந்து விளங்க முடியுமா?
  • மூலதனத் தேவைகளை என்னால் கையாள முடியுமா?
  • முதலில் வேறு ஒருவரிடம் பணியாற்றி நான் இந்த வியாபாரத்தை கற்றுக் கொள்ள முடியுமா?
  • தொழிற்சாலை மற்றும் தேவைப்படும் குறைந்த பட்ச ஊழியர்கள் இன்றி நான் ஒரு நிரந்தரமற்ற நிறுவனத்தை நடத்த முடியுமா? ("நிரந்தரமற்ற நிறுவனம்" என்பது, ஒரு வியாபாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் வெளியார் ஒப்பந்தத்திற்கு "அவுட் சோர்ஸ் செய்வது," அதாவது உற்பத்தி மற்றும் பொதியிடலை ஆகியவற்றை துணை ஒப்பந்தத்திற்கு விடுவது. )
  • நான் முதலில் சோதித்துப் பார்க்கக்கூடிய பொருள் அல்லது சேவை இதுவா?
  • என்னுடைய திறனுக்கு உதவி புரியக்கூடிய திறனுடைய பங்காளர் அல்லது வியாபாரத்திற்கு நிதியளிக்கும் பங்காளியை நான் பரிசீலிக்க வேண்டுமா?
என்ன வியாபாரம் செய்ய வேன்டும் என்று முடிவு செய்த பிறகு இவற்றைச் செய்யவும்:
வியாபாரத்தின் சிறப்பம்சங்கள் குறித்த "சாதக" மற்றும்"பாதக" பட்டியலை தயாரிக்கவும். ஒரு காகிதக்தை அடுத்தடுத்து உள்ள இரண்டு பத்திகளாக கோடிட்டு பிரித்துக் கொண்டு, ஒரு பக்கம் "சாதகங்களையும்" மறு பத்தியில்"பாதகங்களையும்" பட்டியலிடவும். இது பல சமயங்களில் உங்கள் சிந்தனையை தெளிவு படுத்தும்.
நீங்கள் தெரிவுசெய்துள்ள பிரிவில் வெற்றிபெற்ற குறைந்தது 5 வியாபாரங்களின் பெயர்களை எழுதவும். இந்த ஐந்து வியாபாரங்களிலும் உள்ள பொது அம்சங்களை ஆராய்ச்சி செய்து அவை வெற்றியடைந்ததற்கான காரணங்களை பட்டியலிடவும்.
செய்யவிருக்கும் வியாபாரம் குறித்து பலரிடம் கலந்துரையாடுங்கள் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வியாபாரம் பற்றிய எதிர்மறை அம்சங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். மாறாக அதன் ஆபத்துக்களை இப்போதே, வியாபாரம் தொடங்கிய பிறகு அல்லாமல், காணவும். தகவல்களை உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். தகவல்களை விரைவிலேயே எழுதிக் கொள்ளவும்.
வெற்றியடையாத போட்டி முறைகளை ஆராய்ச்சி செய்யவும் மேலும் காரணங்களை எழுதவும்.
முழுமையாக தகுதி பெறவும்.
ஆரம்பிப்பதற்கு முன்னரே முழுமையாக தகுதி பெறவும்:
  • தகுதி பெற சிறந்த வழி இதே வியாபாரத்தில் உள்ள ஒருவருடன் வேலைக்குச் செல்வதாகும்.
  • உங்களுக்குத் தேவையான பாடங்களில் வகுப்புகள் அனைத்திலும் பங்குபெறுக. உதாரணமாக: கணக்குப்பதிவியல், கண்னி மற்றும் விற்பனை.
  • இதற்குப் பொருத்தமான அனைத்து நூல்களையும் வாசிக்கவும்.
  • நீங்கள் செய்யவிருக்கும் வியாபாரத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடம் கேள்வி கேட்கவோ, உதவி கோரவோ தயங்க வேண்டாம்.
முடிவெடுக்கும் நேரம்:
உங்களுக்கு பணம் மற்றும் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும் விதமாக என்ன விற்பனை செய்யமுடியும், எந்த சேவையை செய்ய முடியும்?
இந்த அமர்வை நிறைவு செய்ய, நீங்கள் ஒரு வியாபாரத்தை அல்லது உங்களுக்கு சிறந்தது என்று நீங்கள் முடிவு செய்த வியாபாரத்தை தேர்வு செய்வதில் நீங்கள் முடிவு செய்திருக்கவேண்டும். அடுத்த பதினொரு அமர்வுகளில் அதியுச்ச பயன்களை அடைய ஒரு தெளிவான திட்டத்தை நீங்கள் வந்தடைந்திருப்பது அவசியம். உங்களுக்கான வியாபார திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை இரண்டாம் அமர்வு உங்களுக்கு எடுத்துரைக்கும்.
அமர்வு 1 வினா-விடை: ஒரு வியாபாரத்தை தீர்மானித்தல் செய்க.
  1. ஒரு வெற்றிபெற்ற தொழில்முனைவோராக, கீழ்வரும் செயற்பாடுகளில் எதனை எப்போதும் செய்யவேண்டும்?
    1.  உங்கள் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் இந்தச் சிக்கலில் ஈடுபடுத்த நீங்கள் தயாராயிருக்கவேன்டும்.
    2.  ஆரம்பிக்கும் முன் வேலையை விட்டு விட திட்டமிடவேண்டும்.
    3.  நீங்கள் பெரிதும் விரும்பும் ஒரு துறையிலிருந்து ஒரு வியாபாரத்தை தேர்வு செய்யவும்.
    4.  நிறைய பணம் செலவழிக்க தயாராக இருக்கவும்.
  1. தொழில் முனைவோர்கள் செய்யும் பொதுவான மற்றும் மிகப்பெரிய தவறு போதுமான பணம் இல்லாமல் இருப்பது.
    1.  True
    2.  False
  1. கீழ் வருவனவற்றில் ஒரு பகுதி நேரத் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு சரியான காரணமாக எது இல்லை?
    1.  உங்கள் வியாபாரத்தை தொடங்கிய பிறகும் கூட உங்கள் வருமான வழிகளினை நீங்கள் தகர்க்க வேண்டியத் தேவையில்லை.
    2.  குடும்ப உறுப்பினர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்த முடியும்.
    3.  நீங்கள் பார்க்கும் வேலையிலேயே உங்கள் வியாபாரத்துக்கான நேரமும், உபகரணமும் உள்ளது.
    4.  இணையதளங்கள், பேஜர்கள், தொலை நகல் எந்திரங்கள் உள்ளடங்கிய புதிய கருவிகள் வீட்டிலிருந்தபடியே மின் - வர்த்தகம், நேரடி விற்பனைத் தொழில், மற்றும் தனித்த தயாரிப்புகள் உள்ளடங்கிய தொழில்களை செய்ய ஏதுவாயிருப்பது.
    5.  பகுதி நேர வியாபாரம் நிரூபிக்கப்பட்டு வெற்றிபெற்று விட்டது என்றால், நீங்கள் பார்க்கும் வேலையை அந்த நேரத்தில் விட்டுவிட்டு முழு நேர தொழில்முனைவோராக நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
  1. ஒரு வியாபாரத்தை தெரிவு செய்ய நீங்கள் ஒரு முழுமையான வழிகாட்டிகளை தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், கீழே தரப்பட்டுள்ள பதில்களில் எந்த ஒன்று சிறந்த முடிவாக இருக்கும்?
    1.  உங்களுக்கு இரண்டு தெரிவுகள் கண்முன்னே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு வியாபாரம் வெற்றிபெறுவதற்கு மிகவும் சவாலானது; மற்றொன்று நீங்கள் ஊதித் தள்ளக்கூடியது. நீங்கள் சவாலனதை தேர்வு செய்வீர்கள்.
    2.  உங்களுக்கு வயதாகிகொண்டே இருக்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், ஏதோ ஒரு வியாபாரத்தில் நேரடியாக குதித்து, எதோ ஒன்றை துவங்கி, என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவது என்கிற முடிவு ஒரு மிகப்பெரிய வழிமுறை.
    3.  ஏற்கனவே உங்களுக்கு அனுபவம் உள்ள ஒரு வியாபார, அல்லது புதிதான துறையில் நுழைந்து புதிய தொழிலை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளில் நீங்கள் புதியதொன்றை தெரிவு செய்வீர்கள்.
    4.  ஒரு மிகப்பெரிய வாய்ப்பை நாட உங்கள் இனிய நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள்.
    5.  ஒரு நிர்வாண பொம்மைகள் விற்பனை மையத்தில் ஒரு பொம்மை விற்பனைக் கடையை நீங்கள் ஆரம்பிக்க எண்ணம் கொண்டிருந்தீர்கள் என்றால், நடப்பது நடக்கும் என்று இறங்கி விடுவீர்கள்.
  1. எந்த ஒரு பெரிய கடுமையான விதிமுறைகள் இல்லையென்பதை உணர்ந்த பிறகு, பொதுவாகக் கூறப்போனால், கீழ்வரும் வியாபாரத்தில் சுலபமாக ஆரம்பிக்க கூடியதும், நல்ல விலை ஆற்றல் உள்ளதுமான வியாபாரம் எது?
    1.  சொந்த பெட்ரோல் நிலையம் ஒன்றை நடத்துவது
    2.  நீங்கள் நினைத்தபடி உணவுப் பண்டங்களை விற்பனை செய்வது.
  1. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் ஆரம்பிக்க விரும்பும் வியாபாரத்திற்கு தகுதி பெறுவதற்கு சிறந்த வழி என்பது:
    1.  அந்தத் வியாபாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடம் கலந்துரையாடுவது.
    2.  "சாதகம்" மற்றும் "பாதக" விடயங்களை பகுப்பாய்வு செய்தல்.
    3.  பனிரெண்டு மாதங்களுக்கான வழக்க முறையைச் சார்ந்த இருப்பு நிலை அறிக்கை, வருமானஅறிக்கை, நிதி நிலைமைத் திட்ட வரைவு ஆகியவற்றை செய்யவும்.
    4.  அதே வியாபாரத்திலுள்ள வேறொருவரிடம் வேலைசெய்யுங்கள்.
    5.  உங்கள் கணக்குப்பதிவாளர், வங்கி, வழக்கறிஞர், மற்றும் காப்புறுதி முகவர் ஆகியோரது ஒட்டு மொத்த கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து பார்க்கவும்.
  1. "நிரந்தரமற்ற நிறுவனத்தினை" ஆரம்பிப்பது என்பதன் பொருள்:
    1.  சொத்துக்கள் இல்லாத ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது.
    2.  மறைக்கனிய நிகர பெறுமதியுள்ள நிறுவனத்தை தொடங்குவது.
    3.  செயற்பாட்டு ரீதியான வியாபாரம் இல்லாத, குறிப்பிடத்தக்குந்த அளவில் சொத்துக்கள் இல்லாத ஒரு ஷெல் கோப்பரேஷனை வாங்குவது
    4.  அனைத்து நடவடிக்கைகளையும் வெளி ஒப்பந்தத்திற்கு (உற்பத்தி மற்றும் பொதியிடல்) விடும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தல்
  1. ஒரு இரும்புச்சாமான்கள் விற்பனை கடையினை ஆரமபிப்பது உங்களது கனவாக இருந்து வந்துள்ளது, ஆனால் ஆரம்பிக்க தயாரான நிலையில் உலகம் முழுதும் உள்ள ஹோம் டெப்போக்களுடன் போட்டிபோடுவது கடினம் என்பதை உணர்கிறீர்கள், நீங்கள் செய்யவேண்டியது:
    1.  அதே இரும்புச் சாமான்கள் விற்பனைத் துறையில் நீங்கள் நிபுணத்துவம் பெறக்கூடிய ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றிபெற்ற பிரிவை கண்டுபிடியுங்கள்.
    2.  வேறொரு வியாபாரத்தை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
    3.  ஒரு "மிகப்பெரிய" இரும்புச்சாமான்கள் வியாபாரியிடம் வேலைக்குச் சேர்ந்து, நீங்கள் தனித்துவமாக பூர்த்தி செய்யக்கூடிய தேவைகள் ஏதும் இருக்கிறதா என்பதை அறியவும்.
    4.  மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும்
  1. தோல்விக்கு வழியமைக்கும் அடிக்கடி செய்யக்கூடிய ஒரே தவறு என்ன?
    1.  தெரிவு செய்த வியாபாரத்தில் அனுபவமின்மை
    2.  பற்றாக்குறை முதலீடு
    3.  ஆரம்பிப்பதற்கு சரியான வியாபாரத்தினை தெரிவு செய்யாதது.
    4.  கணக்குப்பதிவியல் துறையில் போதிய அறிவின்மை
    5.  போட்டி குறித்து அறியாதது.
  1. சேவை நோக்கமுள்ள ஒரு வியாபாரத்தில் மவுனப் போட்டியாளரைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
    1.  True
    2.  False

Thursday, September 3, 2015

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
அறிமுகமற்ற அழைப்புகள் என்பவை, உங்களை யாரென்று தெரியாத வாடிக்கையாளர்களிடம், தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் செல்வது மூலமாக விற்பனை செய்ய முயற்சி செய்வதாகும். அறிமுகமற்ற அழைப்புகளின் நோக்கம், வாடிக்கையாளரின் வலிமையைப் பற்றிய தகவலைச் சேகரிப்பது ஆகும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக்கூறுவது, மற்றும் சில நேரங்களில், அவர்களைச் சந்திக்க அனுமதி வாங்குவது ஆகியவை ஆகும். அறிமுகமற்ற அழைப்புகளில் சில சவால்கள் உள்ளன, அவை: ஐயம், கடந்தகால உதவியாளர்களைச் சந்திப்பது, செயலாளர்களைச் (secretaries) சந்திப்பது, மற்றும் பிற வாயில் காப்பாளர்களைச் சந்திப்பது, சரியான நபர்களைக் கண்டறிவது, விற்பனைச் செயல் முறையை விரைவாக நிறைவு செய்ய உதவும் தளத்தைக் கண்டறிவது ஆகியவை.
இந்த சவால்களை முறியடிக்க, பின்வரும் தகவல் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
சற்றும் "அறிமுகமற்ற" தன்மை கொண்ட அறிமுகமற்ற அழைப்புகளைத் தவிர்க்கவும்.
உங்கள் நடப்பு வாடிக்கையாள்களிடம் இருந்து மேற்குறிப்புகளைப் பெறுங்கள், பின்னர், அந்த நபர்களிடம் பேசுங்கள், இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அறிமுகமற்ற தன்மை சற்றுக் குறையும். உங்கள் வாடிக்கையார்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பெயர் மற்றும் இலக்கங்களைக் கேட்காமல், அவர்களே அதைக் கூறும் வகையில் அவர்களிடம் உரையாடுங்கள். உதாரணமாக, நீங்கள் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு காப்பீடு வாங்கும் ஆர்வம் இருப்பது தெரிந்த ஒருவர் பெரும்பாலும், அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அந்த நேரத்தில் யாரைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்பது பற்றியும் அவரது நண்பர்களுக்கும் குழந்தைகள் இருகிறார்களா என்பது போல கேட்கும்போது, அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும் எதிர்காலத் திட்டமிடும் அவசியம் இருந்தால் அவர்களைப் பற்றிக் கூறலாம் என உணர்வார்கள்.
இப்போதே செய்யுங்கள்
விற்பனை அழைப்புகளைச் செய்ய நீங்கள் எப்போதும் தயாராகப் போவதில்லை, ஆகவே, சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் ஐயம் எப்போதும் இல்லாமல் போகாது, ஏனெனில், நீங்களாகவே ஒருவரை அழைத்து, அவர்கள் உங்களிடம் பேச மறுப்பதை எதிர்கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆகவே, தள்ளிப்போட வேண்டாம் காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக, இப்போதே செய்துவிடுங்கள்.
வெளிப்படையாக இருங்கள்
நீங்கள் ஒரு காவலாளி, ஒரு உதவியாளர் அல்லது தொலைபேசியில் எதிர்பார்ப்பவர் ஆகிய எவரைச் சந்தித்தாலும், வெளிப்படையாக எதற்கு நீங்கள் அழைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் அழைப்பின் அவசியத்தைக் குறிப்பிடுங்கள். நேர்மையாகவும் விவரமாகவும் இருங்கள். அழைப்பது எதற்கு என்று கூறுவது, சரியாக இல்லாவிட்டால், மக்கள் உங்களைத் தவிர்க்கலாம், அல்லது சந்தேகப்படலாம். பேசுவதற்கு இது சரியான நேரம்தானா எனக் கண்டறியுங்கள் – அதிக தகவலைக் கொடுங்கள், அப்படி முடியாவிட்டால், பின்னர் மீண்டும் அவர்களை எப்போது அழைக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.
விரைவில் மற்றும் தாமதமாக அழையுங்கள்
உதவியாளர் தொலைபேசியை எடுப்பதால், செயலாளர் பதிலளிப்பதால் அல்லது அழைக்கும்போதெல்லாம் குரல் அஞ்சல் பதிலளித்தால், ரு சிலரைத் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தால், வழக்கமற்ற நேரங்களில் அழையுங்கள். நாம் எதிர்பார்ப்பவர், காலை 8.00 மணி அல்லது மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே தானாகவே தொலைபேசியை எடுக்கலாம். மேலும் அவர்கள் தளர்வாகவும் பேசுவதற்கு நேரத்தோடும் இருப்பார்கள், ஏனெனில், இப்போது அவர்கள் 9 –இலிருந்து 5 வரை இருக்கும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. நேரடியாகவே விற்பனை அழைப்புகளைச் செய்தால், வழக்கமற்ற நேர அழைப்புகளைச் செய்ய, காலையை விட மாலை நேரம் சிறந்தது.
மக்கள் மீண்டும் உங்களை அழைப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.
அவர்கள் உங்களை அழைக்க காத்திருக்கக்கூடாது. அவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூட அவர்கள் அழைக்காமல் போகலாம். அவர்கள் மீண்டும் உங்களை அழைப்பதாகக் கூறினால், அப்படியே செய்வார்கள் என நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் மமதையை தள்ளிவிட்டு நீங்களே அவர்களை அழையுங்கள். அப்படிச் செய்யும் போது, இனிமையாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களை மீண்டும் அழைக்காததால், நீங்கள் எவ்வளவு வெறுப்படைந்திருந்தாலும் பரவாயில்லை.
மனிதனாக நடந்துகொள்ளுங்கள்
விற்பனையாளர்கள் பொதுவாக அவர்கள் சொல்வதை மூச்சு கூட விடாமல் சொல்லிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். இப்படிச் செய்யாதீர்கள். அது இயல்பாக இருக்காது, மற்றும் உதவாது. மக்கள் அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடமிருந்தே வாங்குவார்கள், அவர்களையும் அவர்களுடைய வியாபாரத்தையும் புரிந்து கொள்பவர்களிடம் இருந்தே வாங்குவார்கள். நீங்கள் அணுகுபவர்களை, பல கேள்விகளைக் கேட்டு பதில் பெறுங்கள், அவர்களிடம் உண்மையாகவே ஆர்வம் கொண்டிருங்கள்.
குறைவாகப் பேசுங்கள், அதிகம் பேசாதீர்கள்
நீங்கள் அணுகுபவர்களின் தேவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க, அறிமுகமற்ற அழைப்புகளைப் பயன்படுத்துங்கள். அந்த நபர் உங்களிடம் பேச, நீங்கள் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைக் பற்றிய அதிகமான தகவல்களை நிச்சயம் வழங்க வேண்டும். ஆனால் அதிகமாகப் பேசாதீர்கள். நீங்கள் அணுகுபவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியாமல், நீங்களாக பேசிக்கொண்டே இருந்தால், அவர் வெறுப்படைவார். நீங்கள் அணுகுபவரை, அவரது சிக்கல்கள் மற்றும் தேவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்டு (நீங்கள் இந்த கேள்விகளை ஏற்கனவே எழுதி வைத்துக் கொள்ளலாம்) அவர்களின் பதில்களைக் கூர்ந்து கவனியுங்கள். பின்னர், அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உதவும் தயாரிப்பின் நன்மை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுக் கூறுங்கள். நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்
ஒருவர் உங்களை, எழுத்து தகவலை அனுப்ப வேண்டினால், அவரிடம் நேரில் சென்று 15 நிமிடம் விளக்கமாகக் கூறலாமா எனக் கேளுங்கள். இந்த முறை அவர்களுக்கு, உங்கள் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக செயல்திறனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் தகவல்களைச் சிறப்பாகப் பெறலாம், மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிக்கலாம். மேலும், ஒருவரைச் சந்திக்கும் போது, அவர்களிடம் இனிமையான குணத்தோடு பழகுங்கள், இதனால், அவர் உங்களையும் அவர் உங்கள் தயாரிப்பை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவில் வைத்திருக்க உதவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மந்திர தியானம் செய்முறை

மந்திர தியானம் செய்முறை -
மந்திர தியானத்துக்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது "ஓம்". பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் "மாராநாதா" என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
புத்த மதத்தில் "ஓம் மணி பத்மே ஹம்" என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு சிலர் "சோ-ஹம்" என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப்
பயன்படுத்தும் போது "சோ ஹம்" என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.
மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.
மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான். இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்துக்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்துக்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.
இனி மந்திர தியானம் செய்யும் முறையைப் பார்க்கலாம். சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
1) ஓர் அமைதியான இடத்தில் சாந்தமாக அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும்.
3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனத்துக்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனத்துக்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.
5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்துக்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்துக்கே கொண்டு வாருங்கள்.
6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம் மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.
7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூடஅந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.
8) தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராக இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில்ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.
9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.
10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்துக்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்க்ள்.
தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.




Wednesday, September 2, 2015

பணம் பெற ஒரு எளிய சக்தி வாய்ந்த முறை

பணம் பெற ஒரு எளிய சக்தி வாய்ந்த முறை
இந்த கீழ்க்கண்ட முறை யாம் கொடுத்து பலரால் பரீட்சிக்கப்பட்டு வெற்றி கண்ட முறையாகும். இது போன்று பிரத்தியேகமாக பல முறைகள் நம் சென்டரில் பல் வேறு விஷயங்களுக்கும் கொடுத்து வருகிறோம்.
இதை வெள்ளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் செய்யலாம். வீட்டில் மணி ப்ளாண்ட் செடி இருந்தால்(இல்லாவிட்டால் வாங்கவும்) அதில் சுத்தமான சந்தனம் சிறிது எடுத்து சுத்தமான பன்னீரில் கரைத்து செடிக்கு விடவும். பின்பு சில பன்னீர் ரோஜா செடியின் இலைகளை கையில் வைத்தவாரே, வடக்கு நோக்கி நின்று கண்கள் இரண்டையும் மூடியவாறு மிகுந்த அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும் கீழ்க்கண்ட மிகுந்த சக்தி கொண்ட மந்திர வார்த்தையை 108 முறை கூறவும். இதை 43 நாட்கள் தொடரவும். பணம் பல வழிகளில் வருவதை கண்கூடாக காணலாம்.
“ஏராளம் எண்ணிக்கை மிகுதியுடன் என்னுள்ளே இறங்குவதை காண்கின்றேன்”
மேற்கண்ட வசீகர சக்தியுள்ள வார்த்தைகளை கூறிமுடித்ததும் கண்களை திறந்து, வேலைகளை தொடரலாம். அன்று முழுதும் மிகுந்த நேர்மறை சக்தியுடன் நாள் நகருவதை நிச்சயமாக உணரலாம். செய்து பயன் அடையுங்கள். அனுதினமும் முதல் நாள் சிஎத அதே நேரத்தை கடைபிடித்தால் வெகு சீக்கிரம் பயன் அடையலாம்.

Thursday, August 20, 2015

பணத்தை பெற இதோ மந்திரம் !

பணத்தை பெற இதோ மந்திரம் !
from - www.happy4all.org

மனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம். ஆனால் இன்று அந்த தூயக்காற்றை கூட விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் காற்றை வாங்க காசு தேவை. ஆக, மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாக பணம் இருக்கிறது. கைநிறைய பணம் இருந்தால் அதை சில மணிநேரங்களிலேயே மிகச்சுலபமாக செலவும் செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக பெறுவதற்கு இரத்தத்தை சிந்த வேண்டி இருக்கிறது. சிலருக்கு மிக சுலபமாக பணம் கிடைக்கிறது. பலருக்கு பல்லக்கு தூக்கி பாடுபட்டாலும் பணம் கிடைப்பதில்லை. மனிதன் பணத்தை பெற சுலபமான வழி இருக்கிறதா?
வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால் கூட அதை விழுங்குவதற்கு சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டும். சிரமம் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே கிடைக்காது. எனவே எப்போதும் சுலபமான வழியில் பணம் கிடைக்கவே கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நேற்று வரையில் ஓட்டை குடிசையில் இருந்தானே இன்று திடீரென்று சொந்த காரில் பயணம் செய்கிறானே அவன் பாடுபட்டா பணத்தை சேர்த்திருப்பான்? எப்படியோ செய்யக்கூடாததை செய்து, சேரக்கூடாததை சேர்த்து சம்பாத்தித்திருக்க வேண்டுமே தவிர பாடுபட்ட வழியில் பெற்றிருக்க முடியாது என்று பலரும் பேசுகிறோம். இது தவறு. நேற்றுவரை என்ற வார்த்தை ஒரு மனிதனை வெளிப்புறமாக வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்ததை வைத்து சொல்லப்படுவது ஆகும். அதற்கு முன்னால் அவனுக்குள் என்னென்ன நடந்தது, எந்த வகையில் அவன் அறிவு வளர்ந்திருந்தது, மெளனமாக அவன் செயல்பட்டது எப்படி? என்பதை நாம் அறிய மாட்டோம்.
அறியாமல் பேசுவது தவறு. ஒரு மனிதனுக்கு தொழில் செய்வதனால் மட்டும் பணம் வந்துவிடப்போவது கிடையாது. தொழில் செய்வதற்காக அவன் எந்த வகையில் தன்னை நெறிப்படுத்தி கொள்கிறான். தனக்கென்று சுயக்கட்டுப்பாடுகளை வகுத்து கொள்கிறான். மற்றவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு பணத்திற்கான யோகம் அமைகிறது எனலாம். மற்ற நாடுகளை விட நம் நாட்டு பெரியவர்கள் பணம் பெறுவதற்கு வெளிப்படையான முயற்சிகளையும் உள்முகமான ஒழுக்கங்களையும் மிக அதிகமாக சொல்லி சென்றிருக்கிறார்கள். அவற்றை கடைபிடித்தாலே கண்டிப்பாக செல்வ வளம் கிடைக்கும்.
நமது முன்னோர்கள் பணம் பெறுவதற்கு கூறிய வழிகளை நீங்கள் சொல்ல இயலுமா?
ஒரு நாளின் துவக்கம் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் மனிதனுக்கு நாள் என்பது சூரிய உதயத்திற்கு முன்பே துவங்கி விடுகிறது. ஆம். அவன் அதிகாலையில் கண்விழிக்க வேண்டும். தொழில் நிமித்தம் இல்லாது வேறு எந்த காரணத்தினாலும் சூரிய உதயம் வரையில் படுக்கையில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழில் நிமித்தம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைய வேலைகள் பல விடியற்காலை நேரத்தில் தான் முடிகிறது. அப்படிப்பட்ட வேலை செய்பவனை ஐந்து மணிக்கு எழுந்துகொள் என்றால் அது அவனை கொலை செய்வதற்கு சமமாகும்.
அடுத்ததாக காலை எழுந்தவுடன் கண்விழித்து தன் முகத்தையோ, தாயின் முகத்தையோ, மனைவியின் முகத்தையோ பார்க்க வேண்டும். அது இயலாத போது தனது உள்ளங்கையை பார்க்கலாம் அல்லது இஷ்ட தெய்வத்தின் உருவத்தை காணலாம். இது இல்லாமல் வேறு பொருட்களை, வேறு மனிதர்களை தினசரி பார்த்தால் மனதளர்ச்சி ஏற்படும். படுக்கையில் இருந்து இறங்கும் போது வலது காலை பூமியில் ஊன்றி இறங்கவேண்டும். அப்படி இறங்கும் போது குலதெய்வத்தின் பெயரையோ, இஷ்ட தெய்வத்தின் தோத்திரத்தையோ, மகாலஷ்மி அல்லது விநாயகர் மந்திரங்களையோ சொல்ல வேண்டும்.
ஆண்களாக இருந்தால் செவ்வாய்கிழமையும், பெண்களாக இருந்தால் சனிக் கிழமையும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. தலைமுடி குறைத்த பின்போ முகச்சவரம் செய்த பிறகோ, உடனடியாக தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது. கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து நின்று குளிக்க வேண்டும். எப்போதும் பிறந்தமேனியாக குளிக்க கூடாது. இடது கையை தரையில் ஊன்றியோ, சாதத்தை உருட்டியோ, இலையை அல்லது உணவுத்தட்டை வழித்தோ சாப்பிடக்கூடாது. பகல் வேளையில் பால்சாதமும், இரவுவேளையில் தயிர்சாதமும் கூடவே கூடாது. கிரகணம் அன்று தாம்பத்திய உறவோ, மெத்தையில் படுக்கையோ கூடாது. புதிய ஆடைகளை ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே அணிய வேண்டும். திருமணம் ஆன பிறகு தகுந்த காரணம் இல்லாமல் நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மேல் முடி வெட்டாமல் இருக்க கூடாது. நகத்தை கடிக்க கூடாது இரவில் நகம் வெட்டக்கூடாது. மற்றவர்களின் உடை, செருப்பு, சாப்பிடும் பாத்திரம் இவைகளை பயன்படுத்தக்கூடாது.
தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசி பிழியும் போது உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முறத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும். எச்சில் கையால் தலையை தொடக்கூடாது. நகம், முள், கரித்துண்டு, சாக்பீஸ், இரத்தம் இவற்றால் தரையில் எழுதக்கூடாது, கோலம் போடக் கூடாது. அசுத்தமாக இருக்கும் போது சூரியனையோ, சந்திரனையோ நேருக்கு நேராக பார்க்ககூடாது. பகல் நேரத்தில் கணவன்-மனைவி இணையக்கூடாது. உடைந்து போன நாற்காலிகளை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பமான மனைவி உள்ள கணவன் கடலில் நீராடக்கூடாது. அமாவாசை அன்றும், வெள்ளிக்கிழமை அன்றும் எல்லா நாட்களிலும் காலை, இரவுகளில் நெல்லிக்கனியை உண்ணக்கூடாது
சுடுகாட்டில் எரிந்த கரி, சுடுகாட்டு எலும்பு, நெருப்பு, பருத்தி விதை, பசு, உமி, திருநீறு, குரு, பிராமணர் இவற்றில் (இவர்களின் மீது) கால்படக்கூடாது. சமுத்திரம், பாம்பு புற்று, கோவில் தேர் போன்றவற்றில் சிறுநீர் கழிக்ககூடாது. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தலையை சொரியக்கூடாது, தேன் கூடு, குருவிக்கூடு, கர்ப்பப்பை சிசு போன்றவற்றை கலைக்ககூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இவைகளை செய்தால் மனிதர்களின் எண்ணங்கள் கெடுதியாகி தரித்திரம் மேலோங்கும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். மேலும் ஆட்டுக்காலிலிருந்து கிளம்புகிற தூசு, கழுதை கிளப்புகிற புழுதி, அதிர்ந்து நடக்கும் பெண்களின் கால்களிலிருந்து கிளம்பும் புழுதி, போன்றவைகளும் குடும்பத்தை வறுமைப்பிடியில் தள்ளும் என்பது அவர்களின் கருத்தாகும்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னீர்கள். எதை செய்தால் செல்வம் பெருகும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களை பணம் வைக்கும் இடத்தில் தினசரி புதிதாக வைக்க வேண்டும். வலம்புரி சங்கை ஓசை வரும்படி பூஜையறையில் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் கணபதி, மகாலஷ்மி, வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்களின் உருவங்களை அல்லது சின்னங்களை வைக்க வேண்டும். மாதத்தில் ஒருமுறை சிறந்த பிராமணருக்கும், வாரத்தில் ஒருமுறை இயலாத            பிச்சைக்காரனுக்கும், தினமும் ஒருமுறை எறும்புக்கும் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் துளசி, மல்லிகை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். சாளக்கிரமம், ருத்ராட்சம், பாதரசம், தாமரைப்பூ, பசுஞ்சாணம் இவற்றில் எதாவது ஒன்று வீட்டில் தினசரி இருக்க வேண்டும்.
இது தவிர செல்வம் பெருக ரகசிய வழிகள் ஏதாவது உண்டா?
நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும்.
மேலும் வெள்ளிக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தில் சுக்கிர ஓரையில் வில்வம், துளசி, செந்நாயுருவி போன்ற வேர்களை முறைப்படி காப்புக்கட்டி எடுத்து வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக்கொண்டாலும் சித்தர்கள் கடைபிடிக்கிற ஜோதிப்புல் சூரணத்தை வீட்டில் வைத்துக்கொண்டாலும் மிக கண்டிப்பாக பணத்தட்டுபாடு இருக்காது. பணத்தை நம்மை நோக்கி ஈர்க்க செய்யும் குருபரம்பரை வழியான மந்திரங்களும் உண்டு. அவற்றை இங்கே பகிரங்கமாக சொல்ல இயலாது. ஆனால் அவைகள் மிகவும் வீரியம் உள்ள மந்திரங்கள். நீங்கள் இங்கு சொல்லப்பட்டதை கடைப்பிடித்து பாருங்கள். இது  பெரிய கோடீஸ்வரர்களாக நீங்கள் ஆகவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கடன் இல்லாமல் விரும்பிய பொருளை வாங்கி அனுபவிக்கும் பேறு பெற்றவர்களாக இருப்பீர்கள். இப்போது நான் சொன்னது எதுவும் பெரிய கடினமான வேலைகள் அல்ல. ஆனால் இதையும் கூட பலரால் செய்ய முடிவதில்லை…