Tuesday, January 13, 2015

யார் பணக்காரர் தெரியுமா?


நமது ஆசைகள் தான் கஷ்டத்தை தருகின்றன என்று சொல்லி இருந்தேன். ஆசை படாமல் இருக்க முடியுமா?. முடியாது, அப்படி ஆசைகள் கிடையாது என்று சொன்னால் அது பொய். பின்பு ஏன் ஆசைகள் தான் கஷ்டம் என்று கூறுகிறேன் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு உதாரணத்திற்கு வீடூ வாங்க வேண்டும் என்ற எண்ணம், அதாவது "ஆசை" இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாராளமாக வாங்கலாம் தவறில்லை. அதை வாங்குவதற்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம். நமக்கு தேவையான எல்லா வசதிகளும் அந்த வீட்டில் இருக்கிறதா என்று பார்க்கிறோம். வேறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது கிடையாது.
வீடு  40 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். கையில் 20 லட்சம் இருக்கிறது என்று  வைத்துக்கொள்வோம். மீதி 20 லட்சத்துக்கு வட்டிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த வட்டியை நாம் மாதம் மாதம் கட்டமுடியுமா? அந்த நிலையில் இருக்கிறோமா என்று யோசியுங்கள். அப்படி அந்த வட்டியை கட்டினால் நமது Budget பிடிக்காமல் இருக்கிறதா? என்று யோசியுங்கள். உங்களால் முடியும் என்றால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை . ஆனால் கட்டமுடியாத நிலையில் இருக்கும் போது, அதை வாங்க ஆசைபட்டால் நிச்சயம் கஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அந்த ஆசை தான் இருக்க கூடாது.
இது போன்று தான் எல்லா விஷயங்களில் தவறு செய்கிறோம். வரும் வருமானத்தை வைத்து சிக்கனமாக செலவு செய்து, நமது தேவைகளுக்காக சிலவற்றை செலவு செய்து மற்றும் சேமிப்பு செய்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது கடன் இல்லா வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று கூறுகிறேன். "இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொண்டால் அவன் தான் பணக்காரன்" என்பது உண்மையாகும்.

No comments:

Post a Comment