Saturday, August 1, 2015

பணமும் செல்வமும் பெருகி ஓட


பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை பார்க்கிறோம். பணம் சம்பாதிப்பது குதிரை கொம்பென்றால், சம்பாதித்த பணத்தை கட்டிக் காப்பது அதை விட கடினமான ஒன்றாகும். லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெருவாரியான இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் உங்களை வந்தடையும் செல்வமும், பொருட்களும் என்றென்றும் உங்களிடம் தங்கியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!
லட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் லட்சுமி தேவியோ உறுதியற்றவர்; ஆம் தான் இருக்கும் வீட்டை விட வேறு ஒரு வீட்டில் அதிக பக்தியை கண்டால் அங்கே குடி புகுந்து விடுவார்.
அதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை ஈர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்கள் என சிலவற்றை பற்றி இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வீட்டில் வைத்தால் அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். லட்சுமி தேவியை ஈர்க்கின்ற பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் போதிய பொன்னும், பொருளும் பெருகும். சரி, அது என்ன அந்த 10 பொருட்கள் என பார்க்கலாமா?
தேங்காய்
See the image
தேங்காய் தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைப்படுகிறது. அப்படியானால் அதற்கு லட்சுமி தேவிக்கான பழம் என அர்த்தமாகும். தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.
பாதரச சிலை
See the image
லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.
சோவி
See the image
சோவிகள் என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகையாகும். லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள்
See the image
லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விடும்.
சங்கு
See the image
விசேஷ வகையான இந்த சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது.
லட்சுமி தேவியின் கால்தடங்கள்
See the image
லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.
தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலை
See the image
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.
தெற்கு திசையை நோக்கி வைக்கப்பட்டுள்ள சங்கு
சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.
ஸ்ரீ யந்திரம்
See the image
இந்த யந்திராவில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என நம்பப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும். மேலும் இதனை நம் பூஜையறையில் வைத்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும்.
ஒற்றை கண் தேங்காய்
See the image
இவ்வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment