Wednesday, May 20, 2015

கேட்டு பெறும் ரகசியத்தை தெரிந்து கொள்ள

யார் நீங்கள் ஆசை படுவதை கொடுக்க
முடியும்?
நீங்கள் ஆசை படுவதை கொடுக்க கடவுள்
ஒருவரைத் தவிர.வேறு எந்த உறவுகளாலும்
முடியாது.
யார் அந்த கடவுள் அவர் எங்கிருக்கிறார்,
அவரை பார்க்க முடியுமா அவரிடம் பேச
முடியுமா நாம் ஆசைபடும் அனைத்தையும்
கடவுளிடம் கேட்டு பெறுவது சாத்தியமா?
கதைகளிலும், சினிமாவிலும் மட்டுமே
கடவுளிடம் வேண்டியதை கேட்டுப்
பெறுவதை இதுநாள்வரை
பார்த்திருக்கிறோம். இது நடைமுறையில்
சாத்தியமா? நிஜ வாழ்கையில் உங்களுக்குத்
தெரிந்த யாராவது ஒருவர் கடவுளிடம்
எதையாவது கேட்டுப் பெற்றிருக்கிறாரா
சொல்லுங்கள் பார்க்கலாம். வீடு, கார், வேலை,
ஆரோக்யம், நல்ல உறவுகள், திருமணம், நட்பு,
பணம், செல்வச் செழிப்பு, தொழில்,
வியாபாரம், நகை என்று யாராவது
எதையாவது கடவுளிடம் கேட்டுப்
பெற்றவர்களை உங்களால் அடையாளம் காட்ட
முடியுமா? இது சாத்தியமா?
நான் சொல்கிறேன் முடியும். முடியும்.
முடியும். சாத்தியம் முதலில் போய்
கண்ணாடியின் முன் நின்று பாருங்கள்
கடவுள் தெரிவார். கண்ணாடியில் நான்
பாரத்தால் என் உருவாம்தானே தெரியும்
என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் கேட்டதை
கொடுக்கும் கடவுள்
உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறார். அது
தான் உங்கள் மனம். அதுவும் ஆழ்மனம்.
இதுநாள் வரை நீங்கள் அதனிடம் கேட்கவில்லை.
கேட்டிருந்தால் கொடுத்திருக்கும். கேட்டால்
கொடுக்கக்கூடிய கர்பகவிரு-க்ஷ்ம், கஜானா,
பொக்கிஷக்கிடங்கு, பொற்குவியல்,
அலாவுதீன் அற்புத விளக்கு, அலிபாபா
குகை என்று நீங்கள் அதற்கு என்ன பெயர்
வேண்டுமானாலும் சூட்டலாம். கேட்டதை
எல்லாம் கொடுக்கக் கூடிய ஆழ்மனத்தை
உங்களிடமே வைத்துக்கொண்டு நீங்கள்
எங்கெங்கோ சுற்றித்திரிந்திருக்கிறீர்கள்.
அப்படியென்றால் இவ்வளவு காலத்தையும்
நீங்கள் வீணடித்திருக்கிறீர்கள் என்றுதான்
சொல்லவேண்டும். அதுதான் நிஜம். எப்படி
ஆழ்மனத்திடம் உங்களுக்கு வேண்டியதை
கேட்டுப்பெறுவது ?.
ஒரு சிலர் சொல்வார்கள் நான் கடவுளிம்
பெற்றேன் என்று! நன்றாக
யோசித்துப்பாருங்கள் கடவுள் உங்களிடம்
நேரில் வந்து கொடுத்துவிட்டுப் போனாரா?
எப்போது? எங்கு வைத்துக்கொடுத்தார்?
சாத்தியமில்லை. அந்த ஒரு சிலர் கடவுள்
என்று நினைத்து வேண்டியது அவரவர்
ஆழ்மனத்திடம்தான். அதுதான் அவர்கள்
வேண்டியதை கொடுத்திருக்கிறது. கடவுள்
என்ற வார்த்தையை பிரித்துப்பாருங்கள். கட
+உள்= கடந்து உள்ளே செல்லுதல் என்பதே
கடவுள் என்று ஆனது. நாம் நமக்குள் கடந்து
சென்று ஆழ்மனத்திடம் ஐக்கியமாகி
வேண்டியதை பெறுவதுதான் இது. மிகவும்
எளிதான இந்தச் செயலை ஒவ்வொருவரும்
தெரிந்தோ தெரியாமலோ
செய்துகொண்டுதான் இருக்கிற«£ம்.
ஆழ்மனத்திடம் (கடவுளிடம்) வேண்டியதை
கேட்டு பெறும் ரகசியத்தை தெரிந்து
கொள்ள......................நம்பிக்கை வையுங்கள்
எப்போதும் நீங்கள் கேட்கும்ம் ஒன்றை குறித்தே
சிந்தித்து கொண்டிருங்கள். எழுந்த விடம்
கண்ணாடி முன் நின்று உங்களுக்கு எது
வேண்டுமோ அதை மட்டும் உங்கள் ஆழ மனதில்
கேளுங்கள்.) SECRET )என்ற திரைபடத்தை
டவுன்லோட் செய்து பாருங்கள் நிறைய
உண்மைகள் உங்களுக்கு விளங்கும். என்
வாழ்விலும் எண்ணற்ற காரிங்கள்
நிகழ்துள்ளது

urs
www.v4all.org 

No comments:

Post a Comment