நம் மூதாதையர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?இந்திய வம்சாவழியின் தொடக்கம் கண்டறியப்பட்டுள்ளதுசமீபத்திய இந்திய-அமெரிக்க கூட்டு ஆராய்ச்சி முடிவுகள்! |
பள்ளியில் பரிணாமம் படித்த நம் எல்லோருக்குமே ஒரு கேள்வி இருக்கும்.அது என்னவென்றால் மனிதர்களாகிய நாம் அனைவரும் முதலில் தோன்றியது எங்கே?அதாவது இன்றைய உலகின் எந்த பகுதியில் மனித இனம் முதலில் தோன்றியது என்பதுதான் அந்த கேள்வியின் பொருள். இதுவரையிலான மரபனு ஆராய்ச்சி முடிவுகளின்படி மனிதன் உலகில் முதலில் தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டம் எனச் சொல்லப்படுகிறது. சரி ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம், நாகரிகம் அடைய அடைய, மெல்ல ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் நோக்கி பயனப்பட்டு வாழ முற்பட்டது.
இந்த செயல்பாடுள்ள மனித இனம் “நாடோடி” (nomads) என்று அழைக்கப்பட்டது.இன்று அந்த வகையான செயல்பாடுகள் முற்றிலும் இல்லை எனச் சொல்லமுடியாதென்றாலும், அது மிக மிக குறைவு.ஏன் இல்லை எனச் சொல்ல முடியாது என்றால், இன்றும் மங்கோலியாவில் நாடோடிகளாகவே மக்கள் வாழ்கிறார்கள், அதையும் விரும்பி செய்கிறார்கள் என என்னுடன் ஆராய்ச்சி செய்யும் மங்கோலிய நண்பன் ஒருவன் சொல்லக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், நண்பனின் கூற்றுப்படி, மங்கோலிய மக்கள் இன்றைய தொழில்னுட்ப முன்னேற்றங்களை ஏற்றபின்னும் அதை பயன்படுத்தியும் கூட தங்களின் நாடோடி வாழ்க்கை முறையையே விரும்பி வாழ்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, நாடோடியாய் திரிந்த மனிதன் ஓரிடத்தில் வாழ வேண்டி, நாகரிக முன்னேற்றத்தால் காடுகளை திருத்தி குடில்கள் அமைத்து பின் விவசாயம் செய்தல், வணிகம் என பல்வேறு நாகரிக முன்னேற்றங்களை அடைந்தான் என்பது வரலாறு.இந்த முன்னேற்றப் பாதையில் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறியது மனித இனம்.இதனால் மொழி,இன,மத வேறுபாடுகள் மற்றும் நிற, உணவுப் பழக்கம், தொழில் போன்ற பலவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.இது உலக வரலாறு.இப்போது நாம் இப்பதிவின் முக்கிய செய்தியைப் பார்ப்போம்.
உலகில் இன்று மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம் பரிணாம வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? முழுமையாக யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த வரலாற்று உண்மையை அறியவே இந்தியாவின் முன்னனி ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆரின்(C.S.I.R) ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றான ஹைதரபாத்தில் அமைந்துள்ள சி.சி.எம்.பி யும்(C.C.M.B) அமெரிக்காவின் “ஹார்வர்டு மருத்துவப் பள்ளியும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டன.இந்த ஆராய்ச்சி முடிவில் அறியப்பட்டதாவது:
ஒரு மனிதன் மற்றொரு மனிதனிமிருந்து வெறும் 0.1% விழுக்காடு அளவே தன் மரபனுக்கோப்பான ஜீனோமில் வேறுபட்டாலும், அந்த0.1% விழுக்காடு அளவுதான் மனிதனின் ஆதி முதல் அந்தம் வரையிலான இயல்புகளின் சாரம் என்கிறது மரபனுத்துறை.மேலும் இந்த வேறுபாட்டிலிருந்து மனிதனின் பரிணாம வரலாற்றினை வரையறுத்திட முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்! உலகின் பல்வேறு மனித இனத்தின் பரிணாம வரலாறு நன்கு அறியப்பட்டபோதும் இந்தியாவின் வரலாறு இதுவரையில் முழுமையாக அறியப்படவில்லை!
25 விதமான பாரம்பரிய மனித சமுதாயத்திலிருந்து, ஆறு மொழிகள் சார்ந்த, 13 வெவ்வேறு மா நிலத்தைச் சேர்ந்த, 132 தன்னார்வலர்கள் கலந்து கொண்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது கூறுவதாவது:
இந்தியாவின் மனித இனத்தை இரண்டு பெரிய குழுக்களாகப் பிரித்தால், ஒன்று இன்றைய வட இந்தியர்கள் மேற்கத்திய ஐரோப்பிய- ஆசியர்கள் (western eurasians) வழிவந்தவர்கள் 40 முதல் 80 விழுக்காடு வரையிலும், மீதமுள்ளவர்கள் பாரம்பரிய தெனிந்தியர்கள் என்றும்,மேலும் தென்னிந்தியர்கள் எந்தவொரு வெளிநாட்டவருடனும் மரபனு முறையில் தொடர்பில்லாதவர்கள் மரபனு ஆராய்ச்சி முறையில் வகுத்துள்ளார்கள்! இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி.இது ஏறக்குறைய முன்னமே வரலாற்றின் வழியாக நம்மில் பலருக்கு தெரிந்த செய்திதான் எனினும் இந்த முடிவு அறிவியல் ரீதியாக வரையறுக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நம்பகமானது!
சரி இது தவிர வேறு என்ன வீஷேசம் இந்த ஆராய்ச்சியில் அப்படியென்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது! விஷேசம் உள்ளது நண்பர்களே.அது என்னவென்றால்,
1. நமக்கு மிகவும் தேவையான?! நெருக்கமான?! அவசியமான?! (ஏன் இத்தனை “மான” என்கிறீர்களா? இது எல்லாம் இனியும் தேவைதானா எனும் ஒரு வயித்தெறிச்சல்தான்! ) ஜாதிகளெல்லாம் உள்ளதல்லவா, இவையெல்லாம் பழங்குடியினராய் மனிதன் வாழத்தொடங்கியதிலிருந்தே தொன்றுதொட்டு வந்து நம்மை இம்சிக்கின்றன என்று உறுதியாய் சொல்லமுடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் திரு.குமாரசாமி தங்கராஜ்!
2.அந்தமான் மக்கள் தென்னிந்தியர்களுடன் மட்டுமே தொடர்புடையவர்கள் என்றும் வட இந்தியர்களுக்கும் அந்தமானியர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார்கள்!
3.மேலும் அந்தமானியர்களை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் தென்னிந்தியர்களின் பிரிவு எங்கு,எப்படி தொடங்கியது என்பதை அறிய வாய்ப்புள்ளது என்கிறார் இந்தக் குழுவின் மற்றுமொரு ஆராய்ச்சியாளர் நிக் பேட்டர்சன்!
மேலும் பல மருத்துவ ரீதியான புதிய விவரங்களையும் இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
|
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Sunday, May 31, 2015
நம் மூதாதையர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment