Friday, January 9, 2015

சகல கலைகளிலும் வேதங்களிலும் வல்லமை உண்டாக. செல்வம் உண்டாக மந்திரம்

சகல கலைகளிலும் வேதங்களிலும் வல்லமை உண்டாக. செல்வம் உண்டாக மந்திரம்
(share) செய்யுங்கள்)
அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி
பாத துளி - அறிவின்மையை போக்கவல்லது (தமிழ்)
அறிவு இலர்க்கு, இதய திமிரம் ஈரும் அளவு அற்ற ஆதவர், அளப்பு இலா
எறி கதிர் ப்ரபை, குழைத்து இழைத்தனைய தீவி, யாமளை நினைப்பு இலார்.
செறி மதிக்கு, இணரின் ஒழுகு தேன் அருவி தெறு கலிக்கு அருள் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஓர் பெரு வராக வெண் மருப்பு அரோ.
பொருள்: அம்பிகையே! உன் திருவடித் துகள் அஞ்ஞானிகளின் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கும் கதிரவனின் உதயத் தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு ஞானம் என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப் போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத் தாங்கிய விஷ்ணுவின் கோரைப் பல்லைப் போன்றும் விளங்குகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், வடகிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் வேதங்களிலும், சகல கலைகளிலும் வல்லமை உண்டாகும். செல்வம் உண்டாகும்

No comments:

Post a Comment