Sunday, January 4, 2015

செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி உண்டாக வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாக சுவர்ணாபரணங்கள் பெற

செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி உண்டாக வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாக சுவர்ணாபரணங்கள் பெற
(share) செய்யுங்கள்)
மந்திரம்
ஸிவ: ஸக்தி: காம: க்ஷித-ரத ரவி: ஸீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா-மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸாநேஷு கடிதா
பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம்
-------------------------------------------------------------------------------------
தேவியின் மூலமந்திரம் (தமிழ்)
அரியதாகும் சிவம், சக்தி, மதன், அவனி, பின்பு ஆதித்தன், மதி, மதன வேள்,
பெருகுவான், இந்திரன், பின்புபரை, மதனன், மால் பேசின் முக்கண்டம் அடைவே
உரியதாம் அந்தத்தின் மாயை மும்முறை அமைத்து உறு மெழுத் தடைய உணர்வால்
தெரியின், நாமத்தினொடும் உனது உறுப்பாம் என்று செப்பும், நான் மறைகள், உமையே!
பொருள்: அம்பிகையே! சிவ பீஜாக்ஷரமான க; சக்தி பீஜாக்ஷரமான ஏ; காம பீஜாக்ஷரமான ஈ; பிருதிவி பீஜாக்ஷரமான ல ; சூரிய பீஜாக்ஷரமான ஹ; சந்திர பீஜாக்ஷரமான ஸ; மன்மத பீஜாக்ஷரமான க ; ஆகாச பீஜாக்ஷரமான ஹ; இந்திரனின் பீஜாக்ஷரமான ல ; பரா பீஜமாகிய ஸ; மன்மத பீஜமாகிய க ; ஹரி பீஜமாகிய ஸ ஆகிய இந்த உன்னுடைய அட்சரங்கள் புவனேசுவரி பீஜமான ஹ்ரீங்காரங்கள் மூன்றுடன் சேர்ந்து 15 அட்சரங்களும் மகாமந்திரத்தின் பகுதிகள் ஆகின்றன.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும். மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாகும்.

No comments:

Post a Comment