Showing posts with label motivation trainer in tripur. Show all posts
Showing posts with label motivation trainer in tripur. Show all posts

Sunday, July 26, 2015

ஸ்ரீரங்கம் கோயிலில் புதையுண்ட யானை சிலை...

ஸ்ரீரங்கம் கோயிலில் புதையுண்ட யானை சிலை...! - www.v4all.org

கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சில மாதங்களாக கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தொல்லியல் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் பூசுவது, கோயில் சிற்பங்கள், மண்டபங்களை புதுப்பிப்பது என வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலில் பல இடங்கள் சுமார் ஏழு அடிக்கும் மேலாக மண்ணால் மூடப்பட்டு இருந்தது. 

அனைத்தையும் தொல்லியில் துறையின் துணையோடு ஶ்ரீரங்கநாதர் கோயில் அப்புறப் படுத்தியுள்ளனர். அப்போது மண்ணில் புதையுண்ட யானை சிலை, தேர் சிற்பங்களில் தேரின் சக்கரங்கள் என பல சிற்பங்கள் வெளிவந்திருக்கின்றன...இதுவரை சுமார் 80 சதவிகித பணிகள் முடிவடந்து விட்டதாகவும் அனைத்து வேலைகளையும் நமது பாரம்பரிய முறைப்படியே சுண்ணாம்புக் கலவைகள் கொண்டு நடைபெறுவதாகவும்  அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் பாலாலயம் செய்து கும்பாபிஷேகத்திற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிடலாம் எனவும் கோயில் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..

திருப்பணி வேலைகளின்போது புதையுண்ட  சிற்பங்கள் போலவே சந்நதிகளுக்கு பின்னால் சில காலியான அறைகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீரங்கம் கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

பூ லோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கம் ஆலயத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப் பெற்ற வைணவத் தலம் இது மட்டுமே. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்.

 உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங் கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும்.

 ஒரு முறை கங்கை, காவிரி, யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள், இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன், இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே, ‘கந்தர்வன் வணங்கியது தன்னையே!’ என்று நதிக் கன்னியர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாதிட்டனர். இது வீண் விவாதம் என்றுணர்ந்த சிலர் விலகிக் கொள்ள... காவிரியும், கங்கையும் மட்டும் விவாதம் தொடர்ந்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர், ‘‘கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள் ஆதலால் அவளே பெரியவள். கந்தர்வனின் வணக்கம் அவளையே சாரும்!’’ என்றார். இதனால் வருந்திய காவிரி, தான் கங்கையை விட மேன்மை நிலை பெற வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்த பகவான் அவள் முன் தோன்றி, ‘‘எதிர்காலத்தில் நான் உன் மடியில் சயனிப்பேன். அப்போது நீ கங்கைக்கு மேற்பட்டவளாவாய்!’’ என்றருளினார்.

அதன்படியே பிற்காலத்தில் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.

 திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது.

 பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு.

 இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது  வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர்.

 திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

 பங்குனி மாதம், வளர்பிறை, சப்தமி திதி, சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங்கன் இங்கு வந்து சேர்ந்தார்.

பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து, பாற்கடலிலிருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இக்ஷவாகு மன்னர் தன் குல தெய்வ மாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார். இக்ஷவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில் தன் அரசான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக பிரதிஷ்டை செய்ததாக ரங்க மகாத்மியம் கூறுகிறது.

 தர்மவர்மனின் காலத்துக்குப் பிறகு ஒரு முறை காவேரியில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக ஸ்ரீரங்கத்தில் கோபுர உச்சி வரை மணல் மேடிட்டு மூடி யது. காடுகள் உண்டாகி ஸ்ரீரங்கம் கோயிலும், அதன் பிராகாரங்களும் புதைந்தன.

ஒரு நாள்... சோழ மன்னன் ஒருவன் வேட்டையாட வந்து, ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான். அப்போது மரத்தின் மேலே இருந்து ஒரு கிளி, ஸ்ரீரங்க விமானத்தைப் பற்றியும் ரங்கநாதப் பெருமாளைப் பற்றியும் (ஸ்லோகமாகச்) சொன்னது.
அதைக் கேட்டு வியந்த மன்னன் ஆட்களைக் கொண்டு அங்கே தோண்டிப் பார்த்தான். பலனில்லை. அன்றிரவு அவன் கனவில் திருவரங்கர் காட்சி கொடுத்து, தான் அங்கே பூமியில் புதையுண்டு கிடப்பதை அறிவித்தார். அரங்கன் சொன்னதை அறிந்த அரசன் காட்டை அழித்து, மணலை நீக்கினான். கோயில் வெளிப்பட்டது. திருவீதி உட்பட அனைத்தையும் முதலில் இருந்தபடியே நிர்மாணித்தான். தன் நினைவுச் சின்னமாகக் ‘கிளி’ மண்டபத்தைக் கட்டி, திருப்பணிகள் பலவற்றையும் செய்தான். கிளியைக் கண்டு அதன் வாக்கின் மூலம் இறையருள் பெற்ற இந்த மன்னன் ‘கிளிச்சோழன்’ எனப்பட்டான்.

 ஸ்ரீரங்க விமானத்தின் வெளியில் விக்னேசுவரர் இருந்து காவல் புரிகிறார். கீழ்ப்பக்கத்தில் மகா விஷ்ணுவின் யோக மாயையான துர்கை இருக்கிறாள். ஸ்ரீரங்க விமானத்துள்ளே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.

 ஆலயத்தில் உள்ள கோபுரங்கள் 21. திருவரங்கத் திருத்தலம் பற்றி அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற் றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டியும், பழுதுபார்த்தும் வந்துள்ளனர்!

 அரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப் படுகின்றன. பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால், வீதிகளே பிராகாரங்களாக, நகரை தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.

 7-ஆம் பிராகாரம் மாட மாளிகை பிரதட் சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44- வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது.

 7-வது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றி யுடன் திரும்பும் வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார் அச்சுதராயர். ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதப்பர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது).



 ஸ்ரீரங்கத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே- அசுவ தீர்த்தம், தென் கிழக்கில்- ஜம்பு தீர்த்தம், கிழக்கே- பில்வத் தீர்த்தம், வடமேற்கே- வகுள தீர்த்தம், வடக்கே- கதம்ப தீர்த்தம், வடகிழக்கில்- ஆம்ர தீர்த்தம், மேற்கே- புன்னாக தீர்த்தம், தென்மேற்கே- பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 நூற்றுக்கணகான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் கோதண்ட ராமர், பரமபதநாதர், பெரிய வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் சிறப்பானவை.

 தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது.

 சாதாரணமாக எல்லாச் சந்நிதிகளின் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்திய ராக இருப்பதால் நோயாளிகள், வியாதியஸ்தர்கள் அவரிடம் வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.

 உள் ஆண்டாள் சந்நிதிக்கு அருகிலும் வேணுகோபாலர் சந்நிதி மண்டபத்திலும் அழகிய சிற்பங்கள் பல காட்சி அளிக்கின்றன. வைணவ ஆச்சார்யர்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் சந்நிதி தனி ஆலயமாகத் தாயார் கோயில் அருகே அமைந்துள்ளது

 இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.
 கம்ப ராமாயணம் அரங்கேறிய போது அதை அங்கீகரிக்கும் விதமாக சிரத்தை அசைத்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் மேட்டு அழகிய சிங்கர்.
 முன்னொரு காலத்தில் வங் காள அரசன் பெரும் செல்வத்தை ரங்கநாதருக்குக் காணிக்கையாக அளித்தான். ரங்கநாதர் அவற்றை பெற்றுக் கொள்ளாததால் அந்த தனம் வாசலிலேயே வைக்கப்பட்டது. அதை வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் காவல் காத்தனர். அதனால் அந்த வாசல் ஆர்யபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது.

 பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக் கப்படுகிறது.
 வைணவ அந்தணர்களில் அரையர் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை இசைத்து அதற்கேற்ப நடனம் செய்வார்கள். அதற்கு அரையர் சேவை என்று பெயர்.

 ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை சீர்ப்படுத்திய பெருமை வைணவ ஆச் சார்யரான ராமானுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக்குத் தொண்டு புரிந்த ராமானுஜர் கி.பி 1137-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத் தில் பரமபதம் அடைந்தார்.

ஸ்ரீ ராமானுஜர் தன் உடலோடு சந்நிதி கொண்டது இங்குதான். இங்கு ஸ்ரீராமானுஜர் பத்மாசன கோலத்தில் தரிசனம் தருகிறார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப் பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன.

ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப் பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டு புரிந்து வாழ்ந்தவர்கள்.

 நாதப்பிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர் மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படை யெடுப்பின்போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ஆம் ஆண்டு.

திருவரங்கனின் விக்கிரகம், இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது அரங்கனின் அழகில் மயங்கி அவனுக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக அரங்கன், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.

இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும் விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன.

வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசா வதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்

 இங்கு ஒரு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.

எல்லாப் பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்துடன் கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்க நாதருக்கு மட்டும் இரு முறை தைலக்காப்பு.

Sunday, May 31, 2015

நேர மேலாண்மை – ஓர் மிகப்பெரிய பொக்கிஷம்

நேர மேலாண்மை – ஓர் மிகப்பெரிய பொக்கிஷம்


நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும்.

நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.

ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு  காலை வணக்கம் சொல்லி,  இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும். இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும்.  மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து,   கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத்தான் பார்ப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை. ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.

குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முயாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது. சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!

நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.

தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி  உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள். நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.

தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும். “நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார். அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’

அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.

நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.

நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி. கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.

“தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்குப் பக்கத்தில் நேரம் தவறாமை நிச்சயம் இருக்கிறது. நேரம் தவறாமையை நிச்சயம் கடைப்பிடிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

Sunday, April 19, 2015

பதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்!

பதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்!

ஒரு நிறுவனத்தில் மிக முக்கியமான பதவி வகிக்கும் ஒருவர் அந்த வேலையைவிட்டுச் சென்றுவிட்டால், அவரது இடத்துக்கு மற்றொரு சரியான நபரை நிறுவனம் தேர்ந்தெடுக்கும். ஒன்று, நிறுவனத்திலிருந்தே ஒருவரை பதவி உயர்வு அளித்து அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யலாம்; அல்லது தகுதிகளை ஆராய்ந்து வெளியிலிருந்து நேரடியாக ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்கலாம். அப்படியொரு  சூழலில் உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது எனில், உங்களை அந்தப் பதவியில் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ள சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும். அவற்றில் முக்கியமான 10 பாடங்கள் இதோ...

1. நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்!

உங்களிடம் தரப்பட்டுள்ள டிபார்ட்மென்ட் எப்படி இதுவரை செயல்பட்டு வந்துள்ளது; அதன் செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களில் எப்படி இருந்துள்ளது; அவை சிறப்பான செயல்பாடாக இருந்துள்ளதா அல்லது அதன் இலக்கு அடையப்படாமல் உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

 தற்போது அந்தப் பிரிவு உள்ள நிலையில் இருந்து அதனை மீட்க வேண்டுமா, அல்லது தற்போது உள்ள நிலையில் இருந்து மேம்படுத்தபட வேண்டுமா என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

2 . திட்டமிடுங்கள்!

உங்களுக்குத் தரப்பட்ட வேலை என்ன, நீங்கள் ஏற்கெனவே செய்த வேலையிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டுள்ளது, முன்பு இருந்ததைவிட இப்போது என்னவிதமான பொறுப்பு கள் அதிகரித்துள்ளன என்பதையெல்லாம் பட்டியலிடுங்கள்.

 அடுத்தடுத்துச் செய்யவேண்டியவை என்னென்ன என்று வரிசைப்படுத்துங்கள். அதனைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது உங்கள் இலக்குகளைக் குறுகிய கால இலக்குகளாக நிர்ணயித்து, அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்களை நடை முறைப்படுத்த வேண்டும்.

3 . உங்களை நிரூபிக்கத் தவறாதீர்கள்!

புதிதாக வழங்கப்பட்ட பதவியில் ஏற்கெனவே இருந்தவர் நன்றாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டு உங்கள் திறமையை நிரூபித்துவிடலாம். ஆனால், அவர் செய்திருந்தால், அதனை அப்படியே நீங்கள் தொடர்வதை சில நேரங்களில் நிர்வாகம் விரும்பாது. அதற்கு நீங்கள் உங்களது திறமையை நிரூபிக்கும்படியான, நிர்வாகத்துக்குப் பலனளிக்கக்கூடிய ஒரு மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ளதிலிருந்து புதுமையானதாக இருக்க வேண்டும். இப்படி உங்களை நிரூபிக்கத் தவறுகிறபோது, அவர் செய்ததைதானே இவரும் செய்கிறார் என்ற எண்ணம் நிர்வாகத்துக்குத் தோன்றிவிடும்.

4 . இலக்குகளை நிர்ணயுங்கள்!

உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையில் என்னமாதிரியான சிரமங்கள் உள்ளன என்பதைப் பொறுத்து, அதற்கான இலக்குகளை உருவாக்குங்கள். அதனை அடையும் திட்டத்தை உங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள குழுவுக்கு விளக்குங்கள். அவர்கள் அதில் எந்த அளவுக்கு நம்பிக்கையாக உள்ளார்கள் என்பதைப் பார்த்து அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களது இலக்கை நோக்கி திருப்ப வேண்டும் என்பதைக்கூட ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்.

5 . குழுக்களைச் சமாளியுங்கள்!

உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையைச் செய்ய உங்களிடம் ஒரு குழு அளிக்கப்பட்டிருக்கும். அந்தக் குழுவில் உள்ளவர்கள் ஏற்கெனவே உள்ள தலைமையின் கீழ் வேலை செய்திருப்பார்கள். அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் நாம் கவனித்து இருப்போம்; கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் பதவி விலகி, புதிய கேப்டன் நியமிக்கப்பட்டதும் அந்த அணியில் செயல்பாடு சற்று குறைந்து காணப்படும். அதற்குக் காரணம், குழுவில் உள்ள சிலரது மனநிலையே. இதேபோல், புதிதாக உங்கள் தலைமையில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அதற்கேற்றவாறு சமாளியுங்கள்.

6 . அமைப்புகளைக் கவனியுங்கள்!

வேலை அமைப்பு எப்படி உள்ளது என்பதைப் பாருங்கள். அது சரியாக அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டுள் ளதா, இல்லையெனில் யாருக்கு என்ன வேலை, அதனைச் செய்ய அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள், செயல்பாடுகள் என்னென்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். அவர்களுக்கான வேலைகளை ஒழுங்கு படுத்துங்கள். இதனைச் சரியாகச் செய்தாலே இலக்குகளை எளிதாக அடைவார்கள்.

7. மதிப்பீடு அவசியம்!

இதுவரை நடத்துவந்த வேலை யின் அளவு, அது முடிக்க எடுக்கப்பட்ட காலம், அப்போது குழுவின் செயல்திறன் ஆகிவற்றைக் கணக்கில்கொண்டு அதனைவிடச் சிறப்பாகச் செயல்படுங்கள். அப்போது ஓரிரு மாதங்களில் ஏற்கெனவே உள்ள மதிப்புகளோடு, உங்கள் திறனை மதிப்பீடு செய்துபாருங் கள். அது கட்டாயம் வளர்ச்சியில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், உங்களது வேலை சரியாக உள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.

8 . அப்டேட் ஆகுங்கள்!

முன்பு நீங்கள் இருந்த வேலையோ அல்லது பதவியோ தற்போது உள்ளதிலிருந்து கீழ் நிலையே. அந்த நிலையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஏனெனில், உங்களுக்கு உயர்பதவியில் இருப்பவர் அதனைச் சரிசெய்துகொள்வார் என்ற ரிஸ்க் இல்லா சூழலில் இருந்திருப்பீர்கள். ஆனால், தற்போது உங்களுக்குக் கீழ் உள்ளவர்களின் தவறைத் திருத்தும் சூழல் உங்களுக்கு இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீங்கள் அப்டேட் ஆக வேண்டியதும் அவசியம்.

9 . கலாசாரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

மேலாண்மைப் பாடங்களில் ஆர்கனைசேஷனல் கல்ச்சர் என்ற ஒரு பிரிவு உண்டு. அதாவது, ஒவ்வொரு நிர்வாகமும் ஒரு கலாசார அடிப்படையில் செயல்படும். அப்படிப் பார்க்கும்போது, உங்கள் நிர்வாகம் எந்தமாதிரியான கலாசாரத்தைப் பின்பற்றுகிறது என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அதே நிறுவனத்தில்தான் இருந்தீர்கள் என்றாலும்கூட உங்களது முந்தைய நிலைக்கும், பதவி உயர்வு அடைந்துள்ள நிலைக்கும்கூட கலாசார மாறுபாடு இருக்கும். அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

10 . அனுபவத்தைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு முன்பிலிருந்தே அந்த நிறுவனத்தில் வேலையில் இருந்த ஒருவரிடமோ அல்லது அந்த நிறுவனத்தில் உயர்பதவி களில் உள்ளவரிடமோ அந்த நிறுவனத்தின் தன்மை என்ன, உங்களது பிரிவு  வேறு எந்தெந்த பிரிவுகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்; இதன் வாடிக்கையாளர்கள் யார்; இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் என்ன நிலையில் உள்ளது; உங்கள் பிரிவின் வேலை, நிறுவனத்தில் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். நிறுவனத்தின் தன்மை செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் வேலையில் உங்கள் ஆளுமையைக் காட்டுங்கள். அவர்களது அனுபவங்கள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

Saturday, March 7, 2015

விளக்கேற்றும் பலன்கள் என்ன?

விளக்கேற்றும் பலன்கள் என்ன? 





காலை 6 மணி முதல் 7 மணி வரை  வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும். புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் . ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும். கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும். மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் . பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும் இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும் மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும் நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும் ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்

Monday, February 23, 2015

ஆலயங்களில் செய்யத் தகாதவை

ஆலயங்களில் செய்யத் தகாதவை
வலையில் படித்த தகவல்.www.v4all.org
1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது
.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது
.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்
.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்

Sunday, October 19, 2014

its not about the sex - but one of the best interview . எவ்வளோ வெளிப்படையான பேச்சு.

its not about the sex - but one of the best interview .

எவ்வளோ வெளிப்படையான பேச்சு...என்ன ஒரு தைரியம்!...தெளிவான சிந்தனை....மனிதர்களை வெளித்தோற்றத்தில் எடை போடுவது ரொம்பத்தப்புன்னு புரியுது!


https://www.youtube.com/watch?v=DAtoUT6Ij-A

Sunday, August 24, 2014

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.
ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.
மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.
உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.
முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.
உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.
குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.
பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!
பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.
இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?
உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.
முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.
சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.
குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.
இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.
நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.
சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.
நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.
இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.
இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.
வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.
உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.
ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.
தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.
மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.
அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.
குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.
ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?
உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?
அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.
ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.
ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.
இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.
முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.
அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.
வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.
நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.
இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.
ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.
`
வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…
உழைப்பே உயர்வு,
உறக்கம் தாழ்வே!
சக்சஸ் ஜெயச்சந்திரன்

urs Happily 

www.v4all.org 

Saturday, August 23, 2014

'ஐஸ் பக்கெட் சவால்' : தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்றுவது ஏன்..?

'ஐஸ் பக்கெட் சவால்' : தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்றுவது ஏன்..



ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் ஐஸ் நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள். அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது. ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள். உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கு ஏ.எல்.எஸ். நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.  

பிரபல எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த ஏ.எல்.எஸ். நோய் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது. ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொள்பவர்கள் தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்ட பிறகு 3 பேருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் 100 அமெரிக்க டாலரை ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். 


அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ். நோயாளியுமான பீட் ஃபிராட்ஸ் ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருக்கு இந்த ஐடியாவை அவரது நண்பர் ஒருவர் கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஸ் பக்கெட் சவாலை அடுத்து ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு இதுவரை சுமார் ரூ. 139 கோடி நிதி கிடைத்துள்ளது. இணையதளத்தில் தற்போது இந்த ஐஸ் பக்கெட் சவால் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.