Showing posts with label Coimbatore Corporate Training Company in coimbatore. Show all posts
Showing posts with label Coimbatore Corporate Training Company in coimbatore. Show all posts

Tuesday, March 8, 2016

ஒருமுறை சாக்ரட்டீஸ்

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
 " அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். 
இல்லை என பதில் சொன்னார்.
 " அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். 
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
 "யாருக்கும் பயனில்லாத , நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.............................

Sunday, December 6, 2015

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே 
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?

அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும், முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை
...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்.
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் 
குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள். நாம் இவற்றை பாதுகாத்து அழியாமல் காப்பாற்றினாலே  போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்ததையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன். நிறைய பகிருங்கள்.


நமது வரலாற்றை அறிய முயற்சிப்பதும், அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதும் முன்னோர்க்கு தமிழராகிய நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
வணக்கம்.

Sunday, November 1, 2015

தேர்ந்தெடுக்கும் திறன்

தேர்ந்தெடுக்கும் திறன்.

தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.

நடு ரோடு, காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.

இது போன்ற இடங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயலாது. ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.  

கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் நாய் அதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கிறது.   இங்கு தெரு நாய்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் வேறெதுவும் கிடையாது.

“நாய அடிக்கற மாதிரி அடிச்சுப்போட்டுடுவேன்” என்பது சொல் வழக்கு. இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் பிராணிகளில் நாய்தான் முதலிடத்தில் உள்ளது. அதை அடித்தால் கேட்பதற்கு யாருமே இல்லை.   

குடல் சிதறி, மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் நாயின் உடல் மேல் அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி, பனிரண்டாம் வகுப்பில் ஹெர்பேரியத்திற்காக செம்பருத்தி போன்ற சில பூக்களைப் பறித்து, நோட்டுப் புத்தகத்தில் வைத்து அழுத்தி தட்டையாக்கி விடுவதைப் போல, அந்த நாயின் உடல் தரையோடு தரையாக தட்டையாக்கப்பட்டு தார் ரோட்டில் ஒட்டிக் கிடக்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவை.

இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே. எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.

நாம் மட்டும் என்ன, இளைத்தவர்களா?

மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.

அந்தத் திறன் இல்லையானால் அது கிட்டத்தட்ட நாய் வாழ்க்கைதான்.   கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தத் திறன் இல்லாததால் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான். பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.  

காதலின் போது இது தெரிவதில்லை. ஒரு சாத்வீக குணம் கொண்டவன் ரஜோ குணப்பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறான். ஆண்-பெண் கவர்ச்சி மறைந்தவுடன் அங்கு உண்மை முகம் வெளிப்படத் தொடங்குகிறது.  வாழ்வு நரகமாகிறது.

ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.

சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத்தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.

சிட்பண்டில் யாரைச் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விடும் நபர்களைச் சேர்த்து அவதிப்படுகிறான்.

10 ரூபாய் வட்டி தருகிறேன் எனச் சொல்பவனிடம் பணம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கத் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாறுகிறான்.

ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.

வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய் எப்படி தூங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடத்தை தவறாகத் தேர்ந்தெடுக்கிறதோ, விளைவுகளை அறியாமல் தேர்ந்தெடுக்கிறதோ, அதே போல்தான் நாமும் விளைவுகளை அறியாமல் பல விஷயங்களை செய்துவிட்டு விழிக்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவேண்டும். நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலானவை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டவையே யொழிய இறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  

எந்த அளவுக்கு நம் மனதில் பேராசை, சினம், பொறாமை, கடும்பற்று, உயர்வு-தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் அதிகமாக உள்ளனவோ, அந்த அளவுக்கு நம் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்து போய் துன்பத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.  

உதாரணமாய் மிகக் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பேராசை.  இந்தப் பேராசை பத்து ரூபாய் வட்டி தருபவனை நிச்சயமாய் உங்களிடம் ஈர்க்கும்.  மனம் முழுக்க பேராசை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும். பின்பு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  பத்து ரூபாய் வட்டி தருகிறேன் என்பவனே தவறான ஆள்தானே...

ஆகவே நிதானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.

குழந்தைகளுக்கு இந்த நுட்பத்தை இப்போதிருந்தே கற்றுக்கொடுப்போம்.

Thursday, September 3, 2015

How does a Desire arise?

How does a Desire arise?
1. A desire arises with the memory of a pleasant experience and past impressions.
2. A desire might arise through listening.
3. A desire can be triggered through the association of certain people and a place.
4. Someone else's need or desire may manifest in you as your own desire, e.g. when someone is hungry, you get a desire to feed them or someone wants to talk to you and you get a desire to talk to them.
5. The destiny or a happening in which you have a part to play may trigger a desire of which you have no idea. For example, a gentleman in Quebec, Canada kept making roads and working on a farm for 30 years, not knowing for what -- for it was destined to become our Canadian Ashram.
www.v4all.org

Monday, July 27, 2015

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...


"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"

Saturday, July 18, 2015

வியாபார வெற்றிக்கு - ரகசிய பைரவர் பரிகாரங்கள்

ரகசிய பைரவர் பரிகாரங்கள்

கல்வியில் வெற்றிபெற:
புதன்கிழமைகளில், புதன் ஹோரையில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசி பருப்பு பொடி கலந்த அன்னத்துடன் பருப்பு பாயசம் நிவேதனம் செய்து, பைரவரை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
வியாபார வெற்றிக்கு:
புதன்கிழமைகளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசிப் பயறு சுண்டல், பாசிப் பயறு பாயாசம், பாசிப்பயறு பொடி கலந்த அன்னம், கொய்யாப் பழம் இவைகளை நிவேதனமாக வைத்து, அர்ச்சித்து பைரவரை வழிபட வேண்டும்.
பணக் கஷ்டம் நீங்கிட:
மண் அகலில் தாமரைத் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லது பவுர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ பூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீங்க:
தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சல் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு (தாலிக் கயிறு) சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சக சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம், ஜாக்கெட் துணியுடன் வசதி இருந்தால் புடவையும் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.
இழந்த பொருள் கிடைக்க:
மானம், மரியாதை, கவுரவம், இடம், சொத்து போன்ற நீங்கள் இழந்த பொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட, பைரவர் முன் 27 மிளகை மூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு, வராகிக்கு முன் சிறிது வெண் கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும்.


Monday, July 6, 2015

சாஸ்திரங்களில் சில நேரங்களில் கண்டிப்பாக தூங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.

Tuesday, June 30, 2015

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம்.
பருவ வயது வந்தவுடன் நம் உடலில் உள்ள சில பல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?
சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....
சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால் நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள். விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக் களியாட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு இன்பத்தை துய்க்கலாமே?
உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப்பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?
பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல் பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Wednesday, June 10, 2015

மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !

உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் “ஆம்” அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.
ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.
எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்தநல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும் நல்லவையாக இருக்கும்.
கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும் கெட்டவையாக  இருக்கும்.
மனது என்பது ஒளி  நாடாவை போன்றது. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து திருப்பி சொல்லும்.
ஆழ்மனது  என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது. உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.
ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனால் தோல்விகரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.
இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும்.
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.
இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும் உங்களுடைய நினைப்பில் தான் உள்ளது. அந்த தடையை தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த தடையை தகர்த்து எறிந்து  விடுவீர்கள்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள். எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது. சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள் நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை உண்டாக்க முடியுமா?
எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து
எறிந்து விடலாம்.
ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள்
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.
தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு இருங்கள். வெற்றி நிச்சயம்.
மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக மாற்றி நினைப்பதற்கு  ஒரு கருவி தேவை. அந்த கருவிதான் தியானம்.
தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை மாற்றி                                                     நினைக்க வைத்து உங்கள் வெற்றியை அடையலாம்.

Tuesday, June 9, 2015

எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு

* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.
* ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.
* இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள்.
* பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மைஎதற்கும் தகுதியற்றவர்களாக்கிவிடும்.
* எப்போது பிரச்னை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்ற மனவருத்தம் உண்டாவதில்லை.
* லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும்.
தாகூர்

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை ;-

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை ;-
மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.
செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!
வ.எண் பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இப்பதிவினை எழுதத்தூண்டிய எல்லாம் வல்ல போகர் பெருமானின் பாதம் பணிந்து இப்பதிவினை அவர்தம் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்


Monday, June 8, 2015

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள்

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் – கீதாசாரம்:-

* எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
* உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது.
* பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு.
* நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும்.
* உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்கு வேண்டாததைச் செய்யாதே.
* உடலில் நிதானம், மொழியில் நிதானம், எதிலும் நிதானம், இதுவே நல்வழி.
* தீயசெயல்களின் விளைவு உடனே தெரிவதில்லை. மறைந்திருந்து பின்னால் தாக்கும்.
* பேராசையும், தீய ஒழுக்கமும், நம்மைத் தீராத துக்கத்தில் மூழ்கடித்து விடும். தன்னை அடக்குபவனே தலைவன். தன்னலமின்மை, அமைதி, வாய்மை ஆகிய மூன்றும் இன்பம் தரும். மனநிறைவே தலை சிறந்த செல்வம். உடல்நலமே மிக உயர்வான நலன். நம்பிக்கைக்கு உரியவரே மிகச் சிறந்த உறவினர்.
* எதிலும் எப்பொழுதும் கவனமாக இருங்கள்.
* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள். அந்த ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள் இதைத் தவிர வேறு ஒளி கிடையாது.
* நான் உங்களுக்குப் பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே உறையும் உள்ஒளி மூலம் உங்களை நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.
* செவி வழிச் செயதி கேட்டோ வழி வழியாய் வந்த விஷயஙகள் கேட்டோ பரம்பரையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட விஷயஙகள் கேட்டோ, உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதீர்கள்

ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது.

ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது.
மறைத்து வைப்பவை, மறைந்திருப்பவை அனைத்தும் இரகசியமே! இரத்தினமே! இரத்தினத்தின் திறமையை, இலட்சிய நோக்கோடு, வெளியிட்டால் சிகரத்தை உன் சிறு பையில் அடக்கி விடலாம்.
உன் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் முதல் நபர், நிச்சயம் நீயாகாத்தான் இருக்க முடியும். உன்னை உனக்குள் தேடு. நீ யார்? எனக் கேட்டுக் கொள். மனம் சொல்லும் கேட்டுச் சொல்.
பாதையை தேர்ந்தெடுத்தவனுக்குத் தான் வழியும் பிறக்கும். பாதைகள் அற்ற இடம் இருந்தும் வீணே. உன் பாதையைத் தெரிவு செய்துவிட்டால், தயங்காமல் நடக்கலாம். ஒதுங்காமல் ஓடலாம். நித்தம் நித்தம் மனதை புதிதாக்கு. தினமும் புதிதாய் தான் பிறக்கிறோம்.
வறுமை உன் திறமையை மறைக்கலாம். வறுமை நோய் எப்போதும் உன் திறமையைக் கொன்று விடாது. அதை மேலும் வரவேற்றும்.
இலட்சியத்திற்கு தினம் உன் நேரத்தை ஒதுக்கு. சிந்தனை செய். சீரிய வழி பிறக்கும். கண்டறிந்த இலட்சியத்தை கவனத்துடன் கொண்டு செல். கனிவாய் பேசு.
கவனமெல்லாம் குறிக்கோளில் இருக்க வேண்டும். அக்கவனத்தை சிதறடிக்க படையெடுத்து வரலாம். உன் அம்பெடுத்து தடைகளை நொருக்கு. வேகமாய் செல். வேகம் கொண்டால், அனைத்தும் பின்னோக்கி ஓடும். ஓய்ந்துவிட்டால் தலைமுறையே சாடும். உன்னை செதுக்கிக் கொல். உலகம் உயர்த்தி விடும்.

urs
www.v4all.org 

மகான் அகத்தீசர்

மகான் அகத்தீசர் நாம ஜெபம்..!

உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் ஞானிகள்/ சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுசண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சதாரணமான மனிதர்ளுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும். ஆசான் காகபுசண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர்.
அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு சொல்வதற்கு யாராலும் முடியாது. ஆசான் புசண்ட மகான் அவர்கள் காகபுஜண்டர் காவியம் ஆயிரத்தில் "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்" என்று முதல் வரியில் சொல்லியுள்ளார்.
அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார். அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.
அந்த இரகசியங்களை எவ்வாறு சொன்னால் வருங்கால தொண்டர்கள் உணர முடியுமோ? அதற்கேற்றாற்போல் வெளியாக பாடியுள்ளார். மேலும், அவர் பாடல் கேட்பதற்கு இனிமை உடையதாகவும் இருக்கும். அவர் தவம் செய்து தங்கிய இடம் பொதிகை மலை என்ற மேருவாகும். பொதிகை மலைக்கு அரசனும் அவரே ஆவார். அவருடைய கருணையே மேருமலைக்கு ஒப்பாகும். அவர் கருணையால்தான் இதற்குமுன் பலகோடி ஞானிகளும் கடவுள்தன்மை அடைந்துள்ளார்கள். மேலும், வருங்காலத்திலும் பலகோடி மானுடர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கடவுள்தன்மை அடைய இருக்கிறார்கள். எனவே, அகத்தீசன் நாமத்தை சொன்னால் நவகோடி சித்தர்களும் நமக்கு உற்ற துணையாக இருந்து மலமாயையும், மனமாயையும், பந்த பாசத்தையும் நீக்கி என்றும் அழியாத பேரின்ப வாழ்வு தருவார்கள்.
நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.
ஒருசிலர் பல சாத்திரங்களை படித்துப்படித்து முதுமை வந்து இறந்து போனாரே தவிர ஒரு கடுகளவும் உண்மை தெரிந்துகொள்ளவில்லை. காரணம், ஆசான் திருவடியை பூசைசெய்து ஆசி பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும் என்று புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுவதாகும். நல்வினை இருந்தால்தான் குருவருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புண்ணிய பலம் இல்லாத கசடர்கள் தம்தம் திறமை கொண்டு முன்னேற முயற்சிப்பார்கள். இவர்களெல்லாம் களம் சார்ந்த பதராகும். அவர்களிடம் உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னாலும் யார் உபதேசமும் எனக்கு தேவையில்லை, எனக்கு கல்வி உள்ளது நானே படித்து தெரிந்து கொள்வேன் என்பார்கள். இவர்கள்தான் நடமாடும் சவமாகும்.
அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.
- மகான் காகபுஜண்டர்
மகான் காகபுசண்டர் உலகமக்கள்பால் கருணை கொண்டு மேற்கண்ட பாடலை அருளியுள்ளார். வருங்கால ஆன்மீக தொண்டர்களுக்கு இந்த பாடலே உபதேசமாகும். எனவே அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்று கொள்வோம்! பெரும்பேற்றை பெற்று பேரின்பம் பெறுவோம்.

Sunday, June 7, 2015

முன்னேறு மேலே மேலே

முன்னேறு மேலே மேலே

முன்னேறு மேலே மேலே

மனிதன் எது வரை முன்னேறலாம் என்ற கேள்வி எழுந்தால் அதற்கு எல்லை எதையும் இயற்கை வகுக்கவில்லை. முயற்சிக்க முயற்சிக்க நன்மை தான். ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போனான். எதிரே ஒரு துறவி வந்தார். “”மகனே! முன்னேறிச் செல்,” என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று விட்டார்.
 துறவியின் வார்த்தை விறகுவெட்டியின் மனதில் பதிந்தது. அவன் வழக்கமாக செல்லும் தூரத்தை விட மேலும் சில மைல்களைக் கடந்தான். அங்கே சந்தனமரங்கள் இருந்தன. அவற்றை வெட்டி விற்று பணக்காரன் ஆனான். துறவியின் வாõர்த்தை மட்டும் மறக்கவில்லை.
 துறவி “இது போதும்’ என்று சொல்லவில்லையே! “முன்னேறு’ என்று தானே சொன்னார் என சிந்தித்தவனாய் மேலும் சில மைல்களைக் கடந்தான். அங்கே வெள்ளிச்சுரங்கம் இருந்தது. அடேயப்பா! வெட்டியெடுத்து விற்று மேலும் பணம் சேர்த்தான். இப்படியே தங்கச்சுரங்கம், வைரச்சுரங்கம் என அவனது பயணம் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இப்போது, அவன் உலகப் பணக்காரர் வரிசையில் இருக்கிறான்.
 எந்தச்சூழலிலும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். மேலும் மேலும் முன்னேறுவீர்கள்.

read - www.v4all.org 

Friday, June 5, 2015

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்!!!

பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள்.
கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்!!!
பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார்கள். விளையாடிக்கொண்டும், சிங்காரப் பாடல் பாடிக்கொண்டு உல்லாசமாக அலைந்துகொண்டும் இருந்தார்கள்.
ஆனால், நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்கவில்லை. கூடாரத்திலேயே இருந்துகொண்டு நல்ல நூல்கள் சிலவற்றைக் கவனமாகப் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த கிராமப் பெண் ஒருத்தி, அக்கூடாரத்தை எட்டிப் பார்த்தாள்.
‘எல்லோரும் சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் நீ என்னவோ கோஷா பெண் மாதிரி உள்ளேயே உட்கார்ந்திருக்கிறாயே’ என்று ஏளனமாகக் கேட்டுச் சிரித்தாள்.
நெப்பேலியன் அவளது பேச்சுக்கு காதுகொடுக்கவில்லை. படிப்பில் ஆழ்ந்திருந்தான். சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சென்றுவிட்டாள் அந்த கிராமத்துப் பெண்.
பல வருடங்கள் உருண்டோடின. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் சக்கரவர்த்தியாகி அந்த ஊருக்கு வந்திருந்தான். அந்த பழைய நிகழ்ச்சி அவன் நினைவுக்கு வந்தது.
அவள் எங்கு இருக்கிறாள் என்று விசாரித்து அறிந்துகொண்டான்.
அவளுடைய வீட்டுக்குச் சென்று ‘என்ன அம்மா! என்னை நினைவு இருக்கிறதா?’ என்றான். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
உடனே பணிந்து, ‘பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனா? உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே!’ என்றாள் வியப்போடு.
‘ஆமாம் அம்மா, ஆமாம் …. ஒரு காலத்தில் இந்த ஊரில் நான் சாதாரண படை வீரனாகக் கூடாரத்தில் உட்கார்ந்திருந்தேன்.
அப்போது நீ என்னைக் ‘கோஷா’ என்று ஏளனம் செய்தாய். நான் அதைக் காதில் வாங்காததுபோல் இருந்துவிட்டேன். நினைவிருக்கிறதா?’ என்றான்.
‘ஆமாம், நீங்கள் சொல்லுவதும் சரிதான்’ என்று ஆழ்ந்த யோசனையோடு சொன்னாள் அவள்.
‘அன்று மற்றவர்களைப்போல் நானும் விளையாடிக் கொண்டிருந்தால், இன்னும் அவர்களைப் போலத்தான் இருந்திருப்பேன்!’ என்றான் நெப்போலியன். அவள் வாயடைத்துத் திகைத்து நின்றாள்.
urs
www.v4all.org

Thursday, June 4, 2015

விடிகாலையில் எழவேண்டிய அவசியம்

விடிகாலையில் எழவேண்டிய அவசியம் சிலபேருக்கு எப்போதாவது ஏற்படுவது உண்டு!
பஸ், அல்லது ரெயிலை பிடிக்க, முடிக்கவேண்டிய கடமைகளை முடிப்பதற்கு, அதிகாலையில் பரீட்சைக்கு அவசரமாக படிப்பதற்கு, உறவினர்களின் விசேடங்களில் கலந்துகொள்வதற்கு, கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்ள, நண்பர்களை போய் வழியனுப்பி விட என ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணங்கள் இருக்கும்.
இவற்றில் பெரும்பாலானவை மறுபடியும் வாய்க்காத சந்தர்ப்பங்களாகவே இருக்கும். கை விட்டால் கைவிட்டதுதான்.
அலாரம் வைத்து எழ முயல்பவர்கள் மேஜைக்கடிகாரத்தை ஏதோ தமது குழந்தைகள்போல பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இது மகா தவறு!!
அலாரம் குறித்த நேரத்தினுள் அடிக்க தொடங்கியதும் ஏதோ எங்களை கடிக்க வந்த கொசுவை அடிப்பதுபோல அதன் தலையில், அல்லது பொத்தானில் அடித்துவிட்டு மீண்டும் தூங்குபவர்களே நூற்றுக்கு தொண்ணூறு வீதத்தினர்.
அலாரம் என்பது படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் எழுந்து சென்று நிறுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும். சுத்தம் கேட்டு, திடீரென விழித்து, எழவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, சோம்பல் முறித்து எழுந்து சென்று அதை அணைக்கும் ஒரு காலக்கெடுவை அது வளங்கிவிடுகின்றது என்பது குறிப்படத்தக்கது.
அந்தக்குறிப்பிட்ட செக்கன்களே மிக முக்கியமான நேரங்களாகும்.
முன்னேற்றமாவது மண்ணாவது, நீ முன்னேறித்தான் என்னத்தை கிழிக்கப்போறாய்? அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது எல்லாம் தூக்க அரக்கனின் கட்டளைகள்.
மறுபடியும் வந்து படுத்து இதோ இன்னும் ஒரு நிமிடத்தில் ஏழுந்திருப்போம், என உடல் கெஞ்ச மனமும் அதற்கு உடன்படும். படுத்துவிட்டு திரும்பி எழுந்து பார்த்தால், வழக்கமாக சாதாரணமாக எழும் நேரத்தைவிட தாமதமாகத்தான் கண்வழிக்கமுடியும்.
ஐயோ போச்சே.... போச்சே என்று மனம் பேதலித்து ரென்ஸனாகவேண்டியதுதான் மிச்சம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்,
என்ன நோக்கத்திற்காக அதிகாலை எழ வேண்டும் என்று அலாரம் வைக்கின்றோமோ, அந்த எழுச்சியால் எழும் சிறந்த பலாபலன்களையும், அவற்றின் மூலம் நாம் அடையப்போகும் நன்மைகள், பாராட்டுக்கள், வெற்றிகள் எல்லாவற்றையும் நாம் பெறுவதாக கற்பனை செய்துகொண்டு தூங்கவேண்டும். அலாரம் எப்போ அடிக்கும் என் புதிய செயல் தொடங்க என்ற வைராக்கியத்துடன் தூங்கவேண்டும்.
இதுமட்டும் நடந்துவிட்டால் அலாரச்சத்தம் கேட்டவுடனேயே, மனம் மகிழ்வுடன் உந்த, உடல் துள்ளி எழுவதையும், மனதில் மகிழ்ச்சிமிக்க ஆனந்த தருணம் உருவாவதையும் சாதிக்கும் எண்ணம் முழுமையாக இருப்பதையும் நீங்கள் உணரலாம். அந்த உறுதியே முழுமையான வெற்றிகளையும் உங்களுக்கு தந்துவிடும்.

urs
www.v4all.org 


Janarthanan Jana's photo.

Wednesday, June 3, 2015

வல்லபாய் பட்டேல்

வல்லபாய் பட்டேல்

வல்லபாய் பட்டேல் - www.v4all.org 

நாடியட் என்னும் நகரத்துப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் புத்தகம், நோட்டு, பென்சில் ஆகியவற்றை விற்று வந்தார்.அப்போது ஒரு நாள பட்டேல கடையில் ஒரு நோட்டு வாங்கி வந்தார்.
அதைக் கண்ட அவ்வாசிரியர், நீ ஏன் கடையில் நோட்டு வாங்கினாய்?என்னிடமல்லவா வாங்கவேண்டும்! எனக் கோபம் கொண்டு கேட்டார். அதற்குப்பட்டேல் பள்ளியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றா சார்? எனத் திருப்பிக் கேட்டார்.அதைக் கேட்ட அவ்வாசிரியர் நான் உன் ஆசிரியர். நீ என் சொல்லுக்குக் கீழ்படிதல் வேண்டும். எதிர்த்துப் பேசாதே! என மேலும் கோபித்தார்.
பட்டேல் உடனே, நீங்கள் என் ஆசியர்தான். நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகின்றோம். உங்களிடம் வியாபாரம் செய்வதற்காக நாங்கள் வரவில்லை என்று தைரியமாகக் கூறினார். அதைக் கேட்டதும் ஆசிரியருக்குக் கடுங்கோபம் வந்தது;பட்டேலைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற முயன்றார். ஆனால் அதற்கு முன்பட்டேல் பள்ளியை விட்டு வெளியே சென்றுவிட்டர்.
மறுநாளும் பட்டேல் பள்ளிக்கு வரவில்லை. அவர் மட்டுமல்ல. அந்த வகுப்புமாணவர்கள் அனைவரும், பட்டேல் செய்தது சரி என்றும், அதுவே நியாயம் என்றும்அவர் பக்கம் சேர்ந்தனர். கடைசியில் அந்த நகரத்துப்பெரியவர் ஒருவரின் முயற்சியால் அவ்வாசிரியரும் மாணவர்களும் சமாதானமாயினர்.
அவ்விளைஞராகிய வல்லபாய்பட்டேல் தான் பிற்காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காகப் போரடினார்; இந்திய நாட்டின் சிற்றரசர்களின் நாடுகளையெல்லாம் ஏக இந்தியாவுக்காக அவ்வரசர்களோடு போராடி வெற்றி கண்டார்; இரும்புமனிதர் என்னும் பட்டத்தைப் பெற்றார்.
இளமையிலிருந்தே வரும் ஆக்கப்பூர்வமான வீர உணர்வு தரும் பரிசு வெற்றி,பெருமை!

Tuesday, June 2, 2015

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?

வெல்ல முடியாததை வெல்வது எப்படி? - www.happy4all.org


உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற
ஆழமான நம்பிக்கையை மாணவர் சமுதாயத்தில் விதைத்து வருகிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு இடமும் அறிவு மையமாக வேண்டும் என்று கருதும் அவர் தினந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அறிவு புரட்சி ஏற்படுத்தி வருகிறார். மாணவர், இளைஞர்களுக்காக இங்கு தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்...

மாணவர்களே உங்களுடன் நான் அறிவு தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அறிவுதான் உங்களை மிகப் பெரியவர்களாக்கும்.

அறிவுதான் வெல்ல முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது. இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. கற்பனைத் திறன்

2. நேர்மை

3. துணிவு

4. வெல்ல முடியாத சக்தி

இந்த நான்கும் ஒன்று சேர்ந்த குணங்களைக் கொண்டவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாக திகழ்வார்கள்.

கற்பனைத்திறன் பற்றி கூற வேண்டுமானால்...

கற்றல் தருவது கற்பனைத்திறன்...

கற்பனைத்திறன் தூண்டுவது சிந்தனையை...

சிந்தனை அளிப்பது அறிவு...

அறிவு உங்களை மிகச்சிறந்தவராக்கும்...

நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...

நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...

நடத்தையில் அழகு மிளிர்கிற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது...

நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது...

ஒழுங்கு நிலவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது...

இதயம், நடத்தை, தேசம் மற்றும் உலகம் ஆகிய நான்குக்கும் ஓர் அழகான இணைப்பு, தொடர்பு உள்ளது. ஒருநாட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மை பொதுவானாதாக இருக்க வேண்டும். குடும்பத்தில், கல்வியில், சேவையில், தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்க வேண்டும்.

நிர்வாகம், அரசியல், அரசு, நீதித்துறை ஆகிய அனைத்திலும் நேர்மை நிலை கொண்டு இருக்க வேண்டும். வெல்ல முடியாத ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த நேர்மைதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமாக சிந்திக்கும் துணிவு

கண்டுபிடிக்கும் துணிவு

இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு

முடியாதது எது என்பதை அறியும் துணிவு

சிக்கல்களை தீர்க்கும் துணிவு

இவையே இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்... அவர்கள் வெற்றி பெற வேண்டும்...

மாணவர்களின் முதல் குறிக்கோள் அவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும். நாட்டுக்கான அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில் கேள்வி கேட்கும் தன்மை, கற்பனைவளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் மற்றும் அறவழியிலான தலைமைப்பண்பு ஆகியன அவரிடத்தே உருவாகியிருக்க வேண்டும். இவை ஐந்தையும் பெற்ற ஒரு மாணவர் தன்னிச்சையாக கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாணவராக வளர்ந்து நிற்பார்.

தன்னைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய கற்றுக் கொள்பவராக அவர் உருவாவார். அதிகாரம் பெற்றவரை மதிக்கத் தெரிந்தவராக அவரிடம் முறைப்படி கேள்வி கேட்க தெரிந்தவராக இருப்பார். இவர்களைப் போன்றவர்கள் சேர்ந்துதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்கள்தான் சரியான பாதையில் அவர்களை இட்டு செல்லும். ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் அவர் தந்தை வாங்கித் தந்த காம்பஸ்தான் அவரை சிந்திக்க தூண்டியிருக்கிறது. அவரது 12 வயதில் பரிசளிக்கப்பட்ட புத்தகம்தான் அவருக்கு இரண்டாவது அற்புதமாக விளங்கியது. பெரிய ஆய்வுக்கூடமோ அதிக செலவு பிடிக்கும் கருவிகளோ இன்றி, இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை தனது கணித அறிவால் கண்டறிந்தார்.

வெல்லமுடியாத சக்தி பற்றி சர்.சி.வி.ராமன் தனது 82 வது வயதில் உரை நிகழ்த்தினார். அது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது: என் முன்னே உள்ள இளைஞர்களே! பெண்களே... நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்துவிடாதீர்கள்.

உங்கள் முன் உள்ள சவாலை துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை ஜெர்மன், வட ஐரோப்பியர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டும்தான்.

நம்மை இயக்கும் சக்தியை பெற நாம் தவறிவிடுகிறோம். அது இருந்தால் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம் நம்மை தோற்கடிக்கும் இந்த சக்திகளை அழிப்பதுதான். நமக்கு வெற்றிக்கான சக்தி வேண்டும்.

நம்மை சரியான இடத்துக்கு எடுத்து செல்கின்ற பாதை தேர்வு செய்கின்ற சக்தி வேண்டும்.இந்த பூமியில் மிகச்சிறந்த இடத்தை பெறக்கூடிய பெருமைமிகு நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை. இந்த வெல்ல முடியாத சக்திகளே நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்லும் என்றார் ராமன்.

எனவே நண்பர்களே அறிவு என்பது

அறிவு = கற்பனைத்திறன் + நேர்மை + துணிச்சல் + வெல்லமுடியாத சக்தி

மாணவப் பருவத்திலேயே இந்தகுணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உண்மையான அறிவு மாணவர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்ப வேண்டும்.