Friday, May 22, 2015

பூட்டு சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து பழக்கத்துக்கு கொண்டு வந்தவர்கள்

பூட்டு சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து பழக்கத்துக்கு கொண்டு வந்தவர்கள் அசிரியர்கள். அந்தக் காலத்து அசிரியா தற்போதைய ஈராக்கின் வட பகுதியாகும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பூட்டு சாவியை பயன்படுத்தி வந்ததற்கான சரித்திர சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அசிரியர்கள் பயன்படுத்திய பூட்டுகள் மரத்தினால் ஆனவை. சாவியும் மரத்தினால் ஆனதுதான். அது மிகப்பெரியதாக இருக்கும். என
வே வெளியூர்களுக்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியைத் தோள்மீது வைத்துத்தான் சுமந்து செல்வார்களாம். இவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற பூட்டு-சாவிகள் எகிப்து, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.

உலோகத்தால் பூட்டு-சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் ரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டு-சாவிகள் தயாரிக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும் நம்ம ஊர் திண்டுக்கல் பூட்டு பக்கம் நிற்கமுடியுமா?

Displaying 547324_434410926609242_1372498487_n.jpg

No comments:

Post a Comment